என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலக கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா- பாகிஸ்தான் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீசுகிறது.

    டி20 உலகக்கோப்பையில் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இந்திய அணி விவரம்:

    1. ரோகித் சர்மா, 2. கே.எல். ராகுல், 3. விராட் கோலி, 4. சூர்யகுமார் யாதவ், 5. ஹர்திக் பாண்ட்யா, 6. ரிஷாப் பண்ட், 7. பும்ரா, 8. முகமது ஷமி, 9. ஜடேஜா, 10. வருண் சக்ரவர்த்தி, 11. புவனேஸ்வர்குமார்

    பாகிஸ்தான் அணி விவரம்:

    1. பாபர் அசாம், 2. முகமது ரிஸ்வான், 3. பஹர் ஜமான், 4. முகமது ஹபீஸ், 5. சோயிப் மாலிக், 6. ஆசிஃப் அலி, 7. இமாத் வாசிம், 8. சதாப் கான், 9. ஹசன் அலி, 10. ஹரிஸ் ராஃப், 11. ஷாஹீன் அப்ரிடி
    மூன்றாவது வீரராக களமிறங்கிய சரித் அசலங்கா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
    சார்ஜா:

    டி20 உலகக் கோப்பை சூப்பர்-12 சுற்றில் இன்று சார்ஜாவில் நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை, வங்காளதேசம் அணிகள் மோதின.  முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்தது.  துவக்க வீரர் முகமது நயிம் 62 ரன்கள் குவித்தார். அதிரடியாக ஆடிய முஷ்பிகுர் ரஹிம் 36 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 57 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார். 

    இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின், துவக்க வீரர்கள் விரைவில் விக்கெட்டை இழந்தனர். மூன்றாவது வீரராக களமிறங்கிய சரித் அசலங்கா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். மறுமுனையில் பனுகா ராஜபக்சவும் வங்காளதேச பந்துவீச்சை துவம்சம் செய்தார். இருவரும் அரை சதம் கடந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். பனுகா ராஜபக்ச 53 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின்னர் சரித் அசலங்காவுடன் கேப்டன் சனகா இணைய, இலங்கை அணி 18.5 ஓவர்களில் 5 விகெட்டுகளை 172 ரன்கள் எடுத்தது. இதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. சரித் அசலங்கா 49 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 80 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார்.
    அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க வீரர் முகமது நயிம் 62 ரன்கள் குவித்து அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.
    சார்ஜா:

    டி20 உலகக் கோப்பை சூப்பர்-12 சுற்றில் இன்று சார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை, வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணியின் துவக்க வீரர் லிட்டன் தாஸ் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷாகிப் அல் ஹசன் 10 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதேசமயம் மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மற்றொரு துவக்க வீரர் முகமது நயிம் 62 ரன்கள் குவித்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தார். ஆபிப் உசைன் 7 ரன்களே எடுத்தார்.

    அதிரடியாக ஆடிய முஷ்பிகுர் ரஹிம் அரை சதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்த, வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்தது.  முஷ்பிகுர் ரஹிம் 36 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 57 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார். இதேபோல் கேப்டன் மஹ்முதுல்லா ஆட்டமிழக்காமல் 10 ரன்கள் எடுத்திருந்தார்.

    இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.
    பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, நடிகர் ரன்வீர் மற்றும் சில தனியார் நிறுவனங்கள் என 22 நிறுவனங்கள் ஐ.பி.எல். அணிகளை வாங்க ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    துபாய்:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு நாட்டு வீரர்கள் ஒரு அணியில் விளையாடியதால் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டிக்கு பெரும் வரவேற்பு இருந்தது.வர்த்தக ரீதியிலும் இந்த போட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

    ஐ.பி.எல். போட்டியில் தற்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக 2 அணிகள் இடம் பெறுகின்றன. மொத்தம் 10 அணிகள் அடுத்த சீசனில் விளையாடும்.

    ஐ.பி.எல். புதிய அணிகளுக்கான ஏலம் டெண்டர் நடைமுறையை கிரிக்கெட் வாரியம் கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் வெளியிட்டது. டெண்டருக்கான விண்ணப்பம் ரூ.10 லட்சம் ஆகும். இந்த தொகை திரும்ப வழங்கப்பட மாட்டாது.

