என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சாம் கர்ரன் காயம் காரணமாக ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து விலகிய நிலையில், மாற்று வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    ஐ.பி.எல். 2021 சீசன் லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த வாரம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் சாம் கர்ரனுக்கு காயம் ஏற்பட்டது.

    ஸ்கேன் பரிசோதனையில் முதுகின் கீழ் பகுதியில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் ஐ.பி.எல். 2021 சீசன் எஞ்சிய போட்டிகளில் இருந்தும், டி20 உலகக்கோப்பை போட்டியில் இருந்தும் விலகியுள்ளார்.

    சாம் கர்ரன்

    தற்போது சாம் கர்ரனுக்குப் பதிலாக வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் டொமினிக் டிரேக்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் மாற்று வீரராக எடுத்துள்ளது. இடது கை பேட்ஸ்மேனான டிரேக்ஸ் இதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாடியது கிடையாது.  19 டி20  போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக 152.95 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி, ஜம்மு-காஷ்மீர் இளம் வீரர் உம்ரான் மாலிக் சாதனைப் படைத்துள்ளார்.
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 141 ரன்கள் அடித்தது. பின்னர் 142 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆர்.சி.பி. அணியால் 137 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் ஆர்.சி.பி. 4 ரன்னில் தோல்வியடைந்தது.

    இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த உம்ரான் மாலிக் இடம் பிடித்திருந்தார். இவர் அந்த அணியின் வழக்கமான வீரர் இல்லை. சந்தீப் ஷர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால் வலைப்பயிற்சி பந்து வீச்சாளரில் இருந்து முதன்மை அணிக்கு மாறினார்.

    நேற்று போட்டியின் 2-வது ஓவரை வீசினார். முதல் பந்தை 147 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினார். நான்காவது பந்தை 152.95 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினார். புல்-டாஸாக வீசப்பட்ட இந்த பந்து ஐ.பி.எல். 2021 சீசனில் மிகவும் வேகமாக வீசப்பட்ட பந்தாக கருதப்படுகிறது.

    இதற்கு முன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் லூக்கி பெர்குசன் 152.75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியதை உம்ரான் மாலிக் முறியடித்துள்ளார்.

    விராட் கோலியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய உம்ரான் மாலிக்

    21 வயதாக உம்ரான் மாலிக் இவ்வாறு சிறப்பாக பந்து வீசியதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஆஸ்திரேலிய மகளிர் அணி முன்னாள் வீராங்கனை லிசா ஸ்தாலேகர், அடுத்த ஐ.பி.எல். தொடரில் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போவார் என எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

    உம்ரான் மாலிக் முறையான பந்து வீச்சாளராக இருக்கிறார். இவருக்குப் பிறகு இன்னும் வீரர்கள் இருக்கிறார்களா? என்று பார்க்க வேண்டும். இர்பான் பதான் டேக் செய்து ஹர்ஷா போக்லே, ஜம்மு-காஷ்மீரில் இன்னும் இருக்கிறார்களா? எனப் பதிவிட்டுள்ளார்.

    இந்த போட்டியில் 4 ஓவரில் 21 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    தங்கப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் அவர் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான ஹெலின் மரோலிசுடன் (அமெரிக்கா) இன்று மல்லுகட்டுகிறார்.
    ஒஸ்லோ:

    உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நார்வேயில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 59 கிலோ உடல் எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்னை சரிதா மோர் 8-2 என்ற புள்ளி கணக்கில் உலக சாம்பியனான கனடாவின் லின்டா மோரிஸ்சுக்கு அதிர்ச்சி அளித்தார். தொடர்ந்து அவர் கால்இறுதியில் ஜெர்மனியின் சான்ட்ரா பருஸ்ஜிவ்ஸ்கியை வீழ்த்தினாலும் அரைஇறுதியில் 0-3 என்ற கணக்கில் பில்யானா ஸிவ்கோவாவிடம் (பல்கேரியா) போராடி வீழ்ந்தார்.

