என் மலர்
விளையாட்டு
- டி20 உலக கோப்பை போட்டியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 2007-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
- தென் ஆப்பிரிக்காவில் நடந்த அந்தப் போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
புதுடெல்லி:
டி 20 உலக கோப்பை போட்டியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 2007-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
தென் ஆப்பிரிக்காவில் நடந்த அந்த போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
இதுவரை 7 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் வெஸ்ட் இண்டீஸ் அதிக பட்சமாக 2 முறை (2012, 2016) சாம்பியன் பட்டம் பெற்றது. இந்தியா (2007), பாகிஸ்தான் (2009), இங்கிலாந்து (2010), இலங்கை (2014), ஆஸ்திரேலியா (2021) ஆகியவை தலா ஒருமுறை டி 20 உலக கோப்பையை வென்றுள்ளன.
7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.
டி 20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். முதல் சுற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.
இந்தப் போட்டிக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் அக்டோபர் 23-ம் தேதி மோதுகிறது. 27 மற்றும் நவம்பர் 6-ம் தகுதி சுற்று அணிகளுடனும், அக்டோபர் 30-ம் தேதி, தென் ஆப்பிரிக்காவுடனும், நவம்பர் 2-ம் தேதி வங்காளதேசத்துடனும் மோதுகிறது.
டி 20 உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் மும்பையில் செப்டம்பர் 15-ம் தேதி தேர்வு செய்யப்படுகிறார்கள். 16-ம் தேதிக்குள் அணிகளை அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. கெடு விடுத்துள்ளது.
ஒவ்வொரு அணியில் 15 வீரர்கள் உள்பட 23 பேரை வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 15 வீரர்களில் இருந்து தான் போட்டியில் பங்கேற்க இயலும். மருத்துவ காரணங்களுக்காக மட்டும் வீரர்களை மாற்றம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சிறந்த 15 வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய நிலை சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வு குழுவுக்கு இருக்கிறது.
ஆசிய கோப்பை போட்டி முடிந்து 4 தினங்களில் இந்த தேர்வு இருக்கிறது. ஆசிய கோப்பைப் போட்டியின் அடிப்படையில் உலக கோப்பைக்கான அணி தேர்வு இருக்கும்.
- இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சிட்சிபாஸ் வென்று இறுதிக்கு முன்னேறினார்.
- முன்னணி வீரரான மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ரஷிய வீரர் டேனில் மெதவதேவுடன் மோதினார்.
இந்த போட்டியில் சிட்சிபாஸ் 7-6, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- தீபக் ஹூடா இந்தியாவுக்காக 16 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
- 16 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
ஹராரே:
நேற்று நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 38.1 ஓவரில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
இந்திய தரப்பில் ஷிகர் தவான், ஷுப்மன் கில் தலா 33 ரன்கள் எடுத்தனர். தீபக் ஹூடா 25 ரன்கள் அடித்தார். அதிபட்சமாக சஞ்சு சாம்சன் 43 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார்.இறுதியில், இந்தியா 25.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் இந்த வெற்றியின் மூலம் இந்திய ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
அதாவது தனது அறிமுக போட்டியில் இருந்து நேற்றைய போட்டிவரை அவர் இந்தியாவுக்காக மொத்தம் 16 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஹூடா தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார். அதில் இருந்து இந்திய அணி ஏழு ஒருநாள் மற்றும் ஒன்பது டி20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இது ஒரு தனித்துவமான சாதனையாக கருதப்படுகிறது. இதன் மூலம் இந்திய அணியின் அதிஷ்ட வீரராக தீபக் ஹூடா திகழ்ந்து வருகிறார்.
இதற்கு முன்னர் ருமேனியா வீரர் சாத்விக் நடிகோட்லா, தான் அறிமுகமானதில் இருந்து 15 போட்டிகளில் அணியை வெற்றி பெற்ற சாதனையை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்கா நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் தனது முதல் சர்வதேச போட்டி விளையாடியதில் இருந்து 13 ஆட்டங்களில் அணியை வெற்றி பெற செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தான் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக கருதப்படுபவர் ஷஹீன் அப்ரிடி.
- காயம் காரணமாக இவர் ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.
துபாய்:
6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 27-ம் தேதி தொடங்குகிறது.
