என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி , டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததும் அவரது பதவியில் இருந்து விடைபெறுகிறார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் தூண் என்று அழைக்கப்பட்டவர் ராகுல் டிராவிட். இவர் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக உள்ளார். தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி உள்ளார். இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையோடு தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெறுகிறார்.

    இதனால் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராகளாம். அவருக்கு 10 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. ராகுல் டிராவிட் விண்ணப்பம் செய்ய வாய்ப்பு இருந்ததால், மற்ற வீரர்கள் விண்ணப்பம் செய்ய ஆர்வம் காட்டவில்லை. இருந்தாலும் ராகுல் டிராவிட் முறைப்படி தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்துள்ளார் என செய்திகள் வெளியாகாமல் இருந்தது.

    இந்த நிலையில் முறைப்படி ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. இதனால் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவிக்கு வி.வி.எஸ். லக்‌ஷ்மண் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
    தொடக்க வீரர் எவின் லீவிஸ் 35 பந்தில் 56 ரன்கள் விளாசிய போதிலும், வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஓவரில் 143 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
    டி20 உலகக்கோப்பையில் ‘சூப்பர் 12’ சுற்றில் இன்றைய முதல் ஆட்டத்தில் குரூப் 1-ல் இடம் பிடித்துள்ள வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது. லென்டில் சிம்மன்ஸ்- எவின் லீவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சிம்மன்ஸ் நிதானமாக விளையாட எவின் லீவிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    லீவிஸ் 35 பந்தில் 56 ரன்கள் விளாசினார். அவர் ஆட்டமிழக்கும்போது வெஸ்ட் இண்டீஸ் 10.3 ஓவரில் 73 ரன்கள் குவித்திருந்தது. இதனால் 20 ஓவரில் 150 ரன்னை எளிதாக தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், சிம்மன்ஸ் 35 பந்தில் 16 ரன்களும், பூரன் 7 பந்தில் 12 ரன்களும், கிறிஸ் கெய்ல் 12 பந்தில் 12 ரன்களும், பொல்லார்டு 20 பந்தில் 26 ரன்களும், அந்த்ரே ரஸல் 4 பந்தில் 5 ரன்களும் அடித்து ஏமாற்றம் அளித்தனர்.

    இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 143  ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட்இண்டீஸ், பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
    துபாய்:

    7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. தற்போது ‘சூப்பர்-12’ சுற்று ஆட்டங்கள் அரங்கேறி வருகிறது. இதில் இன்று (செவ்வாய்க்கிழமை) 2 ஆட்டங்கள் நடக்கின்றன.

    இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு துபாயில் நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ் அணி, தென்ஆப்பிரிக்காவை (குரூப்-1) எதிர்கொள்கிறது.

    பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 55 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை சந்தித்தது. உலக கோப்பை போட்டியில் அந்த அணியின் குறைவான ஸ்கோர் இது என்பதால் கடும் விமர்சனத்துக்கு ஆளானது. அதிரடி பட்டாளத்தை கொண்டுள்ள அந்த அணியில் கிறிஸ் கெய்ல் (13 ரன்) தவிர வேறு யாரும் இரட்டை இலக்கத்தை எட்டவில்லை. இதனால் அந்த அணி சரிவில் இருந்து மீண்டு வர வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது.

    தெம்பா பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி தன்னுடைய முதலாவது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. மார்க்ராம் (40 ரன்கள்) மட்டும் நிலைத்து நின்று ஆடினார். தெம்பா பவுமா, குயின்டான் டி காக், வான்டெர் துஸ்சென் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை. பந்து வீச்சில் காஜிசோ ரபடா, அன்ரிச் நோர்டியா, கேஷவ் மகராஜ், தப்ரைஸ் ஷம்சி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பேட்ஸ்மேன்கள் தங்கள் பணியை சரியாக செய்தால் அந்த அணி எழுச்சி பெற முடியும். இந்த ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தால் அரைஇறுதி வாய்ப்பு மங்கும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக மல்லுகட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. ஒட்டுமொத்த சர்வதேச 20 ஓவர் போட்டியில் இரு அணிகளும் இதுவரை 15 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் தென்ஆப்பிரிக்கா 9 ஆட்டத்திலும், வெஸ்ட்இண்டீஸ் 6 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

     பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் - நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன்

    இரவு 7.30 மணிக்கு சார்ஜாவில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை (குரூப்-2) சந்திக்கிறது.

    பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை பந்தாடிய உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் களம் காணுகிறது. அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவாக இருக்கிறது.

    கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் பேட்டிங்கில் டிவான் கான்வே, மார்ட்டின் கப்தில், கிளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம் ஆகியோரும், பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, பெர்குசன் ஆகியோரும் பலம் சேர்க்கிறார்கள். பயிற்சி ஆட்டத்தில் முழங்கால் காயம் காரணமாக பேட்டிங் செய்யாத வில்லியம்சன் ஆட முடியாமல் போனால் அந்த அணிக்கு இழப்பாகும். இரு அணிகளும் சமபலம் வாய்ந்தது என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இவ்விரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் இதுவரை 24 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் பாகிஸ்தான் அணி 14 ஆட்டத்திலும், நியூசிலாந்து அணி 10 ஆட்டத்திலும் வெற்றி கண்டு இருக்கின்றன. இந்த இரண்டு ஆட்டங்களையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் டிசம்பர் 8-ம் தேதி தொடங்குகிறது.
    லண்டன்:

    இந்திய அணி கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

    அந்த சமயத்தில், இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    விரல் காயத்தில் இருந்து மீளவும், மனரீதியாக புத்துணர்ச்சி பெறவும் அவர் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஒதுங்கி இருக்க அவர் முடிவு செய்தார்.

    இதனால் இந்தியாவுடனான டெஸ்ட் தொடர், அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் மற்றும் டி20 உலக கோப்பை தொடர் ஆகியவற்றில் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்கவில்லை.

    இந்நிலையில், ஆஷஸ் தொடரில் பங்கேற்க தயாராக உள்ளேன் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்தார். இதையடுத்து, ஆஷஸ் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டு உள்ளார்.
    சார்ஜாவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் முஜிபுர் ரகுமான் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
    சார்ஜா:

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் இன்று இரவு சார்ஜாவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, ஸ்காட்லாந்தை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது. ஹஸ்ரத்துல்லா 44 ரன்களும், ஷாஜத் 22 ரன்களும் சேர்த்தனர். ரஹ்மதுல்லா குர்பாஸ் 46 ரன்களும், நஜிபுல்லா 59 ரன்களும் எடுத்தனர்.

    இதையடுத்து, 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் அணியினரின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் ஸ்காட்லாந்து விக்கெட்டுகள் வீழ்ந்தது.

    இதனால் ஸ்காட்லாந்து 10.2 ஓவரில் 60 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 130ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

    ஆப்கானிஸ்தானின் முஜிபுர் ரகுமான் 5 விக்கெட்டும், ரஷீத் கான் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    சார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியின் வெற்றிக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    சார்ஜா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ‘சூப்பர்-12’ சுற்றில் இன்று இரவு சார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    துவக்க வீரர்கள் ஹஸ்ரத்துல்லா, முகமது ஷாஜத் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். அதிரடியாக ஆடிய ஹஸ்ரத்துல்லா 44 ரன்களும், ஷாஜத் 22 ரன்களும் சேர்த்தனர். 

    அதன்பின்னர், ரஹ்மதுல்லா குர்பாஸ் -நஜிபுல்லா ஜோடியும், ஸ்காட்லாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கியது. ரஹ்மதுல்லா குர்பாஸ் 46 ரன்களும், நஜிபுல்லா 59 ரன்களும், கேப்டன் முகமது நபி 11 ரன்களும் சேர்க்க, ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி களமிறங்குகிறது.
    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அகமதாபாத், லக்னோ நகரங்களை மையமாக கொண்ட 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
    துபாய்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தற்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக 2 அணிகள் இடம்பெறுகின்றன. மொத்தம் 10 அணிகள் அடுத்த சீசனில் விளையாடும். புதிய அணிகளை சேர்ப்பதற்கான டெண்டர் விடப்பட்டிருந்தது.

