என் மலர்
செய்திகள்

சுனில் கவாஸ்கர்
இந்திய அணியை பற்றி நல்லவிதமாக எழுத மாட்டார்கள்: ஆங்கில நாளிதழ்கள் மீது சுனில் கவாஸ்கர் விமர்சனம்
ரவி சாஸ்திரியும், இந்திய அணி வீரர்களும்தான் ஐந்தாவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் என்ற விமர்சனத்தை சுனில் கவாஸ்கர் மறுத்துள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் நான்கு போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றிருந்தது.
இந்திய பயிற்சியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் கடைசி நேரத்தில் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், உறுதியாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் என இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் போர்டுகள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் நடந்து என்னவென்று யாருக்கும் தெரியாது. ஆனால், சமூக வலைத்தளங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.
அதன்பிறகு, இந்திய வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது, அனைவருக்கும் நெகட்டிவ் முடிவு வந்துள்ளது. ஆனால், இந்திய வீரர்கள் போட்டியில் விளையாட மறுத்துவிட்டார்கள் என்று ஆங்கில நாளிதழ்களில் மட்டுமே உள்ளன. ஆங்கில நாளிதழ்கள் இந்திய அணியைப் பற்றி ஒருபோதும் நல்லவிதமாக எழுத மாட்டார்கள். இந்திய வீரர்களையே பொறுப்பேற்கச் செய்வார்கள். உண்மை என்னவென்று தெரியாமல் வீரர்களை பற்றி பேசவேண்டாம் ’’ என்றார்.
Next Story