என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • பக்தர்களும் கோவிலைச் சேர்ந்தவர்களும் எருமைக்குத் தீனி கொடுத்து வந்தனர்.
    • மறுநாள் காலை ஆலயத்துக்கு வந்த பக்தர்கள், எருமையைக் காணாது கவலையுற்றனர்.

    எருமை ஒன்று திருச்செந்தூர் கோவிலை வலம் வந்துகொண்டே இருந்தது. அர்த்த ஜாம வழிபாட்டிற்குப் பிறகு கோவில் வாசலில் படுத்துக்கொண்டது. இப்படி மூன்று நாள் இந்த எருமை தன் முருக பக்தியை வெளிப்படுத்தியது.

    வெளியூரில் இருந்து சொந்தக்காரன் அந்த எருமை மாட்டை தேடி வந்தான். முற்பிறப்பின் ஞான முதிர்ச்சி இது!' என்று பக்தர்கள் பேசிக்கொண்டது அவன் காதில் விழுந்தது. இதனால் அவன் தன் எருமைக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு வந்த வழியே திரும்பிப் போய்விட்டான்.

    பக்தர்களும் கோவிலைச் சேர்ந்தவர்களும் எருமைக்குத் தீனி கொடுத்து வந்தனர். அது கண்ட தெய்வ நம்பிக்கை இல்லாத ஒருவன் கடும் கோபம் கொண்டான். அவன் எருமைக்குத் தீனி கொடுப்பதும், இதைப் போற்றுவதும் மடத்தனமாக உள்ளது என்று கேலி செய்தான். அதோடு அவன் நிற்கவில்லை.

    தன்னைப் போன்ற சிலரைக் கலந்து ஆலோசித்தான். ஒருநாள், நள்ளிரவுக்குப் பின் இவனும் இவனுடைய நண்பர்களும் ஆலய வாசலில் படுத்திருந்த எருமையை இழுத்துக்கொண்டு போய்ப் படகில் ஏற்றி, அந்தப் படகைச் செலுத்திக்கொண்டே போய் நடுக் கடலில் அந்த எருமையைத் தள்ளி விட்டார்கள்.

    மறுநாள் காலை ஆலயத்துக்கு வந்த பக்தர்கள், எருமையைக் காணாது கவலையுற்றனர். 'அந்த எருமையை பார்த்தீர்களா? என்று பலரையும் விசாரித்தனர். அப்போது கடவுள் மீது நம்பிக்கை இல்லாத அந்த நபர் கேலியும், கிண்டலும் செய்தார். உங்கள் முருகனால் இதை கண்டிக்க முடியாதா என்று கேலி செய்தார்.

    அப்போது அந்த எருமை தன் கண் கட்டு, வாய்க் கட்டுகளுடன் கடலலைகளில் முங்கிக் கொண்டே கரையை நோக்கி வந்துகொண்டிருந்தது. 'வா வா' என்று அன்பர்கள் ஆர்ப்பாரித்தனர். எருமை கரையேறி வந்து கோவில் வாசலை அடைந்தது.

    கட்டுகளை அவிழ்த்தார்கள். தீனி வைத்தார்கள். பழையபடி எருமை ஆலயத்தை வலம் வரத்தொடங்கியது. அன்பர்கள், 'முருகா! முருகா!' என்று கோஷமிட்டனர். கடவுள் நம்பிக்கை இல்லாதவன் இந்த அற்புதத்தால் மனம் மாறினான். மனம் திருந்தி முருக பக்தனாகி விட்டான். அந்த எருமை அடியேனுக்குக் குரு!' என்று சொல்லிக் கொண்டே கோவிலை வலம் வந்தான்.

    ஆதித்த நாடாருக்கு கிடைத்த அருள்

    திருச்செந்தூர் அருகே காயாமொழி என்ற சிறிய கிராமம் இருக்கிறது. அந்த கிராமத்தை தலைமையிடமாக கொண்டு ஆதித்த நாடார் வம்சத்தினர் குறுநில மன்னராக ஆட்சி செய்து வந்தனர். ஆதித்த நாடார் வம்சத்தினருக்கு குல தெய்வம் திருச்செந்தூர் முருகன் ஆவார். திருச்செந்தூர் முருகன் மீது ஆதித்த நாடார் மிகுந்த பக்தியும், பற்றும் வைத்திருந்தார்.

    திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக ஊர் நடுவில் உள்ள சிவகொழுந்தீசுவரர் கோவில் முன் மண்டபம் ஒன்றை அவர் காயாமொழி கிராம மக்கள் உதவியுடன் நிறுவினார். இன்று அந்த மண்டபத்தில் துணிக்கடைகள் நிறைந்துள்ளன. மண்டபத்தின் நடுவே நீர்மோர்ப்பந்தல் ஒன்றையும் நிறுவி பக்தர்கள் தாகம் தணிக்க செய்தார்.

    1560களில் திருச்செந்தூர் முருகன் ஆலய தேர் பழுதுபட்டது. அந்த தேரை சரி செய்வதற்காக முருகப்பெருமான் ஆதித்த நாடார் கனவில் தோன்றி உத்தரவு பிறப்பித்தார். தேரில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கிக் கொடுக்குமாறு கூறினார். அந்த ஆண்டு ஆதித்த நாடார் வாழ்ந்த காயாமொழியைச் சுற்றிலும் உள்ள அறுவடை செய்த வயல்களில் மீண்டும் துளிர்விட்டு என்றும் இல்லாத அளவுக்கு எள் விளைந்தது. இது திருச்செந்தூர் முருகனின் திருவருளே என்று காயாமொழி மக்கள் வியந்தனர். அந்த எள்ளை விற்று அவர்கள் புதிய தேரினை செய்து கொடுத்தனர். திருச்செந்தூர் முருகனை ஆவணி மற்றும் மாசித்திருவிழாக்களில் பத்தாம் நாள் அந்த பெரிய தேரில் எழுந்தருளச் செய்தனர்.