    ஐ.பி.எல். போட்டி 2 புதிய அணிகளுக்கான ஏலம் நாளை நடக்கிறது. ஒவ்வொரு அணியின் அடிப்படை விலை ரூ.2 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    நாளை நடைபெறும் இந்த ஏலத்தில் அதானி குழுமம், அகமதாபாத்தை சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனம், சஞ்சீவ் கோயங்காவின் ஆர்.பி.எஸ்.ஜி. குழுமம், நவீன் ஜிண்டாலின் ஜிண்டால் ஸ்டீல், அரபிந்தோ மருந்து நிறுவனம், இங்கிலாந்தின் கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, நடிகர் ரன்வீர் மற்றும் சில தனியார் நிறுவனங்கள் என 22 நிறுவனங்கள் ஐ.பி.எல். அணிகளை வாங்க ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அகமதாபாத், கட்டாக், தர்மசாலா, கவுகாத்தி, இந்தூர், லக்னோ ஆகிய நகரங்களை மையமாக வைத்தே அணிகளின் ஏலம் இருக்கும். ஒரு நிறுவனம் எத்தனை பெயர்களுக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

    அகமதாபாத், லக்னோ ஆகிய நகரங்களை அடிப்படையாகக் கொண்டு ஐ.பி.எல். புதிய அணிகள் அமைய வாய்ப்பு இருக்கிறது. ஐ.பி.எல்.லின் 2 புதிய அணிகள் எவை? யார் வாங்கியுள்ளனர் என்ற விவரத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நாளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு புதிய அணிகள் மூலம் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

    இந்திய அணியின் தீவிர ரசிகர் சுதிர், பாகிஸ்தான் ரசிகர் முகமது பஷிர் ஆகியோர் வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக துபாய் சென்றுள்ளனர்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகளை நேரில் கண்டு ரசிக்க அனுமதி ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணி உலகளவில் முழு வீச்சில் நடைபெற்று வருவதால், தற்போது ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்திய அணி எந்த இடத்தில் விளையாடினாலும், தீவிர ரசிகரான சுதிர் அங்கு சென்று இந்திய வீரர்களை உற்சாகப்படுத்துவார். உடல் முழுவதும் இந்திய மூவர்ணக்கொடி கலரை பூசிக்கொண்டு கையில் தேசியக்கொடியை ஏந்தி, சங்கு ஊதி உற்சாகப்படுத்துவார். இவருடைய உற்சாகப்படுத்துதல் இந்திய வீரர்களுக்கு கூடுதல் உத்வேகத்தை கொடுக்கும்.

    தற்போது அவர் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கோப்பை போட்டியை காண துபாய் சென்றுள்ளார். 

    பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாட இருப்பது குறித்து சுதிர் கூறுகையில் ‘‘இது மிகவும் உணர்ச்சிவசமான, அதிகமான அழுத்தம் கொண்ட போட்டி. தற்போது வரைக்கும் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தியது கிடையாது. 2007-ல் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்றதுபோல், மீண்டும் வெற்றிபெறும் என நம்புகிறேன். இந்திய வீரர்களை உற்சாகப்படுத்த முழு உறுதியுடன் வந்துள்ளேன்’’ என்றார்.

    முகமது பஷிர்

    சுதிர் போன்று பாகிஸ்தான் அணியை உற்சாகப்படுத்தி வருபவர் முகமது பஷிர். இவரும் துபாய் சென்றுள்ளார். இந்தியா- பாகிஸ்தான் போட்டி குறித்து முகமது பஷிர் கூறுகையில் ‘‘இந்தியா- பாகிஸ்தான் போட்டி நடைபெற இருப்பதால், நான் மிகவும் மகிழ்ச்சியா உணர்கிறேன். என்னுடைய இதயம், பிரார்த்தனை பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும் என்பதுதான். ஆனால், எம்.எஸ். டோனி எனக்கு மிகவும் பிடித்தமானவர். இந்த முறை பாகிஸ்தான் வெற்றிபெறும் என நம்புகிறேன். ஆகவே, பாகிஸ்தான் மக்களும் சந்தோசத்தை கொண்டாட முடியும்’’ என்றார்.
    உலக கோப்பைகளில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் மோசமான ஆட்டங்கள் குறித்து நாங்கள் தற்போது கவலைப்படவில்லை என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார்.
    துபாய்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

    இதன் ‘சூப்பர்-12’ சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 நாடுகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.

    லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

    நேற்று நடந்த ஆட்டங்களில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவையும், இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் வெஸ்ட இண்டீசையும் (குரூப்-1) வீழ்த்தியது.

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி குரூப்-2 பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது. இந்த போட்டி துபாயில் இந்திய நேரடிப்படி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்த போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாகிஸ்தான் மிகவும் வலுவான அணி. நீண்ட நாட்களாக அவர்கள் திறமையாக விளையாடுகிறார்கள். அவர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாட வேண்டும். ஆட்டத்தின் போக்கை எப்போது வேண்டுமானாலும் மாற்றக்கூடிய வீரர்கள் பாகிஸ்தான் அணியில் உள்ளனர்.

    அனைத்து விதமான சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு இந்திய வீரர்கள் தேர்வு இருக்கும் ஐ.பி.எல்.லில் விளையாடியதால் எங்கள் வீரர்கள் உலக கோப்பைக்கு தயாராக உள்ளனர்.

    ஹர்த்திக் பாண்ட்யா 6-வது வரிசையில் களம் இறக்கப்படலாம். அவர் அணிக்கு மதிப்புமிக்கவர் ஆவார். அவர் ஒரு ஓவர், 2 ஓவர்கள் வீசும் அளவுக்கு சில திட்டங்களை வகுத்துள்ளோம்.

    ஹர்த்திக் பாண்யாவிடம் உள்ள திறமையை ஒரே இரவில் கொண்டுவர முடியாது. அவர் ஒரு பேட்ஸ்மேனாக அணியில் இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.அவர் சிறப்பாக விளையாடும்போது எதிரணியை தினறடித்து விடுவார். அவரது இடம் குறித்து எந்த பேச்சும் கிடையாது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் அவர் அற்புதமாக விளையாடி இருந்தார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் கூறியதாவது:-

    உலக கோப்பைகளில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் மோசமான ஆட்டங்கள் குறித்து நாங்கள் தற்போது கவலைப்படவில்லை. எங்கள் பலம், திறமை குறித்து சிந்தித்து வருகிறோம்.

    சிறப்பாக ஆடி நல்ல முடிவுகளை பெற முயல்வோம். சர்பிராஸ் அகமதை விட சோயிப்மலிக் சுழற்பந்து வீச்சை சமாளித்து ஆடுவார். இதனால் அவரை அணியில் சேர்த்தோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    20 ஓவர் போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இதுவரை 8 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 7 முறை வெற்றி பெற்றது. பாகிஸ்தானுக்கு ஒரு தடவை மட்டுமே வெற்றி கிட்டியது.
    2007-ம் ஆண்டு அறிமுக உலக கோப்பையில் இரு அணிகளும் முதல் முறையாக மோதின. டையில் முடிந்த இந்த ஆட்டத்தில் பின்னர் பவுல் அவுட் முறையில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த உலக கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 5 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. உலக கோப்பையில் இந்தியா மோதிய அனைத்து ஆட்டத்திலும் (5 போட்டி) பாகிஸ்தானை தோற்கடித்து இருந்தது. 2012-ம் ஆண்டு டிசம்பர் 25-ந் தேதி பெங்களூரில் நடந்த ஆட்டத்தில் மட்டும் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்று இருந்தது. இந்த ஒரு முறை மட்டுமே 20 ஓவரில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்று இருந்தது.

    இந்திய அணி 2012-ம் ஆண்டு டிசம்பரில் அகமதாபாத் மைதானத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராகும். இதே ஆட்டத்தில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன் எடுத்தது அந்த அணியின் அதிகபட்சமாகும்.

