என் மலர்
விளையாட்டு
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் விளையாடிய நான்கு ஆப்கானிஸ்தான் வீரர்கள் இங்கிலாந்துக்கு சென்ற நிலையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீசில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஆப்கானிஸ்தான் 4-வது இடத்தை பிடித்தது.
இந்தத் தொடரில் விளையாடுவதற்காக பயிற்சியாளரான முன்னாள் வீரர் ரயீஸ் அகமதுஜாய் தலைமையில் ஆப்கானிஸ்தான் அணி சென்றிருந்தது.
தொடர் முடிந்தபிறகு நான்கு பேர் ஆப்கானிஸ்தான் திரும்பாமல் இங்கிலாந்து சென்றனர். பொதுவாக நீண்ட தூர பயணத்தின்போது மற்றொரு நாடு வழியாக செல்வார்கள். இதில் இந்த நான்கு வீரர்களுக்கான டிரான்சிட் விசா 8-ந்தேதியுடன் முடிவடைந்தது.
நான்கு பேரும் இங்கிலாந்திடம் அடைக்கலம் கேட்டதாக எனத் தெரியவில்லை. ஆப்கானிஸ்தான் கிரக்கெட் போர்டு இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. எனினும், நான்கு பேரும் சொந்த நாடு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் விதிமுறையில், டிரான்சிட் விசாக்காலம் முடிந்து 48 மணி நேரத்திற்குப்பின் தங்கியிருக்க முடியாது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை பிடித்தபின், அந்நாட்டைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளிநாட்டிற்கு வெளியேறியுள்ளனர். இதில் விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள், முன்னாள் அதிபர் என பலர் அடங்குவார்கள்.
ஆப்கானிஸ்தான் உலகக்கோப்பை அணியின் பயிற்சியாளராக இருந்த ரயீஸ் அகமதுஜாய், வீரர்கள் விரைவில் சொந்த நாடு திரும்புவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... 8 ரன்னில் அவுட் - கோலியின் ஆட்டம் குறித்து கவாஸ்கர் அதிருப்தி
இந்திய அணியில் கே.எல். ராகுல் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியில் பொல்லார்டு இடம் பெறவில்லை.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகளும் அகமதாபாத்தில் உள்ள மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் 2-வது போட்டி 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் பொல்லார்டு இடம் பெறவில்லை. இதனால் நிக்கோலஸ் பூரன் கேப்டனாக செயல்படுகிறார். அவர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் தொடக்க வீரர் இஷான் கிஷன் நீக்கப்பட்டு கே.எல். ராகுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவாரா? - தினேஷ் கார்த்திக் விளக்கம்
சொந்த மண்ணில் அதிக சிக்சர் அடித்த சர்வதேச வீரர்களில் கிறிஸ்கெய்ல் 147 சிக்சர்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார்.
அகமதாபாத்:
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் இன்று நடக்கிறது.
இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. அதே நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் ஆர்வத்தில் உள்ளது.
இன்றைய ஆட்டத்தில் டோனியின் சாதனையை ரோகித் சர்மா முறியடிக்க வாய்ப்பு உள்ளது.
ஒருநாள் போட்டியில் சொந்த மண்ணில் அதிக சிக்சர் எடுத்த இந்திய வீரர்களில் டோனியும், ரோகித் சர்மாவும் முதல் இடத்தில் உள்ளனர். இந்திய மண்ணில் டோனி 113 இன்னிங்சில் 116 சிக்சர்களும், ரோகித் சர்மா 67 இன்னிங்சில் 116 சிக்சர்களும் அடித்துள்ளனர்.
இன்றைய ஆட்டத்தில் ஒரு சிக்சர் அடித்தால் டோனியின் சாதனையை முறியடித்து ரோகித் சர்மா முதல் இடத்தை பிடிப்பார். ஒட்டுமொத்த ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா 245 சிக்சர் அடித்து இந்திய வீரர்களில் முதல் இடத்தில் உள்ளார். டோனி 229 சிக்சருடன் 2-வது இடத்தில் உள்ளார்.
