search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோதுமா?-  இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பேட்டி
    X

    பாபர் ஆசம்,ரோகித் சர்மா,பென் ஸ்டோக்ஸ்

    டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோதுமா?- இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பேட்டி

    • வலுவான இந்திய அணியை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.
    • இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மோதினால் அது சிறந்த போட்டியாக அமையும்.

    அடிலெய்டு:

    டி20 உலகக் கோப்பை தொடரில் வியாழன் அன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி குறித்து இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

    இங்கிலாந்து அணி இன்னும் சிறப்பாக விளையாடவில்லை. இந்தியாவுடனான அரையிறுதி மோதலுக்கு முன்னதாக எங்களது ஆட்டத்தை மேம்படுத்தி வருகிறோம். இந்த விளையாட்டில் வெற்றி பெறுவதற்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துள்ளீர்கள் என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். வியாழன் அன்று விக்கெட் எப்படி இருக்கப் போகிறது என்று பார்க்க வேண்டும்.

    அடிலெய்டு நாங்கள் விளையாடிய மைதானங்களில் இருந்து வேறுபட்டது, நாங்கள் பெரிய சதுர எல்லைகள் கொண்ட மைதானங்களில் விளையாடியுள்ளோம், ஆனால் இங்கே நாங்கள் எங்கள் திட்டங்களை கொஞ்சம் மாற்ற வேண்டும். இது போன்ற சூழ்நிலைகளைப் பொறுத்தவரை, அழுத்தத்தைக் குறைக்க நான் ஸ்கோர்போர்டைப் பார்த்து, விளையாட்டை எளிதாக்க முயற்சிக்கிறேன்.

    வலுவான வீரர்கள் இடம் பெற்ற இந்திய அணியை எந்த அணியும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. எதிர் அணியை பற்றி அதிகம் சிந்திக்காமல், எங்கள் மீது கவனம் செலுத்த நாங்கள் விரும்புகிறோம். செய்ய வேண்டியதை மட்டும் செய்வோம்.

    இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மோதுமா என்பது சத்தியமாக எனக்கு தெரியாது. ஆனால் நான் நம்புகிறேன், அப்படி இருந்தால் அது இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களுக்கு சிறந்த போட்டியாக அமையும். நாங்கள் எங்களின் சிறந்த ஆட்டத்தை விளையாடி வெல்வதற்காக இங்கு வந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×