என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கடைசி ஓவரில் ஒரு ரன் தேவை என்ற நிலையில், ஸ்மித் முதல் பந்தில் சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
    அபுதாபி:

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து, நமீபியா அணிகள் மோதின. டாஸ் வென்ற நமீபியா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மைக்கேல் லீஸ்க் 44 ரன்கள் சேர்த்தார்.

    இதையடுத்து 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நமீபியா அணி களமிறங்கியது. துவக்க வீரர்கள் கிரேக் வில்லியம்ஸ் 23 ரன்களும், மைக்கேல் வேன் 18 ரன்களும் எடுத்து நம்பிக்கை அளித்தனர். 

    ஷேன் கிரீன் (9), கேப்டன் எராஸ்மஸ் (4) ஆகியோர் விரைவில் விக்கெட்டை இழந்தனர். அணியின் ஸ்கோர் 102 ரன்கள் என்ற நிலையில் இருந்தபோது,  டேவிட் வீஸ் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். 

    மறுமுனையில் ஸ்மித் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தார். கடைசி ஓவரில் ஒரு ரன் தேவை என்ற நிலையில், ஸ்மித் முதல் பந்தில் சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். அவர் 32 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    5 பந்துகள் மீதமிருந்த நிலையில், 4 விக்கெட் வித்தியாசத்தில் நமீபியா அணி வெற்றி பெற்றது. 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரூபன், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 
    நெருக்கடிக்கு மத்தியிலும் அதிரடியாக ஆடிய மைக்கேல் லீக் 44 ரன்கள் குவித்து ஆறுதல் அளித்தார்.
    அபுதாபி:

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து, நமீபியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நமீபியா பந்துவீச்சை தேர்வு செய்தது. 

    ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. முன்வரிசை வீரர்கள் நமீபியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 18 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகள் சரிந்தன. 

    நெருக்கடிக்கு மத்தியிலும் அதிரடியாக ஆடிய மைக்கேல் லீஸ்க், 27 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 44 ரன்கள் குவித்து ஆறுதல் அளித்தார். இதனால் அணி சரிவில் இருந்து மீண்டது. கிறிஸ் கிரீவ்ஸ் 25 ரன்கள் சேர்த்தார். இதனால் 20 ஓவர் முடிவில் ஸ்காட்லாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்தது. நமீபியா தரப்பில் ரூபன் 3 விக்கெட்டுகளும், ஜேன் பிரிலிங் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    இதையடுத்து 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நமீபியா அணி களமிறங்கியது.
    இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் ஜேசன் ராய் 61 ரன்கள் குவித்து வெற்றிக்கான பாதை அமைத்துக் கொடுத்தார்.
    அபுதாபி:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-12  சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இன்று அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து, வங்காளதேசம் அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது. 

    இதையடுத்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் ஜேசன் ராய் 38 பந்துகளில் 61 ரன்கள் குவித்து வெற்றிக்கான பாதை அமைத்துக்கொடுத்தார். ஜாஸ் பட்லர் 18 ரன்கள் சேர்த்தார். அதன்பின்னர் டேவிட் மலன் ஆட்டமிழக்காமல் 28 ரன்கள், பேர்ஸ்டோ ஆட்டமிழக்காமல் 8 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 35 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றியை எட்டியது. 

    இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 126 ரன்கள் குவித்ததால், 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜேசன் ராய் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
    விளையாட்டு விருதுகளுக்கு அந்தந்த விளையாட்டு அமைப்புகள் சார்பில், தகுதிவாய்ந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றன.
    புதுடெல்லி:

    தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மத்திய அரசால் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது. இதேபோல் அர்ஜுனா விருது, துரோணாச்சாரியா விருது, தயான்சந்த் விருது ஆகிய விருதுகளும் வழங்கப்படுகின்றன. 

    இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுகளுக்கு அந்தந்த விளையாட்டு அமைப்புகள் சார்பில், தகுதிவாய்ந்த  வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றன.

    அவ்வகையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, வெள்ளிப்பதக்கம் வன்ற மல்யுத்த வீரர் ரவி தாஹியா, குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா, கால்பந்து வீரர் சுனில்  சேத்ரி, கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ், ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ், பாரா-தடகளப் பிரிவில் துப்பாக்கி சூடுதல் வீராங்கனை அவனி லெகாரா உள்ளிட்ட 5 பேர் என மொத்தம் 11 பேரின் பெயர்கள்,  2021ம் ஆண்டிற்கான கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. 

    கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் உள்ளிட்ட 35 பேர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது.
    அபுதாபி:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-12  சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இன்று அபுதாபியில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து, வங்காளதேசம் அணிகள் விளையாடுகின்றன. 

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரகிம் 29 ரன்கள் எடுத்தார். நூருல் ஹசன் 16 ரன்களும், நசும் அகமது ஆட்டமிழக்காமல் 19 ரன்களும் எடுத்தனர்.

