என் மலர்

  செய்திகள்

  மைக்கேல் வாகன்
  X
  மைக்கேல் வாகன்

  கிரிக்கெட்டின் வெற்று போட்டியாக இருக்கும்: மைக்கேல் வாகன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐந்தாவது டெஸ்ட் ரத்து செய்யப்பட்ட நிலையில், வாய்ப்பு கிடைக்கும்போது மறு அட்டவணை தயார் செய்து போட்டியை நடத்தலாம் என பி.சி.சி.ஐ. விருப்பம் தெரிவித்துள்ளது.
  இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொரோனா அச்சம் காரணமாக  கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. போட்டி ரத்து செய்யப்பட்டதற்கு இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் கடுமையான வகையில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

  குறிப்பாக முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஐ.பி.எல். போட்டியில் விளையாட இந்திய வீரர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்காகத்தான் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது என விமர்சனம் வைத்தார். ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு இந்த விமர்சனத்தை மறுத்துள்ளது. இந்தியாவும் அடுத்த வருடம் மற்றொரு அட்டவணை தயார் செய்து போட்டியில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளது.

  தற்போது இந்த போட்டியை பிறகு நடத்திக் கொள்ள பி.சி.சி.ஐ. விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், மைக்கேல் வாகன் மீண்டும் விமர்சனம் யெ்துள்ளார்.

  மீண்டும் போட்டியை நடத்துவது குறித்து மைக்கேல் வாகன் கூறுகையில் ‘‘அடுத்த வருடம் ரத்து செய்யப்பட்ட போட்டிக்கான மறு அட்டவணை என்பது கேலிக்கூத்தானது. இது கிரிக்கெட்டின் வெற்று போட்டியாக இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட் என்பது ஏன் சிறந்தது என்றால், ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் ஆறு வாரத்திற்குமேல் விளையாடப்படும். வெற்றிக்காக வீரர்கள் வியர்வை சிந்தி, ரத்தம் சிந்தி, கண்ணீர் வடிக்க வேண்டிய நிலை ஏற்படும். எமோசன் மற்றும் ஆவேசம் கொண்டதாக இருக்கும் என்பதால் சிறந்த ஆட்டமாக கருதப்படுகிறது.

  எப்படி ரன்கள் அடிக்கப் போகிறோம், எப்படி விக்கெட் வீழ்த்தப் போகிறோம் என்ற கவலையிலேயே வீரர்கள் ஆட்டமிழந்து விடுவார்கள். மீண்டும் ஒரு போட்டிக்கு திரும்ப முடியும் என் நினைத்தால், அது கேலிக்கூத்தானது. தொலைக்காட்சி உரிமத்தை நிறைவேற்றுவதற்கான போட்டியாக இருக்கும். அர்த்தமில்லாதது. இந்த தொடர் முடிந்து விட்டது’’ என்றார்.
  Next Story
  ×