search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜாஸ்கரன் மல்கோத்ரா
    X
    ஜாஸ்கரன் மல்கோத்ரா

    சர்வதேச போட்டியில், அதுவும் ஒருநாள் கிரிக்கெட்டில் 6 பந்தில் 6 சிக்சர்கள் விளாசிய அமெரிக்க பேட்ஸ்மேன்

    தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் 6 பந்தில் 6 சிக்சர்கள் தொடர்ச்சியாக விளாசிய நிலையில், வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அமெரிக்க பேட்ஸ்மேன் சாதனை புரிந்துள்ளார்.
    அமெரிக்கா- பப்பு நியூ கினியா அணிகளுக்கு இடையில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அமெரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி ஒரு கட்டத்தில் 19.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்திருந்தது.

    அமெரிக்க அணி திணறிய நிலையில் ஜாஸ்கரன் மல்கோத்ரா அபாரமான ஆட்டத்தை  வெளிப்படுத்தினார். அத்துடன் சரிவில் இருந்து அணியை மீட்டார். சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்த அவர், கடைசி ஓவரை எதிர்கொண்டார். 

    அந்த ஓவரை பப்பு நியூ கினியாவின் கவுதி டோகா வீசினார். வேகப்பந்து வீச்சாளரான டோகாவின் பந்தை ஜாஸ்கரன் பந்தாடினார். கடைசி ஓவரின் ஆறு பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் இணைந்தார் ஜாஸ்கரன்.

    இதற்கு முன் யுவராஜ் சிங், கிப்ஸ், பொல்லார்டு ஆகியோர் ஒரே ஓவரில் ஆறு பந்துகளையும் சிக்சருக்கு விளாசியிருந்தனர். யுவராஜ் சிங் வேகப்பந்து வீச்சில் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார். மற்ற இருவரும் சுழற்பந்து வீச்சில் சாதனை புரிந்திருந்தனர். அதன்பின் தற்போது ஜாஸ்கரன் வேகப்பந்து வீச்சில் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

    Next Story
    ×