என் மலர்
விளையாட்டு
- உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற ஆண் தடகள வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார்.
- பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
சென்னை:
அமெரிக்காவின் ஓரிகான் மாநிலம் யூஜின் நகரில் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஈட்டி எறிதல் பிரிவில், இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் மற்றும் முதல் ஆண் தடகள வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார். அவரது வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடிவருகின்றனர்.
சர்வதேச போட்டியில் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மீண்டும் ஒரு முறை வரலாறு படைத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா! உலகத் தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்லும் இரண்டாம் இந்தியர் மற்றும் முதல் இந்திய ஆண் தடகள வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் அவருக்கு என் பாராட்டுகள். உலக அரங்கில் நீரஜ் சோப்ரா தொடர்ந்து சாதித்து வரும் உயர்சிறப்பான சாதனைகளால் இந்தியா பெருமையடைகிறது' என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
- டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் கடைசிகட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடைபெறுகின்றன.
- நெல்லை ராயல் கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ் ஏற்கனவே பிளேஆப் சுற்றுக்கு முன்னேறின
சேலம்:
6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 23-ந் தேதி நெல்லையில் தொடங்கியது. அங்கு 6 ஆட்டங்கள் நடந்தது. அதை தொடர்ந்து திண்டுக்கல்லில் 7 போட்டிகளும் , கோவையில் 8 ஆட்டங்களும் நடை பெற்றது. தற்போது சேலத்தில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த ஆட்டத்தில் கோவை கிங்ஸ் 5 ரன்னில் நெல்லை ராயல் கிங்சை தோற்கடித்து 4-வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. நெல்லை ராயல் கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே முன்னேறி இருந்தன.
இதுவரை 26 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்றுடன் லீக் போட்டிகள் முடிகிறது. இரண்டு ஆட்டங்கள் இன்று நடக்கிறது.
மாலை 3.15 மணிக்கு நடைபெறும் முதல் போட்டி யில் மதுரை பாந்தர்ஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.
மதுரை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. 8 புள்ளிகளுடன் இருக்கும் அந்த அணி 5-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. திருச்சி வாரியர்ஸ் வாய்ப்பை இழந்து விட்டது. 3-வது வெற்றி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் அந்த அணி இருக்கிறது.
இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
பிளே-ஆப் சுற்று வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்ட திண்டுக்கல் அணி 3-வது வெற்றி வேட்கையில் இருக்கிறது.
6 ஆட்டத்திலும் தோல்வி அடைந்த சேலம் அணி தனது கடைசி போட்டியிலாவது வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 2003ம் ஆண்டுக்குப் பிறகு உலக தடகள போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது.
- கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா முதல் தங்கம் வென்றார்.
அமெரிக்காவின் ஓரிகான் மாநிலம் யூஜின் நகரில் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய நட்சத்திர வீரரும், ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவருமான நீரஜ் சோப்ரா தகுதிச்சுற்றில் 88.39 மீட்டர் தூரம் எறிந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இதன்மூலம் 2003ம் ஆண்டுக்குப் பிறகு உலக தடகள போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது. 2003ல் மகளிருக்கான நீளம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் வெண்கலம் வென்றார்.

நீரஜ் சோப்ரா
கிரெனடாவைச் சேர்ந்த நடப்பு சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் தங்கம் வென்றார். இவர் 90.54 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாதனை படைத்தார். செக் குடியரசின் ஜாக்கூப் வாட்லெஜ் 88.09 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலம் வென்றார். இறுதிச்சுற்றில் இடம்பெற்ற மற்றொரு இந்திய வீரரான ரோகித் யாதவ் 10வது இடத்தை (78.72 மீ) பிடித்தார்.

ஆண்டர்சன் பீட்டர்ஸ்
தற்போது தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றதன்மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் மற்றும் முதல் ஆண் தடகள வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா முதல் தங்கம் வென்றார். 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு, ஒலிம்பிக்கில் தனிநபர் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் நீரஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
- வெளிநாட்டு வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.
- செஸ் ஒலிம்பியாட் அரங்கில் இன்று பயிற்சி போட்டி நடைபெறுகிறது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் சென்னைக்கு வரத் தொடங்கி உள்ளனர்.