சொந்த மண்ணில் அதிக சிக்சர் அடித்த சர்வதேச வீரர்களில் கிறிஸ்கெய்ல் முதல் இடத்தில் உள்ளார். அவர் 147 சிக்சர்கள் அடித்துள்ளார். கெய்லுக்கு அடுத்தபடியாக மார்டின் கப்தில் (நியூசிலாந்து) 130 சிக்சர்களும், பிரன்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து) 126 சிக்சர்களும், மார்கன் (இங்கிலாந்து) 119 சிக்சர்களும் சொந்த மண்ணில் அடித்துள்ளனர்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
குயின்ஸ்டவுன்:
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஒரே ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.
இந்தியா- நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதிய முதல் 20 ஓவர் போட்டி குயின்ஸ்டவுனில் இன்று நடந்தது.
முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 156 ரன் இலக்காக இருந்தது. நியூசிலாந்து தரப்பில் சுசி பேட்ஸ் 36 ரன்னும், கேப்டன் சோபி டெவின் 31 ரன்னும் எடுத்தனர். பூஜா, தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டும், ராஜேஸ்வரி கெய்க்வாட் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்தது. இதனால் 18 ரன்னில் இந்தியா தோல்வியை தழுவியது.
யாத்திகா பட்டியா அதிக பட்சமாக 26 ரன் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் ஜெஸ்கெர், லியா, அமலியா, ஹாய்லே ஜென்சன் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
அடுத்து இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் நடக்கிறது. முதல் ஒருநாள் போட்டி வருகிற 12-ந் தேதி நடக்கிறது.
அகமதாபாத் அணி ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்தது. ரஷித் கான், ஷுப்மான் கில் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
ஐ.பி.எல். 15-வது தொடரில் அகமதாபாத், லக்னோ ஆகிய புதிய இரண்டு அணிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஐபிஎல் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.
இதில், லக்னோ அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்பட்டார். மேலும், ரவி பிஷ்னோய், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோரையும் வாங்கியது. அந்த அணிக்கு லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் என பெயர் வைத்துள்ளது.
இந்நிலையில், மற்றொரு அணியான அகமதாபாத், தனது அணியின் பெயரை குஜராத் டைடன்ஸ் என பெயர் வைத்துள்ளது. ரசிகர்கள் இந்த பெயருக்கு வரவேற்பை தெரிவித்து வருகின்றனர்.
நடப்பு ஆண்டு ஐ.பி.எல். மெகா ஏலம் வரும் 12,13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 23-ந் தேதி மெல்போர்னில் நடக்கிறது.
மெல்போர்ன்:
7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந் தேதி முதல் நவம்பர் 13-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.
இதில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காள தேசம் ஆகிய 8 நாடுகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.
இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் உள்ளன. தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் மற்றும் தகுதி சுற்றில் இருந்து 2 அணிகள் ஆகியவை அந்த பிரிவில் இடம்பெற்று உள்ளன.
ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 23-ந் தேதி மெல்போர்னில் நடக்கிறது.
இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் டுகள் இன்று விற்பனை செய்யப்பட்டது. பொது மக்களுக்காக வினியோகிக்கப்பட்ட இந்த டிக்கெட்டுகள் 5 நிமிடத்திலேயே விற்று தீர்ந்து விட்டன.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நாளை மோதுவது 135-வது போட்டியாகும். இதுவரை நடந்த 134 ஆட்டத்தில் இந்தியா 65-ல், வெஸ்ட் இண்டீஸ் 63-ல் வெற்றி பெற்றுள்ளன.
அகமதாபாத்:
போல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நாளை (9-ந் தேதி ) நடக்கிறது.
முதல் ஆட்டத்தில் இந்திய வீரர்களின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. அதை உத்வேகத்துடன் ஆடி இந்தியா தொடரை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்காது என்றே கருதப்படுகிறது.
பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் நல்ல நிலையில் உள்ளனர். இஷான் கிஷனும், தீபக் ஹூடாவும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.
