என் மலர்
விளையாட்டு
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னா இடம் பெறாத நிலையில், ராபின் உத்தப்பா களம் இறங்குகிறார்.
ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் 50-வது லீக் ஆட்டம் துபாயில் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ரிஷாப் பண்ட் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வெய்ன் பிராவோ களம் இறங்குகிறார். சுரேஷ் ரெய்னா காயத்தால் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக ராபின் உத்தப்பா அணியில் இடம் பிடித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:
1. டு பிளிஸ்சிஸ், 2. ருதுராஜ் கெய்க்வாட், 3. ராபின் உத்தப்பா, 4. அம்பதி ராயுடு, 5. மொயீன் அலி, 6. எம்.எஸ். டோனி, 7. ஜடேஜா, 8. தீபக் சாஹர், 9. வெய்ன் பிராவோ, 10. ஷர்துல் தாகூர், 11. ஹேசில்வுட்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி:
1. தவான், 2. பிரித்வி ஷா, 3. ஷ்ரேயாஸ் அய்யர், 4. ஹெட்மையர், 5. ரிஷாப் பண்ட், 6. ரிபால் பட்டேல், 7. அக்சார் பட்டேல், 8. அஷ்வின், 9. ரபாடா, 10. அவேஷ் கான், 11. அன்ரிச் நோர்ஜே.
ஐபிஎல் கிரிக்கெட்டில் பிளே-ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் முன்னேறிய நிலையில் 4-வது இடத்திற்கு நான்கு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டின் லீக் ஆட்டங்கள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளன. 56 லீக் போட்டிகளில் இதுவரை 49 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 7 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளது.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் (9 வெற்றி), டெல்லி கேப்பிடல்ஸ் (9 வெற்றி), ஆர்.சி.பி. (8 வெற்றி) அணிகள் தலா 12 போட்டிகளில் விளையாடிய நிலையில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
4-வது இடத்திற்கு இன்னும் ஒரு அணி முன்னேற வேண்டும். இதற்காக வாய்ப்பில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது.

கொல்கத்தா 13 போட்டிகளில் விளயைாடி 6-ல் வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் 13-ல் விளையாடி 5-ல் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் 12 போட்டிகளில் விளையாடி தலா ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நான்கு அணிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெறும் அணி உறுதியாக பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இல்லையெனில் நிகர ரன்ரேட் முறையில் ஒரு அணி முன்னேறும்.
நாளை ராஜஸ்தான் ராயல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி 6 வெற்றிகளை பதிவு செய்யும். கடைசி போட்டியின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

வருகிற 7-ந்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் எதிர்கொள்கிறது. இதில் பஞ்சாப் வெற்றி பெற்றால் 6 வெற்றியுடன் நிகர ரன்ரேட் அடிப்படையில் முன்னேற முடியுமா? என எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
அன்றைய தினம் மற்றொரு ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா வெற்றி பெற்றால் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் (ராஜஸ்தானிடம் தோல்வியடைந்திருந்தால்) தானாகவே வெளியேறிவிடும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 வெற்றிகளுடன் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும். ஒருவேளை ராஜஸ்தான் வெற்றி பெற்றால் ராஜஸ்தான் ஏழு வெற்றிகளுடன் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும். ராஜஸ்தானுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றால் ஆறு வெற்றிகள் பெற்றிருக்கும்.

8-ந்தேதி மும்பை இந்தியன்ஸ் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்தால் 6 வெற்றிகள் பெற்றிருக்கும். அப்போது நான்கு அணிகளில் ஒரு அணி நிகர ரன்ரேட் அடிப்படையில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.
நிரவ்மோடி நாட்டை விட்டு தப்பி செல்வதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு அவரது சகோதரி தொழில் தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கியது தெரியவந்துள்ளது.
கறுப்பு பணம் மூலம் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி குவித்த ஆவணங்களை பண்டோரா பேப்பர்ஸ் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் பெயரும் இடம் பெற்று உள்ளது. பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள் வெளியான 3 மாதங்களில் விர்ஜின் தீவுகளில் உள்ள தனது நிறுவனத்தை கலைக்கும்படி தெண்டுல்கர் கேட்டுக் கொண்டதாக ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்த முறைகேடான நிதி முதலீடு அறிக்கையை தயாரித்த அமைப்பு தெண்டுல்கரின் வக்கீலிடம் கேட்டனர். அவரது வக்கீல் இது தொடர்பாக கூறும்போது தெண்டுல்கரின் முதலீடு சட்டப்பூர்வமானது. வரி அதிகாரிகளிடம் இது குறித்து முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியதாக தெரிவித்துள்ளது.