    இந்நிலையில், ஐ.பி.எல். புதிய அணிகளுக்கான ஏலம் துபாயில் இன்று நடைபெற்றது. அதன்படி, அகமதாபாத், லக்னோ நகரங்களை மையமாக கொண்ட 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 

    இதில், சஞ்சீவ் கோயங்காவின் ஆர்.பி.எஸ்.ஜி. குழுமம் லக்னோ அணியை சுமார் ரூ.7000 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. தனியார் ஈக்விட்டி நிறுவனமான சிவிசி கேப்பிட்டல்ஸ் நிறுவனம், அகமதாபாத் அணியை ரூ.5200 கோடிக்கு வாங்கி உள்ளது. இத்தகவலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
    அடுத்த போட்டியில் இஷான் கிஷனை அணியில் சேர்த்துவிட்டு ரோகித் சர்மா நீக்கப்படுவாரா என்ற கேள்விக்கு கோலி ஆவேசமாக பதிலளித்தார்.
    துபாய்:

    துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான். முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. 158 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, விக்கெட் இழப்பின்றி, 17.5 ஓவர்களில் 152 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

    இந்த போட்டிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது நிருபர் ஒருவர் ‘அடுத்த போட்டியில் மிக சிறப்பான பார்மில் இருக்கும் இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டு, ரோகித் சர்மா அணியில் இருந்து நீக்கப்படுவாரா..?’ என்று கேள்வி எழுப்பினார். 

    அதற்கு விராட் கோலி யாரும் எதிர்பாராத வகையில் ஒரு ஷாக் ரியாக்சன் கொடுத்து  ‘இந்த கேள்வியை தெரிந்துதான் கேட்டீர்களா?....  டி-20 போட்டிகளில் ரோகித் சர்மா போன்ற அபாரமான ஆட்டக்காரரை நீக்க வேண்டும் என்று கூறுகிறீர்களா..?’ என கேட்டு சிரித்தார். 

    விராட் கோலி

    அதனையடுத்து அந்த கேள்வியை கேட்ட நிருபரிடம்,  ‘உங்களுக்கு சர்ச்சை ஏதாவது ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினால் என்னிடம் முதலிலேயே கூறிவிடுங்கள், அப்போது தான் நானும் நீங்கள் நினைப்பதை போல சர்ச்சை ஏற்படுமாறு பதில் கூறுவேன்’ என கிண்டலடித்தார். இந்த சம்பவம் குறித்தான வீடியோவும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
    டி20 உலகக்கோப்பை போட்டியில் முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி இன்று ஸ்காட்லாந்து அணியுடன் மோதுகிறது.
    சார்ஜா:

    7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ‘சூப்பர்-12’ சுற்றில் இன்று (திங்கட்கிழமை) இரவு சார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, ஸ்காட்லாந்தை (குரூப்-2) எதிர்கொள்கிறது. நேரடியாக ‘சூப்பர்-12’ சுற்றுக்கு தகுதி பெற்ற முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி முதலாவது பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வி கண்டது. 

    அடுத்த பயிற்சி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது. ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான ரஷித் கான், முகமது நபி, முஜீப் ஜட்ரன் ஆகியோர் தங்களது மாயாஜால பந்து வீச்சு மூலம் எதிரணியினருக்கு நெருக்கடி அளிக்கக்கூடியவர்கள். மெதுவான தன்மை கொண்ட சார்ஜா ஆடுகளத்தில் அவர்களது பந்து வீச்சு நிச்சயம் பேட்ஸ்மேன்களுக்கு குடைச்சல் கொடுக்கும். பேட்டிங்கில் அந்த அணி தொடக்க ஆட்டக்காரர்கள் ஹஜரத்துல்லா ஜஜாய், முகமது ஷஜாத் ஆகியோரை தான் அதிகம் நம்பி இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்களும் சிறப்பாக செயல்பட்டால் அந்த நாளில் அவர்கள் எந்த அணிக்கும் சிம்மசொப்பணமாக விளங்குவார்கள் என்பதில் சந்தேகம் கிடையாது.

