search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஐ.பி.எல். ஏலத்தில் எடுக்காதது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது- இந்திய வீரர் சந்தீப் சர்மா ஏமாற்றம்
    X

    ஐ.பி.எல். ஏலத்தில் எடுக்காதது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது- இந்திய வீரர் சந்தீப் சர்மா ஏமாற்றம்

    • நான் எந்த அணிக்காக ஆடினாலும் சிறப்பாக செயல்படுவேன்.
    • சந்தீப் சர்மா ஐ.பி.எல். போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளில் விளையாடி உள்ளார்.

    புதுடெல்லி:

    16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான மினி ஏலம் சமீபத்தில் நடந்தது.

    இதில் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம்கரண் அதிகபட்சமாக ரூ.18½ கோடிக்கு ஏலம் போனார். பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை எடுத்தது.

    அவருக்கு அடுத்த படியாக கேமரூன் கிரீன் (ஆஸ்திரேலியா), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) அதிகபடியான தொகைக்கு ஏலம் போனார்கள்.

    ஐ.பி.எல். ஏலத்தில் ஒரு காலக்கட்டத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன இந்திய சீனியர் வீரர் சந்தீப் சர்மாவை இந்த முறையாரும் கண்டு கொள்ளவில்லை. ஐ.பி.எல். ஏலத்தில் அவர் விலை போகவில்லை. எந்த அணியும் அவரை வாங்கவில்லை. இதனால் சந்தீப் சர்மா ஏமாற்றம் அடைந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    என்னை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காதது மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது. ஏமாற்றமும் அளிக்கிறது. நான் எந்த அணிக்காக ஆடினாலும் சிறப்பாக செயல்படுவேன். சில அணிகள் என்னை ஏலத்தில் எடுக்கும் என்று நினைத்தேன். இதை நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை. உள்ளூர் போட்டியில் நான் சிறப்பாகவே பந்து வீசி வருகிறேன்.

    இவ்வாறு சந்தீப் சர்மா கூறியுள்ளார்.

    அவருக்கு நிர்ணக்கப்பட்ட அடிப்படை விலை ரூ.50 லட்சம் தான். அப்படி இருந்தும் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. சந்தீப் சர்மா ஐ.பி.எல். போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளில் விளையாடி உள்ளார்.

    Next Story
    ×