நிரவ்மோடி நாட்டை விட்டு தப்பி செல்வதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு அவரது சகோதரி தொழில் தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கியதும் தெரியவந்துள்ளது. பிரபல பாப் இசை பாடகி ஷகிரா மாடலிங் தொழில் செய்யும் கிளாடியா ஷிபர் உள்ளிட்ட பிரபலங்களின் பெயரும் பண்டோரா பேப்பர்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இதையும் படியுங்கள்...கருப்பு பணம் மூலம் வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்த 35 உலக தலைவர்கள்
ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி தரப்பில் இதுவரை 9 சதங்கள் பதிவாகியுள்ளன. இதில் ருதுராஜ் சதம் மட்டுமே தோல்வியில் முடிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அபுதாபி:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு அபுதாபியில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருதுராஜ் கெய்க்வாட்டின் சதத்தின் (101 ரன்) உதவியுடன் 189 ரன்கள் குவித்த போதிலும், அந்த இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் 17.3 ஓவர்களில் எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பிரமிக்கத்தக்க வெற்றியை பெற்றது. ஜெய்ஸ்வால் 50 ரன்களும் (21 பந்து, 6 பவுண்டரி,3 சிக்சர்), ஷிவம் துபே 64 ரன்களும் (42 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) நொறுக்கினர். வெற்றிக்கு பிறகு ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில், ‘எங்களது இளம் வீரர்களின் பேட்டிங் திறமை பற்றி நாங்கள் அறிவோம். அதனால் தான் தோற்கும் போது நாங்கள் மிகுந்த ஏமாற்றம் அடைகிறோம். எங்களது தொடக்க ஆட்டக்காரர்கள் ‘பவர்-பிளே’யிலேயே (முதல் 6 ஓவர்களில் 81 ரன்) கிட்டத்தட்ட ஆட்டத்தை முடித்து விட்டனர். ஜெய்ஸ்வால் அருமையாக ஆடினார். அடுத்து வரும் ஆட்டங்களில் இதை அவர் பெரிய ஸ்கோராக மாற்றுவார் என்று நம்புகிறேன். ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் செய்த விதம் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. அவரை போன்ற ஒரு பேட்ஸ்மேன் விளையாடும் போது நிச்சயம் எதிரணிக்கு பயம் இருக்கும். கிரிக்கெட்டுக்கே உரிய ஷாட்டுகளை ஆடுகிறார். அது மட்டுமின்றி எந்தவித ரிஸ்க்கும் இன்றி ரன் சேர்க்கிறார். இது போன்ற பேட்ஸ்மேனுக்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும். அவர் சதம் அடித்தது மகிழ்ச்சியே’ என்றார்.
சென்னை கேப்டன் டோனி கூறுகையில், ‘ஆரம்பத்தில் டாஸில் தோற்றதே மோசம் தான். பனியின் தாக்கத்தால் போக போக ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறியது. ராஜஸ்தான் அணியினர் உண்மையிலேயே நன்றாக பேட் செய்தனர். ‘பவர்-பிளே’யிலேயே வெற்றி வாய்ப்பை பறித்து விட்டனர். இது போன்ற ஆடுகளத்தில் 250 ரன்கள் வரை எடுத்தால் தான் நல்ல ஸ்கோராக இருக்கும் போல.’ என்றார்.
ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி தரப்பில் இதுவரை 9 சதங்கள் பதிவாகியுள்ளன. இதில் ருதுராஜ் சதம் மட்டுமே தோல்வியில் முடிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள அணிகள் 10-வது வெற்றியை ருசிக்க பலப்பரீட்சை நடத்த இருக்கிறார்கள்.
12 போட்டிகளில் தலா 9 வெற்றிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி காட்டில் சிங்கமும்- யானையும் மோதிக் கொள்வது போன்றது. யாருடைய கவனம் சிதறுகிறதோ, அவர்கள் தோல்வியை சந்திக்க நேரிடும். சி.எஸ்.கே. தோல்வியுடனும், டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றியுடனும் களம் காண்கின்றன.
சூப்பர் டூப்பர் ஃபார்முடன் சென்று கொண்டிருந்த சென்னை அணி கடைசியாக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக காம்பினேசனை மாற்றினால் என்ன? என அணியை சற்று மாற்றியது. வெய்ன் பிராவோ, தீபக் சாஹர் ஆகியோருக்குப் பதிலாக சாம் கர்ரன், கே.எம். ஆசிஃபுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் சறுக்கல் ஏற்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த சி.எஸ்.கே.வுக்கு வழக்கம்போல் ருதுராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் முதல் விக்கெட்டுக்கு 6.5 ஓவரில் 47 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். 2-வது பகுதியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரெய்னாவை 3-வது வீரராக களம் இறக்கினார் எம்.எஸ். டோனி. என்றாலும் வழக்கம்போல் சொதப்பல் தொடர, 3 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து வந்த மொயீன் அலி 21, அம்பதி ராயுடு 2 ரன்னில் வெளியேற சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு ஷாக். ஆனால், அவர்கள் போனால் என்ன? நான் இருக்கிறேன் என இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வரும் ருதுராஜ் 42 பந்தில் அரைசதம் அடித்த பின்னர் வாணவேடிக்கை நிகழ்த்தினார். நானும் உன்னுடனும் இணைகிறேன் எனச் சொல்லி ஜடேஜாவும் ருத்ரதாண்டவம் ஆடினார்.
இந்த ஜோடி 3.4 ஓவரில் 55 ரன்கள் விளாசியது. ருதுராஜ் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் கடைசி 18 பந்தில் 51 ரன்கள் விளாசினார்.
இந்த சீசனில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுதான் அதிகபட்ச ஸ்கோர். இதனால் வெற்றி நமக்கே என சி.எஸ்.கே. ரசிகர்கள் உறுதியாக இருந்தனர். ஆனால் தீபக் சாஹர், பிராவோ இல்லாமல் சி.எஸ்.கே. பந்து வீச்சு எடுபடவில்லை. ராஜஸ்தான் தொடக்க ஜோடி மற்றும் ஷிவம் டுபே சி.எஸ்.கே. பந்து வீச்சை துவம்சம் செய்து வெற்றி பெற்றனர்.
இதனால் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கெதிராக காம்பினேசனை மாற்றினால் வேலைக்காகாது என்று, ராசியான ஆடும் லெவன் அணியுடன் சி.எஸ்.கே. களம் இறங்கலாம். சென்னையின் மிடில் ஆர்டர் இன்னும் சரியாக சோதித்துப் பார்க்கப்படவில்லை. ரெய்னா சொதப்பி வரும் நிலையில், அம்பதி ராயுடும் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வரும் நிலையில் தொடக்க ஜோடி விரைவில் வெளியேறினால் சி.எஸ்.கே.-வுக்கு மிகப்பெரிய விஷப்பரீட்சை காத்திருக்கு.
4 ஓவரில் 55 ரன்கள் விட்டுக்கொடுத்த சாம் கர்ரன் அடுத்த போட்டியில் இருப்பாரா? என்பது சந்தேகம். சாம் கர்ரன், வெய்ன் பிராவோ, ஹேசில்வுட் ஆகியோரில் இருவருக்கு இடம் கிடைக்கலாம். தீபக் சாஹர் மீண்டும் களம் இறங்க வாய்ப்பு. சி.எஸ்.கே. டெல்லிக்கு எதிராக நாளையும் பரிசோதனை செய்து பார்க்குமா? என்பது சந்தேகமே.

