என் மலர்

  செய்திகள்

  இலங்கை அணி
  X
  இலங்கை அணி

  டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தசுன் ஷனகா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தினேஷ் சண்டிமல் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அகிலா தனஞ்ஜெயாவுக்கு இடம் கிடைக்கவில்லை.
  டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகம்  மற்றும் ஓமனில் அடுத்த மாதம் 17-ந்தேதி முதல் நவம்பர் 14-ந்தேதி வரை நடைபெற உள்ளது.  இந்த தொடருக்கான இலங்கை அணியின் கேப்டனாக தசுன் ஷனகா நியமிக்கப்பட்டுள்ளார்.

  அணியில் மொத்தம் 15 வீரர்கள் கொண்ட  அணியில் இளம் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்‌ஷனா (21) இடம் பிடித்துள்ளார். மேலும், ஓய்வில் இருந்த விக்கெட் கீப்பர் குசால் பெரேரா அணிக்கு திரும்பியுள்ளார். கொரோனா விதிமீறல் காரணமாக ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நிரோஷன் டிக்வெல்லா, குசால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா தேர்வு செய்யப்படவில்லை.

  தற்போது இலங்கை அணியில் தசுன் ஷனகா (கேப்டன்), தனஞ்ஜெயா டி சில்வா, குசால் பெரேரா, தினேஷ் சண்டிமல், அவிஷ்கா பெர்னாண்டோ, பானுகா ராஜபக்சே, சரித் அசலங்கா, வனிந்து ஹசரங்கா, கமிந்து மெண்டிஸ், சமிகா கருணரத்னே, நுவன் பிரதீப், துஷ்மந்த சமீரா, பிரவீன் ஜெயவிக்ரமா, லகிரு மதுஷங்கா, மஹீஷ் தீக்‌ஷனா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

  லகிரு குமாரா, புலினா தரங்கா, பினுரு பெர்னாண்டோ, அகிலா தனஞ்ஜெயா ரிசர்வ் வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
  Next Story
  ×