என் மலர்
விளையாட்டு
- இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளோம்.
- இவ்விரு டெஸ்டுகள் பெண்கள் கிரிக்கெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நேற்று அளித்த பேட்டியில், '2023-24-ம் ஆண்டு சீசனில் நாங்கள் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அதாவது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட உள்ளோம். இவ்விரு டெஸ்டுகள் பெண்கள் கிரிக்கெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.
எதிர்காலத்தில் மேலும் பல டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன். பெண்கள் கிரிக்கெட்டுக்கு மீண்டும் டெஸ்ட் போட்டிகளை கொண்டு வர வேண்டும். ஏனெனில் அது பெண்கள் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானது. ஒரு வீராங்கனையாக நானும் அதிகமான டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்' என்றார்.
- நீரஜ் சோப்ரா தலைமையில் 28 பேர் கொண்ட இந்திய அணி இந்த போட்டியில் பங்கேற்கிறது.
- ஆசிய சாதனையாளரான குண்டு எறிதல் வீரர் தஜிந்தர் பால்சிங் தூர் காயத்தில் இருந்து மீளாததால் அணியில் இடம்பெறவில்லை.
புதுடெல்லி:
19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் வருகிற 19-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியை, இந்திய தடகள சம்மேளனம் நேற்று அறிவித்தது. ஒலிம்பிக் சாம்பியனான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தலைமையில் 28 பேர் கொண்ட இந்திய அணி இந்த போட்டியில் பங்கேற்கிறது.
ஆசிய சாதனையாளரான குண்டு எறிதல் வீரர் தஜிந்தர் பால்சிங் தூர் காயத்தில் இருந்து மீளாததால் அணியில் இடம்பெறவில்லை. தேசிய சாதனை படைத்த நீளம் தாண்டுதல் வீரர் தேஜஸ்வின் சங்கர், 800 மீட்டர் ஓட்டப்பந்தய வீராங்கனை சந்தா, 20 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி ஆகியோர் ஆசிய விளையாட்டு போட்டியில் (செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை) கவனம் செலுத்தும் பொருட்டு இந்த போட்டியில் இருந்து விலகி இருக்கின்றனர். தமிழக வீரர்களான சந்தோஷ்குமார், பிரவீன் சித்ரவேல், ஜெஸ்வின் ஆல்ட்ரின், ராஜேஷ் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி வருமாறு:-
பெண்கள்: ஜோதி யர்ராஜி (100 மீட்டர் தடை ஓட்டம்), பாருல் சவுத்ரி (3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), ஷைலி சிங் (நீளம் தாண்டுதல்), அன்னு ராணி (ஈட்டி எறிதல்) பாவ்னா ஜாட் (20 கிலோ மீட்டர் நடைபந்தயம்).
ஆண்கள்: கிரிஷன் குமார் (800 மீட்டர் ஓட்டம்), அஜய்குமார் சரோஜ் (1,500 மீட்டர் ஓட்டம்), சந்தோஷ் குமார் (400 மீட்டர் தடைஓட்டம்), அவினாஷ் சாப்லே (3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), சர்வேஷ் அனில் குஷாரே (உயரம் தாண்டுதல்), ஜெஸ்வின் ஆல்ட்ரின் (நீளம் தாண்டுதல்), ஸ்ரீசங்கர் (நீளம் தாண்டுதல்), பிரவீன் சித்ரவேல், அப்துல்லா அபூபக்கர், எல்தோஸ் பால் (மூவரும் டிரிபிள் ஜம்ப்), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), டி.பி.மானு (ஈட்டி எறிதல்), கிஷோர் குமார் (ஈட்டி எறிதல்), ஆகாஷ்தீப் சிங், விகாஷ் சிங், பரம்ஜீத் சிங் (மூவரும் 20 கிலோ மீட்டர் நடைபந்தயம்), ராம் பாபூ (35 கிலோ மீட்டர் நடைபந்தயம்), அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல், முகமது அனாஸ், ராஜேஷ், அனில் ராஜலிங்கம், மிஜோ சாக்கோ குரியன் (6 பேரும் 400 மீட்டர் தொடர் ஓட்டம்).
- 11-ந்தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் ஸ்பெயின்- நெதர்லாந்து, ஜப்பான்- சுவீடன் அணிகள் பலப்பரீட்சை
- 12-ந்தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் இங்கிலாந்து- கொலம்பியா, ஆஸ்திரேலியா- பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை
பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றன.
