என் மலர்
விளையாட்டு
- சற்று விட்டிருந்தால் அன்றை தினம் எனது காலையே இழந்திருப்பேன்.
- வாழ்வில் இத்தனை நாட்கள் கழித்து மீண்டும் நடக்க பழகுவது எவ்வளவு மோசமாக விஷயம் என தற்போது தான் புரிந்துக்கொண்டேன்.
மும்பை:
ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் வெளியிட்டுள்ள உணர்ச்சிப்பூர்வமான தகவலால் ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா என்பதிலேயே ரசிகர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் சமீபத்தில் கொச்சியில் நடைபெற்று முடிந்தது. இதில் ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்காத தொகையில் வீரர்கள் ஏலம் கேட்கப்பட்டனர். இதில் ஆர்சிபி அணி பல சுவரஸ்யமான ஏலங்களை எடுத்த போதும், அதிரடி நாயகன் க்ளென் மேக்ஸ்வெல் பங்கேற்பாரா என்ற குழப்பத்திலேயே இருந்து வருகிறது.
டி20 உலகக்கோப்பை தொடரில் மோசமான தோல்விகளுடன் ஆஸ்திரேலிய அணி வெளியேறியது. இதன் பிறகு தனது சொந்த ஊருக்கு சென்ற மேக்ஸ்வெல் நண்பர்களின் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, விளையாட்டுத்தனமாக செயல்பட்டு கீழே விழுந்தார். அவரின் கால் மீது அவரின் நண்பர் ஒருவரும் விழுந்துவிட்டதால் காலில் பலத்த காயம் ஏற்பட்டு எலும்பு உடையும் அளவிற்கு சென்றது.
இந்நிலையில் இதுகுறித்து மேக்ஸ்வெல் கூறியதாவது:-
சற்று விட்டிருந்தால் அன்றை தினம் எனது காலையே இழந்திருப்பேன். எனினும் கண்டத்தில் இருந்து தப்பி, காயத்துடன் தப்பித்தேன். வாழ்வில் இத்தனை நாட்கள் கழித்து மீண்டும் நடக்க பழகுவது எவ்வளவு மோசமாக விஷயம் என தற்போது தான் புரிந்துக்கொண்டேன்.

காலில் இருந்த வலிகள் குறைந்து ஓரளவிற்கு நடந்து வருகிறேன். இன்னும் சில நாட்களில் முழுவதுமாக குணமடைந்து நடக்க தொடங்குவேன். எனது மனைவி வினி மிகவும் ஆதரவாக இருக்கிறார். அவரின் உதவியால் நான் மீண்டு வருவேன் என மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடர் அடுத்தாண்டு மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் தொடங்கும். மேக்ஸ்வெல்லின் காயம் சற்று தீவிரமாக இருப்பதால், அவர் பழையபடி முழு உடற்தகுதியை பெறுவதற்கு இன்னும் 3 மாதங்கள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே ஐபிஎல்-ல் விளையாடுவாரா என்ற கவலையில் ரசிகர்கள் உள்ளனர்.
- சங்கத்தின் சேர்மனாக இருந்து வந்த ஏ.கே.சித்திரை பாண்டியன் காலமாகி விட்டது.
- காலியாக உள்ள அந்த பொறுப்புக்கு தொழிலதிபர் எஸ்.என்.ஜெயமுருகன் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை:
தமிழ்நாடு மாநில கைப்பந்து சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் டாக்டர் பொன் கவுதம சிகாமணி தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் சேர்மனாக இருந்து வந்த ஏ.கே.சித்திரை பாண்டியன் காலமாகி விட்டதால் காலியாக உள்ள அந்த பொறுப்புக்கு தொழிலதிபர் எஸ்.என்.ஜெயமுருகன் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் தமிழ்நாடு கைப்பந்து லீக் போட்டியை நடத்துவது என்றும், லீக் கமிட்டிக்கு சேர்மனாக அர்ஜூன் துரையை நியமிப்பது என்றும், சப்-ஜூனியர், ஜூனியர் அளவிலான மாநில சாம்பியன் ஷிப் போட்டிகளை பிப்ரவரியில் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
- அஷ்வின் இன்னும் நீண்ட காலத்திற்கு கிரிக்கெட் விளையாடுவார்.
- பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் அவருக்கு நுணுக்கமான அறிவு உள்ளது.
