என் மலர்
விளையாட்டு

கவாஸ்கர் - விராட் கோலி
8 ரன்னில் அவுட் - கோலியின் ஆட்டம் குறித்து கவாஸ்கர் அதிருப்தி
தென் ஆப்பிரிக்காவில் ஆடியதை போன்று தான் கோலி நேற்றைய ஆட்டத்தில் விளையாடினார் என முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் அதிருப்தி அடைந்துள்ளார்.
புதுடெல்லி:
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலியின் ஆட்டம் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. அவர் 4 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 8 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இந்த நிலையில் விராட் கோலியின் ஆட்டம் குறித்து முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் அதிருப்தி அடைந்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் ஆடியதை போன்று தான் கோலி நேற்றைய ஆட்டத்தில் விளையாடினார். ஷார்ட் பந்துகளை எதிர் கொள்ளும் போது அவர் கவனமுடன் ஆட வேண்டும். அவரது மோசமான ஆட்டம் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
இனி வரும் காலங்களில் இதுபோன்று விளையாடாமல் இருக்குமாறு அவரை எச்சரிக்கிறேன்.
இவ்வாறு கவாஸ்கர் கூறி உள்ளார்.
நேற்றைய போட்டியில் 8 ரன் எடுத்தது மூலம் விராட் கோலி சொந்த மண்ணில் 5 ஆயிரம் ரன்னை தொட்டார். 96 இன்னிங்சில் அவர் 5,002 ரன்னை இந்திய மண்ணில் எடுத்துள்ளார். சராசரி 59.54 ஆகும்.
சொந்த மண்ணில் 5 ஆயிரம் ரன்னை தொட்ட 4-வது விராட் கோலி ஆவார். தெண்டுல்கர் 6,976 ரன்னுடன் முதல் இடத்திலும், ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) 5,406 ரன்னுடன் 2-வது இடத்திலும், ஜேக் காலிஸ் (தென் ஆப்பிரிக்கா) 5,178 ரன்னுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
Next Story