முன்னாள் கேப்டன் விராட் கோலியின் ஆட்டம் ஏமாற்றத்தை அளித்தது. அவர் அதில் இருந்து மீண்டு சிறப்பான இன்னிங்சை வெளிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
கடந்த போட்டியில் சுழற்பந்து வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். யசுவேந்திர சாஹல் 4 விக்கெட்டும், அணிக்கு மீண்டும் திரும்பிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும் கைப்பற்றி முத்திரை பதித்தனர். இருவரும் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு கடுமையான சவாலாக திகழ்ந்தனர்.
நாளைய போட்டியிலும் அவர்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்தில் முகமது சிராஜ், ஷர்துல் தாகூர் , பிரஷித் கிருஷ்ணா தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள்.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி வெஸ்ட் இண்டீசுக்கு உள்ளது. ஏனென்றால் இதில் தோற்றால் அந்த அணி தொடரை இழந்து விடும்.
முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் ஆட்டத்திறன் மோசமாக இருந்தது. ஹோல்டர், பேபியன் ஆலன் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் யாருமே சரியாக ஆடவில்லை. மேலும் பந்துவீச்சும் எடுபடவில்லை. அதை சரி செய்யும் விதமாக நாளைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி திறமையை வெளிப்படுத்துமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகள் நாளை மோதுவது 135-வது போட்டியாகும். இதுவரை நடந்த 134 ஆட்டத்தில் இந்தியா 65-ல், வெஸ்ட் இண்டீஸ் 63-ல் வெற்றி பெற்றுள்ளன. 4 போட்டி முடிவு இல்லை. 2 ஆட்டம் டை ஆனது.
பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

ஆப்பிரிக்க கால்பந்து கோப்பையை செனகல் முதல் முறையாக வென்றுள்ள நிலையில்,வெற்றியை கொண்டாட தேசிய விடுமுறை வழங்கப்படுவதாக அதிபர் மேக்கி சால் அறிவித்து உள்ளார்.
33-வது ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டி கேமரூன் நாட்டில் நடந்தது. இறுதிப்போட்டியில் செனகல்-எகிப்து அணிகள் மோதின.
விறுவிறுப்பான இந்த போட்டியில் 90 நிமிடங்கள் நடைபெற்ற முழு ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
கூடுதலாக வழங்கப்பட்ட 30 நிமிட நேரத்திலும் இருஅணிகளும் கோல் அடிக்க முடியவில்லை. இதையடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க ‘பெனால்டி ஷூட்-அவுட்’ முறை கடைப்பிடிக்கப்பட்டது.
இதில் செனகல் அணி 4-2 என்ற கோல் கணக்கில் எகிப்தை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து தொடரில் 2002-ம் ஆண்டு கேமரூனிடமும், 2019-ம் ஆண்டு அல்ஜீரியாவிடம் இறுதிப் போட்டியில் தோற்று கோப்பையை கோட்டை விட்ட செனகல் அணி 2022ம் ஆண்டுக்கான போட்டியில் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி புதிய வரலாறு படைத்திருக்கிறது.
ஆப்பிரிக்க கால்பந்து கோப்பையை செனகல் முதல் முறையாக வென்றுள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து வெற்றிக் கொண்டாட்டத்திற்காக சம்பளத்துடன் கூடிய தேசிய விடுமுறை வழங்கப்படுவதாக செனகல் அதிபர் மேக்கி சால் அறிவித்து உள்ளார்.
இதையும் படியுங்கள்... இங்கிலாந்தின் தற்காலிக தலைமை பயிற்சியாளராக காலிங்வுட் நியமனம்
தமிழ்நாட்டை சேர்ந்த தினேஷ் கார்த்திக் டெல்லி, பஞ்சாப், மும்பை, பெங்களூர், குஜராத், கொல்கத்தா அணிகளுக்காக விளையாடி உள்ளார்.
ஐ.பி.எல். 2022 சீசனுக்கான மெகா ஏலம் வரும் 12, 13-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. மூத்த வீரர்கள், அதிரடி பேட்ஸ்மேன்கள், அசத்தல் பவுலர்கள், சிறந்த ஆல் ரவுண்டர்கள், இளம் வீரர்கள் என பலர் தங்கள் பெயரை பதிவுசெய்துள்ளனர்.