அஷ்வினை சைன்டிஸ்ட் என்று சேவாக் சமீபத்தில் பாராட்டியிருந்த நிலையில், அஷ்வினுக்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். வங்கதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆல்ரவுண்டர் அஷ்வின், இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
2-வது டெஸ்டில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுடன் 54 ரன்களை எடுத்தார். குறிப்பாக 2-வது இன்னிங்சில் ஷ்ரேயாஸ் உடன் இணைந்து அஷ்வின் அமைத்த பார்ட்னர்ஷிப் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. வெற்றிக்கு 145 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய அணி 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. இதன்பின்னர் இணைந்த அஷ்வின் - ஷ்ரேயாஸ் இணை 71 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தது.
2-வது டெஸ்டில் பேட்டிங், பவுலிங் என அனைத்து டிபார்ட்மென்ட்டிலும் அஷ்வின் ஜொலித்தார். இதனை பாராட்டியிருந்த முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சேவாக் அஷ்வின் ஒரு சைன்டிஸ்ட் என்று கூறியிருந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா அஷ்வினை பாராட்டி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

அஷ்வின் இன்னும் நீண்ட காலத்திற்கு கிரிக்கெட் விளையாடுவார். பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் அவருக்கு நுணுக்கமான அறிவு உள்ளது. இந்திய அணியின் கேப்டன் பொறுப்புக்கு தகுதியானவர்களில் அஷ்வினும் ஒருவர் என்று கருதுகிறேன்.
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் அவர் எடுத்த 42 ரன்களை சதத்துடன் நாம் ஒப்பிட வேண்டும். இந்திய அணியின் லெஜெண்ட் வீரர் அனில் கும்ப்ளேவைப் போன்றவர் அஷ்வின். இந்திய அணியின் நெருக்கடியான நேரங்களில் மிகவும் கூலாக அஷ்வின் பலமுறை செயல்பட்டார்.
பந்து வீச்சில் மட்டுமின்றி, சில ஆட்டங்களில் சிறப்பான பேட்டிங் மூலம் அணியை அவர் வெற்றி பெற வைத்திருக்கிறார்.
வங்கதேச அணியின் மோமினுல் ஹக் மிகச்சிறந்த ஆட்டக்காரர். துரதிருஷ்டவசமாக அஷ்வின் கொடுத்த கேட்ச்சை அவர் பிடிக்க தவறி விட்டார். இதற்கானபேரிழப்பை வங்கதேச அணி எதிர்கொண்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நியூசிலாந்து தரப்பில் சவுத்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- 7 விக்கெட்டுக்கு களமிறங்கிய ஆகா சல்மான் சதம் அடித்தார்.
கராச்சி:
பாகிஸ்தானுக்கு சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி பாகிஸ்தான்-நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.
இந்நிலையில் இந்தப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 110 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்த திணறியது. இதனையடுத்து கேப்டன் பாபர் அசாம் மற்றும் விக்கெட் கீப்பர் சப்ராஸ் அகமது ஜோடி சிறப்பாக ஆடி ஆட்டத்தை மாற்றினார். தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாபர் அசாம் சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் ஆடிய சப்ராஸ் அகமது அரை சதம் அடித்தார்.
86 ரன்கள் எடுத்திருந்த அவர் கடைசி நேரத்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 317 ரன்கள் சேர்த்துள்ளது. பாபர் அசாம் 161 ரன்களுடனும் (277 பந்து, 15 பவுண்டரி, ஒரு சிக்சர்), அஹா சல்மான் 3 ரன்னுடனும் அவுட் ஆகாமல் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஜாஸ் பட்டேல், பிரேஸ்வெல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
இதனையடுத்து இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரிலேயே பாபர் அசாம் அவுட் ஆனார். அவர் 161 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். 7 விக்கெட்டுக்கு களமிறங்கிய ஆகா சல்மான் மட்டும் நிலைத்து ஆடி சதம் அடித்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 438 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து தரப்பில் சவுத்தி 3 விக்கெட்டும் சுழற்பந்து வீச்சாளர்கள் அஜாஸ் பட்டேல், பிரேஸ்வெல் செளதி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
- ஸ்மித் சதத்தை நெருங்கிய வேளையில் 85 ரன்னில் அவுட் ஆனார்.
- 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த 2வது வீரர் என்ற சாதனையை வார்னர் படைத்தார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. டாஸ்' ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் முதலில் தென்ஆப்பிரிக்காவை பேட்டிங் செய்ய பணித்தார். இதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 68.4 ஓவர்களில் 189 ரன்னில் சுருண்டது.