டெல்லி அணியின் தொடக்க வீரர் தவான் 42, 8, 24, 8 என பெரிய அளவில் சாதிக்கவில்லை. ஆனால் நெருக்கடியை சமாளித்து எப்போது வேண்டுமென்றாலும் சூப்பர் இன்னிங்ஸ் கொடுக்கக் கூடியவர். அவர் சிறப்பாக விளையாடினால் டெல்லி அணிக்கு மிகப்பெரிய சாதகமாக இருக்கும். ஷ்ரேயாஸ் அய்யர் நான்கு போட்டிகளில் மூன்றில் சிறப்பாக விளையாடியுள்ளார். அந்த அணியின் மிடில் ஆர்டர் வரிசையில் முதுகெலும்பாக திகழ்கிறார். அதிரடியில் ரிஷாப் பண்ட், ஹெட்மையர் உள்ளனர். பிரித்வி ஷா, தவான், ரிஷாப் பண்ட், ஷ்ரேயாஸ் அய்யர் இந்த நான்கு பேரையும் வீழ்த்தினால் மட்டுமே வெற்றியை எதிர்பார்க்கலாம்.
வேகப்பந்து பந்து வீச்சில் நோர்ஜே, அவேஷ் கான், ரபாடா சுழற்பந்து வீச்சில் அஷ்வின், அக்சார் பட்டேல் என நறுக்கான ஐந்து பவுலர்களை வைத்துள்ளது. பெரும்பாலும் இந்த ஐந்து பேரும்தான் பந்து வீசுவார்கள். இவர்களில் இருவரை டார்கெட் செய்தால்தான் ரன்கள் குவிக்க இயலும்.
ஆகவே, எந்த அணி தவறு செய்யாமல் சிறப்பாக விளையாடுகிறதோ, அவர்களுக்கு வெற்றி...
துபாயில் ஆறு போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் நான்கு போட்டிகளில் 2-வது பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி பீல்டிங் கேட்க வாய்ப்புள்ளது. துபாயில் பஞ்சாப் அணிக்கெதிராக ராஜஸ்தான் முதலில பேட்டிங் செய்து 185 ரன்கள் அடித்து 2 ரன்னில் வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் அதுதான்.
இதையும் படியுங்கள்...அருணாசல பிரதேசத்தில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் சதமடித்து அசத்திய இந்திய பெண்கள் அணியின் ஸ்மிருதி மந்தனா ஆட்ட நாயகி விருது வென்றார்.
ஓவல்:
இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் கராரா ஓவலில் நடைபெற்றது . டாஸ் வென்ற ஆஸ்திரேலியாவின் கேப்டன் மெக் லானிங் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஷபாலி வர்மா 31 ரன், ஸ்மிருதி மந்தனா 127 ரன், பூனம் ரவுத் 16 ரன், கேப்டன் மிதாலி ராஜ் 30 ரன், யஸ்திகா பாட்டியா 19 ரன், தீப்தி சர்மா 66 ரன் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் பெர்ரி, கேம்ப்பெல், மோலினக்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, ஆடிய ஆஸ்திரேலியா பெண்கள் அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பெரி 68 ரன், கார்ட்னர் 51 ரன், அலீசா ஹீலி 29 ரன், கேப்டன் மெக் லானிங் 38 ரன், மெக்ராத் 28 ரன் எடுத்தனர்.

