search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிராவோ
    X
    பிராவோ

    டி20-யில் 500 போட்டிகளில் விளையாடி 2-வது இடத்தை பிடித்து பிராவோ சாதனை

    பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் உள்பட பல்வேறு அணிகளில் இடம்பெற்று உலகின் பல நாடுகளில் நடைபெற்றுவரும் 20 ஓவர் தொடர்களில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    செயிண்ட் கீட்ஸ்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வெய்ன் பிராவோ. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் ஓய்வு பெற்ற அவர் 20 ஓவர் ஆட்டங்களில் மட்டும் விளையாடி வருகிறார்.

    இந்த நிலையில் 37 வயதான பிராவோ 20 ஓவர் போட்டிகளில் 500 ஆட்டங்களில் விளையாடி சாதனை படைத்துள்ளார். அவர் கரீபியன் லீக் 20 ஓவர் தொடரில் செயிண்ட் கீட்ஸ்-நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு கேப்டனாக உள்ளார்.

    நேற்று நடந்த இறுதிப் போட்டியில் அந்த அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் செயிண்ட் லூசியா கிங்சை தோற்கடித்தது. இந்த போட்டி 20 ஓவரில்பிராவோவுக்கு 500-வது ஆட்டமாகும்.

    20 ஓவரில் 500 போட்டிகளில் விளையாடிய 2-வது வீரர் பிராவோ ஆவார். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீசை சேர்ந்த பொல்லார்ட் இந்த அரிய சாதனையை படைத்திருந்தார்.

    பிராவோ 500 போட்டிகளில் 388 இன்னிங்ஸ் விளையாடி 6,574 ரன்கள் எடுத்து உள்ளார். 540 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.

    2006-ம் ஆண்டு சர்வதேச 20 ஓவர் போட்டியில் அறிமுகமான அவர் 2010-ல் டெஸ்டில் இருந்தும், 2014-ல் ஒருநாள் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார். பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் உள்பட பல்வேறு அணிகளில் இடம்பெற்று உலகின் பல நாடுகளில் நடைபெற்றுவரும் 20 ஓவர் தொடர்களில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×