இதில் ஒரே பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியாவும், பாகிஸ்தானும் 28-ம் தேதி துபாயில் லீக் சுற்றில் மோதுகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி காயம் காரணமாக இந்தப் போட்டி தொடரிலிருந்து விலகியுள்ளார்.
ஷஹீன் அப்ரிடி ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியிருப்பது அந்த அணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
- ஒருநாள் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வேக்கு எதிராக இந்தியா தொடர்ந்து 14 வெற்றியை பதிவு செய்துள்ளது.
- முதலில் ஆடிய ஜிம்பாப்வே 161 ரன்களை எடுத்துள்ளது. அடுத்து ஆடிய இந்தியா 167 ரன் எடுத்து வென்றது.
ஹராரே:
இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 38.1 ஓவரில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சீன் வில்லியம்ஸ் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். ரியான் பர்ல் 39 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் ராகுல் ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
ஷிகர் தவான், ஷுப்மன் கில் தலா 33 ரன்கள் எடுத்தனர். இஷான் கிஷன் 6 ரன்னில் அவுட்டானார். தீபக் ஹூடா 25 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், இந்தியா 25.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் 43 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2-0 என ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.
- ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிராக தொடர்ந்து 13 வெற்றியை பதிவு செய்துள்ளது.
- முதலில் ஆடிய ஜிம்பாப்வே 161 ரன்களை எடுத்துள்ளது. இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
ஹராரே:
இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, ஜிம்பாப்வே அணி முதலில் களமிறங்கியது. தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் ஜிம்பாப்வே அணியின் விக்கெட்கள் விழுந்தன.
சீன் வில்லியம்ஸ் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து ஆடினார். அவர் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் ரியான் பர்ல் பொறுப்புடன் ஆடி 39 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், ஜிம்பாப்வே அணி 38.1 ஓவரில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.
இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
- 39 வயதான இவர் கடைசியாக கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்தில் நடந்த உலக கோப்பையில் விளையாடினார்.
- அதிக ஒருநாள் விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
புதுடெல்லி:
இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள் தொடரில் மட்டும் இந்திய சீனியர் வேகப்பந்துவீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
39 வயதான இவர் கடைசியாக கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்தில் நடந்த உலக கோப்பையில் விளையாடினார். சமீபத்தில் பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் போட்டியிலும், இலங்கை தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமிக்கு பிரியாவிடை போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி அவரது கடைசிப் போட்டியாக இருக்கும் என்று பிசிசிஐ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மார்ச் 2002-ல் கோஸ்வாமி தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார். 20 ஆண்டுகளில் அவர் 12 டெஸ்ட், 68 டி20 போட்டிகள் மற்றும் 201 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் ஆறு 50 ஓவர் உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்றார். ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் (252) எடுத்த வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
- டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
- இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஹராரே:
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தீபக் சாஹருக்கு பதிலாக சர்துல் தாகூர் அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்திய அணி வீரர்கள் விபரம்:-
ஷிகர் தவான், ஷுப்மான் கில், இஷான் கிஷன், கே.எல். ராகுல்(கே), தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.
ஜிம்பாப்வே அணி வீரர்கள் விபரம்:-
இன்னசென்ட் கையா, டகுட்ஸ்வானாஷே கைடானோ, வெஸ்லி மாதேவெரே, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, ரெஜிஸ் சகப்வா, ரியான் பர்ல், லூக் ஜாங்வே, பிராட் எவன்ஸ், விக்டர் நியுச்சி, தனகா சிவாங்கா.
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிராக தொடர்ச்சியாக 13 வெற்றிகளை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
- ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட ரபாடா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
லண்டன்:
இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லார்ட்சில் மைதானத்தில் நடந்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 165 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா அணி 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து 2-வது இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி 149 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட ரபாடா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய 7 தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் ஸ்டெயின் 439 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார். 2 முதல் 6-வது இடங்கள் முறையே ஷான் பொல்லாக், நிதினி, டொனால்ட், மோர்னே மார்கல், கல்லீஸ் ஆகியோர் உள்ளனர்.
- 3 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.
- 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.
பிரிட்ஜ்டவுன்:
வெஸ்ட் இண்டீஸ்-நியூசிலாந்து அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் நேற்று பகல்-இரவாக நடந்தது.