    இதைக்கண்டு மகிழ்ந்த திருச்செந்தூர் முருகன் ஆதித்த நாடார் கனவில் மீண்டும் தோன்றி "உன்னையும் உன் சந்ததியினரையும் என் வலது கண்போல் பார்த்துக்கொள்வேன். உன் சந்ததியினர் செல்வம் ஒரு போதும் வற்றாது" என்று அருளினார். வலது கண் என்பது சூரியனை குறிக்கும். சூரியனுக்கு ஆதித்தன் என்றும் ஒரு பெயர் உண்டு.

    இன்றும் திருச்செந்தூர் தேர் வடம் பிடிக்கும் உரிமை ஆதித்த நாடார் வழிவந்தோரிடமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

    சுந்தரிக்கு அருளிய முருகன்!

    திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய செல்பவர்கள் தேரடியை கடந்து மண்டபம் வழியாக தூண்டு கை விநாயகர் கோவில் வழியே நடந்து செல்வதே முறையாகும். தூண்டு கை விநாயகர் ஆலயம் சென்றதும் பக்தர்கள் தேங்காய் வாங்கி தலையை சுற்றி உடைத்து விட்டு செல்வார்கள். அதற்கு முன்பு அந்த சிறிய விநாயகர் ஆலயத்துக்குள் சென்று வழிபட வேண்டும்.

     

    அந்த விநாயகர் ஆலயத்துக்குள் அர்த்த மண்டபத்தில் அற்புத சிற்பம் ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த சிற்பத்தில் வேல்தாங்கிய முருகன் மற்றும் நடுவில் கூடையோடு கூடிய ஒரு பெண் இருப்பதை காணலாம். சிற்பத்தின் கீழ் பகுதியில் ஒரு பாம்பு செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தின் பின்னணியில் ஒரு கதை உள்ளது.

    முன்னொரு காலத்தில் திருச்செந்தூர் கோவிலில் பணிபுரிந்த சிவாச்சாரியார்கள் அந்த ஊருக்கு வடக்கே 5 கி.மீ தொலைவில் உள்ள சண்முகபுரம் என்னும் ஊரில் குடியிருந்தனர். திருச்செந்தூர் கோவிலில் ஏராளமான பணிப்பெண்கள் பணிபுரிந்து வந்தனர்.

    அவர்கள் சண்முகபுரம் சென்று சிவாச்சாரியார்களிடம் முருகன் கோவில் பூசைக்குரிய பொருள்களை வாங்கி வருவது வழக்கம். ஒரு நாள் பணிப்பெண்களில் ஒருவரான சுந்தரி என்ற பெண் சண்முகபுரம் சென்று பூஜைப் பொருள்களை பெற்றுக்கொண்டு திருச்செந்தூரை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தாள்.

    வரும் வழியில் அவளைப் பாம்பு கடித்தது. அவள் அங்கேயே மயங்கி விழுந்து விட்டாள். முருகப்பெருமான் நினைவிலே உயிர் பிரிந்தது.

    இதற்கிடையே திருச்செந்தூர் கோவில் அர்ச்சகர் பூஜைப் பொருள்கள் வந்து சேராததால் வருந்தினார். தூண்டு கை விநாயகர் கோவில் அருகே சென்று தேடினார். அப்போது அவர் முன் மயில் ஒன்று பறந்து வந்தது. தன்னை பின் தொடர்ந்து வருமாறு வழி காட்டியது. சண்முகபுரம் செல்லும் வழியில் ஓரிடத்தில் மயில் நின்றது.

    அர்ச்சகர் அங்கே பணிப்பெண் சுந்தரி மயங்கி கிடப்பதைக் கண்டார். அவளை பாம்பு கடித்து இருப்பதை உணர்ந்தார். அப்போது திருச்செந்தூர் முருகன் அவரது கனவில் தோன்றி தாமே அவளுக்கு இவ்வாறு மோட்சம் அளித்ததாக கூறினார். அந்த இடத்தில் வழிபடுபவர்களுக்கு முக்தி அருள்வதாகவும் தெரிவித்தார்.

    அந்த இடம் இன்றும் "மயில்கல்" என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. திருச்செந்தூர் ஆலயத்துக்கு காவடி கட்டி நடைபயணமாக வரும் பக்தர்கள் இன்றும் அந்த இடத்தில் வழிபாடு நடத்தி விட்டே காவடி எடுத்து செல்வார்கள்.

    மயிலை அனுப்பி அர்ச்சகருக்கு பணிப்பெண் சுந்தரி விழுந்து கிடந்த இடத்தை தூண்டிக் காட்டியதால் தான் அந்த இடத்து விநாயகர் ஆலயத்துக்குள் இந்த சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த தடவை நீங்கள் திருச்செந்தூர் ஆலயத்துக்கு செல்லும் போது தூண்டு கை ஆலயத்து விநாயகரை வழிபட்டுவிட்டு சிவாச்சாரியாரிடம் சுந்தரி சிலை பற்றி கேட்டால் அவர் அதை உங்களுக்கு காண்பிப்பார்.