இந்தியா சார்பில் பூஜா 3 விக்கெட், கோ ஸ்வாமி, மேக்னா சிங், தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 136 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா சிறப்பாக ஆடி அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார். ஸ்மிருதி மந்தனா 31 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. பூனம் ராவத் 41 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.
இதனால் 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. 2 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இதன்மூலம் இந்த பகல் இரவு டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஷுப்மான் கில் அரை சதமடித்து அசத்தினார்.
துபாய்:
துபாயில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் 49-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது. சாகா முதல் ஓவரிலேயே எல்.பி.டபிள்யூ. மூலம் ஆட்டமிழந்தார். ஜேசன் ராய் 10 ரன்னில் வெளியேறினார். கேன் வில்லியம்சன் 26 ரன்னில் ரன்அவுட்டானார். அப்துல் சமாத் 25 ரன்களும், பிரியம் கார்க் 21 ரன்களும் அடித்தனர்.
ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்களே அடிக்க முடிந்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் டிம் சவுத்தி, ஷிவம் மாவி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் அய்யர் 8 ரன்னிலும், ராகுல் திரிபாதி 7 ரன்னிலும் அவுட்டாகினர்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 57 ரன்னில் வெளியேறினார். நிதிஷ் ராணா 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இது கொல்கத்தா அணி பெறும் 6வது வெற்றி ஆகும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீச, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்களே அடிக்க முடிந்தது.
துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் 49-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி அந்த அணியின் ஜேசன் ராய், விருத்திமான் சாகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சாகா முதல் ஓவரிலேயே எல்.பி.டபிள்யூ. மூலம் ஆட்டமிழந்தார். ஜேசன் ராய் 10 ரன்னில் வெளியேறினார்.