தற்போது காலிறுதிக்கு முந்தைய நாக்அவுட் சுற்று போட்டிகள் முடிவடைந்துள்ளன. நேற்று கடைசி இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் கொலம்பியா- ஜமைக்கா அணிகள் மோதின. இதில் கொலம்பியா 1-0 என ஜமைக்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ்- மொரோக்கோ அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் 4-0 என மொரோக்கோவை துவம்சம் செய்து காலிறுதிக்கு முன்னேறின.
காலிறுதி ஆட்டங்கள் வருகிற 11 மற்றும் 12-ந்தேதிகளில் நடைபெறுகின்றன. 11-ந்தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் ஸ்பெயின்- நெதர்லாந்து, ஜப்பான்- சுவீடன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
12-ந்தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் இங்கிலாந்து- கொலம்பியா, ஆஸ்திரேலியா- பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- டாஸ் வென்று முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது.
- சூர்யகுமார் யாதவ் அதிரடியால் இந்தியா 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
கயானா:
வெஸ்ட் இண்டீஸ், இந்தியா இடையிலான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆடிய இந்தியா சூர்யகுமார் யாதவ் அதிரடியால் 17.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், வெற்றிக்குப் பின்னர் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசியதாவது:
இந்தப் போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இதுபோன்ற நெருக்கடியான ஆட்டத்தில் நாங்கள் யார் என்பதை காட்ட வேண்டும். அதனால் இந்த ஆட்டத்தை நாங்கள் எதிர்நோக்கி இருந்தோம்.
இந்த டி20 தொடரில் 7 பேட்ஸ்மேன்கள் போதும் என்ற முடிவுடன் தான் நாங்கள் களமிறங்கினோம். இதன்மூலம் ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும் என நினைத்தோம்.
ஏதேனும் ஒரு பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாடினாலே பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் ஒரு பேட்ஸ்மேன் வேண்டும் என்ற நிலை இருக்காது.
சூரியகுமார் யாதவும் திலக் வர்மாவும் ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடுகிறார்கள்.அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து விளையாடக் கூடியவர்கள்.
சூரியகுமார் யாதவ் போன்ற ஒரு வீரர் அணியில் இருப்பது நிச்சயம் நல்லது தான். ஏனென்றால் அவர்கள் பொறுப்பை எடுத்துக் கொண்டு விளையாடுவார்கள். இதன்மூலம் மற்ற வீரர்களுக்கு அவர்கள் எடுத்துக்காட்டாக இருப்பார்கள் என தெரிவித்தார்.
பேட்ஸ்மேன்கள் கூடுதல் பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என பாண்ட்யா கடந்த போட்டியில் கூறியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
- உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
- எதிர்கால விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளித்துள்ள வீரர்களுக்கு ஒரு சல்யூட் என்றார்.
புதுடெல்லி:
உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, பதக்கம் வென்ற இந்திய வீர்ரகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 31-வது உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் 26 பதக்கங்களை வென்று இந்திய விளையாட்டு வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். இதில் 11 தங்கம், 5 வெள்ளி, 10 வெண்கலங்கள் அடங்கும். எதிர்கால விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளித்துள்ள வீரர்களுக்கு ஒரு சல்யூட். இந்த வெற்றிக்காக விளையாட்டு வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளர்களை நான் பாராட்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
- 3வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
- ஆட்ட நாயகனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
கயானா:
வெஸ்ட் இண்டீஸ், இந்தியா இடையிலான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது.
இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆடிய இந்தியா சூர்யகுமார் யாதவ அதிரடியால் 17.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், குல்தீப் யாதவ் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதி வேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
குல்தீப் யாதவ் 30 போட்டிகளில் விளையாடி 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முன்னதாக, சஹல் 34 போட்டிகளில் 50 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதி வேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் (26 போட்டிகள்) முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தை ஹசரங்கா (30 போட்டிகள்) உடன் குல்தீப் யாதவ் பகிர்ந்து கொண்டார்.
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இந்தியா 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
கயானா:
வெஸ்ட் இண்டீஸ், இந்தியா இடையிலான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது
அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. பிராண்டன் கிங் 42 ரன்கள் எடுத்தார். அதிரடியாக ஆடிய கேப்டன் ரோவ்மென் பாவெல் 19 பந்தில் 40 ரன்கள் குவித்தார்.
இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, இந்திய அணி 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் ஒரு ரன்னிலும், சுப்மன் கில் 6 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். இதனால் இந்தியா 34 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது.
அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவருக்கு திலக் வர்மா நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அதிரடியாக ஆடிய சூர்யகுமார் அரை சதம் கடந்தார்.
