என் மலர்
விளையாட்டு
- பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசம் தவிர யாருமே தொடர்ச்சியாக ரன் குவிக்கவில்லை.
- ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வருகிற 28-ந்தேதி துபாயில் நடக்கிறது.
இஸ்லாமாபாத்:
ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 27-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடக்கிறது.
இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்ன் மற்றும் தகுதி சுற்றில் இருந்து நுழையும் ஒரு அணி ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன.
தகுதி சுற்று ஆட்டத்தில் இருந்து முன்னேறும் நாடு எது என்று நாளைக்குள் தெரிந்து விடும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆங்காங், குவைத் ஆகியவை போட்டியில் உள்ளன.
ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஷகீன்ஷா அப்ரிடி ஆடவில்லை. காயத்தால் அவர் விலகி உள்ளார். அவருக்கு பதிலாக முகமது ஹஸ்னைன் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
இதேபோல இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா காயத்தால் விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக நுஷன் துஷாரா சேர்க்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் வேகப்பந்து வீரர் ஷகீன்ஷா அப்ரிடி ஆசிய கோப்பை போட்டியில் ஆடாதது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய இழப்பு என்று அந்நாட்டு முன்னாள் கேப்ட னும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான இன்சமாம்-உல்-ஹக் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக அப்ரிடி ஆடாதது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாகும். கடந்த முறை இந்தியாவுடனான போட்டியில் அவர் நெருக்கடி கொடுத்தார். கடந்த ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் முதல் ஓவரி லேயே அவர் சரியான நெருக்கடியை கொடுத்தார். தற்போது ஷகீன்ஷா அப்ரிடி காயத்தால் விலகி உள்ளது பாதிப்பாகும்.
இரு அணிகளும் மோதுவது விறுவிறுப்பாக இருக்கும். பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசம் தவிர யாருமே தொடர்ச்சியாக ரன் குவிக்கவில்லை.
இவ்வாறு இன்சமாம் கூறியுள்ளார்.
ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வருகிற 28-ந்தேதி துபாயில் நடக்கிறது.
இந்த போட்டியில் வெற்றி பெற்று பாகிஸ்தானை பழிவாங்கும் ஆர்வத்தில் ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி இருக்கிறது. இரு அணிகளும் கடைசியாக கடந்த ஆண்டு துபாயில் மோதிய 20 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தான் வெற்றி பெற்று இருந்தது. உலக கோப்பையில் அந்த அணி முதல் முறையாக இந்தியாவை வீழ்த்தி இருந்தது.
அதே நேரத்தில் 50 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக மோதிய அனைத்து ஆட்டத்திலும் (6 போட்டி) இந்தியாவே வெற்றி பெற்று இருந்தது.
- முதலில் ஆடிய இந்தியா 289 ரன்களை எடுத்துள்ளது.
- அடுத்து ஆடிய ஜிம்பாப்வே 276 ரன்களை எடுத்தது.
ஹராரே:
இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஹராரேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிய ஷுப்மான் கில் சர்வதேச போட்டிகளில் ஷுப்மான் முதல் சதம் அடித்தார். அவர் 130 ரன்னில் வெளியேறினார். இஷான் கிஷன் அரை சதமடித்து 50 ரன்னில் அவுட்டானார். கே.எல்.ராகுல் 40 ரன்னிலும், தவான் 30 ரன்னிலும் அவுட்டாகினர்.
ஜிம்பாப்வே அணி சார்பில் பிராட் எவான்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. சீரான இடைவெளியில் அந்த அணியின் விக்கெட்கள் வீழ்ந்தது.
ஆனாலும் சிக்கந்தர் ராசா தனி ஆளாகப் போராடினார். அவர் சதமடித்து அசத்தினார். 8-வது விக்கெட்டுக்கு சிக்கந்தர் ராசா, எவான்ஸ் ஜோடி
104 ரன்கள் சேர்த்து அசத்தியது.
சிக்கந்தர் ராசா 115 ரன்னில் ஆட்டமிழந்தார். சீன் வில்லியம்ஸ் 45 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், ஜிம்பாப்வே அணி 276 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.
இந்தியா சார்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், அக்சர் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டோக்கியோவில் இன்று தொடங்கியது.
- இந்திய வீரர் லக்ஷயா சென் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
டோக்கியோ:
27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நடக்கிறது. கவுரவமிக்க இந்த போட்டியில் இந்தியா சார்பில் 25 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் கிதாம்பி ஸ்ரீகாந்த், அயர்லாந்தின் நட் குயெனுடன் மோதினார்.
இதில் கிதாம்பி 22-10, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், மற்றொரு வீரரான ஹெச்.எஸ்.பிரனோய், ஆஸ்திரியா வீரர் லூகா விராபருடன் மோதினார். இதில் பிரனோய் 21-12, 21-11
என்ற செட் கணக்கில் வென்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.