    முதல் சுற்றில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்து இருந்த கைல் கோட்ஸர் தலைமையிலான ஸ்காட்லாந்து அணி லீக் ஆட்டங்களில் வங்காளதேசம், பப்புவா நியூ கினியா, ஓமன் ஆகிய அணிகளை தொடர்ச்சியாக வீழ்த்தி தனது பிரிவில் முதலிடத்தை பிடித்து ‘சூப்பர்-12’ சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது. இதனால் ஸ்காட்லாந்து அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். பேட்டிங்கில் கைல் கோட்ஸர், ஜார்ஜ் முன்சி, கிறிஸ் கிரீவ்ஸ் ஆகியோரும், பவுலிங்கில் வேகப்பந்து வீச்சாளர்கள் பிரட்லி வீல், ஜோஷ் டேவி, சுழற்பந்து வீச்சாளர் மார்க் வாட் ஆகியோரும் அந்த அணிக்கு வலுசேர்க்கிறார்கள். சர்வதேச 20 ஓவர் போட்டியில் இவ்விரு அணிகளும் 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 6 தடவையும் ஆப்கானிஸ்தான் அணியே வெற்றி கண்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் எழுந்த குழப்பம் காரணமாக போதிய தயார்படுத்துதல் இல்லாமல் களம் காணும் ஆப்கானிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி அளிக்க ஸ்காட்லாந்து தீவிரம் காட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் 41 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் பாகிஸ்தான் வீரர் அப்ரிடியின் சாதனையை ஷகிப் அல்-ஹசன் முறியடித்துள்ளார்.
    இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேச அணியின் ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் 2 விக்கெட் வீழ்த்தினார். இதனால் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் அவரது விக்கெட் எண்ணிக்கை 41 ஆக (29 போட்டிகளில்) உயர்ந்தது. 

    இதன் மூலம் ஷகிப் அல்-ஹசன் 20 ஓவர் உலக கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவரான பாகிஸ்தானின் அப்ரிடியின் (39 விக்கெட்டுகள், 34 ஆட்டங்கள்) சாதனையை முறியடித்தார்.
    ஆரம்பகட்டத்தில் வானவில் கிரிக்கெட் கிளப், உமாநாத்,கிரிக்கெட் கிளப், கிரேட் சாலஞ்சர்,கிரிக்கெட் கிளப் அகிய அணிகளுக்காக விளையாடிக் கொண்டிருந்ததாக நசீர் உசேன் கூறியுள்ளார்.
    கலவை:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் நசீர் உசேன் (வயது 31). இவரது தந்தை சையத்தாவுத். கூலி தொழிலாளி. தாய் ஹசீனாபீ. இளைய சகோதரர் ஜாகிர் உசேன். பேரணாம்பட்டு இஸ்லாமிய மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக உள்ளார். நசீர்உசேன் கடந்த 2014-ஆம் ஆண்டு குவைத்தில் உள்ள பதப்படுத்தப்பட்ட உணவு தயாரிக்கும் அரசு தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

    சொந்த ஊரில் இருக்கும்போது கிரிக்கெட் விளையாட்டு மீது மிகுந்த ஆர்வம் கொண்டதால் உள்ளூர் அளவில் விளையாடி வந்துள்ளார். அதன் காரணமாக குவைத்தில் உள்ள ஸ்டேக் எனும் கிரிக்கெட் கிளப்பில் சேர்ந்து கடந்த 2014 முதல் விளையாடி வந்துள்ளார். இவரது விளையாட்டு திறமையை பார்த்து குவைத்தில் உள்ள சி.பி.கே. வங்கி இவருக்கு கணக்காளர் பணி வழங்கி கவுரவித்து உள்ளது.

    மேலும் குவைத் முதல்தர கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து விளையாடி வந்துள்ளார். 2020-ம் ஆண்டு நடைபெற்ற குவைத் பிரிமியர் லீக் ஆட்டத்தில் இரண்டு முறை சிறந்த பேட்ஸ்மேன் பட்டம் பெற்றுள்ளார். இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் என்.சி.எம். இன்வெஸ்ட்மெண்ட் கம்ெபனி கணக்காளர் பணி கொடுத்து கவுரவித்துள்ளது. நசீர் உசேன் தற்போது குவைத் தேசிய அணியில் விளையாடி வருகிறார்.