    இங்கிலாந்து தரப்பில் டைமல் மில்ஸ் 3 விக்கெட் கைப்பற்றினார். மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டன் தலா 2  விக்கெட் எடுத்தனர். 

    இதையடுத்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. 
    முதலில் பேட்டிங் செய்து நல்ல ஸ்கோரை எட்ட முடியும் எனவும், முழு திறனையும் வெளிப்படுத்த உள்ளதாகவும் வங்காளதேச கேப்டன் மஹ்முதுல்லா நம்பிக்கை தெரிவித்தார்.
    அபுதாபி:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-12  சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இன்று அபுதாபியில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து, வங்காளதேசம் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

    முதலில் பேட்டிங் செய்து நல்ல ஸ்கோரை எட்ட முடியும் எனவும், முழு திறனையும் வெளிப்படுத்த உள்ளதாகவும் வங்காளதேச அணியின் கேப்டன் மஹ்முதுல்லா நம்பிக்கை தெரிவித்தார். 

    இரண்டாவது பேட்டிங் செய்து சேஸ் செய்வது மகிழ்ச்சியான விஷயம் என்றும், ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளதால் வெற்றி பெற முடியும் என்றும் இங்கிலாந்து கேப்டன் இயன் மார்கன் கூறினார்.

    வங்காளதேசம்: 1. முகமது நைம், 2. லிட்டன் தாஸ், 3. ஷாகிப் அல் ஹசன், 4. முஷ்பிகுர் ரகிம், 5. மஹ்முதுல்லா (கேப்டன்), 6. அபிஃப் உசைன், 7. நூருல் ஹசன் (விக்கெட் கீப்பர்), 8. மஹதி ஹசன், 9. நசும் அகமது, 10. தஸ்கின் அகமது, 11. முஷ்டாபிகுர் ரஹ்மான்

    இங்கிலாந்து: 1. ஜேசன் ராய், 2. ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), 3. டேவிட் மலன், 4. ஜானி பேர்ஸ்டோ, 5.லியாம் லிவிங்ஸ்டன், 6. இயன் மார்கன்(கேப்டன்), 7. மொயீன் அலி, 8. கிறிஸ் வோக்ஸ், 9. கிறிஸ் ஜோர்டான், 10. அடில் ரஷித், 11. டைமல் மில்ஸ்.
    மாநில ஜூனியர் வாள்வீச்சில் பங்கேற்கும் சென்னை அணிகளை மாவட்ட வாள்வீச்சு சங்கத் தலைவர் தனசேகரன் அறிவித்துள்ளார்.

    சென்னை:

    29-வது மாநில ஜூனியர் (20 வயதுக்குட்பட்டோர்) வாள்வீச்சு போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வருகிற 30 மற்றும் 31-ந் தேதிகளில் நடக்கிறது.

    சிறுமிகளுக்கு சனிக்கிழமையும், சிறுவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்கும் சென்னை அணிகளை சென்னை மாவட்ட வாள்வீச்சு சங்கத் தலைவர் தனசேகரன் அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    ஆண்கள்: கிளாட்வின், பிரபஞ்சன், ராதாகிருஷ்ணன், தருனேஷ் (பாயில் பிரிவு), ரிஷி, சரவணன், பாலவிக்னேஷ், மதேஸ்வர் (எப்பி), ஆதித்ய மணிகண்டன், ஜெய்சக்தி, அரவிந்தன், தனுஷ் மணிகண்டன் (சப்ரே).

    பெண்கள்: விபுஷா, திவ்யதர்ஷினி, ஜாய்ஸ் அசிதா, மரியா (பாயில்), ஜனனி, ரஸ்மிகா, பவித்ரா, பொற்செல்வி (எப்பி), தரணி சசி பிரபா, ரம்யா (சப்ரே).

    டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் வீரர்களை புகழ்ந்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போட்டதாகக்கூறி காஷ்மீரை சேர்ந்த மூன்று பொறியியல் மாணவர்களை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.
    ஆக்ரா:

    உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் பிச்புரி கிராமத்தில் உள்ள ராஜா பல்வந்த் சிங் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் தங்கி படிக்கும் காஷ்மீரை சேர்ந்த மாணவர்கள் மூன்று பேர், டி20 உலககோப்பையில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியை புகழ்ந்து கோஷங்கள் எழுப்பியும், வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் போட்டும் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மூன்று பேரையும் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளனர்.

    இதுகுறித்து கல்வி நிறுவனத்தின் நிர்வாக மற்றும் நிதித்துறை இயக்குநர் டாக்டர் பங்கஜ் குப்தா கூறுகையில், "பிரதமரின் சூப்பர் ஸ்பெஷல் திட்டத்தின் கீழ் மாணவர்கள் படித்து வந்தனர். இது தொடர்பாக உடனடி நடவடிக்கையாக மாணவர்கள் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாணவர்களின் செயலை நாங்கள் பிரதமர் அலுவலகம் மற்றும் ஏ.ஐ.சி.டி.இ-க்கும் தெரிவித்துள்ளோம். இருப்பினும், மாணவர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர்" என்று கூறினார்.