    இதே போன்று திருச்செந்தூர் முருகன் நிகழ்த்திய மற்றொரு அற்புதத்தை அடுத்த வாரம் காணலாம்.

    • சுயநலமாய் இருப்பது என்பது எதனை நீங்கள் மறைத்தாலும் எம்.ஆர்.ஐ. போல் தெளிவாகக் காட்டி விடும்.
    • பிறரை நம் லாபத்திற்காக வஞ்சகமாக உபயோகிக்காதீர்கள். மகா மட்டமான குணம் இது.

    மரியாதை: 'பிறருக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும். பிறர் நமக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இது அனைவருக்கும் அறிவுறுத்தப்படுவது ஆகும்.

    * மனைவியை அடிமைபோல் நடத்தும் கணவன், உதவியாளர்களை ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாதவர் போல் நடத்தும் மக்கள், பிள்ளைகளை குத்தி காட்டி பேசும் பெற்றோர்கள்- இவர்கள் எல்லாம் மரியாதை கொடுப்பதும் இல்லை. மரியாதை பெறுவதும் இல்லை.

    * பிறர் உங்களை மதிக்கவில்லையென்றால் நீங்கள் அமைதியாய் நகர்ந்து விடலாம். இதுவே உங்கள் பண்பினைக் காட்டும். மரியாதையினைக் கூட்டும்.

    * மரியாதை வேண்டும் என அனைவரும் நினைக்கின்றோம். ஆனால் சிலருக்கு மட்டுமே கிடைக்கின்றது. காரணம் என்ன?

    * முதலில் ஒவ்வொருவரும் தன்னைத்தானே மதிக்க வேண்டும். மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

    * ஆடை விஷயத்தில் பலர் ஏனோ தானோ என நேர்த்தியின்றி உடுத்துகின்றனர். சிலர் நாகரீகம் என்ற பெயரில் பலருக்கு பிடிக்காத மாதிரி உடுத்துகின்றனர். சுத்தமான, இஸ்திரி செய்யப்பட்ட, கவுரவமான உடை நிறைய மரியாதையினை வாங்கித் தரும்.

    * சோம்பேறித்தனமும், மெத்தனமும் மரியாதை வாங்கித் தராது. சுறுசுறுப்புக்கு நிறைய மரியாதை கிடைக்கும்.

    * பொறுப்பின்றி இருந்தால் ஒருவருக்கு மரியாதை கிடைக்காதது மட்டுமல்ல வேறு மட்டமான பட்டப் பெயர்களும் கிடைக்கும்.

    * சுயநலமாய் இருப்பது என்பது எதனை நீங்கள் மறைத்தாலும் எம்.ஆர்.ஐ. போல் தெளிவாகக் காட்டி விடும்.

    * எல்லாவற்றிற்கும் 'ஆமாம் சாமி' போட்டால் பூச்சி போல் நம்மை நசுக்கி விடுவார்கள்.

    * தன்னைத் தானே மட்டம் தட்டி பேசுவது தற்கொலைக்கு சமம்.

    * நீங்கள் செய்யாத எந்த தவறுக்கும் மன்னிப்பு கேட்காதீர்கள். நீங்கள் பழி தாங்கும் பிறவி அல்ல.

    * கெட்ட வார்த்தைகள், வம்பு இவை வேண்டவே வேண்டாம்.

    * எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று உங்களை நார் நாராய் பிய்த்து போட்டுக் கொள்ளாதீர்கள். யாரும் சிறுவார்த்தையோ, நன்றியோ தெரிவிக்கப் போவதில்லை. மாறாக பழி சுமத்துவர்.

    * பிறரை நம் லாபத்திற்காக வஞ்சகமாக உபயோகிக்காதீர்கள். மகா மட்டமான குணம் இது.

    * வாய் ஓயாது பேசாதீர்கள். எதிரில் உள்ளவர் தலைவலியில் ஓடி விடுவார்.

    * நான் தான், நான் வைத்தது தான் சட்டம், எனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற மூர்க்கத்தனங்கள் புதை குழியில் நம்மை தள்ளி விட்டு விடும்.

    * பொய்யும், ஏமாற்றுதலும் இந்த காலத்தில் வெளிச்சம் போட்டு காட்டி விடும்.

    * எதிலும் வரையறை, எல்லை கோடுகள் வேண்டும். இல்லையெனில் உங்களது வாழ்க்கை கோணல், மாணல் ஆகி விடும்.

    ஆக இவை அனைத்திலும் கவனம் செலுத்தினால் மரியாதை நம்மை தேடி வரும்.

    இத்தோடு கூடவே, கையோடு இதனையும் செய்யலாமே.

    * அம்மாகிட்ட அன்போடும், ஆசையோடும் பேச வேண்டும்.

    * அப்பாகிட்ட மரியாதையோடு பேச வேண்டும்.

    * மனைவியிடம் உண்மையாக பேச வேண்டும்.

    * உடன் பிறந்தவர்களிடம் பாசத்தோடு பேச வேண்டும்.

    * உறவினர்களிடம் பச்சாதாபம் வேண்டும்.

    * நண்பர்களுடன் மகிழ்ச்சியான பேச்சுவார்த்தை வேண்டும்.

    * அதிகாரிகளிடம் அமைதியாக, பண்போடு பேச வேண்டும்.

    * உதவியாளர்களிடம் தன்மையாய் பேச வேண்டும்.

