என் மலர்
விளையாட்டு
செயிண்ட் கீட்ஸ்:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வெய்ன் பிராவோ. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் ஓய்வு பெற்ற அவர் 20 ஓவர் ஆட்டங்களில் மட்டும் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் 37 வயதான பிராவோ 20 ஓவர் போட்டிகளில் 500 ஆட்டங்களில் விளையாடி சாதனை படைத்துள்ளார். அவர் கரீபியன் லீக் 20 ஓவர் தொடரில் செயிண்ட் கீட்ஸ்-நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு கேப்டனாக உள்ளார்.
நேற்று நடந்த இறுதிப் போட்டியில் அந்த அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் செயிண்ட் லூசியா கிங்சை தோற்கடித்தது. இந்த போட்டி 20 ஓவரில்பிராவோவுக்கு 500-வது ஆட்டமாகும்.
20 ஓவரில் 500 போட்டிகளில் விளையாடிய 2-வது வீரர் பிராவோ ஆவார். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீசை சேர்ந்த பொல்லார்ட் இந்த அரிய சாதனையை படைத்திருந்தார்.
பிராவோ 500 போட்டிகளில் 388 இன்னிங்ஸ் விளையாடி 6,574 ரன்கள் எடுத்து உள்ளார். 540 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.
2006-ம் ஆண்டு சர்வதேச 20 ஓவர் போட்டியில் அறிமுகமான அவர் 2010-ல் டெஸ்டில் இருந்தும், 2014-ல் ஒருநாள் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார். பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் உள்பட பல்வேறு அணிகளில் இடம்பெற்று உலகின் பல நாடுகளில் நடைபெற்றுவரும் 20 ஓவர் தொடர்களில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பழனி:
பாராஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற சேலம் மாரியப்பன் தனது குடும்பத்துடன் பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த பாராஒலிம்பிக் போட்டியில் சேலத்தை சேர்ந்த தடகளவீரரான மாரியப்பன் உயரம் தாண்டுதலில் போட்டியிட்டு வெள்ளி பதக்கம் வென்றார். பதக்கம் வென்று சாதனைபடைத்து தனது சொந்த ஊருக்கு திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து மாரியப்பன் தனது குடும்பத்தினருடன் பழனி கோவிலுக்கு சாமிதரிசனம் செய்ய வந்தார்.
மதனபுரத்தில் உள்ள நாககாளியம்மன் கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்து பின்னர் மலைக்கோவிலுக்கு சென்று வழிபட்டார். மேலும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். மாரியப்பன் பழனிக்கு வந்தது குறித்து தகவல் அறிந்ததும் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும் சிலர் அவருடன் இணைந்து செல்பியும் எடுத்து கொண்டனர். இதனையடுத்து மாரியப்பன் சேலத்துக்கு புறப்பட்டு சென்றார்.
லண்டன்:
இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான 5-வது டெஸ்ட்போட்டி ரத்து செய்யப்படுவதற்கு முன்பு நள்ளிரவில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு இமெயில் அனுப்பினார் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் டேவிட் கோவர் குற்றம்சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘கடைசி நேரத்தில் போட்டியை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதற்காக விராட் கோலி இந்த இமெயிலை நள்ளிரவில் அனுப்பினார்’ என்று அவர் கூறியுள்ளார்.
கங்குலி தலைமையில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றி இருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை சமன் செய்து இருந்தது. 2002-ல் இங்கிலாந்தில் நாட்வெஸ்ட் கோப்பையை வென்றது. 2003-ல் உலக கோப்பை இறுதிப்போட்டி வரை வந்தது.

கங்குலி, டோனி தலைமையின் கீழ் பல வீரர்கள் விளையாடினர். அவர்களில் முக்கியமானவர் வீரேந்திர ஷேவாக். இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான அவர் இருவரில் யார் சிறந்த கேப்டன் என்பது குறித்து பதில் அளித்து உள்ளார். இது தொடர்பாக ஷேவாக் கூறியதாவது:-
இருவருமே சிறந்த கேப்டன்கள். ஆனால் கங்குலியையே சிறந்த கேப்டனாக நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவர் புதிதாக ஒருஅணியை உருவாக்கினார். நம்பிக்கைக்கு உரிய வீரர்களை தேர்ந்தெடுத்து அணியை மீண்டும் கட்டமைத்தார்.
இந்திய அணிக்கு வெளிநாடுகளில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்று கற்றுக்கொடுத்தவர் கங்குலி ஆவார். நாங்கள் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை சமன் செய்தோம்.
டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற கற்றுக்கொடுத்தார். கங்குலி இள மற்றும் திறமையான அணியை ஒன்று சேர்த்தார்.
கங்குலி விட்டுச்சென்ற அந்த வேலையை டோனி சிறப்பாக தொடர்ந்தார். கங்குலி கட்டமைத்த அணியை அவர் சிறப்பாக மேம்படுத்தினார்.
டோனி புதிய அணியை தயார் செய்ய மிகவும் அதிகமாக சிரமப்படவில்லை. இருவருமே சிறந்த கேப்டன்கள் ஆவார்கள். ஆனால் எனது கருத்து என்னவென்றால் கங்குலிதான் சிறந்த கேப்டன் ஆவார்.
இவ்வாறு ஷேவாக் கூறி உள்ளார்.







