என் மலர்
விளையாட்டு
- பி.வி.சிந்து, பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒரு இடம் முன்னேறி 5-வது இடம்பிடித்துள்ளார்.
- லக்சயா சென் உலக பேட்மிண்டன் தரவரிசையில் முதல் முறையாக 6-வது இடத்திற்கு முன்னேறினார்.
புதுடெல்லி:
உலக பேட்மிண்டன் தரவரிசையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்சயா சென் (21), முதல் முறையாக 6-வது இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். சர்வதேச அரங்கில் சிறப்பான பார்மில் இருக்கும் லக்சயா 25 போட்டிகளில் 76,424 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
அதேபோல், ஆடவர் இரட்டையர் பிரிவில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தைப் பிடித்துள்ளனர்.
இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒரு இடம் முன்னேறி 5-வது இடம்பிடித்துள்ளார்.
- வலுவான இந்திய அணியை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.
- இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மோதினால் அது சிறந்த போட்டியாக அமையும்.
அடிலெய்டு:
டி20 உலகக் கோப்பை தொடரில் வியாழன் அன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி குறித்து இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
இங்கிலாந்து அணி இன்னும் சிறப்பாக விளையாடவில்லை. இந்தியாவுடனான அரையிறுதி மோதலுக்கு முன்னதாக எங்களது ஆட்டத்தை மேம்படுத்தி வருகிறோம். இந்த விளையாட்டில் வெற்றி பெறுவதற்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துள்ளீர்கள் என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். வியாழன் அன்று விக்கெட் எப்படி இருக்கப் போகிறது என்று பார்க்க வேண்டும்.
அடிலெய்டு நாங்கள் விளையாடிய மைதானங்களில் இருந்து வேறுபட்டது, நாங்கள் பெரிய சதுர எல்லைகள் கொண்ட மைதானங்களில் விளையாடியுள்ளோம், ஆனால் இங்கே நாங்கள் எங்கள் திட்டங்களை கொஞ்சம் மாற்ற வேண்டும். இது போன்ற சூழ்நிலைகளைப் பொறுத்தவரை, அழுத்தத்தைக் குறைக்க நான் ஸ்கோர்போர்டைப் பார்த்து, விளையாட்டை எளிதாக்க முயற்சிக்கிறேன்.
வலுவான வீரர்கள் இடம் பெற்ற இந்திய அணியை எந்த அணியும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. எதிர் அணியை பற்றி அதிகம் சிந்திக்காமல், எங்கள் மீது கவனம் செலுத்த நாங்கள் விரும்புகிறோம். செய்ய வேண்டியதை மட்டும் செய்வோம்.
இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மோதுமா என்பது சத்தியமாக எனக்கு தெரியாது. ஆனால் நான் நம்புகிறேன், அப்படி இருந்தால் அது இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களுக்கு சிறந்த போட்டியாக அமையும். நாங்கள் எங்களின் சிறந்த ஆட்டத்தை விளையாடி வெல்வதற்காக இங்கு வந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அடுத்த இரண்டு போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் கோப்பை எங்களுக்குத்தான்
- நாங்கள் சிறந்த ஒயிட்-பால் கிரிக்கெட் அணி என பேசுகிறார்கள்.
டி20 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டங்கள் நாளை தொடங்குகின்றன. அடிலெய்டில் நாளை மறுதினம் நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இங்கிலாந்து அணி கடந்த 2015-ல் இருந்து சிறந்த ஒயிட் பால் அணியாக திகழ்ந்து வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வீரர்களை கொண்டு கட்டமைத்துள்ளது. அதிரடி பேட்ஸ்மேன், அதிவேக பந்து வீச்சாளர்கள் மட்டுமே ஒயிட் பால் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்கள்.
இதனால் உலகின் சிறந்த ஒயிட் பால் கிரிக்கெட் அணி என இங்கிலாநது அழைக்கப்படுகிறது. ஆனால், அந்த அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான மொயீன் அலி, நாங்கள் சிறந்த அணி என்று அழைக்கப்பட வேண்டுமென்றால், இன்னும் அதிக அளவில் கோப்பைகளை வெல்ல வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மொயீன் அலி கூறியதாவது:-
நாங்கள் சிறந்த ஒயிட்-பால் கிரிக்கெட் அணி என பேசுகிறார்கள். இங்கிலாந்து அணி மிகவும் சிறந்த நிலையில் உள்ளது. ஆனால், நாங்கள் ஒரேயொரு கோப்பையை மட்டுமே வென்றுள்ளோம்.