    செய்கின்றோமா? இல்லையெனில் இப்போதே செய்யத் தொடங்குவோம்.

    இன்னும் கொஞ்சம் கூட...

    * சொன்ன நேரம் மாறாமல் இருப்போமே

    * முயற்சியினை தினம் கொஞ்சம் கூட்டலாமே.

    * கனிவாக இருப்போமே.

    * வளர வேண்டும் என்று உறுதி எடுப்போம்.

    * ஆரம்பித்த வேலையினை சரியாக முடிப்போம். படிப்போம், கற்போம்.

    * சக்தியினை இறக்குவோம்.

    * ஆக்கப்பூர்வமாகவே இருப்போம்.

    * நமது தோற்றம், உணவு, உடை இவற்றில் அதிக கவனம் கொடுப்போம்.

    * நம் பலவீனம், பாதுகாப்பு இல்லை என அஞ்சுவது இவற்றினை எந்த அந்தஸ்தும் சரி செய்யாது.

    * நம்மை விரும்புவதனை விட நமக்கு மரியாதை கொடுப்பது நல்லது.

    * நான்கு வயதில் ஏற்பட்ட குழந்தை சண்டையை மனதில் வைத்து 52 வருடங்கள் சென்று ஒருவர் மற்றவர் முகத்தில் கடுமையாய் தாக்கினார் என படித்தேன். இந்த நிலை மாற நாம் ஒவ்வொருவரும் சில ஒழுக்கங்களை வாழ்வில் கடைபிடிக்க வேண்டும்.

     

    மகிழ்ச்சி

    * நம்முடைய வாழ்க்கையினை நாம் அமைத்துக் கொள்ளும் விதமே உன்னத வாழ்க்கையினை நாம் வாழ காரணம் ஆகின்றது. சுற்றுப்புற சூழ்நிலைகள் உங்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுக்கக் கூடாது. சுற்றுப்புற சூழ்நிலை உங்கள் கட்டுப்பாட்டில் வரவேண்டும். உங்கள் இலக்குகளை அடைய அவை உதவ வேண்டும்.

    * மகிழ்ச்சி, அமைதி, சந்தோஷம் இவை அனைத்துமே வாழ்வின் வெற்றியின் முடிவு அல்ல. இது வாழ்வின் பயணம். தொடர் பயணம். அன்றாடம் வளர்க்க வேண்டிய ஒன்று.

    * பத்திரமாய், பாதுகாப்பாக வாழ்வது சரிதான். இருப்பினும் வாழ்வில் சில துணிவுகள் வேண்டும். இல்லையெனில் வாழ்வு சப்பென இருக்கும்.

    * தன்னம்பிக்கையே வாழ்வின் சாவி. தன்னம்பிக்கை இருந்தால் உங்கள் முன்னேற்றத்தினை யாரும் தடுக்கவே முடியாது.

    * இந்த உலகியல் வாழ்க்கை முடிவுக்கு வரும்போது ஒருவரின் வெற்றிகளும், சாதனைகளும் கூட மறந்து விடும். ஆனால் நீங்கள் காட்டிய அன்பு பரவி நிற்கும்.

    * உங்கள் வாழ்வின் எழுத்தாளர் நீங்கள் தானே. சோகமாக எழுத வேண்டாமே.

    * நீங்கள் எதனையும் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பது கண்ணாடி போன்றது. பிரதிபலிக்கும். ஆக நாம் ஏன் நம் வாழ்வகையினை மகிழ்ச்சியாக ஆக்கிக் கொள்ளக் கூடாது?

    * வாழ்வில் எந்த நேரம் வேண்டுமானாலும் யார் வேண்டுமென்றாலும் நம்மை பிரிந்து செல்லலாம். எனவே யார் மீதும் அதிகம் சாய வேண்டாம்.

    * ரொம்ப கவலைப்படாதீங்க. கவலைப்படுவதால் ஒன்ணும் ஆகப் போவது இல்லை.

    * எது உன்னை மன வலிமை, உடல் வலிமை இழக்கச் செய்கின்றதோ? அது உங்களுக்கு ஒத்துக் கொள்ளாத ஒன்றே.

    * படியுங்கள், படியுங்கள், அன்றாடம் ஒரு நல்ல புத்தகத்தினை படியுங்கள்.

    * கனிவுடன் இருப்போமே.

    * பிரச்சினையில் மூழ்காமல் தீர்வுகளை கண்டுபிடிப்போமே.

    * நன்றி உணர்வோடு இருப்போமே. இப்படியெல்லாம் இருந்தால் மகிழ்ச்சிக்கு என்ன குறைவு இருக்கும்!

     

    தெரிந்து கொள்வோம்...

    ஒவ்வொரு உணவிலும் வானவில் 7 நிறத்தில் கொண்ட உணவுகள் இருந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை என்று கூறுகின்றோம். 7 வண்ணம் என்பது இயலவில்லை என்றாலும் சிகப்பு, மஞ்சள், பச்சை, ஆரஞ்சு இந்த நான்கு நிறங்களையாவது இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பார்கள்.

    சிகப்பு கலர் பழங்கள் இருதயத்தினை உறுதியாய் வைக்கும். இதில் உள்ள லைகோபேன் இந்த சிகப்பு நிறத்தினைக் கொடுக்கின்றது. இது உடலின் பல நோய்களில் இருந்து காக்கின்றது.

