என் மலர்

  செய்திகள்

  எம்மா ராடுகானு
  X
  எம்மா ராடுகானு

  அமெரிக்க ஓபனை வென்றதன் மூலம் பல்வேறு சாதனைகளை சொந்தமாக்கிய இங்கிலாந்து இளம் வீராங்கனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்க ஓபனை வென்றதன் மூலம் இங்கிலாந்தின் 18 வயதான இளம் வீராங்கனை எம்மா ராடுகானு பல்வேறு சாதனைகளை தன்வசமாக்கியுள்ளார்.
  கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை நடந்தது. சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் இளம் வீராங்கனைகளான இங்கிலாந்தின் எம்மா ராடுகானு- கனடாவின் லேலா பெர்னாண்டஸ் இடையே பலப்பரீட்சை நடந்தது.

  இருவரும் முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தனர். இதில் எம்மா ராடுகானு 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இப்போட்டி 1 மணி 51 நிமிடங்கள் நடந்தது. பட்டத்தை வென்றுள்ள 18 வயதான எம்மா ராடுகானு, தகுதி சுற்றில் விளையாடி முதன்மை சுற்றுக்கு முன்னேறி இருந்தார்.

  இதன் மூலம் தகுதி சுற்றில் விளையாடி சாம்பியன் பட்டத்தை தனதாக்கிய முதல்நபர் என்ற பெருமையை எம்மா ராடுகானு பெற்றார்.

  62 ஆண்டுகளுக்கு பிறகு கிராண்ட் ஸ்லாம் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய இங்கிலாந்து இளம் வீராங்கனை என்ற சிறப்பை பெற்று இருந்தார். மேலும் 44 ஆண்டுக்கு பிறகு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற இங்கிலாந்து வீராங்கனை இவர் ஆவார்.

  இறுதிப் போட்டியில் தோல்வி இடைந்த லேலா பெர்னாண்டசுக்கு 19 வயதுதான் ஆகிறது. அவர் முந்தைய ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் ஒசாகா (ஜப்பான்) மற்றும் முன்னணி நம்பர்ஒன் வீராங்கனை கெர்பர் (ஜெர்மனி) 5-ம் நிலை வீராங்கனை எலினா ஸ்விடோவினா (உக்ரைன்) ஆகியோரை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  எம்மா ராடுகானு

  சாம்பியன் பட்டம் வென்ற எம்மா ராடுகானு கூறும்போது, இது நம்ப முடியாத கடினமான போட்டி. ஆனால் எனது நிலை மிகவும் அதிகமாக இருப்பதாக நினைத்தேன்.

  நான் எனது சிறந்த டென்னிசை விளையாட வேண்டியிருந்தது என்றார். அவருக்கு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், இளம் வயதில் இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை. இது உங்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு கிடைத்த சான்று என்று பாராட்டி உள்ளார். எம்மா ராடுகானுக்கு பரிசுத்தொகையாக ரூ. 18.38 கோடி வழங்கப்பட்டது.
  Next Story
  ×