- முதலில் ஆடிய இந்தியா 289 ரன்களை எடுத்துள்ளது.
- ஷுப்மான் கில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார்.
ஹராரே:
இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஹராரேவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், கே.எல்.ராகுல் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் எடுத்த நிலையில் கே.எல்.ராகுல் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். தவான் 30 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
அடுத்து இறங்கிய ஷுப்மான் கில் பொறுப்புடன் ஆடினார். அவர் இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்தார். இஷான் கிஷன் அரை சதமடித்து 50 ரன்னில் அவுட்டானார்.
நிதானமாக ஆடிய ஷுப்மான் கில் 82 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். சர்வதேச போட்டிகளில் ஷுப்மான் கில்லின் முதல் சதம் இதுவாகும்.
அவர் 130 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 289 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்குகிறது.
ஜிம்பாப்வே அணி சார்பில் பிராட் எவான்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.
- டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார்.
- ஷுப்மான் கில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார்.
ஹராரே:
ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்த நாட்டு அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.
இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், கே.எல்.ராகுல் களமிறங்கினர். ராகுல் 40 ரன்னும், தவான் 30 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
அடுத்து இறங்கிய ஷுப்மான் கில் பொறுப்புடன் ஆடினார். அவர் இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்து 140 ரன்கள் சேர்த்தார். இஷான் கிஷன் அரை சதமடித்து அவுட்டானார்.
நிதானமாக ஆடிய ஷுப்மான் கில் 82 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். சர்வதேச போட்டிகளில் ஷுப்மான் கில்லின் முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்கியது.
- நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் இப்போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
டோக்கியோ:
27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நடக்கிறது. கவுரவமிக்க இந்த போட்டியில் இந்தியா சார்பில் 25 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் இந்த போட்டியில் இருந்து விலகி இருப்பது இந்தியாவின் பதக்க வாய்ப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் முதல் சுற்றில் டென்மார்க்கின் ஹன்ஸ் கிறிஸ்டியன் விட்டிங்ஹசை எதிர்கொண்டார்.
இதில் லக்ஷயா சென் 21-12, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.
- கடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஷகீன் அப்ரிடியின் பந்து வீச்சில் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டானார்கள்
- இப்போது இந்திய பேட்ஸ்மேன்கள் நிம்மதி அடைந்திருப்பார்கள் என்று வக்கார் யூனிஸ் கருத்து தெரிவித்தார்.
மும்பை:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 27-ந்தேதி முதல் செப்டம்பர் 11-ந்தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது.
6 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி தொடரில் பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி வீரர் ஷகீன்ஷா அப்ரிடி காயம் காரணமாக விலகுவதாக அறிவிக்கப்பட்டது. வலது கால் முட்டி தசை நாரில் காயமடைந்த அவர் ஆசிய கோப்பை போட்டி தொடங்குவதற்குள் குணம் அடைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் குணமடையாததால் போட்டி தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இதற்கிடையே ஷகீன்ஷா அப்ரிடி விலகல், இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்குத்தான் பெரும் நிம்மதியாக இருக்கும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் டுவிட்டரில் கருத்து தெரிவித்தார்.
கடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஷகீன்ஷா அப்ரிடி பந்து வீச்சில் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டானார்கள். இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் நிம்மதி அடைந்திருப்பார்கள் என்று வக்கார் யூனிஸ் கருத்து தெரிவித்தார்.
இந்த நிலையில், வக்கார் யூனிஸ் கருத்துக்கு இந்திய அணி முன்னாள் வீரர் இர்பான் பதான் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக இர்பான் பதான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும் போது, ஆசிய கோப்பை போட்டித்தொடரில் இந்திய அணியில் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் இல்லாதது மற்ற அணிகளுக்கு நிம்மதியை தரும் என்று கூறியுள்ளார்.
மேலும் இர்பான் பதான் கூறும்போது, ஆசிய கோப்பை போட்டி மிகவும் முக்கியமானது. ஆனால் நான் 20 ஓவர் உலக கோப்பையை எதிர்நோக்கும் போது, விராட் கோலி ஆசிய கோப்பையில் சிறந்த பார்முக்கு திரும்ப வேண்டும்.
ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் கோலி சிறப்பாக விளையாடுபவர். எனவே இந்திய அணிக்கு சிறந்த பார்மில் உள்ள விராட்கோலி தேவை. இது அவருக்கும், இந்திய அணிக்கும் முக்கியமானது, என்றார்.
- நியூசிலாந்து அணியில் நான்கு வீரர்கள் அரை சதம் அடித்து அசத்தினர்
- முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீசும், 2-வது போட்டி யில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றன.