ஒரு அணியாகவும், நாடாகவும் அதிக வெற்றிகளை பெறத் தொடங்குவது முக்கியம். பின்னர், நம்மை நாமே சிறந்த அணி என அழைத்துக் கொள்ள முடியும்.
நாங்கள் அரையிறுதிக்கு முன்னேற விரும்பினோம். கடந்த காலங்களில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளோம். தற்போது, நாங்கள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக நினைக்கவில்லை. இருந்தாலும், அரையிறுதிக்கு முன்னேறி விட்டோம். எங்களுடைய சிறந்த ஆட்டம் இன்னும் வெளிப்படவில்லை.
நாங்கள் இருக்க விரும்பும் இடத்திற்கு அருகில் இருந்ததாக நான் நினைக்கவில்லை, ஆனால் அந்த இலக்கை அடைவதற்கு இப்போது நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அடுத்த இரண்டு போட்டிகளிலும், எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால், உலகக் கோப்பையை வெல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
- உலகக் கோப்பையில் தொடக்க சுற்றுடன் வெளியேறியது ஆஸ்திரேலியா
- ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமனம்
ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்டது ஆஸ்திரேலியா. முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் அரையிறுதிக்கான வாய்பை இழந்து, ஏமாற்றத்துடன் தொடக்க சுற்றோடு வெளியேறியது.
நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா முதல் சுற்றோடு வெளியேறியது அந்த அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான். இருந்தாலும், அதையே நினைத்துக் கொண்டிருக்க முடியாது என்பதுபோல் அடுத்து வரும் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியை அறிவித்துள்ளது ஆஸ்திரேலியா.
இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். டிராவிஸ் ஹெட்டிற்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. ஆரோன் பிஞ்ச் ஓய்வு கேட்டதால் இடம் பெறவில்லை. அதிரடி வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் சீன் அபாட் சேர்க்கப்பட்டுள்ளார்.
கேமரூன் க்ரீன் இரண்டு தொடரிலும் இடம் பிடித்துள்ளார்.
இங்கிலாந்து தொடருக்கான அணி: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), அஷ்டோன் அகர், ஆலெக்ஸ் கேரி, கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹசில்வுட், டிராவிட் ஹெட், மார்னஸ் லாபஸ்சேன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்க்ஸ் ஸ்டாய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி:
பேட் கம்மின்ஸ், ஸ்காட் போலந்து, அலேக்ஸ் கேரி, கேமரூன் க்ரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபஸ்சேன், நாதன் லயன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.
- இதுவரை 65 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதன் முடிவில் புனேரி பல்தான் 38 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளது.
- தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் தலா 33 புள்ளிகளுடனும் இருக்கிறது.
புனே:
12 அணிகள் இடையேயான புரோ கபடி 'லீக்' போட்டி தற்போது புனேயில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் 41-32 என்ற புள்ளிக் கணக்கில் அரியானா ஸ்டீலர்சையும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 42-39 என்ற புள்ளிக் கணக்கில் மும்பையையும் வீழ்த்தின.
இதுவரை 65 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதன் முடிவில் புனேரி பல்தான் 38 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக ஜெய்ப்பூர் 37 புள்ளியுடனும், பெங்களூர் புல்ஸ் 36 புள்ளியுடனும், யு மும்பை, தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் தலா 33 புள்ளிகளுடனும் இருக்கிறது. குஜராத் ஜெய்ன்ட்ஸ் 31 புள்ளியுடனும், தபாங் டெல்லி 30 புள்ளியுடனும், பெங்கால், வாரியர்ஸ், அரியானா தலா 29 புள்ளியுடனும், உ.பி. யோதா 27 புள்ளியுடனும், தெலுங்கு டைட்டனஸ் 8 புள்ளியுடனும் உள்ளன. முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றன.
இன்று நடைபெறும் ஆட்டங்களில் பெங்கால் வாரியர்ஸ்-உ.பி.யோதா (இரவு 7.30 மணி) டெல்லி-தெலுங்கு டைட்டன்ஸ் (8.30 மணி) அணிகள் மோதுகின்றன.