    ஆரஞ்சு நிற பழங்களும் காய்கறிகளும் அடர்ந்த பீட்டா கரோட்டீன் என்ற பொருள் கொண்டது மற்றும் வைட்டமின் சி சத்தும் உடலில் உள்ள எல்லா உறுப்புகளையும் குறிப்பாக கண்களையும் காக்கின்றது.

    மஞ்சள் நிற உணவு புண்களை ஆற்றும். உடலை பழுது பார்க்கும்.பற்களை பாதுகாக்கும்.

    பச்சை நிற உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியினை உருவாக்கும்.

    நீல ஊதா நிற உணவுகள் மூளை ஆரோக்கியத்திற்கு உகந்தது. இப்படி எல்லா நிறங்களுக்கும் கூடுதலாக பயன்கள் எழுதலாம். ஆகவே உணவு 'வானவில்லாக' இருக்கட்டும்.

    (கொஞ்சம் நேரம் ஒதுக்கி மனித சமுதாய முன்னேற்றத்தினை பார்ப்போம். கல்லை தேய்த்து நெருப்பு உருவாக்கி உணவு உண்ட காலத்தினையும் இன்று கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்க்கும் காலம் வரை மகா அசுர வளர்ச்சியினை நினைத்து பார்க்கின்றோமோ. இன்று உங்களை முக்கால் நிர்வாண ஆடையுடன் 2 கல்லை தேய்த்து நெருப்பினை உருவாக்கச் சொன்னால் தாங்குவீர்களா?

    எல்லாமே அசுர முன்னேற்றம்தான்.

     

    கமலி ஸ்ரீபால்

    அசுர வளர்ச்சி என்றால் என்ன?

    ஒரு குழந்தை பிறந்தவுடன் 15 முதல் 20 வயது வரை போல் வளர்ந்து நொடியில் நின்றால் என்னவோ அதுதான் அசுர வளர்ச்சி.

    இதையெல்லாம் ஒவ்வொரு மனிதனும், படித்து தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

    இன்று மனிதன் கூர்மையான அறிவும், இருந்த இடத்தில் இருந்த உலகையே அச்சுறுத்தி கட்டுப்படுத்தும் ஆயுதங்களும் உருவாக்கி உள்ளான்.

    இதனை நாம் சர்வ சாதாரண நிகழ்வு போல் பார்க்கின்றோம். ஊர் வம்பு, புரளி ஈர்க்கும் அளவு இந்த முன்னேற்றங்கள் (அவை ஆக்கப் பூர்வமோ, அழிவு பூர்வமோ) நம் கவனத்தில் நிற்பதில்லை.

    ஆகவேத்தான் நம்மை நாமே, நாம் மட்டுமே பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * சிலர் ஏனோ நம்மை கோபப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். தப்பி தவறி கூட நம் நிதானத்தினை நாம் இழந்து விடக்கூடாது. இல்லையெனில் அவன் எப்போது அழிவான், அவனுக்கு எப்போது கஷ்டம் வரும் என்பதில் சந்தேகமே வேண்டாம். கவனமாய் இருப்போம்.

    * பிறரின் ஆதரவு இல்லாமல் நம்மை நாமே உருவாக்கிக் கொண்டு செயல்பட முடிந்தால் எத்தனை பெரிய சுதந்திரம். ஆனந்தம் தெரியுமா?

    * மற்றவர் இப்படி நினைப்பாரோ, அப்படி நினைப்பாரோ என்ற கவலையே இருக்காது.

    * தனித்தன்மையே ஒரு சாதனை தான்.

    * நிலையான குறிக்கோள்களை நிர்ணயிக்க முடியும். அடைய முடியும்.

    * சமுதாயத்தில் கொள்கை பிடிப்புள்ள மனிதனாகத் தெரிவீர்கள்.

    * நம் மனதில் உணர்ந்த உண்மைகளை எதிர்த்து போராட மாட்டோம்.

    * நம்முடைய காந்த சக்தி பெருகும்.

    * தனி ஒளியாய் பிரகாசிப்பீர்கள்.

    * உடல் ஆரோக்கியமே வளமான சொத்து, உண்மையான சொத்து என்று தெரியும்.

    * நம்மை முன்னேற்றிக் கொள்வதில் மட்டுமே கவனம் இருக்கும். பிறரிடம் குறை கண்டுபிடிக்க நேரமே இருக்காது.

    * வாழ்க்கையில் முன்னேற 'லிப்ட்' வேண்டும் என்ற சோம்பேறித்தனம் இருக்காது.

    பிறப்பும், இறப்பும் தனிமை தான்

    * ஆழ்மன, உள்மன மகிழ்ச்சிதான் வெற்றி.

    'இதுதான் அசுர வளர்ச்சி'

    • இன்னும் சொல்லப்போனால் முயல்வது என்பது இடைவிடாது முயன்றுகொண்டே இருப்பதும் ஆகும்; இதுவே இடைவிடாத முயற்சி.
    • ஒன்றும் பதில் சொல்லாமல், வேடனைக் கடுகடுவென்று பார்த்துக் கொண்டிருந்தார் துறவி.

    இடைவிடாத முயற்சியில் என்றுமே தோற்றுப் போகாத அன்பு வாசகப் பெருமக்களே! வணக்கம்!.

