என் மலர்
விளையாட்டு
- இந்திய அணி 5-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை இன்று எதிர்கொள்கிறது.
- ஜிம்பாப்வே அணி ஏற்கனவே அரை இறுதி வாய்ப்பை இழந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
சூப்பர் 12 சுற்றில் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மெல்போர்ன் மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்திலும், சிட்னியில் நடைபெற்ற 2-வது போட்டியில் நெதர்லாந்தை 56 ரன் வித்தியாசத்திலும் தோற்கடித்தது.
பெர்த்தில் நடந்த 3-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. 4-வது போட்டியில் வங்காள தேசத்தை 5 ரன்னில் வென்றது.
இந்திய அணி 5-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை இன்று எதிர்கொள்கிறது. மெல்போர்ன் மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இதற்கு முந்தைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றிப்பெற்றதை அடுத்து, இந்திய அணி அரை இறுதிக்குள் நுழைந்தது. ஜிம்பாப்வே அணி ஏற்கனவே அரை இறுதி வாய்ப்பை இழந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது.
- நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளது.
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் குரூப்-1 பிரிவில் இருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.
குரூப்-2 பிரிவில் இருந்து இந்தியா தகுதி பெற்றுவிட்டது. குரூப்-2 பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான்- வங்காளதேசம் அணிகள் மோதிய போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு அடிலெய்ட் டில் தொடங்கியது.
இப்போட்டியில் வெற்றி பெறுபவர் அரை இறுதிக்கு தகுதி பெறலாம் என்ற சூழலில் இரு அணிகளும் களம் இறங்கின.
டாஸ் ஜெயித்த வங்காள தேச கேப்டன் ஷகிப்-அல்-ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க வீரர்களாக லிட்டன் தாஸ், நஜ்முல் ஹாசைன் சாந்டோ களம் இறங்கினர். லிட்டன் தாஸ் 10 ரன்னில் ஷகின்ஷா அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார்.
சிறப்பாக விளையாடிய நஜ்முல் ஹாசைன் அரை சதம் அடித்ததும் அவுட் ஆனார். அவரது விக்கெட்டை இப்திகார் முகம்மது கைப்பற்றினார்.
இந்த ஆட்டத்தின் முடிவில் வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.
இந்நிலையில், விறுவிறுப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணி 18.1 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
இதன்மூலம், நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளது.
- வங்காளதேச அணி 10 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 70 ரன் எடுத்திருந்தது.
- 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கி உள்ளது.
அடிலெய்ட்:
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் குரூப்-1 பிரிவில் இருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. குரூப்-2 பிரிவில் இருந்து இந்தியா தகுதி பெற்றுவிட்டது.
குரூப்-2 பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான்- வங்காளதேசம் அணிகள் மோதிய போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு அடிலெய்ட் டில் தொடங்கியது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர் அரை இறுதிக்கு தகுதி பெறலாம் என்ற சூழலில் இரு அணிகளும் களம் இறங்கின.
டாஸ் ஜெயித்த வங்காள தேச கேப்டன் ஷகிப்-அல்-ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக லிட்டன் தாஸ், நஜ்முல் ஹாசைன் சாந்டோ களம் இறங்கினர்.
லிட்டன் தாஸ் 10 ரன்னில் ஷகின்ஷா அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து சவுமியா சர்கார் களம் வந்தார். நஜ்முல் ஹாசைன் சிறப்பாக விளையாடி ரன்னை சேர்த்தார்.
வங்காளதேச அணி 10 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 70 ரன் எடுத்திருந்தது. ஷதாப்கான் வீசிய 11-வது ஓவரில் இரண்டு விக்கெட் விழுந்தது. சவுமியர் சர்கார் (20 ரன்), ஷகீப்-அல்-ஹசன் (0) அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.
சிறப்பாக விளையாடிய நஜ்முல் ஹாசைன் அரை சதம் அடித்ததும் அவுட் ஆனார். அவரது விக்கெட்டை இப்திகார் முகம்மது கைப்பற்றினார். அடுத்து அபிப் சைன்-மொசைக் ஹாசைன் ஜோடி விளையாடியது. அவர்கள் இருவரும் ரன்களை துரித மாக சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த ஆட்டத்தின் முடிவில் வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கி உள்ளது.
- பாலியல் விவகாரத்தில் குணதிலகா சிக்கி கொள்வது இது முதல் முறையல்ல.
- குணதிலகாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்து இருந்தது.
