என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டி- டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு
    X

    ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டி- டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

    • இந்திய அணி 5-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை இன்று எதிர்கொள்கிறது.
    • ஜிம்பாப்வே அணி ஏற்கனவே அரை இறுதி வாய்ப்பை இழந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

    சூப்பர் 12 சுற்றில் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மெல்போர்ன் மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்திலும், சிட்னியில் நடைபெற்ற 2-வது போட்டியில் நெதர்லாந்தை 56 ரன் வித்தியாசத்திலும் தோற்கடித்தது.

    பெர்த்தில் நடந்த 3-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. 4-வது போட்டியில் வங்காள தேசத்தை 5 ரன்னில் வென்றது.

    இந்திய அணி 5-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை இன்று எதிர்கொள்கிறது. மெல்போர்ன் மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    இதற்கு முந்தைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றிப்பெற்றதை அடுத்து, இந்திய அணி அரை இறுதிக்குள் நுழைந்தது. ஜிம்பாப்வே அணி ஏற்கனவே அரை இறுதி வாய்ப்பை இழந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×