அந்த அணி தரப்பில் வெரைன் 52 ரன், ஜேன்சன் 59 ரன் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேமரூன் கிரீன் 10.4 ஓவர்கள் பந்து வீசி 3 மெய்டனுடன் 27 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 45 ரன் எடுத்திருந்தது. வார்னர் 32 ரன்னுடனும், லபுஸ்சேன் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
தொடர்ந்து 2வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து ஆடிய லபுஸ்சேன் 14 ரன்னில் ரன் அவுட் ஆனார். இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித் வார்னருடன் ஜோடி சேர்ந்தார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் ரன் சேகரிப்பில் கவனம் செலுத்தினர். நிதானமான ஆடிய வார்னர் முதலில் சதத்தை பதிவு செய்தார். இதற்கிடையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மித் சதத்தை நெருங்கிய வேளையில் 85 ரன்னில் அவுட் ஆனார்.
தனது சதத்தை அடித்த பின்னர் அதிரடி காட்டிய டேவிட் வார்னர் இரட்டை சதம் அடித்து அசத்தினார். தனது 100-வது டெஸ்ட் போட்டியில் ஆடிய வார்னர் அதில் இரட்டை சதம் அடித்து சாதனை புரிந்தார். 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த 2வது வீரர் என்ற சாதனையை வார்னர் படைத்தார். இதற்கு முன் ஜோ ரூட் இந்த சாதனையை படைத்துள்ளர். இரட்டை சதம் அடித்த பின் வார்னர் காயம் காரணமாக 'ரிட்டயர்ட் ஹர்ட்' மூலம் வெளியேறினார்.
அவர் 254 பந்தில் 16 பவுண்டரி, 2 சிக்சருடன் 200 ரன்கள் குவித்தார். இதற்கடுத்து களம் இறங்கிய க்ரீன் 6 ரன்னில் காயம் காரணமாக வெளியேறினார். இதையடுத்து டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் ஹேரி ஜோடி மேற்கொண்டு ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
இறுதியில் அந்த அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இதுவரை 197 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அந்த அணி தரப்பில் ஹெட் 48 ரன்னுடனும், ஹேரி 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
- 8 ஆயிரம் ரன்னை எடுத்த 7-வது ஆஸ்திரேலிய வீரர் வார்னர் ஆவார்.
- வார்னர் இரட்டை சதம் அடித்ததும் மைதானத்தில் இருந்து காயத்தால் வெளியேறினார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 189 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 45 ரன் எடுத்து இருந்தது. வார்னர் 32 ரன்னும், லபுஷேன் 5 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. வார்னர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 78-வது ரன்னை எடுத்தபோது 8 ஆயிரம் ரன்னை தொட்டார். தனது 100-வது டெஸ்டில் (183 இன்னிங்ஸ்) வார்னர் 8 ஆயிரம் ரன்னை எடுத்து முத்திரை பதித்தார்.
8 ஆயிரம் ரன்னை எடுத்த 7-வது ஆஸ்திரேலிய வீரர் வார்னர் ஆவார். ரிக்கி பாண்டிங் (13,378) ரன், ஆலன் பார்டர் (11,174), ஸ்டீவ் வாக் (10,927), கிளார்க் (8643), மேத்யூ ஹேடன் (8,625), ஸ்டீவ் சுமித் (8,543) ஆகியோர் வரிசையில் அவர் இணைந்தார்.
வார்னர் அபாரமாக ஆடி சதமும் அடித்தார். அவர் 144 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 100 ரன்னை தொட்டார். வார்னருக்கு இது 25-வது சதமாகும். அவர் ஆலன் பார்டரை தொட இன்னும் இரண்டு சதமே தேவை.
லபுசேன் 14 ரன்னில் வெளியேறினார். அவர் இடத்துக்கு வந்த சுமித் வார்னருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுமித் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் அரை சதத்தை எடுத்தார்.
36 வயதான வார்னர் சத்ததை இரட்டை சதமான மாற்றினார். இதன் மூலம் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தி உள்ளார். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடிக்காத வார்னர் அதை இரட்டை சதமாக மாற்றி அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 3வது இரட்டை சதத்தை வார்னர் அடித்துள்ளார்.
இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு அடிலெய்ட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 335 ரன்னும் (அவுட் இல்லை), 2015-ம் ஆண்டு பெர்த் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 253 ரன்னும் எடுத்து இருந்தார்.
மேலும், ஜோ ரூட்டுக்குப் பிறகு தனது 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை வார்னர் படைத்துள்ளார். கடந்த ஆண்டு சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான தனது 100-வது டெஸ்டில் ரூட் 218 ரன்கள் எடுத்திருந்தார்.
வார்னர் இரட்டை சதம் அடித்ததும் மைதானத்தில் இருந்து காயத்தால் வெளியேறினார். ஸ்டீவ் சுமித் 85 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
- நான் எந்த அணிக்காக ஆடினாலும் சிறப்பாக செயல்படுவேன்.
