search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    2-வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது நியூசிலாந்து அணி
    X

    2-வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது நியூசிலாந்து அணி

    • 3 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.
    • 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.

    பிரிட்ஜ்டவுன்:

    வெஸ்ட் இண்டீஸ்-நியூசிலாந்து அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் நேற்று பகல்-இரவாக நடந்தது.

    'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 48.2 ஓவர்களில் 212 ரன்னில் 'ஆல்அவுட்' ஆனது.

    தொடக்க வீரர் பின் ஆலன் சதத்தை தவறவிட்டார். அவர் 96 ரன்னும் (7 பவுண்டரி, 3 சிக்சர்), மிச்சேல் 41 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். கெவின் சின்கிளையர் 4 விக்கெட்டும், ஹேசன் ஹோல்டர் 3 விக்கெட்டும், அகீல் உசைன் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    மழை காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. 41 ஓவரில் 212 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி 35.3 ஓவரில் 161 ரன்னில் 'ஆல் அவுட்'ஆனது. இதனால் நியூசிலாந்து டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 50 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. யானிக் அதிகபட்சமாக 52 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்), அல்ஜாரி ஜோசப் 49 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் சவுத்தி 4 விக்கெட்டும், போல்ட் 3 விக்கெட்டும், சான்ட்னெர், பிலிப்ஸ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இந்த வெற்றி மூலம் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு நியூசிலாந்து பதிலடி கொடுத்தது. இந்த வெற்றியால் 3 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.

    Next Story
    ×