search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி - பாபர் அசாம்
    X
    விராட் கோலி - பாபர் அசாம்

    20 ஓவர் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் கண்ணோட்டம்

    20 ஓவர் போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இதுவரை 8 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 7 முறை வெற்றி பெற்றது. பாகிஸ்தானுக்கு ஒரு தடவை மட்டுமே வெற்றி கிட்டியது.
    2007-ம் ஆண்டு அறிமுக உலக கோப்பையில் இரு அணிகளும் முதல் முறையாக மோதின. டையில் முடிந்த இந்த ஆட்டத்தில் பின்னர் பவுல் அவுட் முறையில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த உலக கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 5 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. உலக கோப்பையில் இந்தியா மோதிய அனைத்து ஆட்டத்திலும் (5 போட்டி) பாகிஸ்தானை தோற்கடித்து இருந்தது. 2012-ம் ஆண்டு டிசம்பர் 25-ந் தேதி பெங்களூரில் நடந்த ஆட்டத்தில் மட்டும் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்று இருந்தது. இந்த ஒரு முறை மட்டுமே 20 ஓவரில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்று இருந்தது.

    இந்திய அணி 2012-ம் ஆண்டு டிசம்பரில் அகமதாபாத் மைதானத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராகும். இதே ஆட்டத்தில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன் எடுத்தது அந்த அணியின் அதிகபட்சமாகும்.

    2016-ம் ஆண்டு டாக்காவில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் 83 ரன்னில் சுருண்டது அந்த அணியின் குறைந்தபட்ச ஸ்கோராகும். இந்திய அணி 2012-ல் பெங்களூர் மைதானத்தில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்தது குறைந்தபட்சமாகும்.

    விராட் கோலி 6 ஆட்டத்தில் 254 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார். 3 போட்டியில் அவுட் ஆகாததால் அவரது சராசரி 84.66 ஆகும். 2 அரை சதம் அடித்துள்ளார். பாகிஸ்தான் வீரர் சோயிப்மாலிக் 8 போட்டியில் 164 ரன் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். ஒரு ஆட்டத்தில் அதிக ரன் எடுத்தவர் விராட் கோலி ஆவார். 2012-ம் ஆண்டு கொழும்பில் நடந்த ஆட்டத்தில் அவர் இந்த ரன்னை எடுத்தார்.

    பாகிஸ்தான் வேகபந்து வீரர் உமர்குல் 6 ஆட்டத்தில் 11 விக்கெட் கைப்பற்றியுள்ளார். அவர் 37 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றியது சிறந்த பந்துவீச்சாகும். அவருக்கு அடுத்தபடியாக இர்பான் பதான் 6 விக்கெட் எடுத்துள்ளார். 2007-ம் ஆண்டு டர்பனில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர் முகமது ஆசிப் 18 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றியது சிறந்த பந்து வீச்சாகும்.
    Next Story
    ×