என் மலர்
விளையாட்டு
- ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரை வெல்ல இந்தியா தீவிரம்.
- ஜிம்பாப்வேக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியாக 13 வெற்றிகளை பெற்றுள்ளது.
ஹராரே:
ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. ஹராரேவில் நடந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெறுகிறது. ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிராக தொடர்ச்சியாக 13 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய வீரர்கள் தீவிரம் காட்டுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
- அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை பிபா தற்காலிகமாக ரத்துச் செய்துள்ளது.
- கேரளா, மோகன் பகான் அணிகள் வெளிநாடுகளில் விளையாட உள்ளன.
அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததை காரணம் காட்டி அதன் உரிமத்தை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா தற்காலிகமாக ரத்துச் செய்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் இந்திய அணி விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த கேரளா எப்சி, ஏடிகே மோகன் பஹான் ஆகிய இந்திய கிளப் அணிகளை ஏற்கனவே திட்டமிட்ட போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு மற்றும் ஆசிய கால்பந்து சம்மேளனம் ஆகியவற்றுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தை, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு இடைநீக்கம் செய்வதற்கு முன்னதாக கேரளா எப்சி அணி உஸ்பெகிஸ்தான் சென்றடைந்துள்ளது. ஈரானைச் சேர்ந்த ஒரு அணியுடனும், மற்றொரு அணியுடனும் வரும் 23, 26 ஆகிய தேதிகளில் விளையாடவுள்ளது. இதே போல ஏடிகே மோகன் பஹான் அணி செப்டம்பர் 7-ந் தேதி பஹ்ரைனில் ஆசிய கால்பந்து சம்மேளன போட்டியில் விளையாடவுள்ளது.
இந்த விவரத்தை சுட்டிக்காட்டி, இந்த அணிகள் ஏற்கனவே திட்டமிட்டபடி விளையாட அனுமதிக்க வேண்டும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு மற்றும் ஆசிய கால்பந்து சம்மேளனத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
மேலும் உஸ்பெகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு இந்திய அணிக்கு இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யுமாறு விளையாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
- தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 326 ரன்களில் ஆல் அவுட்டானது.
- இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 149 ரன்னில் சுருண்டது.
லார்ட்ஸ்:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஒல்லி போப் 73 ரன் எடுத்தார்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டும், நூர்ஜே 3 விக்கெட்டும், ஜேன்சேன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 326 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் எர்வி 73 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜேன்சேன் 48 ரன்னிலும், கேப்டன் எல்கர் 47 ரன்னிலும் அவுட்டாகினர்.
இங்கிலாந்து சார்பில் பிராட், பென் ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டும், மேட்டி பாட்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 161 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து தடுமாற்றத்துடன் விளையாடிது. அந்த அணி 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக லீஸ், ஸ்டுவர்ட் பிராட் தலா 35 ரன்கள் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்க சார்பில் நூர்ஜே 3 விக்கெட்டும், ரபாடா, மகராஜ், ஜேன்சேன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1- 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி மான்செஸ்டரில் நடைபெறுகிறது.
- விராட் கோலி இதுவரை 70 சதங்களை குவித்துள்ளார்.
- கடந்த 3 ஆண்டாக சதமடிக்க முடியாமல் திணறிவருகிறார்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் விராட் கோலி. தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் இவரும் ஒருவர்.
சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து வந்தார்.
விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 70 சதங்களை குவித்துள்ளார். கடைசியாக 2019, நவம்பர 23-ல் விராட் கோலி சதமடித்தார்.
இன்றுடன் அவர் சதமடித்து 1,000 நாட்கள் நிறைவடைந்துவிட்டன.
கடைசி சதத்திற்கு பிறகு அவர் 24 அரை சதங்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக இந்த ஆண்டுகளில் அவர் 94 (ஆட்டமிழக்காமல்) அடித்துள்ளார்.
இந்நிலையில், விராட் கோலி கடந்த 3 ஆண்டாக சதங்கள் அடிக்க முடியாமல் திணறிவருகிறார்.
