என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ்
    X
    மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ்

    மேக்ஸ்வெல் அதிரடி: பஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்.சி.பி.

    ராயல் சேலஞ்சர்ஸ் பவர்பிளேயில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்த போதிலும், மிடில் ஓவர்களில் திணறியதால் இறுதியில் 164 ரன்கள் எடுத்தது.
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 48-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. ஆர்.சி.பி. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி விராட் கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் பவர்பிளேயான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்திருந்தது.

    இதனால் ஆர்.சி.பி. எப்படியும் 175 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்பின் பஞ்சாப் வீரர்கள் சிறப்பாக பந்து வீச ஆர்.சி.பி. அணியால் ரன்கள் குவிக்க முடியவில்லை. 10-வது ஓவரை ஹென்ரிக்ஸ் வீசினார். இந்த ஓவரில் விராட் கோலி (25), கிறிஸ்டியன் (0) விக்கெட்டை வீழ்த்தினார். 12-வது ஓவரை வீசிய ஹென்ரிக்ஸ் 4-வது பந்தில் படிக்கல் (40) ஆட்டமிழந்தார். ஹென்ரிக்ஸ் 2 ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

    ஆர்.சி.பி. கடைசி 6 ஓவரில் 18 ரன்கள் மட்டுமே எடுத்தது. 12 ஓவரில் 73 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 4-வது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல் உடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    ஹென்ரிக்ஸ்

    இதனால் மீண்டும் ஸ்கோர் வேகம் எடுத்தது. மேக்ஸ்வெல் 29 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 18.1 ஓவரில் 146  ரன்கள் எடுத்திருக்கும்போது டி வில்லியர்ஸ் 23 ரன்னில் வெளியேறினார்.

    கடைசி ஓவரில் மேக்ஸ்வெல் 33 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 57 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெடடுக்கு 73 ரன்கள் சேர்க்க ஆர்.சி.பி. 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.
    Next Story
    ×