சுரேஷ்குமார் அதிரடி - நெல்லை அணி வெற்றி பெற 178 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கோவை அணி

டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.முதலில் ஆடிய கோவை அணி 177 ரன்களை எடுத்தது.
அரை சதமடித்த சுரேஷ்குமார்
அரை சதமடித்த சுரேஷ்குமார்
Published on

சேலம்:

6-வது டி.என்.பி.எல். டி20 ஓவர் கிரிக்கெட் தொடரின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடக்கிறது.

இன்று நடைபெறும் 26-வது லீக் ஆட்டத்தில் கோவை, நெல்லை அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற கோவை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் கங்கா ஸ்ரீதர் ராஜு 48 ரன்னில் அவுட்டாகி அரை சதத்தை நழுவவிட்டார்.

விக்கெட் கீப்பர் சுரேஷ்குமார் அதிரடியாக ஆடி 48 பந்தில் 3 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 75 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஷாருக் கான் 3 ரன்னில் வெளியேறினார்.

கடைசி கட்டத்தில் சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 18 பந்தில் 35 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, 178 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com