search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fencing Competition"

    • சம்பிரதாயமான நடைமுறையாக இரு போட்டியாளர்களும் போட்டிக்கு பிறகு கைகுலுக்கி கொள்ள வேண்டும்.
    • இனி வரவிருக்கும் அணிகளுக்கான ஆட்டங்களிலும் ஓல்கா பங்கு பெற இயலாது.

    இத்தாலியில் உள்ள மிலன் நகரில், உலக பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.

    நேற்று நடைபெற்ற போட்டியில் 4 முறை ஒலிம்பிக் பட்டம் வென்ற உக்ரைன் நாட்டு வீராங்கனை ஓல்கா கர்லான், ஒற்றையர் ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை அன்னா ஸ்மர்னோவா என்பவருடன் மோதினார்.

    ரஷிய- உக்ரைன் போர் 500 நாட்களுக்கும் மேல் நடைபெறும் பின்னணியில், இரு நாடுகளுக்கிடையேயான இந்த போட்டி மிகுந்த ஆர்வமுடன் பார்க்கப்பட்டது. இப்போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஓல்கா வெற்றி பெற்றார்.

    இந்த ஆட்டத்தின் சம்பிரதாயமான நடைமுறையாக இரு போட்டியாளர்களும் போட்டிக்கு பிறகு கைகுலுக்கி கொள்ள வேண்டும். ஆனால், ஓல்கா இதனை செய்ய மறுத்தார். இதற்கு பதிலாக தனது கத்தியால் அன்னாவின் கத்தியை தொட்டு கொள்ள முன்வந்தார்.

    அவரது இந்த நடத்தையால் இப்போட்டியிலிருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

    ரஷிய வீராங்கனை அன்னா, விளையாட்டு நடந்த இடத்திலேயே சுமார் அரை மணி நேரம் நின்றிருந்து அதிகாரிகளுடன் பேசிவிட்டு புறப்பட்டார்.

    பென்சிங் விளையாட்டில் இந்த கைகுலுக்கல் ஒரு கட்டாய நடைமுறையாகும். இதற்கு கட்டுப்பட மறுப்பவர்களுக்கு கருப்பு அட்டை (Black Card) வழங்கப்பட்டு, தகுதி நீக்க நடவடிக்கைக்கு ஆளாக வேண்டியிருக்கும். தற்போது கருப்பு அட்டை முறைப்படி ஒற்றையர் ஆட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஓல்கா, இனி வரவிருக்கும் அணிகளுக்கான ஆட்டங்களிலும் பங்கு பெற இயலாது.

    "இந்த முடிவிற்கெதிராக நாங்கள் மேல்முறையீடு செய்வோம். ஏனெனில் தீர்ப்பளித்த நடுவர், நேரடியாக கருப்பு அட்டை கொடுக்கவில்லை" என ஓல்காவின் நடத்தையை ஆதரிக்கும் உக்ரைன் நாட்டு பென்சிங் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

    "நேர்மையான போட்டியில் தோல்வியடைந்த அன்னா, கைகுலுக்கல் நிகழ்ச்சியை வைத்து ஒரு மட்டமான விளையாட்டில் ஈடுபடுகிறார். இவரை போன்றுதான் ரஷிய ராணுவமும் நடந்து கொள்கிறது," என உக்ரைனின் வெளியுறவு துறை அமைச்சர் கூறினார்.

    சர்வதேச பென்சிங் கூட்டமைப்பு (FIE) இதுகுறித்து உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    • கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
    • கல்வித்துறை சார்பில் திருப்பூர் மாவட்ட அளவிலான வாள்சண்டை போட்டி ஜெய்வாபாய் பள்ளியில் நடந்தது.

    திருப்பூர் 

    பள்ளி கல்வித்துறை சார்பில் திருப்பூர் மாவட்ட அளவிலான வாள்சண்டை போட்டி ஜெய்வாபாய் பள்ளியில் நடந்தது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் வரும் பிப்ரவரி மாதம் 9 ந் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

    தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம்: 

    அஷ்மிதா, சபிதா, வாணிஸ்ரீ, தேவதர்ஷினி, சுதீக் ஷா, தர்ஷனா மதுமிதா, கனிஷ்கா, ஹரிஷ்தேவஜெய், அஷ்வின், குமரகுரு, அஜய்பாலாஜி, சூர்யபிரகாஷ். ரோஹித், தர்ஷன். தரணிதரன், சர்வேஸ்வரன், சச்சின், கவுரிசங்கர், தினேஷ்குமார், ஷர்சிகா , வர்ஷினி, காயத்ரி, நாகஸ்ரீ (விவேகானந்தா மெட்ரிக்).

    ரக்ஷனா, ஷிவதன்யா, ஷிதன்யா, மவுனிகா, அவந்திகா, பூஜா ஷிவானி, கீர்த்தனா, தர்ஷனா, சுவேதா, வர்ஷினி, ஜெயப்பிரியா, தனுஷ்கா, மீரா, பிரியதர்ஷனி, ஜீவிதா, பிரதிபா (ஜெய்வாபாய்) அனுஷியா, மணிஷா, பவித்ரா, ரித்விகா, ஸ்ரீதேவி (குமார் நகர், மாநகராட்சி பள்ளி).

    ஜெர்சன், முகிலன் (செங்கப்பள்ளி அரசு பள்ளி), தரணிதரன் (பிஷப் ஸ்கூல்), ராகுல், கவுதம், மதியழகன், சுசிதரன் (ஊத்துக்குளி அரசு பள்ளி).

    முகமதுநஹீம், அபிலேஷ், ஹரிஷ்சுதன், விஷ்கான், கார்த்திக், பரமசிவம், ஹரிபிரசாத், கலையரசன், பிரியதர்ஷனி, திவ்யாகுமாரி (சின்னச்சாமி அம்மாள்), முகில்யான் (அன்னை மெட்ரிக்), ரித்திஷ், சிவபிரகாஷ், லோகேஷ். லோகேஷ்வரன், தர்ஷன் (நஞ்சப்பா), மோனிஷ் (மங்கலம் அரசு பள்ளி). 

    • 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியருக்கான வாள்வீச்சு போட்டி நடக்கிறது.
    • இந்தப் போட்டியின் அடிப்படையில் மாநில போட்டிக்கான சென்னை அணி தேர்வு செய்யப்படும்.

    சென்னை:

    சென்னை மாவட்ட வாள்வீச்சு சங்கம் சார்பில் 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியருக்கான வாள்வீச்சு போட்டி கொளத்தூரில் உள்ள கல்ட்டிஜென் மல்டி விளையாட்டு அரங்கில் நாளை ( 24-ந் தேதி ) நடக்கிறது. இந்தப் போட்டியின் அடிப்படையில் மாநில போட்டிக்கான சென்னை அணி தேர்வு செய்யப்படும்.

    மேற்கண்ட தகவலை சென்னை மாவட்ட வாள்வீச்சு சங்க செயலாளர் வி.கருணாமூர்த்தி தெரிவித்து உள்ளார்.

    ×