சிட்னி:
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் தனுஷ்கா குணதிலகா. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான அணியில் இவர் இடம் பெற்று உள்ளார்.
31 வயதான குணதிலகா உலக கோப்பையில் கடைசியாக நமீபியாவுக்கு எதிராக கடந்த 16-ந்தேதி நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் விளையாடினார். அதன் பிறகு அவர் காயம் அடைந்தார். இதனால் அவருக்கு பதிலாக அஸ்கென் பண்டாரா அணியில் சேர்க்கப்பட்டார். ஆனாலும் அவர் அணியோடு ஆஸ்திரேலியாவில் இருந்தார்.
இந்த நிலையில் கற்பழிப்பு வழக்கில் தனுஷ்கா குணதிலகாவை சிட்னியில் போலீசார் இன்று கைது செய்தனர்.
29 வயதான பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டி இருந்தார். கடந்த 2-ந்தேதி ஒரு வீட்டில் வைத்து நடந்தது. டேட்டிங் செயலி மூலம் அந்த பெண்ணுடன் குணதிலகா அறிமுகமானார். தனது அனுமதியின்றி உடலுறவு கொண்டதாக அவர் மீது அந்த பெண் 4 குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார்.
கைதான இலங்கை கிரிக்கெட் வீரர் குணதிலகாவை சிட்னி போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்துகிறார்கள்.
20 ஓவர் உலக கோப்பையில் இலங்கை அணி அரை இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. அந்த அணி இன்று அங்கிருந்து கொழும்பு புறப்பட்டது. குணதிலகா இல்லாமல இலங்கை அணி சொந்த நாடு திரும்பியது.
8 டெஸ்ட், 47 ஒரு நாள் போட்டி, 46 இருபது ஓவர் என 101 சர்வதேச போட்டிகளில் விளையாடி 2641 ரன்கள் எடுத்துள்ளார். 15 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
பாலியல் விவகாரத்தில் குணதிலகா சிக்கி கொள்வது இது முதல் முறையல்ல. 2018-ம் ஆண்டு இலங்கையில் நார்வே நாட்டு பெண் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக அவரையும், அவரது நண்பரையும் போலீசார் விசாரித்தனர். இதனால் குணதிலகாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்து இருந்தது.
ஆனாலும் இந்த விவகாரத்தில் குணதிலகா கைதாகவில்லை. அவருக்கு தனிப்பட்ட தொடர்பு இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். அவரது நண்பர் மட்டுமே கைதாகி இருந்தார்.
- நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை எடுத்தது.
- தென் ஆப்பிரிக்கா அணி அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் அடிலெய்டில் நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து அணிகள் மோதின.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்தை தோற்கடித்தால் அரையிறுதி செல்லும்.
நெதர்லாந்து அணியின் அரை இறுதி வாய்ப்பு முடிந்து போய் விட்டது. அதன்படி, நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
தொடக்க ஆட்டக்காரர்கள் பொறுப்புடன் ஆடினர்.
இதனால் முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டீபன் மைபர்க் 37 ரன்கள் எடுத்து அவுட்டானார். மேக்ஸ் ஒடவ் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய டாம் கூப்பர் 19 பந்தில் 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 35 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இறுதியில், நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை எடுத்தது. ஆக்கர்மேன் 41 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. இந்த ஆட்டத்தின் இறுதியில், 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்கா அணி தோல்வியை தழுவியது.
இந்நிலையில், நெதர்லாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதனால், தென் ஆப்பிரிக்கா அணி அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
மேலும், நெதர்லாந்தின் வெற்றியால் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது. க்ரூப் பி பிரிவில் 6 புள்ளிகள் பெற்றுள்ள இந்திய அணி டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
- டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
- முதலில் ஆடிய நெதர்லாந்து 158 ரன்களை எடுத்துள்ளது.
அடிலெய்டு:
டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் அடிலெய்டில் நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்தை தோற்கடித்தால் அரையிறுதி செல்லும்.
நெதர்லாந்து அணியின் அரைஇறுதி வாய்ப்பு முடிந்து போய் விட்டது.
அதன்படி, நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் பொறுப்புடன் ஆடினர். இதனால் முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டீபன் மைபர்க் 37 ரன்கள் எடுத்து அவுட்டானார். மேக்ஸ் ஒடவ் 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதிரடியாக ஆடிய டாம் கூப்பர் 19 பந்தில் 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 35 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இறுதியில், நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை எடுத்துள்ளது. ஆக்கர்மேன் 41 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.