கேன் வில்லியம்சன் 26 ரன்னில் ரன்அவுட் மூலம் வெளியேற, சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி தடுமாற ஆரம்பித்தது. அப்துல் சமாத் 25 ரன்களும், பிரியம் கார்க் 21 ரன்களும் அடிக்க, அந்த அணியில் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்களே அடிக்க முடிந்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் டிம் சவுத்தி, ஷிம் மாவி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையும் படியுங்கள்... போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் கைது
வழக்கம் போல் கடைசி நேரத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி விக்கெட்டுகளை இழக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஷார்ஜாவில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 48-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த ஆர்.சி.பி. 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது. அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் 33 பந்தில் 57 ரன்கள் அடித்தார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் முகமது ஷமி, ஹென்ரிக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். ஸ்கோர் 10.5 ஓவரில் 91 ரன்னாக இருக்கும்போது கே.எல். ராகுல் 35 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பூரண் 3 ரன்னிலும் ஏமாற்றம் அளித்தார்.

சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் 42 பந்தில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது பஞ்சாப் அணி 15.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் பஞ்சாப் அணியால் வெற்றி நோக்கி செல்ல முடியவில்லை.

கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் 12 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இக்கட்டான போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 49-வது லீக் ஆட்டம் துபாயில் நடக்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பவர்பிளேயில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்த போதிலும், மிடில் ஓவர்களில் திணறியதால் இறுதியில் 164 ரன்கள் எடுத்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 48-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. ஆர்.சி.பி. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி விராட் கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் பவர்பிளேயான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்திருந்தது.
இதனால் ஆர்.சி.பி. எப்படியும் 175 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்பின் பஞ்சாப் வீரர்கள் சிறப்பாக பந்து வீச ஆர்.சி.பி. அணியால் ரன்கள் குவிக்க முடியவில்லை. 10-வது ஓவரை ஹென்ரிக்ஸ் வீசினார். இந்த ஓவரில் விராட் கோலி (25), கிறிஸ்டியன் (0) விக்கெட்டை வீழ்த்தினார். 12-வது ஓவரை வீசிய ஹென்ரிக்ஸ் 4-வது பந்தில் படிக்கல் (40) ஆட்டமிழந்தார். ஹென்ரிக்ஸ் 2 ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
ஆர்.சி.பி. கடைசி 6 ஓவரில் 18 ரன்கள் மட்டுமே எடுத்தது. 12 ஓவரில் 73 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 4-வது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல் உடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதனால் மீண்டும் ஸ்கோர் வேகம் எடுத்தது. மேக்ஸ்வெல் 29 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 18.1 ஓவரில் 146 ரன்கள் எடுத்திருக்கும்போது டி வில்லியர்ஸ் 23 ரன்னில் வெளியேறினார்.
கடைசி ஓவரில் மேக்ஸ்வெல் 33 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 57 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெடடுக்கு 73 ரன்கள் சேர்க்க ஆர்.சி.பி. 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றால் பிளேஆஃப் சுற்றை உறுதி செய்து கொள்ளும் என்ற எண்ணத்தோடு பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிரான முதலில் பேட்டிங் செய்கிறது.
ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் 48-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி:
1. விராட் கோலி, 2. தேவ்தத் படிக்கல், 3. எஸ். பரத், 4. மேக்ஸ்வெல், 5. ஏபி டி வில்லியர்ஸ், 6. டேனியல் கிறிஸ்டியன், 7. ஷபாஷ் அகமது 8. ஜார்க் கார்டன், 9. முகமது சிராஜ், 10. ஹர்ஷல் பட்டேல், 11. சஹல்.
பஞ்சாப் கிங்ஸ் அணி:
1. கே.எல். ராகுல், 2. மயங்க் அகர்வால், 3. சர்பராஸ் கான், 4. பூரண், 5. ஷாருக்கான், 6. ஹென்ரிக்ஸ், 7. ஹர்ப்ரீத் பிரார், 8. முகமது ஷமி, 9. ரவி பிஷ்னோய், 10. அர்ஷ்தீப் சிங். 11. மார்கிராம்.