    இதன் 57 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் 5-1 என்ற புள்ளி கணக்கில் மங்கோலியாவின் டேவாசிமெக் எர்கெம்பயரை தோற்கடித்த இந்திய ‘இளம் புயல்’ அன்ஷூ மாலிக், அரைஇறுதியில் சோலோமியா வின்க்கை (உக்ரைன்) 11-0 என்ற புள்ளி கணக்கில் வெளியேற்றி இறுதிசுற்றை எட்டினார். இதன் மூலம் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை 20 வயதான அன்ஷூ மாலிக் படைத்தார். தங்கப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் அவர் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான ஹெலின் மரோலிசுடன் (அமெரிக்கா) இன்று மல்லுகட்டுகிறார்.
    ஆர்.சி.பி. அணிக்கு கடைசி நான்கு ஓவரில் 38 ரன்கள் தேவைப்பட்டது. 17-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் தேவ்தத் படிக்கல் ஆட்டமிழந்தார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 52-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் சேர்த்தது. ஜேசன் ராய் 44 ரன்களும், கேன் வில்லியம்சன் 31 ரன்களும் அடித்தனர். ஆர்.சி.பி. அணி சார்பில் ஹர்ஷல் பட்டேல் 3 விக்கெட்டும், கிறிஸ்டியன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 142 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங் செய்தது. விராட் கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். விராட் கோலி 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிறிஸ்டியன் டேனியல் ஒரு ரன்னிலும், ஸ்ரீகர் பரத் 12 ரன்னிலும் வெளியேறினர்.

    இதனால் ஆர்.சி.பி. 38 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு தேவ்தத் படிக்கல் உடன் மெக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஆர்.சி.பி. அணி வெற்றியை நோக்கி சென்றது.

    15-வது ஓவரின் முதல் பந்தில் மேக்ஸ்வெல ரன்அவுட் ஆனார். அவர் 25 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 40 ரன்கள் விளாசினார். அவர் ஆட்டமிழக்கும்போது ஆர்.சி.பி. 14.1 ஓவரில் 92 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு 35 பந்தில் 49 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்து டி வில்லியர்ஸ் களம் இறங்கினார்.

    ஆர்.சி.பி. அணிக்கு கடைசி நான்கு ஓவரில் 38 ரன்கள் தேவைப்பட்டது. 17-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் தேவ்தத் படிக்கல் ஆட்டமிழந்தார். அவர் 52 பந்தில் 41 ரன்கள் எடுத்தார். அப்போது ஆர்.சி.பி.க்கு 19 பந்தில் 33 ரன்கள் தேவைப்பட்டது. 20 ஓவர் முடிவில் ஆர்.சி.பி. 137 ரன்கள் எடுத்தது.  இதன்மூலம் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
    ஜேசன் ராய், கேன் வில்லியம்சன் ஆகியோரைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்ப ஆர்.சி.பி.க்கு 142 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று 52-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ஜேசன் ராய், அபிஷேக் ஷர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஷர்மா 13 ரன்னில் வெளியேறினார். அடுத்து ஜேசன் ராய் உடன் கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 11.3 ஓவரில் 84 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. கேன் வில்லியம்சன் 29 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    ஆர்.சி.பி. வீரர்கள்

    அதன்பின் ஜேசன் ராய் 38 பந்தில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க சன்ரைசர்ஸ் அணி ஆட்டம் காண ஆரம்பித்தது. மிடில் ஆர்டர்களில் பிரியம் கார்க் 15 ரன்னும், அப்துல் சமாத் 1 ரன்னும், விருத்திமான் சாகா 10 ரன்களும் அடிக்க 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களே அடித்துள்ளது.

    ஆர்.சி.பி. அணியில் ஹர்ஷல் பட்டேல் 3 விக்கெட்டும், டேனியல் கிறிஸ்டியன் 2 விக்கெடும், கார்டன் மற்றும் சஹல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
    ருதுராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் செய்யத் தவறியது என்ன? என்பதை டெல்லி போட்டி சி.எஸ்.கே.வுக்கு பாடம் கற்றுக்கொடுத்துள்ளது.
    சென்னை சூப்பர் கிங்ஸ் 13 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. 13-வது ஆட்டத்தில் சி.எஸ்.கே. சமபலத்துடன் விளங்கும்  டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டது. காயம் காரணமாக சுரேஷ் ரெய்னா சேர்க்கப்படவில்லை. அவர் இந்தத் தொடரில் பெரிய அளவில் ஜொலிக்காததால் ‘சின்ன தல’ இல்லாமல் சி.எஸ்.கே. களம் இறங்கியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக ஏற்பட்ட தோல்வி காரணமாக தீபக் சாஹர், வெய்ன் பிராவோவை மீண்டும் களம் இறக்கியது.