- கொல்கத்தாவில் நடந்த இறுதிப்போட்டியில் மும்பை, இமாசல பிரதேசம் அணிகள் மோதின.
- டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
கொல்கத்தா:
சையத் முஷ்டாக் அலி டி 20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் ஈடன் கார்டனில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இமாசல பிரதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஏகாந்த் சென் 37 ரன்னும், ஆகாஷ் வசிஷ்ட் 25 ரன்னும் எடுத்தனர்.
மும்பை அணி சார்பில் தனுஷ் கோடியான், மோஹித் அவஸ்தி தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய மும்பை அணி 19.3 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் அய்யர் 34 ரன்கள் எடுத்தார்.
சர்ப்ராஸ் கான் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் முதல்முறையாக மும்பை அணி சையத் முஷ்டாக் அலி கோப்பையை கைப்பற்றியது.
ஆட்ட நாயகன் விருதை தனுஷ் கோடியான் வென்றார்.
- விராட் கோலிக்கு கிரிக்கெட் வீர்ரகள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
- கோலி மற்றும் மனநல பயிற்சியாளர் ஒன்றாக இணைந்து கேக் வெட்டினர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது 34வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு கிரிக்கெட் வீர்ரகள், ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விராட் கோலி தனது பிறந்தநாளை மெல்போர்னில் இன்று சக வீரர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அணியின் மனநல பயிற்சியாளர் பேடி அப்டனும் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். எனவே, கோலி மற்றும் பேடி அப்டன் ஒன்றாக இணைந்து கேக் வெட்டி சக வீரர்களுடன் கொண்டாடினார்கள். இந்த வீடியோவை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Birthday celebrations ON in Australia 🎂 🎉
— BCCI (@BCCI) November 5, 2022
Happy birthday @imVkohli & @PaddyUpton1 👏 👏 #TeamIndia | #T20WorldCup pic.twitter.com/sPB2vHVHw4
- இந்தியா, ஜிம்பாப்வே அணிகளிடம் தோல்வியடைந்ததால் அரையிறுதி வாய்ப்பு மங்கியது
- இந்தியா, தென்ஆப்பிரிக்கா தோல்வியடைந்தால் பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு
டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்டது பாகிஸ்தான். ஆனால் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளிடம் தோல்வியடைந்ததால் புள்ளிகள் பட்டியலில் இதுவரை 2-வது இடம் பிடிக்க முடியாமல் உள்ளது.
நாளை கடைசி லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளது. ஏறக்குறைய பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு மங்கிவிட்டது. இருந்தாலும் அடுத்த அணிகளின் செயல்பாடுகளை பொறுத்து வாய்ப்புள்ளது.
தற்போது இந்தியா 6 புள்ளிகளுடன் (ரன்ரேட்- +0.730) முதல் இடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்கா 5 புள்ளிகளுடன் (ரன்ரேட்- +1.441) 2-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 4 புள்ளிகளுடன் (ரன்ரேட்- +1.117) 3-வது இடத்தில் உள்ளது.
நாளை தென்ஆப்பிரிக்கா நெதர்லாந்தையும், இந்தியா ஜிம்பாப்வேவையும், பாகிஸ்தான் வங்காளதேசத்தையும் எதிர்த்து விளையாட இருக்கின்றன.
இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளும் வெற்றி பெற்றால் இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். ஒருவேளை இந்தியா தோல்வியடைந்தால் பாகிஸ்தான் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறும். அப்படி இல்லாமல் இந்தியா வெற்றி பெற்று தென்ஆப்பிரிக்கா தோல்வியடைந்தால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறும். இல்லையெனில் தென்ஆப்பிரிக்கா- நெதர்லாந்து ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டால் தென்ஆப்பிரிக்காவுடன் ரன்ரேட் அடிப்படையில் போட்டியிட்டு அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்த நிலையில் நாளைய ஆட்டம் குறித்து பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷான் மசூத் கூறியதாவது:-
இழந்த தருணங்கள் எங்களுக்கு விலைமதிப்புமிக்கது என்பது நிரூபணமாகி உள்ளது. ஏனென்றால் நாங்கள் இன்னும் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடத்திற்கு முன்னேற முடியவில்லை.
அதேசமயம் நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. வாழ்க்கை நமக்கு கடினமான பாடங்களை கற்று தருகிறது. அதில் இதுவும் ஒன்றாகும். இந்தத் தோல்வி பாகிஸ்தான் வீரர்களின் தூக்கத்தை தொலைத்ததுடன், அவர்களின் மன உறுதியையும் கெடுத்துவிட்டது.