3வது விக்கெட்டுக்கு இணைந்த சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா ஜோடி 87 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 44 பந்தில் 4 சிக்சர், 10 பவுண்டரிகள் உள்பட 83 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து இறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, திலக் வர்மாவுடன் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், இந்தியா 3 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. திலக் வர்மா 49 ரன்னும், பாண்ட்யா 20 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரில் இந்தியா 1-2 என பின்தங்கியுள்ளது.
- டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய அந்த அணி 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் சேர்த்தது.
கயானா:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், 3வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது
அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிராண்டன் கிங் 42 ரன்கள் எடுத்தார். அதிரடியாக ஆடிய கேப்டன் ரோவ்மென் பாவெல் 19 பந்தில் 40 ரன்கள் குவித்தார்.
இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, இந்திய அணி 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது.
- வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- இந்திய அணியில் யாஷாஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், 3வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜேசன் ஹோல்டருக்கு பதில் ரோஸ்டன் சேஸ் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியைப் பொருத்தவரை ரவி பிஸ்னோய்க்கு பதில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். யாஷாஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுக வீரராக களமிறங்குகிறார். இவர் இஷான் கிஷனுக்குப் பதில் ஆடும் லெவனில் இடம்பிடித்துள்ளார்.
- உலக கோப்பையை வெல்கிறார்களோ இல்லையோ பாகிஸ்தானுக்கு எதிராக தோற்கக் கூடாது.
- பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் போது நிச்சயமாக சுவாரசியமும் அதிகப்படியான அழுத்தமும் இருக்கும்.
ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பிரச்சனை காரணமாக கடந்த 10 வருடங்களாக இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் மோதுவது இல்லை. ஆசிய மற்றும் ஐசிசி உலக கோப்பைகளில் மட்டுமே விளையாடி வருகின்றன.
இந்த வருடம் 2023 ஆசிய மற்றும் 50 ஓவர் உலக கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவிருப்பது அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக 50 ஓவர் உலக கோப்பையில் 1992 முதல் இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்ததால் இம்முறை உலக கோப்பையை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து பழி தீர்க்க பாகிஸ்தான் காத்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த வருடம் ஆசிய மற்றும் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லாவிட்டாலும் பாகிஸ்தானை தோற்கடித்து கௌரவத்தையும் மானத்தையும் காப்பாற்றுமாறு இந்திய அணிக்கு ஷிகர் தவான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இது போன்ற சூழ்நிலையில் எப்போதுமே நீங்கள் உலக கோப்பையை வெல்கிறார்களோ இல்லையோ பாகிஸ்தானுக்கு எதிராக தோற்கக் கூடாது என்பதை அனைவரும் விருப்பமாக இருக்கும். ஆனாலும் நீங்கள் உலக கோப்பையை வெல்வதே முக்கியமாகும். கடவுளின் ஆசிர்வாதத்துடன் அதை நாம் செய்வோம் என்று நம்புகிறேன்.
மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் போது நிச்சயமாக சுவாரசியமும் அதிகப்படியான அழுத்தமும் இருக்கும். அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி முடிவடையும் போது கண்டிப்பாக ஒரு திருப்திகரமான உணர்வு எங்களுக்கு இருக்கும். ஏனெனில் நான் விளையாடிய போது பெரும்பாலும் நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக வென்றுள்ளோம். அந்த போட்டியில் எப்போதுமே எதிர்பார்ப்புகள் உச்சமாக இருக்கும். அத்துடன் பாகிஸ்தான் அணியுடனும் நாங்கள் சிலவற்றை பேசுவோம்.
என்று அவர் கூறினார்.
இருப்பினும் இரு அணிகளுக்கும் சமமாக பேசாத காரணத்தால் அவர் பேசிய அந்த வீடியோவை முதலில் டுவிட்டரில் பதிவிட்ட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பு நிறுவனம் பின்னர் டெலிட் செய்து விட்டது.
- ஜெய்ஸ்வால் டி20 கிரிக்கெட்டில் பயமின்றி அதிரடியாக விளையாடக் கூடியவர்.
- டெஸ்ட் தொடரில் நல்ல ரன்களை அடித்த அவர் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் 2 டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததையடுத்து பல விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது. 3-வது டி20 போட்டியில் இந்தியா வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இன்று களமிறங்குகிறது.
இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே தடுமாறி வரும் இஷான் கிசானுக்கு பதிலாக இன்றைய போட்டியில் யசஸ்வி ஜெய்ஸ்வால் விளையாட வேண்டுமென முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இஷான் கிஷன் தடுமாறுகிறார் என்பதை நாம் அனைவரும் அறிவோம் என்பதால் அவருக்கு சற்று இடைவெளி கொடுக்க வேண்டும். ஒருவேளை அவர் தமக்கு கிடைக்கும் அடுத்த வாய்ப்பில் வலுவான கம்பேக் கொடுக்கலாம். எனவே அவருடைய இடத்தில் நான் எந்தவித சந்தேகமுமின்றி யசஸ்வி ஜெய்ஸ்வாலை தேர்ந்தெடுப்பேன்.
ஏனெனில் அவர் டி20 கிரிக்கெட்டில் பயமின்றி அதிரடியாக விளையாடக் கூடியவர். குறிப்பாக வேகம் மற்றும் சுழல் ஆகிய 2 வகையான பவுலிங்க்கு எதிராகவும் அசத்தும் திறமை அவரிடம் இருக்கிறது.
அத்துடன் தற்போது உச்சகட்ட பார்மில் இருக்கும் அவருக்கு வாய்ப்பு கொடுத்து அதில் என்ன செய்கிறார் என்பதை ஏன் பார்க்க கூடாது? சொல்லப்போனால் டெஸ்ட் தொடரில் நல்ல ரன்களை அடித்த அவர் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். மேலும் திலக் வர்மா போன்ற புதியவருக்கு வாய்ப்பு கொடுத்து புதிய காற்றை சுவாசிக்கும் முயற்சிக்கும் நீங்கள் ஏன் அவருக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது.
இவ்வாறு வாசிம் ஜாபர் கூறினார்.
- இரு அணிகளும் மோதிய 178 போட்டியில் இந்தியா 64-ல், பாகிஸ்தான் 82-ல் வெற்றி பெற்றுள்ளன.
- பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இந்தியாவுடன் 'டிரா' செய்தாலே அரை இறுதிக்கு தகுதி பெற்று விடும்.
சென்னை:
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் 6 நாடுகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப் படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
நேற்றுடன் ஒவ்வொரு அணியும் 4 ஆட்டத்தில் விளையாடிவிட்டன. இந்தியா (10புள்ளி) மலேசியா (9) ஆகிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. சீனா (1) வாய்ப்பை இழந்தது.
நடப்பு சாம்பியன் தென் கொரியா (5), முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் (5), ஜப்பான் (2) ஆகிய 3 அணிகள் எஞ்சிய 2 இடத்துக்கான போட்டியில் உள்ளன.
ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் சீனாவை 7-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 2-வது போட்டியில் ஜப்பானுடன் 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது 3-வது ஆட்டத்தில் மலேசியாவை 5-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. 4-வது போட்டியில் தென் கொரியாவை 2-1 என்ற கணக்கில் வென்றது,
இந்திய அணி 5-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை நாளை (9-ந் தேதி ) எதிர்கொள்கிறது. இரவு 8.30 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.
3 வெற்றி, 1 டிராவுடன் 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.
இந்திய அணி ஏற்கனவே அரை இறுதிக்கு முன்னேறி விட்டதால் நெருக்கடி இல்லாமல் விளையாடும். பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இந்தியாவுடன் 'டிரா' செய்தாலே அரை இறுதிக்கு தகுதி பெற்று விடும். கடைசி ஆட்டம் என்பதால் அந்த அணி அதற்கு ஏற்ப விளையாடலாம்.
இரு அணிகளும் மோதிய 178 போட்டியில் இந்தியா 64-ல், பாகிஸ்தான் 82-ல் வெற்றி பெற்றுள்ளன. 32 ஆட்டம் டிரா ஆனது. கடைசியாக கடந்த ஆண்டு ஜகார்தாவில் இரு அணிகளும் மோதிய ஆசிய கோப்பை போட்டி 1-1 என்ற கணக்கில் டிரா ஆனது. 2021-ம் ஆண்டு டாக்காவில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா 2 ஆட்டத்திலும் ( 3-1, 4-3 ) வெற்றி பெற்று இருந்தன.
நாளை நடைபெறும் மற்ற 'லீக்' ஆட்டத்தில் ஜப்பான்-சீனா (மாலை 4 மணி) தென் கொரியா-மலேசியா (மாலை 6.15 மணி) அணிகள் மோதுகின்றன. நாளையுடன் 'லீக்' ஆட்டங்கள் முடிகிறது. 11-ந் தேதி அரைஇறுதி போட்டிகளும், 12-ந் தேதி இறுதி ஆட்டமும் நடக்கிறது.