    முயற்சி என்பது ஒரு செயலில் அல்லது ஓர் இலக்கில் கருத்தை வைத்து, அதை வெற்றிகரமாக எட்டிப் பிடிப்பதற்கு முயல்வது ஆகும். முயல்வது என்றால், இலக்கை எட்டிப் பிடிப்பதற்கான திட்டங்களை வகுப்பது, பிறகு செயலை அதனடிப்படையில் நடக்கும்படி செயல்படுத்துவது ஆகியவை மட்டுமன்று; எடுத்த முயற்சியை, செயல் முடியும்வரை இயக்கிக் கொண்டே இருப்பதும் ஆகும்; இன்னும் சொல்லப்போனால் முயல்வது என்பது இடைவிடாது முயன்றுகொண்டே இருப்பதும் ஆகும்; இதுவே இடைவிடாத முயற்சி.

    எந்தவொரு திட்டமிடலுக்கும் செயலாக்கம் அவசியம். அந்தச் செயலாக்கத்தை நெறிப்படுத்துவதும்; தகுந்தவகையில் ஊக்குவிப்பதும் முயற்சியே ஆகும். தனிப்பட்ட வகையிலோ அல்லது கூட்டான திட்டமிடலிலோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்; மேற்கொள்ளத் தொடங்கும் எந்த முயற்சியும் எடுத்த எடுப்பிலேயே வெற்றி கண்டுவிடும் என்பது உறுதியில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இடைவிடா முயற்சியே அவசியமானதாகக் கூறப்படுகிறது.

    இடைவிடா முயற்சி என்பது, ஒரு செயலில் இறங்கி வெற்றியை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் போது, இடையில் ஏற்படும் தொய்வுகளுக்கும் தொந்தரவுகளுக்கும், தடங்கல்களுக்கும், இடையூறுகளுக்கும் சுணங்கிப் போகாமல், வெற்றி ஒன்றையே இலக்காக்கிக் கொண்டு முன்னேறுவது ஆகும். திருவள்ளுவர்,

    "தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்

    மெய் வருத்தக் கூலிதரும்"

    என்று குறிப்பிட்டிருப்பது விடாமுயற்சியை வலியுறுத்துவதற்காகவே ஆகும். தொடங்குகிற எல்லாச் செயலும் மனித முயற்சிகளினாலும், மனிதத் திட்டமிடல்களினாலுமே தொடக்கம் காண்கின்றன. ஆனால் அவற்றில் பல, மனிதக் கணக்குகளையும் தாண்டிய தோல்விகளில் போய் முடிவடைந்து விடுகின்றன. இந்த இடங்களில், 'நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைப்பதாக' நம்மில் பலர் நொந்து கொள்கிறோம்: தோல்விகளுக்கான காரணங்களை விதியின்மேல் போட்டுவிட்டு அந்தச் செயல்முயற்சியிலிருந்து விலகிக்கொள்ளவும் செய்கிறோம்.

    ஆனால், எத்தனை தோல்விகள் எதிர்ப்பட்டாலும், உனது முயற்சியைக் கைவிட்டுவிடாதே!; மனவருத்தம் வருகிறதா? பொறுத்துக் கொள்!; உடல் வருத்தம் மேலிடுகிறதா? தாங்கிக் கொள்! இடைவிடா முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டே இரு! முயற்சிக்கேற்ற பலன் நிச்சயம் உனக்குக் கிட்டும் என்பதே வள்ளுவ வாக்கு.

    தொடர் முயற்சி என்பதே பல தோல்விக் கண்ணிகளால் கோர்க்கப்பட்ட சங்கிலி என்றே அர்த்தம்; சங்கிலியில் ஒவ்வொரு கண்ணியும் அதனதன் அளவில் முடிவு பெற்றவைதான் என்றாலும், அவற்றை வாகாக ஒன்றன்பின் ஒன்றாக ஒருங்கிணைத்து, அறுந்துபோகாமல், விடாமுயற்சியுடன் கோர்க்கத் தொடங்கினால், வெற்றியின் இலக்கை அந்தச் சங்கிலி அறுந்துபோகாமல் எளிதில் எட்டிப் பிடித்து விடும் அல்லவா!. ஒரு செயலை மீண்டும் மீண்டும் செய்வது பயிற்சி ஆகும். நேற்றைவிட இன்றைய பயிற்சியில் சற்று முன்னேற்றம்!; இன்றைவிட நாளைய பயிற்சியில் சற்றுத் தெளிவு, என நாளுக்குநாள் பயிற்சியைப் பெருக்கப் பெருக்க, அந்த முயற்சியில் நுணுக்கமும் மெருகும் கூடிக்கொண்டே போகும்; நுணுக்கமும் மெருகும் பெருகப் பெருக, வெற்றியின் தொலைவு சுருங்கிப்போகும்; வெற்றி நம் காலடியில் வந்து 'ஏற்றுக்கொள்!' என்று இன்பப் பரணி பாடும். அந்த வகையில், பயிற்சி என்பதே இடைவிடா முயற்சிக்கு அடிப்படையாக அமைவது தான்.

    சுந்தர ஆவுடையப்பன்


     

    எந்தச் செயலிலும் ஒற்றை முயற்சியில் வெற்றிகண்டோர் மிக மிகக் குறைவு, எந்தச் செயல் முயற்சியிலும் ஒவ்வொரு தோல்வியையும் ஒரு படிப்பினை என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்; தோல்வியைப் பயிற்சி என்று ஏற்றுக் கொண்டால், முயற்சியில் தொய்வுகள் ஏற்படாது. வெற்றியின் பாதைக்கான தொலைவை உணர்த்தும் மைல் கற்களாக, நமக்கு ஏற்படும் தோல்விகளே திகழுகின்றன. செயல் முயற்சிப் பாதையில் நிகழுகின்ற தோல்விகள், நமது பயண தூரத்தை நீட்டித்துக் கொண்டே போகலாம்; ஆயினும் எத்தனை தோல்வித் துன்பங்கள் வந்தாலும் அவற்றையெல்லாம், புதிய புதிய பாடங்களாகவும், வழிகளாகவும் ஏற்றுக் கொண்டால் இடைவிடா முயற்சியின் பயணம் இன்பப் பயணமாக அமைந்து விடும்.