மடகாஸ்கர் தீவை சேர்ந்த வீரர்கள் நேற்று சென்னை விமானநிலையம் வந்தனர். அந்த அணியில் ஆன்ட்ரியனியனா, ஹெரிடியனோ, டொவினா, சார்லி மகானிகஜா ராஜெரிசன், ராகோடாமகரோ, ராமலன்சனோ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து ஹங்கேரி, ஜாம்பியா ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர்கள் சென்னை வந்தனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெளிநாட்டு வீரர்களை வரவேற்ற அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள் உதவியுடன் ஓட்டலுக்கு பாதுகாப்பாக அழைத்து சென்று தங்க வைத்தனர்.
உஸ்பெகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நைஜீரியா, உருகுவே, டோகோ, இங்கிலாந்து, ஹாங்காங், வேல்ஸ், உருகுவே, ஐக்கிய அரபு அமீரகம், செர்பியா, வியட்நாம் உள்ளிட்ட நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இன்று சென்னை வருகிறார்கள். இதேபோல் போட்டியை நடத்தும் முதன்மை நடுவர் உள்பட 90 பேர் சென்னை வந்துள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அரங்கில் இன்று பயிற்சி போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடக்கிறது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 1,414 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
- முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருந்தது.
- தலா ஒரு வெற்றி மூலம் ஒருநாள் கிரிக்கெட் தொடர் சம நிலையில் உள்ளது.
மான்செஸ்டர்:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. தற்போது இரு அணிகளுக்கும் இடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றிருந்து. இந்நிலையில் 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மழை காரணமாக இந்த போட்டி 29 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து 28.1 ஓவர்களில் 201 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அதிபட்சமாக அந்த அணி வீரர் லிவிங்ஸ்டோன் 38 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் டுவைன் பிரிட்டோரியஸ் நான்கு விக்கெட்களை கைப்பற்றினார்.
பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்க அணி 20.4 ஓவர்கள் முடிவில் 83 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் ஜானிமேன் மலான், வான்டெர் டஸன், மார்க்ராம் ஆகிய 3 பேரும் டக்-அவுட் ஆனார்கள்.
இதனால் 118 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 3 விக்கெட்டும், மொயீன் அலி, ரீஸ் டாப்லே தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.
- 44-வது ஒலிம்பியாட் போட்டியில் 2 ஆயிரம் போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
- மாணவன் ராஜ ரத்தினவேல் தர வரிசை பட்டியலில் 345-ஆவது போட்டியாளராக தேர்வு.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளை சார்ந்த 2 ஆயிரம் போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர். அதில் தூத்துக்குடியில் உள்ள டி.எம். என். எஸ்.டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவன் ராஜ ரத்தினவேல் தர வரிசை பட்டியலில் 345-ஆவது போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
மாணவன் ராஜ ரத்தினவேல் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற தெட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர். கே.காளிதாசன், பள்ளி தாளாளர் மற்றும் செயலாளர் எஸ்.ஆர்.எஸ். உமரிசங்கர், பொருளாளர் செல்வராஜ், சங்க செயலாளர் ராஜகுமார், துணை தலைவர் அனிதா சிவானந்தம், துணை செயலாளர் ராமநாதன், பள்ளி கமிட்டி உறுப்பினர்கள் கல்யாண சுந்தரம், அன்புலிங்கம், ஜனகர், ரமேஷ், பிரம்மசக்தி, ராகவன், லிங்க செல்வன், ஜெயகணேஷ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
- முதலில் ஆடிய கோவை அணி 177 ரன்களை எடுத்தது.
- விக்கெட் கீப்பர் சுரேஷ்குமார் அதிரடியாக ஆடி 75 ரன்களை குவித்தார்.
சேலம்:
6-வது டி.என்.பி.எல். டி20 ஓவர் கிரிக்கெட் தொடரின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடக்கிறது.