- ஆண்கள் பிரிவில் 86 பேரும், பெண்கள் பிரிவில் 83 பேரும் ஆக மொத்தம் 169 பேர் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
- இந்தப் போட்டிக்கான தமிழக அணியை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா அறிதுள்ளார்.
சென்னை:
37-வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 11-ந் தேதி 15-ந் தேதி வரை அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடக்கிறது.
இந்தப் போட்டிக்கான தமிழக அணியை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா அறிதுள்ளார். ஆண்கள் பிரிவில் 86 பேரும், பெண்கள் பிரிவில் 83 பேரும் ஆக மொத்தம் 169 பேர் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கார்த்திகேயன் சரபேஷ்வர், பாலஜீவா, சத்தி மகேந்திரன், ஜெரோம், ஸ்ரீவித்யா, திவ்யாஸ்ரீ, பிரதிக்ஷா யமுனா, உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
- பாபர் அசாம் பேட்டிங்கில் மோசமான நிலையில் காணப்படுகிறார்.
- பாபர்அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 3-வது தடவையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் வேட்கையில் இருக்கிறது.
சிட்னி:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
சூப்பர் 12 சுற்று நேற்று முன்தினம் முடிவடைந்தன. இதன் முடிவில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா , தென் ஆப்பிரிக்கா, இலங்கை, நெதர்லாந்து, வங்காளதேசம், அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஆப்கா னிஸ்தான் ஆகியவை வெளியேற்றப்பட்டன.
2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு அரை இறுதி ஆட்டம் நாளை தொடங்குகிறது. சிட்னியில் புதன்கிழமை நடைபெறும் முதல் அரை இறுதி போட்டியில் குரூப் 1 பிரிவில் முதல் இடத்தை பிடித்த நியூசிலாந்து -குரூப் 2 பிரிவில் 2-வது இடத்தை பிடித்த பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.இதற்கு முன்பு கடந்த உலக கோப்பையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை இழந்தது.
அந்த அணி ஒரேயொரு ஆட்டத்தில் மட்டுமே தோற்றது. இங்கிலாந்திடம் 20 ரன்னில் தோல்வி அடைந் தது. ஆஸ்திரேலியா (89 ரன்), இலங்கை (65 ரன்), அயர்லாந்து (35ரன்) ஆகிய அணிகளை வீழ்த்தி இருந்தது. ஆப்கானிஸ்தானுடனான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
நியூசிலாந்து அணியின் பேட்டிங்கில் பிலிப்ஸ் (195 ரன்), கான்வே, கேப்டன் வில்லியம்சன் ஆகியோரும், பந்துவீச்சில் சான்ட்னெர் (8 விக்கெட்), சவுத்தி, பெர்கு சன் (தலா 7 விக்கெட்) ஆகி யோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
பாபர்அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 3-வது தடவையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் வேட்கையில் இருக்கிறது. அந்த அணி இதற்கு முன்பு 2007, 2009-ம் ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்து இருந்தது. இதில் 2009-ல் இலங்கையை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. 2007-ல் இந்தியாவிடம் தோற்று இருந்தது.
பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்காவை 33 ரன்னிலும், நெதர்லாந்தை 6 விக்கெட்டிலும், வங்காளதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. இந்தியாவிடம் 4 விக்கெட் வித்தியாசத்திலும், ஜிம்பாப்வேயிடம் 1 ரன்னிலும் தோற்றது.
அந்த அணியில் முகமது ரிஸ்வான், ஷான் மசூதி, இப்திகார் அகமது போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கில் மோசமான நிலையில் காணப்படுகிறார். பாகிஸ்தான் அணியின் பலமே பந்துவீச்சுதான். ஷதாப்கான் (10 விக்கெட்), ஷகீன்சா அப்ரிடி (8 விக்கெட்), முகமது வாசிம் (7விக்கெட்) ஆகியோர் பந்து வீச்சில் நல்ல நிலையில் உள்ளனர்.
இரு அணிகளுக்கும் இடையே கடைசியாக கடந்த மாதம் 14-ந்தேதி நடந்த போட்டியில் பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
இறுதிப் போட்டிக்குள் நுழைய நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் கடுமையாக போராடும் என்பதால் நாளைய அரை இறுதி ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்திய வீரர்கள் அடிலெய்டு மைதானத்தில் இன்று காலை தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
- அவரது காயம் குறித்து மருத்துவக் குழு ஆய்வு செய்த பிறகே முடிவு தெரிய வரும்.