அந்த பின்னடைவுகளுக்குப் பிறகு நாங்கள் எவ்வாறு மீண்டு வந்தோம் என்பது எங்கள் தன்மையை காட்டியது. அது ஒரு பெரிய விஷயம்.
தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கு சிறந்த விஷயம், தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதுதான். சமநிலையான பார்வையில் இருந்து நாம் பார்த்தோம் என்றால், ஜிம்பாப்வேயுடனான தோல்விக்குப்பின் நாங்கள் சிறப்பாக விளையாடி மீண்டு வந்தோம்.
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில், தொடக்கத்தில் தென்ஆப்பிரிக்கா ஆதிக்கம் செலுத்தியது. பின்னர், நாங்கள் நன்றாக பந்து வீசி ஆட்டத்தை எங்கள் பக்கம் கொண்டு வந்தோம். மழைக்குப்பின் கூட நாங்கள் எங்களுடைய உத்வேகத்தை இழக்கவில்லை.
ஆகவே, கடைசி போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி இரண்டு புள்ளிகள் பெறுவதில் கவனம் செலுத்துவோம். இதுதான் எங்கள் கையில் உள்ளது. எங்களுடைய குரூப்பில் கடைசி பந்து வீசும் வரை நாங்கள் நம்பிக்கையுடன் இருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டோனி மற்றும் கோலி குறித்து அடிக்கடி கடுமையான விமர்சனங்களை வைப்பவர் கவுதம் கம்பீர்.
- கோலி சமீபத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஆடிய இன்னிங்ஸ் சிறப்பானது என கம்பீர் கூறினார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர்.
அதிலும் இவர் டோனி மற்றும் கோலி குறித்து அடிக்கடி கடுமையான விமர்சனங்களை வைத்து வருபவர் என்பதால் இருவரின் ரசிகர்களாலும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். இந்நிலையில் இன்று கோலியின் பிறந்தநாளை முன்னிட்டு கம்பீர் ஆச்சர்யமாக கோலியை பாராட்டியுள்ளார்.
அதில் "கோலி சமீபத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஆடிய இன்னிங்ஸ் சிறப்பானது. முதல் 10 ஓவர்கள் நிலைத்து நின்று ஆடியும், கடைசி 10 ஓவர்களில் அதிரடியாகவும் விளையாடியும் ஆட்டத்தின் முக்கிய நாயகனாகியுள்ளார்" எனக் கூறியுள்ளார்.
- இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
- ரன்ரேட் முறையில் ஆஸ்திரேலியா அணி உலக கோப்பையில் இருந்து வெளியேறியது.
England won by 4 wkts
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. குரூப் 1-ல் இன்றைய கடைசி சுற்று லீக் ஆட்டத்தில் இலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக நிசங்கா 67 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களான ஜோஸ் பட்லர் - அலெக்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 74 ரன்கள் குவித்தது. இதனால் 15 ஓவரில் ஆட்டம் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 75 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்த இங்கிலாந்து அணி 111 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதனையடுத்து ஸ்டோக்ஸ் - சாம் கரன் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சாம் கரன் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். 12 பந்துகளில் 13 ரன்கள் எடுக்க வேண்டியது நிலையில் கைவசம் 4 விக்கெட்டுகள் இருந்தது.
கடைசி ஓவர் வரை சென்ற இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 44 ரன்கள் எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆஸ்திரேலியா அணி உலககோப்பையில் இருந்து வெளியேறியது.
- 3 போட்டிகளில் சொதப்பிய ராகுல் 4-வது போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தார்.
- இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கும் இன்று பிறந்தநாள்.
ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் அரையிறுதியில் இந்திய அணி இடம் பெற நாளைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.
இதனால் 2007-க்குப்பின் 2-வது உலக கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்த தொடரின் முதல் 3 போட்டிகளில் சொதப்பிய ராகுல் 4-வது போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தார்.
இந்நிலையில் இன்று அவரது காதலியான அதியா ஷெட்டிக்கு இன்ஸ்ட்கிராமில் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அதில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் (ஜோக்கர் பொம்மை போடப்பட்டுள்ளது) நீ அனைத்தையும் சிறப்பாய் மாற்றிவிட்டாய் என பதிவிட்டிருந்தார்.
மேலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கும் இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.