    தொடக்கத்தில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிடில் ஆர்டர் வரிசை பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடவில்லை எனக்கூறி வந்தோம். ஆனால், தொடக்க பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடியதால் அவர்களின் பலவீனம் தெரியாமல் இருந்தது.

    இந்த நிலையில்தான் டெல்லிக்கு எதிராக ருதுராஜ் 13 ரன்னிலும், டு பிளிஸ்சிஸ் 10 ரன்னிலும் வெளியேற சி.எஸ்.கே. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு வந்தது சோதனை.

    சின்ன தல சுரேஷ் ரெய்னாவுக்கு பதிலாக களம் இறங்கிய உத்தப்பா 19  பந்தில் 19 ரன்கள் எடுத்து ஏமாற்றம். மொயீன் அலி 5 ரன்னில் ஏமாற்றம். நல்லவேளையாக அம்பதி ராயுடன் மட்டும் நிலைத்து நின்று விளையாடினார். இல்லையென்றால் சி.எஸ்.கே. பரிதாபமான ஸ்கோரைதான் எட்டியிருக்கும்.

    5-வது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடு உடன் தல டோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்றதே தவிர அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. குறிப்பாக எம்.எஸ். டோனி 27 பந்துகளை சந்தித்து 18 ரன்கள் மட்டுமே அடித்தார். அவரது ஸ்கோரில் ஒரு பவுண்டரி கூட வரவில்லை. இதனால் டோனியால் அதிரடியாக விளையாட முடியாது எனத் தெளிவாக தெரியவந்துள்ளது. ராயுடு 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தாலும் 43 பந்துகளை சந்தித்தார்.

    இதனால் மிடில் ஆர்டரில் மிகப்பெரிய ஓட்டை இருப்பது டெல்லி அணிக்கெதிரான ஆட்டத்தில் தெளிவாக தெரியவந்தது. இதை சரி செய்யவில்லை என்றால், பிளேஆஃப் சுற்றில் கடும் சவாலை சந்திக்க நேரிடும்.

    பந்து வீச்சில் முழு பலத்துடன் களம் இங்கியது. என்றாலும் சிறந்த அணியை 136 ரன்னுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் கடினமானதே. என்றாலும் கடைசி ஓவர் வரை போட்டியை இழுத்துச் சென்றது நம்பிக்கையை அளித்திருக்கும்.

    ருதுராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் ஜோடி சிறப்பாக விளையாட வேண்டும். அல்லது மிடில் ஆர்டர் கம்பீரமான ஃபார்முக்கு வரவேண்டும். அப்போதுதான் சென்னை அணி பிளேஆஃப் சுற்றில் கெத்தாக விளையாட முடியும். இதற்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியை பரிசோதனையாக எடுத்துக் கொள்ளலாம்.

    பஞ்சாப் அணியை வீழ்த்தினால் குவாலிபையர் 1-ல் விளையாடுவது உறுதியாகும். தோற்றால் ஆர்.சி.பி. நிலவரத்தை பொறுத்து குவாலிபையர் அல்லது எலிமினேட்டர் உறுதி செய்யப்படும்.

    தவறு செய்வது இயல்பு. ஆனால் செய்த தவறையே திரும்ப திரும்ப செய்தால்?... பஞ்சாப் அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி இறுதிக் கட்டத்தில் வெற்றியை நழுவ விடுவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழக்கும் தருவாயில் உள்ளது.

    பஞ்சாப் கிங்ஸ் அணி

    பஞ்சாப் அணி கடந்த போட்டியில் ஆர்.சி.பி.யை எதிர்கொண்டது. 164 இலக்கை நோக்கி பஞ்சாப் விளையாடியது. வழக்கம்போல் கே.எல். ராகுல்- மயங்க் அகர்வால் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.5 ஓவரில் 91 ரன்கள் குவித்தது. 9 விக்கெட் கைவசம் இருக்கும் நிலையில் 55 பந்துகளில் 74 ரன்கள் தேவையிருந்தது. அதன்பின் வந்தவர்கள் சொதப்ப 6 ரன்னில் வெற்றியை பறிகொடுத்தது.

    இதனால் அந்த அணி போட்டியை சிறப்பாக முடிப்பது அவசியம். அந்த ராசி இந்தத் தொடரில் பஞசாப் அணிக்கு கிட்டவில்லை. அடுத்த தொடரிலாவது ராசி கைக்கொடுக்கிறதா? என்று பார்ப்போம்.