ஆயிரம் நாட்களாக கோலி ஒரு சதம் கூட அடிக்காதது குறித்து சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். விராட் கோலியின் அடுத்த சதத்தை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
- முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 165 ரன்னில் சுருண்டது.
- தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 326 ரன்களில் ஆல் அவுட்டானது.
லார்ட்ஸ்:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ஒல்லி போப் மட்டும் தாக்குப் பிடித்து அரை சதமடித்தார். அவர் 73 ரன்னில் அவுட்டானார்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டும், நூர்ஜே 3 விக்கெட்டும், ஜேன்சேன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் எர்வி பொறுப்புடன் ஆடி 73 ரன்னில் ஆட்டமிழந்தார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜேன்சேன் 48 ரன்னிலும், கேப்டன் எல்கர் 47 ரன்னிலும் அவுட்டாகினர்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 326 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. நூர்ஜே 28 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இங்கிலாந்து அணியை விட 161 ரன் முன்னிலை வகிக்கிறது.
இங்கிலாந்து சார்பில் பிராட், பென் ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டும், மேட்டி பாட்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- சாகல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புதிய வாழ்க்கையை தொடங்குவது குறித்து பதிவிட்டார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாகல். இவரது மனைவி தனஸ்ரீவர்மா. இவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது.
இதற்கிடையே சாகல் தனது மனைவியை விவாகரத்து செய்ய போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
சாகல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புதிய வாழ்க்கையை தொடங்குவது குறித்து பதிவிட்டார். மேலும் தனஸ்ரீ வர்மா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயரில் இருந்த சாகல் பெயரை நீக்கி இருந்தார்.
இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிய போவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் மனைவியுடன் கருத்து வேறுபாடு என்ற தகவலுக்கு சாகல் விளக்கம் அளித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எங்கள் உறவு தொடர்பான எந்தவிதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று உங்கள் அனைவருக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள் விடுக்கிறேன். தயவு செய்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும். அனைவருக்கும் அன்பு கிடைக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.
- ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதமாக இருந்தது.
- இந்திய பந்து வீச்சாளர்கள் சரியான முறையில் பந்து வீசினார்கள்.
ஹராரே:
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அந்நாட்டின் ஹராரே நகரில் நடைபெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் கே.எல்.ராகுல், ஸ்விங் மற்றும் வேகப் பந்து வீச்சுக்கு சாதமாக ஆடுகளம் இருந்தது என்றார். இந்திய பந்து வீச்சாளர்கள் சரியான முறையில் பந்து வீசியதை பார்க்க சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட்டுகளை வீழ்த்துவது முக்கியமானது என்று அவர் தெரிவித்தார்.
நாங்கள் நிறைய கிரிக்கெட் விளையாடுகிறோம், காயங்கள் அதன் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். நான் களத்தில் இருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். விளையாட்டிலிருந்து விலகி இருப்பது கடினம் என்றும் அவர் கூறினார். நாங்கள் இந்திய டிரஸ்ஸிங் ரூமுக்கு மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, நாங்கள் தொடர்ந்து விளையாட விரும்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
- முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில் 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
- 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 30.5 ஓவர்களில் இலக்கை எட்டியது.
ஹராரே:
ஜிம்பாப்வே- இந்தியா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில் 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது. வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 27 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, சுழற்பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல் ஆகியோரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது. அதிரடியாக ஆடிய துவக்க வீரர்கள் ஷிகர் தவான் 88 ரன்களும், ஷூப்மான் கில் 82 ரன்களும் விளாச, இந்தியா 30.5 ஓவர்களில் 192 ரன்களை குவித்தது. இதனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி 20ம் தேதி நடைபெறுகிறது.
- வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
- 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.