    2016-ம் ஆண்டு டாக்காவில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் 83 ரன்னில் சுருண்டது அந்த அணியின் குறைந்தபட்ச ஸ்கோராகும். இந்திய அணி 2012-ல் பெங்களூர் மைதானத்தில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்தது குறைந்தபட்சமாகும்.

    விராட் கோலி 6 ஆட்டத்தில் 254 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார். 3 போட்டியில் அவுட் ஆகாததால் அவரது சராசரி 84.66 ஆகும். 2 அரை சதம் அடித்துள்ளார். பாகிஸ்தான் வீரர் சோயிப்மாலிக் 8 போட்டியில் 164 ரன் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். ஒரு ஆட்டத்தில் அதிக ரன் எடுத்தவர் விராட் கோலி ஆவார். 2012-ம் ஆண்டு கொழும்பில் நடந்த ஆட்டத்தில் அவர் இந்த ரன்னை எடுத்தார்.

    பாகிஸ்தான் வேகபந்து வீரர் உமர்குல் 6 ஆட்டத்தில் 11 விக்கெட் கைப்பற்றியுள்ளார். அவர் 37 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றியது சிறந்த பந்துவீச்சாகும். அவருக்கு அடுத்தபடியாக இர்பான் பதான் 6 விக்கெட் எடுத்துள்ளார். 2007-ம் ஆண்டு டர்பனில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர் முகமது ஆசிப் 18 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றியது சிறந்த பந்து வீச்சாகும்.
    உலக பெண்கள் டென்னிஸ் போட்டி உள்பட இந்த ஆண்டில் நடைபெறும் எஞ்சிய எந்த போட்டியிலும் கலந்து கொள்ளமாட்டேன் என்று ஆஷ்லி பார்ட்டி கூறியுள்ளார்.
    சிட்னி:

    ‘டாப்-8’ வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் உலக பெண்கள் டென்னிஸ் இறுதி சுற்று போட்டி மெக்சிகோவில் அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து உலகின் நம்பர் ஒன் வீராங்கனையும், விம்பிள்டன் சாம்பியனுமான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி காயம் காரணமாக நேற்று விலகினார்.

    கடைசியாக 2019-ம் ஆண்டு நடந்த உலக டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவரான 25 வயது ஆஷ்லி பார்ட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உலக பெண்கள் டென்னிஸ் போட்டி உள்பட இந்த ஆண்டில் நடைபெறும் எஞ்சிய எந்த போட்டியிலும் நான் கலந்து கொள்ளமாட்டேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி இதுவரை இந்தியாவை வீழ்த்தியதில்லை.
    துபாய்:

    7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்-12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    குரூப்-1ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம், குரூப்-2ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    இந்நிலையில், சூப்பர்-12 சுற்றில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானை துபாயில் எதிர்கொள்கிறது. பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் மோதல் என்றாலே வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் உணர்ச்சி பிழம்பாகி விடுவார்கள். அதுவும் இது உலக கோப்பை என்பதால் அனல் பறக்கும்.

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வலுவான நிலையில் உள்ளது. கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா என்று அதிரடி சூரர்களும், பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர்குமார், ஜடேஜா, அஸ்வின், வருண் சக்ரவர்த்தி என்று திறமையான பந்து வீச்சு படையும் உள்ளது. நெருக்கடியின்றி சாதுர்யமாக விளையாடினால் போதும். வெற்றிக்கனியை பறித்து விடலாம். அத்துடன், ஆலோசகராக முன்னாள் கேப்டன் டோனி இருப்பது இன்னொரு பலமாகும். அவர் அணிக்கு நிறைய யோசனைகளை வழங்கியுள்ளார்.

    பாபர் அசாம், விராட் கோலி

    எளிதில் கணிக்க முடியாத ஒரு அணி பாகிஸ்தான். உலக கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக இந்தியாவிடம் உதை வாங்கி வரும் பாகிஸ்தான் இந்த முறை அந்த சோகத்துக்கு முடிவு கட்டும் வேட்கையுடன் வியூகங்களை தீட்டி வருகிறது. கேப்டன் பாபர் அசாம், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், பஹார் ஜமான், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக் ஆகியோர் அந்த அணியின் பேட்டிங் முதுகெலும்பாக உள்ளனர். பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் மிரட்டக்கூடியவர்கள்.