அடிலெய்ட்:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரை இறுதி ஆட்டம் அடிலெய்டு மைதானத்தில் நாளை மறுநாள் (10-ந் தேதி) நடக்கிறது.
இதில் ரோகித்சர்மா தலைமையிலான இந்தியா-பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் அடிலெய்டு மைதானத்தில் இன்று காலை தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சியின் போது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது.
வலை பயிற்சியின்போது அவருக்கு வலது முன்னங் கையில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்தால் அவர் வலியால் துடித்தார். உடனே பயிற்சியை விட்டு வெளியேறினார்.
அவரது கையில் ஐஸ் கட்டி வைக்கப்பட்டது. ஐஸ் கட்டியை தடவி அவருடன் காயம் குறித்து பயிற்சி குழுவை சேர்ந்த பேடி அப்டன் பேசிக் கொண்டு இருந்தார். ரோகித் சர்மாவின் காயத்தின் தன்மை குறித்து பின்னர் ஆய்வு செய்யப்படும்.
இந்த காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி போட்டியில் ரோகித் சர்மா ஆடுவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
போட்டிக்கு இன்னும் 48 மணி நேரம் இருப்பதால் அதற்குள் காயத்தில் இருந்து குணமடைந்து விடுவார் என்று அணி நிர்வாகம் கருதுகிறது. அவரது காயம் குறித்து மருத்துவக் குழு ஆய்வு செய்த பிறகே முடிவு தெரிய வரும்.
ரோகித்சர்மா விளையாடாமல் போனால் மிகப் பெரிய பாதிப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
- அரையிறுதி போட்டிகளில் பணியாற்றவுள்ள நடுவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
- நவம்பர் 10-ல் நடக்கவுள்ள அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
லீக் சுற்றுகளின் முடிவில் இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இதையடுத்து இந்திய அணி நவம்பர் 10-ம் தேதி நடக்கவுள்ள அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. அதேபோல், முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், இந்திய அணி விளையாடும் அரையிறுதி போட்டியில் பணியாற்றவுள்ள நடுவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி குமார் தர்மசேனா மற்றும் பால் ரீபெல் ஆகியோர் கள நடுவர்களாகவும், கிறிஸ் கேவ்னி மூன்றாவது நடுவராகவும் செயல்பட உள்ளனர். நான்காவது நடுவராக ராட் டக்கர் செயல்படுவார். டேவிட் பூன் போட்டி நடுவராக (ரெப்ரீ) இருப்பார்.
அதேபோல், சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள நியூசிலாந்து, பாகிஸ்தான் இடையிலான அரையிறுதியில் மரைஸ் எராஸ்மஸ் மற்றும் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் கள நடுவராகவும், ரிச்சர்ட் கெட்டில்பரோ மூன்றாவது நடுவராகவும் செயல்பட உள்ளனர். மைக்கேல் கோக் நான்காவது நடுவராகவும் மற்றும் கிறிஸ் பிராட் போட்டி நடுவராகவும் (ரெப்ரீ) நியமிக்கப்பட்டுள்ளனர்.
- அக்டோபர் மாத சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை இந்திய அணி வீரர் விராட் கோலிக்கு ஐசிசி அறிவித்தது.
- சமீபகாலமாக சூப்பர் பார்முக்கு திரும்பியிருக்கும் விராட் கோலிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
துபாய்:
அபாரமாக விளையாடும் வீரர்களை கவுவரவிக்கும் வகையில் மாதம் தோறும் சிறந்த வீரர்களுக்கான விருது வழங்கி ஐசிசி பெருமைபடுத்தி வருகிறது.
அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு ஐசிசி அறிவித்துள்ளது.
சமீபகாலமாக சூப்பர் பார்முக்கு திரும்பியிருக்கும் விராட் கோலிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- மேத்யூ ஹெய்டன் பாகிஸ்தான் அணிக்கான ஆலோசகராக உள்ளார்.
- பாகிஸ்தான் கடைசி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் கருதப்படுகிறது. ஆனால் தொடக்க ஆட்டத்தில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகளிடம் தோல்வியை சந்தித்ததால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.