ஹராரே:
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில், முதல் போட்டி இன்று ஹராரே மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவில் விக்கெட்டை இழந்தனர். நிலைக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாகர் டாப் ஆர்டர் விக்கெட்டுகளை கைப்பற்றி, ஜிம்பாப்வே அணிக்கு அதிர்ச்சி அளித்தார். அதன்பின்னர் ஜிம்பாப்வே அணி சற்று நிதானமாக ஆடியது. கேப்டன் ரெஜிஸ் 35 ரன்களும், பிராட் ஈவன்ஸ் 33 ரன்களும், ரிச்சர்டு 34 ரன்களும் எடுத்து ஆறுதல் அளித்தனர். இதனால் ஜிம்பாப்வே, 40.3 ஓவர்களில் 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
6 மாதத்திற்கு பிறகு பார்முக்கு திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 27 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, சுழற்பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல் ஆகியோரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.
- 200 மீட்டர் பிரஸ்டிரோக் பிரிவில் தனுஷ் புதிய சாதனை நிகழ்த்தினார்.
- தனுஷ் பந்தய தூரத்தை 2 நிமிடம் 21.60 வினாடியில் கடந்து தனது பழைய சாதனையை முறியடித்தார்.
சென்னை:
தமிழ்நாடு நீச்சல் சங்கம் சார்பில் 76-வது மாநில சீனியர் நீச்சல் சாம்பியன் ஷிப் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. நீச்சல் வளாகத்தில் நேற்று தொடங்கியது.
இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 250 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த போட்டியின் அடிப்படையில் செப்டம்பர் 6 முதல் 10-ந்தேதி வரை அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெறும் தேசிய சீனியர் நீச்சல் போட்டிக்கான தமிழக அணி தேர்வு செய்யப்படும்.
நேற்றைய தொடக்க நாளில் 4 புதிய சாதனை நிகழ்த்தப்பட்டது. ஆண்களுக்கான 50 மீட்டர் பிரஸ்டிரோக் பிரிவில் தனுஷ் சுரேஷ் 29.23 வினாடியில் கடந்து புதிய சாதனை படைத்தார். 2011-ம் ஆண்டில் சர்வதேச வீரர் ஜே.அக்னீஸ்வர் 29.52 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. இதை தனுஷ் முறியடித்தார்.
இதே போல 200 மீட்டர் பிரஸ்டிரோக் பிரிவில் தனுஷ் புதிய சாதனை நிகழ்த்தினார். அவர் பந்தய தூரத்தை 2 நிமிடம் 21.60 வினாடியில் கடந்து தனது பழைய சாதனையை முறியடித்தார். இதற்கு முன்பு 2019-ல் அவர் 2 நிமிடம் 21.71 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது.
முதல் நாளில் தனுஷ் 2 புதிய போட்டி (மீட்) சாதனை புரிந்தார்.
இதே போல ஆண்களுக்கான 100 மீட்டர் பட்டர் பிளை நீச்சலில் டி.ஆதித்யா 56.93 வினாடியில் கடந்து புதிய சாதனை படைத்தார். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டில் அரவிந்த் 57.00 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது.
மேலும் ஆண்களுக்கான 50 மீட்டர் பட்டர் பிளை பிரிவில் பெனடிக்டன் ரோகித் 25.47 வினாடியில் நீந்தி புதிய சாதனை புரிந்தார். இதற்கு முன்பு 2020-ல் வினாயக் 25.55 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது.
400 மீட்டர் பிரீஸ்டைலில் சத்யசாய் கிருஷ்ணன், மான்யா முக்தா, 200 மீட்டர் தனி நபர் மெட்லி பிரிவில் பெனடிக்டன் ரோகித், சக்தி, 50 மீட்டர் பிரஸ்டிரேக் பெண்கள் பிரிவில் ஸ்ரீயா இஸ்வர், 200 மீட்டர் பேக்ஸ்டிரோக் பிரிவில் நிதிக், மதுமிதா ஆகியோர் முதல் இடத்தை பிடித்தனர்.