- சந்தீப் சர்மா ஐ.பி.எல். போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளில் விளையாடி உள்ளார்.
புதுடெல்லி:
16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான மினி ஏலம் சமீபத்தில் நடந்தது.
இதில் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம்கரண் அதிகபட்சமாக ரூ.18½ கோடிக்கு ஏலம் போனார். பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை எடுத்தது.
அவருக்கு அடுத்த படியாக கேமரூன் கிரீன் (ஆஸ்திரேலியா), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) அதிகபடியான தொகைக்கு ஏலம் போனார்கள்.
ஐ.பி.எல். ஏலத்தில் ஒரு காலக்கட்டத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன இந்திய சீனியர் வீரர் சந்தீப் சர்மாவை இந்த முறையாரும் கண்டு கொள்ளவில்லை. ஐ.பி.எல். ஏலத்தில் அவர் விலை போகவில்லை. எந்த அணியும் அவரை வாங்கவில்லை. இதனால் சந்தீப் சர்மா ஏமாற்றம் அடைந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
என்னை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காதது மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது. ஏமாற்றமும் அளிக்கிறது. நான் எந்த அணிக்காக ஆடினாலும் சிறப்பாக செயல்படுவேன். சில அணிகள் என்னை ஏலத்தில் எடுக்கும் என்று நினைத்தேன். இதை நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை. உள்ளூர் போட்டியில் நான் சிறப்பாகவே பந்து வீசி வருகிறேன்.
இவ்வாறு சந்தீப் சர்மா கூறியுள்ளார்.
அவருக்கு நிர்ணக்கப்பட்ட அடிப்படை விலை ரூ.50 லட்சம் தான். அப்படி இருந்தும் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. சந்தீப் சர்மா ஐ.பி.எல். போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளில் விளையாடி உள்ளார்.
- இலங்கை மற்றும் நியூசிலாந்து என ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் நிச்சயம் சஞ்சு சாம்சன் அணியில் இடம் பிடிப்பார்.
- 2015-ல் இந்திய அணியில் அறிமுகமான சஞ்சு 11 ஒருநாள் மற்றும் 16 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
புதுடெல்லி:
அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இலங்கை மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளன. இந்தத் தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தான் நம்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 3 முதல் ஜனவரி 15 வரையில் இலங்கை அணியும். அதன் பின்னர் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 1 வரை நியூசிலாந்து கிரிக்கெட் அணியும், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகின்றன.
"இலங்கை மற்றும் நியூசிலாந்து என ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் நிச்சயம் சஞ்சு சாம்சன் அணியில் இடம் பிடிப்பார் என நம்புகிறேன். அது அவருக்கு நிலையானதாக இருக்கும்" என ஜாபர் தெரிவித்துள்ளார்.
28 வயதான சஞ்சு சாம்சன், கடந்த 2015-ல் இந்திய அணியில் அறிமுகமானார். இதுநாள் வரையில் அவர் மொத்தம் 11 ஒருநாள் மற்றும் 16 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் சஞ்சு 330 ரன்களும், டி20 கிரிக்கெட்டில் 296 ரன்களும் எடுத்துள்ளார். ஆனாலும் அணியில் இவருக்கான வாய்ப்பு அணியில் தொடர்ந்து கிடைப்பதில்லை. இந்த சூழலில் அவருக்கு ஆதரவாக ஜாபர் பேசியுள்ளார்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை இந்திய வீரர் சச்சின் பெற்றுள்ளார்.
- அவர் 19 முறை ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அஸ்வின் நெருங்கி விட்டதாகவும் இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை பெற்ற இந்திய வீரர் சச்சின் என்பதும் அவர் 19 முறை ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருதை பெற்றார் அஸ்வின் இதுவரை 18 ஆட்டநாயகன் விருதையும் பெற்றுள்ளார். இன்னும் ஒரே ஒரு ஆட்டநாயகன் விருதை அவர் பெற்றுவிட்டால் சச்சினுக்கு இணையாக 19 ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனை விரைவில் அவர் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 100-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த மூன்றாவது தொடக்க வீரர் மற்றும் 14-வது ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர்.
- ஜனவரி 2020-க்குப் பிறகு இது அவரது முதல் டெஸ்ட் சதம்.
