என் மலர்
விளையாட்டு


A special moment for @deepak_chahar9! 💍 💛
— IndianPremierLeague (@IPL) October 7, 2021
Heartiest congratulations! 👏 👏#VIVOIPL | #CSKvPBKS | @ChennaiIPLpic.twitter.com/tLB4DyIGLo
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பாராலிம்பிக் போட்டிகள், ஃபிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாட் போட்டிகள் மற்றும் பல்வேறு சதுரங்க போட்டிகளில் பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வென்ற 15 தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஊக்கத் தொகையாக மொத்தம் 3 கோடியே 98 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி சிறப்பித்தார்.
ஜப்பான் தலைநகர், டோக்கியோவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளர்களுக்கான பாராலிம்பிக் 2020 போட்டிகளில் உயரம் தாண்டுதல் போட்டியில், ஜி-63 பிரிவில், 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்ற டி.மாரியப்பன் உயரிய ஊக்கத் தொகையாக 2 கோடி ரூபாய்க்கான காசோலை.
2020-ம் ஆண்டு சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் மூலம் நடைபெற்ற ஃபிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாட் போட்டியில், இந்திய அணியின் சார்பாக கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், விஆர். அரவிந்த் சிதம்பரம், ஆர். பிரக்ஞானந்தா மற்றும் ஆர்.வைஷாலி ஆகியோருக்கு தலா 20 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 80 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் மேற்கண்ட போட்டியின் அணியின் பயிற்சியாளர் ஸ்ரீநாத் நாராயணனுக்கு 12 லட்சம் ரூபாய், என மொத்தம் 92 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள்.

2021-ம் ஆண்டு சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் மூலம் நடைபெற்ற ஃபிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாட் போட்டியில், இந்திய அணியின் சார்பாக கலந்து கொண்டு வெண்கலப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், பா. அதிபன், ஆர்.பிரக் ஞானந்தா, ஆர். வைஷாலி மற்றும் பா.சவிதா ஸ்ரீ ஆகியோருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளும் மற்றும் மேற்கண்ட போட்டியின் ஆண்கள் அணியின் பயிற்சியாளர் ஸ்ரீநாத் நாராயணனுக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் பெண்கள் அணியின் பயிற்சியாளர் மோ.ஷ்யாம் சுந்தருக்கு 3 லட்சம் ரூபாய், என மொத்தம் 57 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள்.
கடந்த 4.3.2019 முதல் 15.3.2019 வரை கஜகஸ்தான் நாட்டின், அஸ்தானா நகரில் நடைபெற்ற பிடே உலக சதுரங்க குழு வாகையர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதற்காக பா. அதிபனுக்கு 20 லட்சம் ரூபாய்க்கான காசோலை. 2019-ம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றப.இனியன், 2019-ம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் மகளிர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற ஸ்ரீஜா சேஷாத்திரி, 2020ஆம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் மகளிர் கிராண்ட் மாஸ்டர் பட்டங்கள் வென்ற வி.வர்ஷினி மற்றும் பி.வி.நந்திதா ஆகியோருக்கு தலா 5 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள்.
2020-ஆம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற வி.எஸ். ரத்தன்வேல் மற்றும்மு.பிரனேஷ், 2021-ம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் மகளிர் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற செல்வி பா. சவிதா ஸ்ரீ ஆகியோ ருக்கு தலா 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் என மொத்தம் 3 கோடியே 98 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை 15 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிகழ்வின் போது, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதன்மைச் செயலாளர்- உறுப்பினர் செயலர் ரமேஷ் சந்த் மீனா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...லக்கிம்பூர் வன்முறை சம்பவம்: நாளைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

துபாய்:
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-வது கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.
19-வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. அபுதாபியில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 வெற்றி, 4 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி பஞ்சாப்பை வீழ்த்தி மீண்டும் முதல் இடத்தை பிடிக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை அணி வெற்றி பெற்றால் டெல்லியுடன் இணைந்து தலா 20 புள்ளிகளை பெறும். ரன்ரேட்டில் டெல்லியை விட நல்ல நிலையில் இருப்பதால் வெற்றி பெற்றாலே முதல் இடத்திற்கு சென்னை முன்னேறிவிடும்.
அதே நேரத்தில் டெல்லி அணிக்கு இன்னும் ஒரு ஆட்டம் இருக்கிறது. அந்த அணி கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூரை நாளை வீழ்த்தினால் 22 புள்ளியுடன் முதல் இடத்தை பிடிக்கும்.
சென்னை அணி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடர்ந்து 4 ஆட்டங்களில் வென்ற பிறகு 2 தோல்வியை தழுவியது. இதனால் சி.எஸ்.கே. வீரர்கள் கவனமுடன் விளையாட வேண்டும்.
பஞ்சாப் அணியை பொறுத்தவரை பிளே- ஆப் சுற்று வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டது என்றே சொல்லலாம். சென்னையை வீழ்த்தவேண்டிய நெருக்கடி உள்ளது. வெற்றிபெற்றால் 12 புள்ளியை பெறும்.
அதே நேரத்தில் மற்ற அணிகளின் முடிவை பொறுத்து அதன் நிலை இருக்கிறது. ரன் ரேட்டிலும் அந்த அணி மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது.
ஷார்ஜாவில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
12 புள்ளியுடன் இருக்கும் கொல்கத்தா அணி பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க வெற்றிபெற வேண்டிய கட்டாயம் உள்ளது. மிகப்பெரிய வெற்றியை பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்தில் ராஜஸ்தான் அணி இருக்கிறது. அந்த அணியின் நிலை பஞ்சாப்பை போன்றே உள்ளது.
நாளையுடன் லீக் ஆட்டம் முடிகிறது. நாளைய ஆட்டங்களில் மும்பை- ஐதராபாத், டெல்லி- பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
சென்னை, டெல்லி, பெங்களூர் ஆகிய 3 அணிகள் ஏற்கனவே பிளே- ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. 4-வதாக எந்த அணி தகுதி பெறும் என்று நாளை தெரியும். 4 அணிகள் இதற்கான வாய்ப்பில் இருந்தாலும் கொல்கத்தா, மும்பை இடையேதான் போட்டி நிலவுகிறது.