முதல் நாள் போட்டியில் புதிய சாதனை படைத்தவர்களை மாநில நீச்சல் சங்க செயலாளர் டி.சந்திர சேகரன், துணை தலைவர் முகுந்தன், பொருளாளர் முரளிதரன் ஆகியோர் பாராட்டினார்கள்.
- செக்குடியரசை சேர்ந்த 15 வயதான லிண்டா அனைவரது கவனத்தையும் ஈர்க்கக் கூடியவர் ஆவார்.
- ஸ்பெயினின் நடால் தனது 16 வயதில் சென்னை ஓபனில் கலந்து கொண்டு விளையாடி இருந்தார்.
சென்னை:
சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி முதல் முறையாக நடத்தப்படுகிறது.
இந்த போட்டி செப்டம்பர் 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடக்கிறது.
இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு முன்னணி வீராங்கனைகளின் பட்டியலை மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி ஒற்றையர் பிரிவில் மொத்தம் 32 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். உலகத் தரவரிசையில் 29-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் அலிசன் ரிஸ்க், பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் (33-வது இடம்), பிரான்சின் கரோலின் கார்சியா (35), ரஷியாவின் வார்வரா கிராச்சேவா (60), போலந்தின் மேக்டா லினெட் (70), சுவீடனின் ரெபேக்கா பீட்டர்சன் (87), ஜெர்மனியின் தட்ஜானா மரியா (93), சீனாவின் கியாங் வாங் (103), பிரான்சின் கிளோ பாகுட் (111),
கனடாவின் ரெபேக்கா மரினோ (113), ஜப்பானின் மோயுகா உச்சிமா (131), ரஷ்யாவின் ஒசானா செலக்மேதவா (145), அனா பிளின்கோவா (151), அனஸ்டசியா கசநோவா (156), செக்குடியரசின் லிண்டா ப்ருஹ்விர்டோவா (157), போலந்தின் கதர்சினா காவா (160), பெல்ஜியத்தின் யானினா விக்மேயர் (162), அன்டோராவின் விக்டோரியா ஜிமினெஸ் (165), நெதர்லாந்தின் அரியன்னே ஹார்டோனோ (166), சுவிட்சர்லாந்தின் ஜோன் ஜுகர் (167), பிரிட்டனின் கேட்டி ஸ்வான் (177) ஆகியோர் சென்னை ஓபனில் ஆடுகிறார்கள்.
இவர்களில் பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டன்ஸ், 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் அரைஇறுதி வரை முன்னேறியிருந்தார்.
ஸ்பெயினின் கரோலின் கார்சியா 2017 மற்றும் 2022-ல் பிரெஞ்சு ஓபனில் கால் இறுதி வரை கால் பதித்திருந்தார். ஜெர்மனியை சேர்ந்த தட்ஜானா மரியா 2 குழந்தைகளுக்கு தாயான நிலையில் இந்தத் தொடரில் கலந்து கொள்கிறார்.
செக்குடியரசை சேர்ந்த 15 வயதான லிண்டா அனைவரது கவனத்தையும் ஈர்க்கக் கூடியவர் ஆவார். ஏனெனில் ஸ்பெயினின் நடால் தனது 16 வயதில் சென்னை ஓபனில் கலந்து கொண்டு விளையாடி இருந்தார்.
- முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 15 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 95 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய அயர்லாந்து வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்து டி20 தொடரை வென்றது.
பெல்பாஸ்ட்:
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. 4 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றன.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி பெல்பாஸ்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 15 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்தபோது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதிகபட்சமாக உஸ்மான் கனி 44 ரன்கள் எடுத்தார்.
மழை தொடர்ந்து பெய்ததால், ட்க்வொர்த் லூயிஸ் முறையில் 7ஓவரில் 56 ரன்கள் எடுத்தால் வெற்றி என அயர்லாந்து அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி 6.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 56 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடரை 3-2 என கைப்பற்றி அசத்தியது.
ஆட்ட நாயகன் விருது மார்க் அடைருக்கும், தொடர் நாயகன் விருது டாக்ரெலுக்கும் வழங்கப்பட்டது.






