என் மலர்
செய்திகள்

டொமினிக் டிரேக்ஸ்
சென்னை அணியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டொமினிக் டிரேக்ஸ்
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சாம் கர்ரன் காயம் காரணமாக ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து விலகிய நிலையில், மாற்று வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல். 2021 சீசன் லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த வாரம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் சாம் கர்ரனுக்கு காயம் ஏற்பட்டது.
ஸ்கேன் பரிசோதனையில் முதுகின் கீழ் பகுதியில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் ஐ.பி.எல். 2021 சீசன் எஞ்சிய போட்டிகளில் இருந்தும், டி20 உலகக்கோப்பை போட்டியில் இருந்தும் விலகியுள்ளார்.

தற்போது சாம் கர்ரனுக்குப் பதிலாக வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் டொமினிக் டிரேக்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் மாற்று வீரராக எடுத்துள்ளது. இடது கை பேட்ஸ்மேனான டிரேக்ஸ் இதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாடியது கிடையாது. 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதையும் படியுங்கள்... இந்திரா காந்தியிடம் இருந்த நெருப்பு பிரியங்காவிடமும் உள்ளது- சிவசேனா
Next Story