இன்று நடைபெற்ற 26-வது லீக் ஆட்டத்தில் கோவை, நெல்லை அணிகள் மோதின. டாஸ் வென்ற கோவை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 177 ரன்களை எடுத்துள்ளது. விக்கெட் கீப்பர் சுரேஷ்குமார் அதிரடியாக ஆடி 48 பந்தில் 3 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 75 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்காரர்கள் கங்கா ஸ்ரீதர் ராஜு 48 ரன்னில் அவுட்டாகி அரை சதத்தை நழுவவிட்டார். கடைசி கட்டத்தில் சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 18 பந்தில் 35 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 178 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சூர்யபிரகாஷ் 45 ரன்னும், பாபா அபராஜித் 37 ரன்னும் எடுத்தனர்.
அடுத்து இறங்கிய சஞ்சய் யாதவ் மீண்டும் அதிரடியில் மிரட்டி அரை சதம் அடித்து 54 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், நெல்லை அணி 9 விக்கெட்டுக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் கோவை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
- டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய கோவை அணி 177 ரன்களை எடுத்தது.
சேலம்:
6-வது டி.என்.பி.எல். டி20 ஓவர் கிரிக்கெட் தொடரின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடக்கிறது.
இன்று நடைபெறும் 26-வது லீக் ஆட்டத்தில் கோவை, நெல்லை அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற கோவை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் கங்கா ஸ்ரீதர் ராஜு 48 ரன்னில் அவுட்டாகி அரை சதத்தை நழுவவிட்டார்.
விக்கெட் கீப்பர் சுரேஷ்குமார் அதிரடியாக ஆடி 48 பந்தில் 3 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 75 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஷாருக் கான் 3 ரன்னில் வெளியேறினார்.
கடைசி கட்டத்தில் சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 18 பந்தில் 35 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 178 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்குகிறது.
- இந்திய வீரர்களின் உடை மாற்றும் அறையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரைன் லாரா இந்திய வீரர்களை சந்திந்து பேசினார்.
- ராகுல் டிராவிட் மற்றும் லாராவின் படத்தையும் பிசிசிஐ வெளியிட்டது.
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த பரபரப்பான போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஷிகர் தவான் தேர்வு செய்யப்பட்டார்.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகுக்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கவுள்ளது.
முதல் ஒருநாள் போட்டி முடிவடைந்த நிலையில் இந்திய வீரர்களின் உடை மாற்றும் அறையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரைன் லாரா இந்திய வீரர்களை சந்திந்து பேசினார். இதனை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது.
டீம் இந்தியா டிரஸ்ஸிங் ரூமுக்கு யார் வந்தார் என்று பாருங்கள். ஜாம்பவான் லாரா!" என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. வீடியோவில் லாராவுடன் ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் பிற வீரர்கள் அரட்டை அடிப்பதைக் காண முடிந்தது.
Look who came visiting the #TeamIndia dressing room 👏 👏
— BCCI (@BCCI) July 23, 2022
The legendary Brian Charles Lara! 👍 👍#WIvIND | @BrianLara pic.twitter.com/ogjJkJ2m4q
முன்னதாக ராகுல் டிராவிட் மற்றும் லாராவின் படத்தையும் பிசிசிஐ வெளியிட்டது. "இரண்டு லெஜண்ட்ஸ், ஒரு பிரேம்!" என பதிவிட்டிருந்தது. இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை எடுத்துள்ளனர்.
- ஷ்ரேயாஸ் ஐயர் தனது முதல் 25 ஒருநாள் போட்டிகளில் 10 அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் உட்பட 11 50+ ஸ்கோர்களை அடித்துள்ளார்.
போர்ட் ஆப் ஸ்பெயின்:
வெஸ்ட் இண்டீஸ்- இந்தியா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரண் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 308 ரன் குவித்தது. 309 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி பந்தில் இந்த வெற்றி கிடைத்தது.
இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது ஆட்டம் இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.
இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யர் அரை சதம் அடித்ததன் மூலம் 2 சாதனைகளை படைத்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை எடுத்துள்ளனர். தவான் மற்றும் கோலி இருவரும் ஒருநாள் போட்டிகளில் 24 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை எட்டியுள்ளனர்.
அவர்களுக்கு அதற்கு அடுத்தப்படியாக ஷ்ரேயாஸ் அய்யர் உள்ளார். அவர் 25 போட்டிகளில் 1000 ரன்களை எடுத்துள்ளார். அவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் இணைந்துள்ளார். அவர் தனது 25-வது ஒருநாள் இன்னிங்சில் 1000 ரன்களை கடந்தார்.
ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக மிக வேகமாக 1000 ரன்களை கடந்தவர்கள் பட்டியல்:
விராட் கோலி – 24
ஷிகர் தவான் – 24
நவ்ஜோத் சிங் சித்து – 25
ஷ்ரேயாஸ் ஐயர் – 25
கேஎல் ராகுல் – 27
எம்எஸ் தோனி – 29
அம்பதி ராயுடு – 29
மேலும், ஷ்ரேயாஸ் ஐயர் 25 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில் 11 போட்டிகளில் தலா 50 மேல் ரன்களை அடித்துள்ளார். இந்தியர்களில், நவ்ஜோத் சிங் சித்து மட்டுமே ஐயரை விட அதிக போட்டிகளில் 50-க்கு மேல் ரன்களை எடுத்துள்ளார்.
முதல் 25 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக 50+ ரன்கள்:-
12: நவ்ஜோத் சித்து
11: ஷ்ரேயாஸ் ஐயர்*
10: விராட் கோலி
09: ஷிகர் தவான்
ஷ்ரேயாஸ் ஐயர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் 71, 65, 70, 53, 7, 80 மற்றும் 54 ரன்களை பதிவு செய்துள்ளார்.
- அன்னு ராணி பதக்கம் வெல்லத் தவறினாலும், உலக சாம்பியன்ஷிப்பில் முதல் எட்டு இடங்களை 2 முறைப் பெற்ற இரண்டாவது இந்தியப் பெண்மணி ஆனார்.
- 61.12 மீட்டர் தூரம் எறிந்து 7-வது இடத்தை பிடித்தார்.
ஓரேகான்:
18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஓரேகானில் நடைபெற்று வருகிறது. இதில் 22 பேர் கொண்ட இந்திய தடகள அணி, ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா தலைமையில் பங்கேற்றுள்ளது. மகளிருக்கான ஈட்டி எறிதல் இறுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றன. அதில் இந்தியா சார்பில் அன்னு ராணி பங்கேற்றார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய அன்னு ராணி, தனது சிறந்த முயற்சியாக 61.12 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார்.
இதன்மூலம், உலக தடகள சாம்பியன்ஷி ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை அன்னு ராணி ஏழாவது இடத்தைப் பிடித்தார். ஆஸ்திரேலியாவின் கெல்சி-லீ பார்பர் 66.91 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். அமெரிக்காவின் காரா விங்கர்(64.05 மீட்டர்) வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஜப்பானின் ஹருகா கிடாகுச்சி(63.27 மீட்டர்) வெண்கலம் வென்றார். அன்னு ராணி பதக்கம் வெல்லத் தவறினாலும், உலக சாம்பியன்ஷிப்பில் முதல் எட்டு இடங்களை 2 முறைப் பெற்ற இரண்டாவது இந்தியப் பெண்மணி ஆனார். உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு தொடர்ந்து 2 முறை முன்னேறிய முதல் இந்தியர் அன்னு ராணி ஆவார். 18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜூலை 24 அன்று நிறைவடையும்.
- 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியருக்கான வாள்வீச்சு போட்டி நடக்கிறது.
- இந்தப் போட்டியின் அடிப்படையில் மாநில போட்டிக்கான சென்னை அணி தேர்வு செய்யப்படும்.
சென்னை:
சென்னை மாவட்ட வாள்வீச்சு சங்கம் சார்பில் 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியருக்கான வாள்வீச்சு போட்டி கொளத்தூரில் உள்ள கல்ட்டிஜென் மல்டி விளையாட்டு அரங்கில் நாளை ( 24-ந் தேதி ) நடக்கிறது. இந்தப் போட்டியின் அடிப்படையில் மாநில போட்டிக்கான சென்னை அணி தேர்வு செய்யப்படும்.
மேற்கண்ட தகவலை சென்னை மாவட்ட வாள்வீச்சு சங்க செயலாளர் வி.கருணாமூர்த்தி தெரிவித்து உள்ளார்.