    இடைவிடா முயற்சி மேற்கொள்ளுதலில், தளர்ந்து போகாத நம்பிக்கை ஊன்றுகோலாகத் திகழவேண்டும். தளர்ந்து போகாத நம்பிக்கை, நமக்கு மேலும் மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தி, இடைவிடா முயற்சியை இனிய அனுபவமாக மாற்றிவிட வேண்டும்.

    ஒருகாடு. அங்கே அடர்ந்த வனப்பகுதியில் ஒரு துறவி அமர்ந்து ஓராண்டுக்கும் மேலாகத் தவம் இயற்றிக் கொண்டிருந்தார். அவருடைய தவத்தின் அடிப்படையான நோக்கம், கடவுளை நேருக்கு நேராகக் காண வேண்டும் என்பதாகும். ஒருநாள் ஒரு வேடர்தலைவன் வில் அம்பு சகிதமாகத் துறவி இருக்கும் பக்கமாக வந்தான். 'இந்த அத்துவான வனப்பகுதிக்குள் யார் இங்கே அமர்ந்திருப்பது?; அதுவும் அமர்ந்த நிலையிலேயே கண்களைத் திறக்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறார்!' என்ற சிந்தனையோடு, தவமிருக்கும் துறவியைத் தொட்டு எழுப்பினான் வேடன். "ஐயா! யார் நீங்கள்?. உங்களுக்கு உறங்குவதற்குப் பாதுகாப்பான வேறு இடம் கிடைக்கவில்லையா?" என்று கேட்டான்.

    துறவிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது, 'தவத்தைக் குலைத்து எழுப்பிவிட்டது மட்டுமில்லாமல் ஏன் உட்கார்ந்தபடியே உறங்குகிறாய் என்றுமல்லவா கேட்கிறான்?' ஒன்றும் பதில் சொல்லாமல், வேடனைக் கடுகடுவென்று பார்த்துக் கொண்டிருந்தார் துறவி. "ஐயா! உங்களைத்தான். யார் நீங்கள்? எதற்காக இந்த வனப்பகுதிக்குள் வந்து அமர்ந்திருக்கிறீர்?" மீண்டும் கேட்டான் வேடன். 'இவனிடம் போயெல்லாம் நம் தகுதிக்குப் பதில்சொல்ல வேண்டியிருக்கிறதே!' என்று வேண்டா வெறுப்பாக நினைத்துக்கொண்டு, "ஐயா! நான் அருகிலிருக்கும் நகரத்திலிருந்து இந்தக் காட்டிற்குள் வந்திருக்கின்றேன்!. கடவுளை நேருக்கு நேராகப் பார்க்க வேண்டும்! என்கிற ஒரே குறிக்கோளோடு இங்கு வந்து கடந்த ஓராண்டிற்கும் மேலாகத் தவம் இயற்றிக் கொண்டிருக்கிறேன்" என்றார் துறவி.

    "ஓ! கடவுள் என்பவர் மனிதர்கள் வாழும் நாட்டில் வாழாமல், மிருகங்கள் வாழும் இந்தக் காட்டில்தான் இருக்கின்றாரோ? நல்லது! நல்லது!. சரி ஐயா! அந்தக் கடவுள் என்பவர் எப்படி இருப்பார்? எனக்கு அவரின் அங்க அடையாளங்களைக் கூறுங்கள்!. முடிந்தால் நானும் தேடி உங்கள் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறேன்" என்றார் வேடர் தலைவன். 'நாட்டில் கற்க வேண்டிய அறிவு எல்லாவற்றையும் கற்ற நம்மாலேயே கடவுளைக் காண முடியவில்லை; காட்டில் எந்த அறிவும் இல்லாமல், வெட்டு! குத்து! என்கிற வன்முறைச் சொற்களையே கற்ற இந்தக் காட்டுவாசியிடம், கடவுளைப் பற்றிப் பேசி என்ன பயன்?' என்று மனதில் நினைத்துக்கொண்டு பேசாமல் இருந்தார் துறவி.

    ஆனாலும் வேடன் துறவியை விடுவதாயில்லை. "ஐயா! சும்மா சொல்லுங்கள்! நான் இந்தக் காட்டுக்கே ராஜா; வேடர் தலைவன்!. இந்தக் காட்டில் வாழும் எல்லா உயிரினங்களும் எனக்கு அத்துபடி. சொல்லுங்கள்! கடவுள் எப்படி இருப்பார்?; சிங்கம், புலி, மான், யானை, நரி இப்படி எந்த மிருகத்தைப் போல இருப்பார்? அல்லது மனிதனைப் போல இருப்பாரா?. இந்தக் காட்டில் எனக்குத் தெரியாத இடங்களே கிடையாது; அடையாளத்தை நீங்கள் சொன்னால் போதும்; இன்று இருட்டுவதற்குள் கடவுளை நான் நிச்சயம் கண்டுபிடித்து உங்களுக்குக் காட்டிவிடுவேன்!" என்றான் வேடன்.

