என் மலர்tooltip icon

    விளையாட்டு

    காலிங்வுட்
    X
    காலிங்வுட்

    இங்கிலாந்தின் தற்காலிக தலைமை பயிற்சியாளராக காலிங்வுட் நியமனம்

    காலிங்வுட் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் என்பதும், அவரது தலைமையின் கீழ் இங்கிலாந்து அணி 2010-ல் டி20 உலக கோப்பையை வென்றதும் குறிப்பிடத்தக்கது.
    லண்டன்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்து வருபவர் கிறிஸ் சில்வர்வுட். 

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் படுமோசமாக இழந்தது. இதையடுத்து  கிறிஸ் சில்வர்வுட் தனது பதவியில் இருந்து விலகினார்.

    இந்நிலையில், அடுத்து நடைபெறவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக காலிங்வுட் செயல்படுவார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று தெரிவித்துள்ளது
    Next Story
    ×