    இதற்கிடையே, பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் உள்ளூர் தலைவர் ஷைலு பண்டிட் கூறுகையில், "பிச்புரி ஆர்.பி.எஸ். பொறியியல் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியதாகவும், சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து பதிவுகள் பகிரப்பட்டதாகவும் தெரியவந்தது. அதன்பிறகு, இளைஞர் பாஜக தலைவர் கௌரவ் ரஜாவத்துடன் கல்லூரிக்கு சென்று விசாரித்தபோது மாணவர்களை இடைநீக்கம் செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்தனர்.

    இருப்பினும், தேச விரோதச் செயலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஜகதீஷ்புரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்." என்றார். மேலும், "புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று நகர எஸ்.பி. அக்ர விகாஸ் குமார் தெரிவித்துள்ளார்.

    டி20 உலக கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் 12 சுற்றுகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன.
    துபாய்:

    துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது.

    தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானை கட்டித்தழுவி இந்திய கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்தார். 

    இந்நிலையில், விராட் கோலியின் இந்த செயலை பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனா மிர் வெகுவாக பாராட்டியுள்ளார்.  

    சனா மிர்

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், தோல்வியை இந்திய கேப்டன் விராட் கோலி பரிவோடு, அருமையாக கையாண்டார். அவரது விளையாட்டு உணர்வை மதிக்கிறேன். அவர் நடந்து கொண்ட விதத்தைப் பார்க்க உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது. 

    இதுபோன்ற செயல்கள் மூலம் முன்னணி வீரர்கள் முன்மாதிரியாக திகழ்கிறார்கள். அடுத்த போட்டியில் இந்திய அணி சரிவில் இருந்து எழுச்சி பெற்றால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மீண்டும் ஒருமுறை மோதுவதை பார்க்க முடியும் என நம்புகிறேன் என்றார்.
    நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானின் ஷோயப் மாலிக், ஆசிப் அலி ஆகியோர் 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.
    சார்ஜா:

    டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் பி பிரிவில் இடம் பிடித்துள்ள பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் ஷார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக மிட்செல் மற்றும் டேவன் கான்வே 27 ரன்கள் எடுத்தனர்.

    பாகிஸ்தான் சார்பில் ஹரீஸ் ராப் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வான் 33 ரன்கள் எடுத்தனர். ஆசிப் அலி 27 ரன்னும், ஷோயப் மாலிக் 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி 18.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 
    ஹாரிஸ் ரவுப் நான்கு விக்கெட்டுகள் சாய்க்க, ஷாஹீன் அப்ரிடி 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க, நியூசிலாந்து அணியால் 134 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
    டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் ஷார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் அட்டகாசமான பந்து வீச்சை வெளிப்படுத்தினர். இவர்களுக்கு சுழற்பந்து வீச்சாளர் சதாப் கான் கைக்கொடுக்க நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க இயலவில்லை.

    ஹாரிஸ் ரவுப் மார்ட்டின் கப்தில் (17), டேவன் கான்வே (27), க்ளென் பிளிப்ஸ் (13), டிம் செய்பெர்ட் (8), மிட்செல் சான்ட்னெர் (6) ஆகிய நான்கு பேரையும் வீழ்த்த நியூசிலாந்து அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
    நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
    டி20 உலகக்கோப்பையில் ‘சூப்பர் 12’ சுற்றில் இன்றைய முதல் ஆட்டத்தில் குரூப் 1-ல் இடம் பிடித்துள்ள வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது. லீவிஸ் 35 பந்தில் 56 ரன்கள் விளாசினார். அவர் ஆட்டமிழக்கும்போது வெஸ்ட் இண்டீஸ் 10.3 ஓவரில் 73 ரன்கள் குவித்திருந்தது. இதனால் 20 ஓவரில் 150 ரன்னை எளிதாக தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் சிம்மன்ஸ் 35 பந்தில் 16 ரன்களும், பூரன் 7 பந்தில் 12 ரன்களும், கிறிஸ் கெய்ல் 12 பந்தில் 12 ரன்களும், பொல்லார்டு 20 பந்தில் 26 ரன்களும், அந்த்ரே ரஸல் 4 பந்தில் 5 ரன்களும் அடித்து ஏமாற்றம் அளித்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 143  ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    பின்னர் 144 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. டெம்பா பவுமா, ரீஜா ஹென்ரிக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். டெம்பா பவுமா 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வான் டர் டஸ்சன் களம் இறங்கினார். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹென்ரிக்ஸ் 30 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு வான் டர் டஸ்சன் உடன் எய்டன் மார்கிராம் ஜோடி சேர்ந்தார்.

    எய்டன் மார்கிராம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 26 பந்தில் 51 ரன்கள் விளாச தென்ஆப்பிரிக்கா 18.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இதன்மூலம் தென்ஆப்பிரிக்கா 2 போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது. ஒன்றில் தோல்வியடைந்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.
    ×