பிரிட்ஜ்டவுன்:
வெஸ்ட் இண்டீஸ்-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 3-வது ஒரு நாள் போட்டி இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடந்தது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தது. தொடக்க வீரர் ஷாய் ஹோப் 51 ரன் எடுத்து அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் மேயர்ஸ் சதம் அடித்தார்.
அவர் 110 பந்தில் 105 ரன் எடுத்து அவுட் ஆனார். அதன்பின் கேப்டன் பூரன் அதிரடியாக விளையாட மற்ற வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். பூரன் 55 பந்தில் 91 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரி, 9 சிக்சர்கள் அடங்கும். வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 301 ரன் எடுத்தது.
அதன் பின் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் பின் ஆலன் 3 ரன்னில் வெளியேறினார். மார்டன் குப்தில் 57 ரன்னிலும், டேவன் கன்வே 56 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதன் பின் டாம் லாதம் (69 ரன்), மிட்செல் (63 ரன்) ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.
இருவரும் அவுட் ஆன பிறகு ஜேம்ஸ் நீசம் 11 பந்தில் 34 ரன் எடுத்து வெற்றியை உறுதிப்படுத்தினார். நியூசிலாந்து 47.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 307 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் மூன்று ஆட்டம் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரை நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் வென்றது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீசும், 2-வது போட்டி யில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றன.
- இறுதி போட்டியில் கிரீசின் சிட்சிபாஸ்-குரோஷிய வீரர் போர்னா கோரிச் பலப்பரீட்சை நடத்தினர்.
- பெண்கள் பிரிவில் கார்சியா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த இறுதி போட்டியில் 4-ம் நிலை வீரரான கிரீசின் சிட்சிபாஸ்-குரோஷிய வீரர் போர்னா கோரிச் பலப்பரீட்சை நடத்தினர்.
இதில் கோரிச் 7-6 (7-0), 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றார். தரவரிசையில் 152-வது இடம் வகிக்கும் கோரிச் முன்னணி வீரர் சிட்சிபாசுக்கு அதிர்ச்சி அளித்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் கரோலின் கார்சியா (பிரான்ஸ்)-பெட்ரா கிவிடோவா (செக் குடியரசு) மோதினர். இதில் கார்சியா 6-2, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினார்.
கார்சியா தகுதி சுற்றில் விளையாடி பிரதான சுற்றை அடைந்து தற்போது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி ஆட்டத்தில், இந்திய அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- தொடரை முழுமையாக வெல்லும் ஆர்வத்துடன் இந்திய வீரர்கள் களம் இறங்குகிறார்கள்.
ஹராரே:
ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்த நாட்டு அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ள நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது.
இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ராகுல், பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிராஜ், பிரசித் அணியில் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதில் தீபக் சாகர், ஆவேஷ் கான் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.
ஹராரே ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜிம்பாப்வே விக்கெட்டுகளை மளமளவென சாய்த்து அந்த அணியை நிலைகுலைய வைத்தனர். இன்றைய ஆட்டத்திலும் இந்தியாவின் அதிரடி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் முழுமையாக தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இந்திய வீரர்கள் களம் இறங்குகிறார்கள். அதேசமயம் கடைசி போட்டியிலாவது ஆறுதல் வெற்றியை பெறும் முனைப்புடன் ஜிம்பாப்வே வீரர்கள் விளையாடுவார்கள்.
- 'சி' பிரிவில் தமிழகம், ஒடிசா, டெல்லி அணிகள் இடம் பெற்றுள்ளன.
- தினமும் இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறும்.
தமிழக அஞ்சல் துறை சார்பில் 34-வது அகில இந்திய அஞ்சல் துறை கால்பந்து போட்டி இன்று முதல் 26-ந் தேதி வரை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. தமிழகம், நடப்பு சாம்பியன் கேரளா, அசாம், டெல்லி, இமாசல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, ஒடிசா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 10 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன.
௧௦ அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'சி' பிரிவில் தமிழக அணியுடன் ஒடிசா, டெல்லி அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள பிற அணிகளுடன் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். தினமும் இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறும்.
இன்று காலை 8 மணிக்கு நடக்கும் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். காலை 9.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் தமிழகம்-ஒடிசா அணிகள் மோதுகின்றன.
- முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது.
- இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்களை வேகமாக சாய்த்தனர்.
ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்த நாட்டு அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது. இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜிம்பாப்வே விக்கெட்டுகளை மளமளவென சாய்த்து அந்த அணியை நிலைகுலைய வைத்தனர்.
இன்றைய ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட், சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் அகமது, வேகப்பந்து வீச்சாளர் அவேஷ்கான் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் முழுமையாக தொடரை வெல்லும் நோக்கத்துடன் இந்திய வீரர்கள் களம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 12.45 மணிக்கு போட்டி தொடங்குகிறது.