மேலும், இந்தியா தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்ததால் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய மங்கியது என்றே சொல்லாம். ஆனால், அதன்பின் வீறுகொண்டு எழுந்த பாகிஸ்தான் மீதமுள்ள 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளை பெற்றது. நெதர்லாந்து தென்ஆப்பிரிக்காவை வீழ்த்த பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறியது.
அந்த அணியின் மிடில் ஆர்ட்ர் பேட்ஸ்மேன்கள் இப்திகார், ஹாரிஸ், சதாப் ஃபார்முக்கு வந்துள்ளனர். ஏற்கனவே தொடக்க வீரர் ரிஸ்வான், பாபர் ஆசம், பந்து வீச்சாளர்கள் நல்ல நிலையில் உள்ளதால் மிகப்பெரிய பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது.
பாகிஸ்தான் வருகிற 9-ந்தேதி (புதன்கிழமை) சிட்னியில் நடைபெற இருக்கும் அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. அதில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டியில் இந்தியா அல்லது இங்கிலாந்தை எதிர்கொள்ளும்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக இருக்கும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன், பாகிஸ்தான் அணி அச்சுறுத்தலாக மாறிவிட்டது என மூன்று அணிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஹெய்டன் கூறுகையில் ''முதல் இரண்டு போட்டிகளில் நாங்கள் தோற்றபின், இந்தத் தொடரில் இருந்து வெளியேறிவிடுவோம் என்ற சாத்தியக்கூறான யோசனைகள் இருந்தன. ஆனால், அந்த நிலையில் பாகிஸ்தான் வீறுகொண்டு சூப்பர் ஃபார்முக்கு திரும்பிய தருணம், மற்ற அணிகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளனர்.
இந்த போட்டியில் உலகின் எந்தவொரு அணியும் தற்போதைய நிலையில், எங்களை எதிர்கொள்ள விரும்பமாட்டார்கள். மற்ற அணிகள் எங்களை வெளியேற்றிய நினைத்தார்கள். தற்போது அவர்கள் எங்களை தோற்கடிக்கப் போவதில்லை. நெதர்லாந்து அணி இல்லையென்றால், ஒருவேளை நாங்கள் இங்கே இல்லாமல் இருந்திருக்கலாம்.
தற்போது நாங்கள் இங்கே இருக்கிறோம். இது மிகவும் பவர்ஃபுல் ஆனது. ஏனென்றால், நாங்கள் இங்கே இருப்பதை (அரையிறுதி) யாரும் விரும்பியிருக்க மாட்டார்கள். இதை நாங்கள் சாதகமாக பெற்றுள்ளோம்'' என்றார்
- டோனி உடனான உறவு எனக்கு கிடைத்த வரம்.
- நாங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பும் மரியாதையும் மிகச் சிறந்தது.
இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் மூன்று அரை சதங்களை பதிவு செய்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் பாகிஸ்தானுக்கு எதிராக 82 ரன்கள் எடுத்து, இந்தியாவை அசாத்தியமான வெற்றிக்கு வழிநடத்தினார்.
இருப்பினும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் மோசமான நாட்களை சந்தித்தார். கிரிக்கெட்டில் பல சாதனைகள் புரிந்த கோலிக்கு ரன்கள் அடிப்பதே மிகவும் சிரமமாக இருந்தது. இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையின் போது, ஜனவரி மாதம் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து நான் விலகியபோது, தனக்கு ஆறுதல் அளித்து மெசேஜ் அனுப்பிய ஒரே நபர் டோனி மட்டுமே என்று கோலி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தனது 34-வது பிறந்த நாளை கொண்டாடிய விராட் கோலி டோனி குறித்து பல்வேறு விஷயங்களை மனம் திறந்துள்ளார்.
விராட் கோலி, நீங்கள் வலுவாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படும் நேரங்களில் தனிப்பட்ட அளவில் வலுவாக உள்ளது போல தோற்றம் கொடுத்துவிட்டால், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என கேட்க மறந்து விடுவார்கள் என டோனி தனக்கு மேசேஜ் அனுப்பியது என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என விராட் கோலி கூறினார்.
மேலும் டோனி உடனான உறவு எனக்கு கிடைத்த வரம் என்றும் என் மீது உண்மையான அக்கறையுடன் என்னை அணுகுபவர் டோனி மட்டுமே, நாங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பும் மரியாதையும் மிகச் சிறந்தது என டோனி குறித்து விராட் கோலி மனம் திறந்து உருக்கமாக பேசியுள்ளார்.