    பாகிஸ்தான் அணி தங்களது உள்ளூர் போட்டிகளை பெரும்பாலும் அமீரகத்தில் தான் விளையாடுகிறது. இதனால் இங்குள்ள மைதானங்கள், சீதோஷ்ண நிலை நன்கு பழக்கப்பட்டது தான். அந்த வகையில் பாகிஸ்தானுக்கு இது சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் சரிசம பலத்துடன் இரு அணிகளும் மல்லுகட்டுவதால் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதை கணிப்பது கடினம்.

    ஆனால் சாதனை வகையில் பார்த்தால் இந்தியாவின் கையே மேலோங்கி நிற்கிறது. 50 ஓவர் உலக கோப்பையில் 7 முறையும், 20 ஓவர் உலக கோப்பையில் 5 முறையும் இந்தியாவிடம் தோற்று இருக்கிறது.

    ஒட்டுமொத்த சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 8 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 7-ல் இந்தியாவும், ஒன்றில் பாகிஸ்தானும் வெற்றி கண்டுள்ளன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:

    இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா,ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் அல்லது வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர்குமார் அல்லது ஷர்துல் தாக்குர்.

    பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கேப்டன்), பஹார் ஜமான், முகமது ஹபீஸ் அல்லது ஹைதர் அலி, சோயிப் மாலிக், ஆசிப் அலி, ஹசன் அலி, ஷதப் கான், இமாத் வாசிம், ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப்.

    இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    ஐ.சி.சி டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
    சிட்னி:

    ஐ.சி.சி. டி20 உலக கோப்பை 2021 கிரிக்கெட் போட்டி கடந்த 17-ம் தேதி தொடங்கி தற்போது ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிந்து மோதுகின்றன.

    இந்நிலையில், டி20 உலக கோப்பையை வெல்லும் அணி குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே  தனது கருத்துக்களை டுவிட்டர் பதிவில்தெரிவித்துள்ளார். 

    அதில், டி20 உலக கோப்பையை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் வெல்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

    இந்திய அணியானது திறமையான பல இளம் வீரர்களுடன் களமிறங்கி தனது இரு பயிற்சி ஆட்டத்திலும் வெற்றி பெற்று புது உத்வேகத்துடன் களமிறங்குகிறது.

    இங்கிலாந்திலும் திறமையான வீரர்கள் உள்ளதால் அவர்களும் கோப்பையை வெல்ல  வாய்ப்பு உள்ளது. ஆஸ்திரேலிய அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது என பதிவிட்டுள்ளார்.

    56 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 70 பந்துகள் மீதமிருந்த நிலையில், வெற்றியை ருசித்தது.
    துபாய்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று துபாயில் நடைபெற்ற சூப்பர்-12 லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் விளையாடின. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள், இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். கிறிஸ் கெயில் (13) தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். 14.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி 55 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 

    இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 2.2 ஓவர்கள் வீசி, 2 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

    இதையடுத்து, 56 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 70 பந்துகள் மீதமிருந்த நிலையில், வெற்றியை ருசித்தது. 

    ஜாஸ் பட்லர்

    துவக்க வீரர் ஜேசன் ராய் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ 9 ரன், மொயீன் அலி 3 ரன், லிவிங்ஸ்டன் 1 ரன் எடுத்தனர். மறுமுனையில் கவனமாக விளையாடிய ஜாஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 24 ரன்களும், கேப்டன் மார்கன் ஆட்டமிழக்காமல் 7 ரன்களும் எடுத்தனர். இதனால் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
    இங்கிலாந்துக்கு எதிரான சூப்பர்-12 சுற்று லீக் ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணி 55 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
    துபாய்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று சூப்பர் 12 சுற்று தொடங்கியது. அபுதாபியில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தியது.

    அதன்பின்னர் துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

    முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள், இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். கிறிஸ் கெயில் (13) தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். 14.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி 55 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 2.2 ஓவர்கள் வீசி, 2 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மொயீன் அலி, மில்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 56 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
    ×