    பேட்டிங்கில் நிக்கோலஸ் பூரன் சொதப்பி வருவது அந்த அணியின் மிடில் ஆர்டர் வரிசையில் மிகப்பெரிய பலவீனத்தை ஏற்படுத்தியுள்ளது. பந்து வீச்சில் ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவி போஷ்னாய் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். மேலும், இரு பந்து வீச்சாளர்கள் கைக்கொடுக்க வேண்டியது அவசியம். மொத்தத்தில் பஞ்சாப் அணிக்கு அதிர்ஷ்டம் தேவை.

    இரண்டு அணிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதாக சற்று வலுவாக உள்ளது. அந்த அணி வெற்றிக்காக முயற்சிக்கும்.
    அபு தாபியில் நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று 52-வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:

    1. ஜேசன் ராய், 2. சாகா, 3. கேன் வில்லியம்சன், 4. பிரியம் கார்க், 5. அபிஷேக் ஷர்மா, 6. அப்துல் சமாத், 7. ஜேசன் ஹோல்டர், 8. ரஷித் கான், 9. புவி, 10. சித்தார்த் கவுல், 11. உம்ரன் மாலிக்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி:

    1. விராட் கோலி, 2. தேவ்தத் படிக்கல், 3. ஸ்ரீகர் பரத், 4. மேக்ஸ்வெல், 5. ஏபி டி வில்லியர்ஸ், 6. டேனியல் கிறிஸ்டியன், 7. ஷாபாஸ் அகமது, 8. ஜார்ஜ் கார்டன், 9. ஹர்ஷல் பட்டேல், 10. முகமது சிராஜ், 11. சஹல்.
    ஓய்வுக்கு பிறகு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு நடிப்பு என்பது எளிதானது அல்ல என்றும் ஓய்வுக்கு பிறகும் கிரிக்கெட்டுடனான தொடர்பில் இருப்பேன் என்றும் டோனி தெரிவித்தார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் மகேந்திரசிங் டோனி 2 உலக கோப்பையை (2007-ல் 20 ஓவர் மற்றும் 2011-ல் ஒருநாள் போட்டி) பெற்றுக்கொடுத்து பெருமை சேர்த்தார்.

    40 வயதான டோனி கடந்த ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். 2019-ம் ஆண்டு உலக கோப்பை அரை இறுதி அவரது கடைசி சர்வதேச போட்டியாகும்.

    சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வந்தார். ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வரும் இந்த ஐ.பி.எல். போட்டியோடு டோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இந்த ஐ.பி.எல்.லில் அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

    இந்தநிலையில் டோனி இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியோடு ஓய்வு பெறவில்லை. அடுத்த ஆண்டு ஐ.பி.எல்.லிலும் விளையாடுகிறார். சென்னையில் விளையாடுவதுதான் தனது கடைசி போட்டியாக இருக்கும் என்று டோனி தெரிவித்து உள்ளார்.

    சென்னை அணி வீரர்கள்


    இந்திய சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு தினத்தையொட்டி ஆன்லைன் வழியாக டோனி ரசிகர்களுடன் உரையாடிய போது இதை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நான் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்ற அறிவிப்பை சொல்ல சுதந்திர தினத்தைவிட சிறந்த ஒரு நாள் இருக்காது என எண்ணி அதை செய்தேன்.

    அதேநேரத்தில் எனக்கான பிரிவு உபச்சார போட்டியாக (ஃபேர்வெல்) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சென்னையில் நான் விளையாடும் ஆட்டம் அமைய வாய்ப்பு உள்ளது. அதைவிட சிறந்ததொரு ஃபேர்வெல் எனக்கு இருக்க முடியாது.

    இவ்வாறு டோனி கூறினார்.

    ஓய்வுக்கு பிறகு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு நடிப்பு என்பது எளிதானது அல்ல. ஓய்வுக்கு பிறகும் கிரிக்கெட்டுடனான தொடர்பில் இருப்பேன் என்று அவர் தெரிவித்தார்.

    ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்த மாதம் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் ஆலோசகராக டோனி நியமிக்கப்பட்டு உள்ளார்.

    அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    டெல்லி சத்ரசல் அரங்கில் நடந்த மோதலில் பலத்த காயமடைந்த சாகர் தங்கர் உயிரிழந்ததையடுத்து இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றினர்.
    புதுடெல்லி:

    மல்யுத்த வீரர் சுஷில் குமார் 2012-ம் ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து  முன்னாள் ஜூனியர் தேசிய மல்யுத்த சாம்பியன் சாகர் தங்கர் மற்றும் அவரது நண்பர்களை கடந்த மே மாதம் சொத்து தகராறு காரணமாக சத்ரசல் மைதானத்தில் வைத்து  தாக்கியதாகக் கூறப்படுகிறது.

    இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த சாகர் தங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து சுஷில் குமார் ஜூன் 2-ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    தனது நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக கூறி சுஷில் குமார் தரப்பில் டெல்லி ரோகிணி கோர்ட்டில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .

    கொலையான சாகர் தங்கர் சார்பில் வழக்கறிஞர் நிதின் வசிஷ் வாதாடினார். சுஷில் குமார் ஜாமீனில் விடுவிக்கப்படக் கூடாது  என வாதாடினார்.
     
    இந்நிலையில், இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீன் மனுவை டெல்லி ரோகிணி கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    குறைவான இலக்கு என்பதால் தன்னம்பிக்கையுடன் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 8.2 ஓவரில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.
    ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டின் 51-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. எவின் லீவிஸ், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கத்தில் இருவரும் சிறப்பான ஆடினர். என்றாலும் 9 பந்தில் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். எவின் லீவிஸ் 19 பந்தில் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது ராஜஸ்தான் ஸ்கோர் 5.3 ஓவரில் 21 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் வந்த சஞ்சு சாம்சன் (3), ஷிவம் டுபே (4) ஆகியோரை நீஷம் வெளியேற்ற, க்ளென் பிலிப்ஸை (4) கவுல்டர்-நைல் வெளியேற்றினார். இதனால் 50 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் தடுமாறியது.

    மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, கவுல்டர்-நைல், நீஷம் ஆகியோர் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்களே அடிக்க முடிந்தது. நீஷம் 4 ஓவரில் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், பும்புரா 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், கவுல்டர்-நைல் 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 91 ரன்கள் அடித்தால் வெற்றி இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 13 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 8 பந்தில் 13 ரன்கள் எடுத்தார்.

    3-வது விக்கெட்டுக்கு இஷான் கிஷன் உடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 25 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் அடிக்க மும்பை இந்தியன்ஸ் 8.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் நீஷம், கவுல்டர் நைல் அபாரமாக பந்து வீச 91 ரன்களே வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.
    ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டின் 51-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    எவின் லீவிஸ், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கத்தில் இருவரும் சிறப்பான ஆடினர். என்றாலும் 9 பந்தில் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். எவின் லீவிஸ் 19 பந்தில் 24 ரன்கள் எடுத்துவெளியேறினார். அப்போது ராஜஸ்தான் ஸ்கோர் 5.3 ஓவரில் 21 ரன்களா இருந்தது.

    அதன்பின் வந்த சஞ்சு சாம்சன் (3), ஷிவம் டுபே (4) ஆகியோரை நீஷம் வெளியேற்ற, க்ளென் பிலிப்ஸை (4) கவுல்டர்-நைல் வெளியேற்றினார். இதனால் 50 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் தடுமாறியது.

    மில்லர் 15 ரன்களும், ராகுல் டெவாட்டியா 12 ரன்களும் அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 75 ரன்னைக் கடந்தது. மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, கவுல்டர்-நைல், நீஷம் ஆகியோர் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

    பும்ரா

    இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்களே அடிக்க முடிந்தது.

    நீஷம் 4 ஓவரில் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், பும்புரா 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், கவுல்டர்-நைல் 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக விளையாடும்போது காயம் ஏற்பட்டதால் ஐ.பி.எல். மற்றும் ஐ.சி.சி. டி20 கிரிக்கெட்டில் இருந்து சாம் கர்ரன் விலகியுள்ளார்.
    இங்கிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் சாம் கர்ரன். இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த சனிக்கிழமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியின்போது சாம் கர்ரனுக்கு காயம் ஏற்பட்டது. ஸ்கேன் பரிசோதனையில் முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது உறுதியானது.

    இதனால் இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் சாம் கர்ரன் இங்கிலாந்து செல்ல இருக்கிறார். அங்கு மற்றொரு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டடு காயம் குறித்து முழுமையாக ஆராயப்படும். இந்த காயத்தால் ஐ.பி.எல். 2021 தொடரின் எஞ்சிய போட்டிகளிலும், ஐசிசி டி20 கிரிக்கெட் தொடரிலும் சாம் கர்ரன் பங்கேற்கமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
    ×