'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 48.2 ஓவர்களில் 212 ரன்னில் 'ஆல்அவுட்' ஆனது.
தொடக்க வீரர் பின் ஆலன் சதத்தை தவறவிட்டார். அவர் 96 ரன்னும் (7 பவுண்டரி, 3 சிக்சர்), மிச்சேல் 41 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். கெவின் சின்கிளையர் 4 விக்கெட்டும், ஹேசன் ஹோல்டர் 3 விக்கெட்டும், அகீல் உசைன் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
மழை காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. 41 ஓவரில் 212 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி 35.3 ஓவரில் 161 ரன்னில் 'ஆல் அவுட்'ஆனது. இதனால் நியூசிலாந்து டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 50 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. யானிக் அதிகபட்சமாக 52 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்), அல்ஜாரி ஜோசப் 49 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் சவுத்தி 4 விக்கெட்டும், போல்ட் 3 விக்கெட்டும், சான்ட்னெர், பிலிப்ஸ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இந்த வெற்றி மூலம் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு நியூசிலாந்து பதிலடி கொடுத்தது. இந்த வெற்றியால் 3 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.
- ஒரே மைதானத்தில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய 4-வது பந்து வீச்சாளர் என்ற பெருமையை பிராட் பெற்றுள்ளார்.
- ஜேம்ஸ் ஆண்டர்சனுக்குப் பிறகு இந்த சாதனையை எட்டிய இரண்டாவது வேக பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
லண்டன்:
இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் மைதானத்தில் நடந்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 45 ஓவர்களில் 165 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் தென்ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சை ஆடியது. அந்த அணி 89.1 ஆவர்களில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.
இதையடுத்து 2-வது இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி 37.4 ஓவர்களில் 149 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே மைதானத்தில் (லார்ட்ஸ்) 100 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது பந்து வீச்சாளர் என்ற பெருமையை பிராட் பெற்றுள்ளார்.
மேலும் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்குப் பிறகு இந்த சாதனையை எட்டிய இரண்டாவது வேக பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன் இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் மூன்று வெவ்வேறு மைதானங்களில் சாதித்துள்ளார். அவர் கொழும்பு (156), கண்டி (117), மற்றும் காலி (111) மைதானத்தில் இந்த சாதனையை படைத்துள்ளார். மற்றொரு இலங்கை ஜாம்பவானான ரங்கனா ஹார்த் காலேயில் 102 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- ஐ.பி.எல். போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக ஸ்ரீதரன் ஸ்ரீராம் இருந்துள்ளார்.
- அணிக்கு தனித்தனி பயிற்சியாளர்களை நியமிக்கும் திட்டம் பரிசீலனையில் இருந்தாலும், அது குறித்து தற்போது எதுவும் சொல்ல விரும்பவில்லை.
டாக்கா:
வங்காளதேச கிரிக்கெட் அணியின் டெக்னிக்கல் ஆலோசகராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்காக 8 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கும் 46 வயதான ஸ்ரீராம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் பணியாற்றி இருக்கிறார்.
அத்துடன் ஐ.பி.எல். போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 27-ந் தேதி தொடங்கும் ஆசிய கிரிக்கெட் போட்டி மற்றும் ஆஸ்திரேலியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான வங்காளதேச அணியின் ஆலோசகராக அவர் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹஸ்சன் கூறுகையில், 'ஸ்ரீராம் 21-ந் தேதி வங்காளதேசம் வருகிறார். அவரை அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யவில்லை. அவர் எங்கள் அணியின் டெக்னிக்கல் ஆலோசகராக இருப்பார். அவர் 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரை எங்கள் அணியினருடன் இணைந்து பணியாற்றுவார்.
ஐ.பி.எல். மற்றும் ஆஸ்திரேலிய அணியினருடன் இணைந்து அவர் சிறப்பாக செயல்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு அவரை டெக்னிக்கல் ஆலோசகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அணிக்கு தனித்தனி பயிற்சியாளர்களை நியமிக்கும் திட்டம் பரிசீலனையில் இருந்தாலும், அது குறித்து தற்போது எதுவும் சொல்ல விரும்பவில்லை.
ஆசிய கோப்பை போட்டியில் ஸ்ரீராம் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை பார்த்து அதற்கு தகுந்தபடி அவரை தொடருவதா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்யப்படும்' என்றார்.