    அவர் கூறுகையில் உலக கோப்பை தகுதி சுற்று மற்றும் ஆசிய கோப்பை குவாலிபயர் போட்டியில் வெற்றி பெற்று குவைத் அணி உலக கோப்பை போட்டியில் விளையாடும். ஆரம்பகட்டத்தில் வானவில் கிரிக்கெட் கிளப், உமாநாத்,கிரிக்கெட் கிளப், கிரேட் சாலஞ்சர்,கிரிக்கெட் கிளப் அகிய அணிகளுக்காக விளையாடிக் கொண்டிருந்தேன்.

    இந்தநிலையில் தான் குவைத் வந்த எனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அதற்காக ஸ்டாக் கிரிக்கெட் கிளப் உரிமையாளர் ஜான் மெல்வின் (குவைத் தேசிய தேர்வாளர்கள்) மற்றும் என்.சி.எம். முதலீடு குர்ராம்சையத் மற்றும் ஷெரீப் தயார்பாசு,என்னை கவுரவித்த 2 நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    வரும் காலங்களில் தமிழக அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் விளையாடுவேன் என‌ கூறினார்.
    உலகக்கோப்பை போட்டியில் இது ஆரம்பம் தான், முடிவு அல்ல என்று இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    துபாய்:

    துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற 20 ஒவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு விராட் கோலி 57 ரன்களும், ரிஷப் பண்ட் 39 ரன்களும் எடுத்து கொடுத்தபோதும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 151 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ஷாஹின் அப்ரிடி 3 விக்கெட்டுகளையும், ஹசன் அலி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    இதனையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாமும், ரிஸ்வானும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். துவக்கத்தில் இருந்தே இந்திய அணியின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி வீரர்கள் மளமளவென ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இவர்களுக்கு எதிராக இந்திய பந்துவீச்சாளர்கள் வகுத்த யூகங்கள் அனைத்தையும் அசால்டாக தகர்த்தனர். இதன்மூலம் 17.5 ஓவரிலேயே இலக்கை எட்டிய பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாபர் அசாம் 68 ரன்களுடனும், ரிஸ்வான் 79 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும். ஏற்கனவே 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் தொடர்ந்து 5 முறையும், 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் தொடர்ச்சியாக 7 முறையும் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோல்வி கண்டு இருந்தது. உலக கோப்பை போட்டியில் தங்களுக்கு எதிரான இந்திய அணியின் நீண்ட கால ஆதிக்கத்துக்கு நேற்று பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைத்தது.

    இந்தநிலையில், பாகிஸ்தான் அணியுடனான தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “நாங்கள் எங்கள் திட்டங்களை சரியாக செயல்படுத்தவில்லை. பாகிஸ்தான் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பந்துவீச்சில் மிக சிறப்பான துவக்கம் அவர்களுக்கு கிடைத்தது, வெறும் 20 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழப்பது நல்ல துவக்கம் கிடையாது. நாங்கள் பந்துவீசும் போது விரைவாக விக்கெட் வீழ்த்தவே நினைத்தோம். 

    ஆனால் பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் எங்களுக்கு ஒரு சான்ஸ் கூட கொடுக்கவில்லை, பேட்டிங்கில் மிக சிறப்பாக செயல்பட்டனர். துவக்கத்தில் ஆடுகளம் சற்று மந்தமாக இருந்ததால் பேட்டிங் செய்வது மிகுந்த சவாலாக இருந்தது, ஆனால் 10 ஓவர்களுக்கு பிறகு ஆடுகளத்தின் தன்மை சற்று மாறியதால் 15-20 ரன்கள் கூடுதலாக எடுத்துவிட வேண்டும் என நினைத்தோம். ஆனால் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் எங்களை கட்டுப்படுத்திவிட்டனர். இது இந்த தொடரின் முதல் போட்டி என்பதால் தவறுகளை சரி செய்து கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவதே முக்கியம். உலகக்கோப்பை போட்டியில் இது ஆரம்பம் தான், முடிவு அல்ல” என்று விராட் கோலி தெரிவித்தார்.
    ×