இதற்கிடையே, தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் கடந்த சீசனில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். தற்போது அங்கிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து விளையாட விரும்புவதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் கார்த்திக், சென்னையை சேர்ந்தவன் நான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தால் அது சிறப்பானதாக இருக்கும். எந்த அணியில் விளையாட வாய்ப்பு வந்தாலும் அந்த அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என தெரிவித்துள்ளார்.
காலிங்வுட் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் என்பதும், அவரது தலைமையின் கீழ் இங்கிலாந்து அணி 2010-ல் டி20 உலக கோப்பையை வென்றதும் குறிப்பிடத்தக்கது.
லண்டன்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்து வருபவர் கிறிஸ் சில்வர்வுட்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் படுமோசமாக இழந்தது. இதையடுத்து கிறிஸ் சில்வர்வுட் தனது பதவியில் இருந்து விலகினார்.
இந்நிலையில், அடுத்து நடைபெறவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக காலிங்வுட் செயல்படுவார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று தெரிவித்துள்ளது
லதா மங்கேஷ்கரை கவுரவிக்க விரும்பிய கிரிக்கெட் வாரியம் அவருக்கு வாழ்நாள் முழுவதும் இந்தியா ஆடும் அனைத்து போட்டிகளுக்கான டிக்கெட்டை இலவசமாக வழங்கியது.
இசை உலகில் ஜாம்பவனாக திகழ்ந்தாலும் லதா மங்கேஷ்கருக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது தீராத காதல். தீவிர ரசிகரான இவர் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை பார்க்க தவறுவதில்லை.
1983-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை கைப்பற்றிய போது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அப்போதைய கிரிக்கெட் வாரியம் போட்டியில் வெற்றியை ஈட்டி தந்த வீரர்களுக்கு பரிசு வழங்க முடிவு செய்தது. இதற்கான பணத்தை திரட்ட அவர்கள் ஒரு இசைக்கச்சேரி நடத்த முடிவு செய்தனர்.
இதற்காக அப்போதைய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், லதா மங்கேஷ்கரை சந்தித்து கேட்டனர். அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.இதையடுத்து டெல்லியில் லதா மங்கேஷ்கரின் இசைக்கச்சேரி டெல்லி உள் அரங்கில் நடந்தது. கிரிக்கெட் வாரியத்திற்காக லதா மங்கேஷ்கர் இலவசமாக நடத்தி கொடுத்த இசை நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர். கிரிக்கெட் வாரியத்திற்கும் தேவையான பணம் கிடைத்தது.
இந்த பணத்தை கிரிக்கெட் வாரியம் உலக கோப்பையை கைப்பற்றிய வீரர்களுக்கு வழங்கியது. அதன்பின்பு இந்த பணத்தை திரட்டி கொடுத்த லதா மங்கேஷ்கரை கவுரவிக்க விரும்பிய கிரிக்கெட் வாரியம் அவருக்கு வாழ்நாள் முழுவதும் இந்தியா ஆடும் அனைத்து போட்டிகளுக்கான டிக்கெட்டில் 2 டிக்கெட்டை இலவசமாக வழங்கியது.
லதா மங்கேஷ்கர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கிரிக்கெட் போட்டியை பார்க்க தவறுவதில்லை. 2011-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை லதா மங்கேஷ்கர் விரதம் இருந்து பார்த்தாராம். இதனை அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார்.
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது வலிமையின் தூணை இழந்துவிட்டதாக தந்தையின் பிரிவை உருக்கமாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக்சந்த் நேற்று காலமானார். ராணுவ அதிகாரியான இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-
தந்தையை இழந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவரது மறைவால் எனது வலிமையின் தூணை இழந்துவிட்டேன். அவர் தனது கடைசி மூச்சு வரை உண்மையான போராளியாக இருந்தார். உங்களது ஆன்மா சாந்தியடையட்டும் அப்பா. உங்களை எப்போதும் மிஸ் செய்வேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்.. வீரர்கள் சவால் விடும் வகையில் விளையாட வேண்டும் - ரோகித் சர்மா
இந்நிலையில், திரிலோக்சந்த் நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தந்தையை இழந்த சுரேஷ் ரெய்னா அவரது பிரிவை உருக்கமாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.