ஆஸ்திரேலியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி கிரீன் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 68.4 ஓவரில் 189 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்தது. வார்னர் 32 ரன்னுடனும் லபுஸ்சேன் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வார்னர் தனது 25-வது டெஸ்ட் சதத்தையும், 45-வது சர்வதேச சதத்தையும் அடித்து, சமீபத்திய விமர்சனங்களுக்கு பதில் அளித்தார். ஜனவரி 2020-க்குப் பிறகு இது அவரது முதல் டெஸ்ட் சதம்.
100-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த மூன்றாவது தொடக்க வீரர் மற்றும் 14-வது ஆஸ்திரேலியா வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்துள்ளார். போட்டிக்கு முன், வார்னர் 71.20 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 45.52 சராசரியுடன் 7922 ரன்கள் எடுத்திருந்தார்.
- கேகேஆர் அணிக்காக விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்.
- 20 லட்சம் என்கிற அடிப்படை விலையில் கலந்துகொண்ட ஜெகதீசனை கொல்கத்தா அணி 90 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறயிருக்கும் 16-ஆவது ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் மினி ஏலமானது கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி கொச்சியில் நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் பல வெளிநாட்டு வீரர்கள் கோடி கணக்கில் ஏலத்தில் சென்றனர். அதேவேளையில் இந்திய வீரர்களுக்கும் இந்த ஏலத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. 400-க்கும் மேற்பட்ட வீரர்களில் இருந்து 80-க்கும் மேற்பட்ட வீரர்கள் மட்டுமே இந்த ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.
அந்தவகையில் இந்தியாவில் தற்போது ரஞ்சி தொடரானது நடைபெற்று வரும் இவ்வேளையில் உள்ளூர் அணிகளை சேர்ந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கவும் அனைத்து அணிகளும் ஆர்வம் காட்டின. அந்தவகையில் அண்மையில் நடைபெற்று முடிந்த விஜய் ஹசாரே தொடரில் 5 சதங்களை விளாசிய தமிழக வீரர் ஜெகதீசன் எந்த அணிக்காக தேர்வு செய்யப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது. இந்நிலையில் இந்த ஏலத்தில் 20 லட்சம் என்கிற அடிப்படை விலையில் கலந்துகொண்ட ஜெகதீசனை கொல்கத்தா அணி 90 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.
எதிர்வரும் சீசனில் விளையாடயிருப்பது குறித்து பேசிய தமிழக வீரர் நாராயணன் ஜெகதீசன் கூறுகையில்:-
ஒவ்வொரு வீரருக்கும் ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். அந்தவகையில் நானும் அடுத்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக நிறைய போட்டிகளில் விளையாடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
சென்னை அணியில் நான் இருந்த வரை டோனியிடம் இருந்து நிறைய விசயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன். நிச்சயம் அவற்றை எதிர்வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் வெளிப்படுத்தி உங்கள் அனைவரையும் மகிழ்விப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
- அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஏலம் மூலம் தேர்வு.
- வீரர்கள் ஜனவரி 20-ந் தேதிக்குள் பெயரை பதிவு செய்து வேண்டும்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.ஐ. பழனி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 2016-ம் ஆண்டில் இருந்து டி.என்.பி.எல்.20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் அதிகபட்சமாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 முறை சாம்பியன் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
7-வது டி.என்.பி.எல். தொடர் அடுத்த ஆண்டு ஜூன்-ஜூலை மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி இந்த சீசனில் சில அதிரடி மாற்றங்களை செய்ய டி.என்.பி.எல். ஆட்சி மன்ற குழு முடிவு செய்துள்ளது. டி.என்.பி.எல். போட்டி தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு இதுவரை குறிப்பிட்ட வீரர்களை தேர்வு செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. இனி ஒதுக்கீடு முறை இருக்காது.
அதற்கு பதிலாக ஐ.பி.எல். போன்று டி.என்.பி.எல். தொடரிலும் வீரர்கள் ஏலத்தில் விடப்பட இருக்கிறார்கள். இதற்காக ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக ரூ.70 லட்சம் செலவு செய்யலாம். வீரர்கள் விடுவிப்பு, தக்க வைப்பது, அவர்களுக்கு ஊதியம் நிர்ணயம் உள்ளிட்டவை அணி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து இறுதி செய்யப்படும்.
போட்டியில் பங்கேற்க விரும்பும் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் நாளை முதல் ஜனவரி 20-ந்தேதிக்குள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்திலோ அல்லது டி.என்.சி.ஏ, டி.என்.பி.எல். இணையதளத்திலோ பெற்றுக் கொள்ளலாம். இதே போல் நடுவர்களின் தீர்ப்பில் சந்தேகம் இருந்தால் அதை சரி செய்ய டி.ஆர்.எஸ். தொழில்நுட்பமும் முதல் முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