    'எப்படியாவது நம்மைத் தொந்தரவு செய்யாமல் அந்த வேடன் இந்த இடத்தைக் காலிசெய்தால் போதும்' என்று நினைத்த துறவி, "ஐயா! கடவுள் சிங்கத்தின் தலையோடும் மனிதனின் உடம்போடும் இருப்பார்!; முடிந்தால் கண்டுபிடித்துச் சொல்லுங்கள்" என்றார் துறவி. கடவுளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் வேடர்தலைவன் விடா முயற்சியுடன் இறங்கித் தேடத் தொடங்கினான். ஆனால் மாலை வரை வேடனின் கண்களில் 'சிங்கத்தலை மனிதஉடல்' கடவுள் தென்படவே இல்லை; 'இருட்டுவதற்குள் கடவுளைக் காட்டுகிறேன் என்கிற எனது உறுதிமொழி என்னாவது? கடவுளே என் கண்முன்னால் வரமாட்டாயா? வாக்குத் தவறிய நான் உயிரோடு இருந்தாலென்ன? மாண்டால் என்ன?' என்று எண்ணிக்கொண்டே அருகிலிருந்த ஒரு மரத்தின் வேரைக் கழுத்தில் இறுக்கிகொண்டு செத்துப் போகத் துணிந்தான் வேடன்!.

    அப்போது அருகிலிருந்த புதருக்குள் இலைகள் அசையும் ஓசை கேட்டது. வேடன் திரும்பிப் பார்த்தான், சிங்கத் தலை மனித உடம்போடு ஓர் உருவம் புதரிலிருந்து வெளிப்பட்டு அருள்பாலித்தது. அவ்வளவுதான், அந்த இடத்திலிருந்து மகிழ்ச்சிப் பெருக்கோடு ஓடித், தவத்திலிருந்த துறவியை அழைத்துக் கொண்டு வந்து, "இதோ நீங்கள் தேடிக்கொண்டிருந்த கடவுள் இவர்தானே! நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்!" என்று வேடன் காட்டினான். சிங்கத்தின் தலையோடும் மனிதனின் உடம்போடும் கடவுள் இருந்ததைக் கண்ட துறவிக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை; இருந்தாலும் கடவுளின்மீது ஒரு சிறு வருத்தமும் துறவியின் மனத்தில் உதயமானது.

    "நான் கடந்த ஓராண்டிற்கும் மேலாக உரிய மந்திர உச்சாடனங்களோடு உம்மைக் காணத் தவமாய்த் தவமிருந்து இங்கு வனத்தில் காத்துக் கிடந்தேன்; என் கண்முன்னே நீர் வரவேயில்லை; ஆனால், எந்தப் படிப்பறிவும் இல்லாத இந்த வேடன் தேடத் தொடங்கியதும், ஒரே நாளில் அவன் தேடிய உருவத்திலேயே வந்து காட்சியளித்து விட்டீரே எப்படி?" துணிச்சலோடு கடவுளிடம் கேட்டு விட்டார் துறவி.

    கடவுள் சிரித்துக்கொண்டே பதில் சொன்னார், "நீ என்னைக் காண்பதற்காக தவம் என்கிற கருவி கிடைத்துவிட்டதால் அதை மட்டுமே பிடித்துக்கொண்டு, என்னைக் காணக் காத்திருந்தாய்; என்னைக் காணும் ஆவலும் நம்பிக்கையும் உனக்கு இரண்டாம் பட்சமாய்ப் போய்விட்டது. ஆனால், வேடனோ முழு நம்பிக்கையுடனும், வேட்கையுடனும் இடைவிடா முயற்சியோடு தேடத் தொடங்கினான்; தேடுவதும் கண்டடைவதுமே அவனுக்கு வாழ்நாள் குறிக்கோள் ஆயின; அதனால் அன்றே அவன் பயனை அடைந்தான். இடைவிடாத நம்பிக்கையும் முயற்சியுமே எச்செயலின் வெற்றிக்கும் அடிப்படைகளாகும்!" என்றார்.

    இறுதி பயப்பினும் எஞ்சாது, கொண்ட குறிக்கோளில் இடைவிடாது கவனம் வைத்து முயற்சி செய்தால், கடவுளையே காணலாம் என்னும்போது, வெற்றிச் சாதனைகளை மட்டும் எட்டிப் பிடிக்க முடியாதா என்ன?.

    தொடர்புக்கு - 9443190098

    • சந்திர மேட்டில் வட்டம் காணப்பட்டால் அவர்களுக்கு நீர் மற்றும் நீர் சம்மந்தமான வியாதிகளால் ஆபத்து ஏற்பட இடம் உண்டு.
    • உங்கள் முற்கால வாழ்க்கையை விட பிற்கால வாழ்க்கை அதிக நன்மைகளை செய்யும் விதமாக உள்ளது.

    புத்தி ரேகைக்கு கீழ், விதி ரேகைக்கு முன் சுக்கிர மேட்டிற்கு நேர் மறுபுறம் அமைந்து இருக்கும் மேடு சந்திர மேடு எனப்படும். ஒருவரின் கற்பனை திறன், வாழ்வில் அவர் சந்திக்கும் மான அவமானங்கள், ஒருவரின் தனிப்பட்ட குணநிலை, மனோநிலை, ஞாபக சக்தி, மற்றவர்களை வசீகரித்து கட்டுப்படுத்தும் ஆற்றல் என அனைத்தையும் சந்திர மேட்டை கொண்டு அறியலாம்.

    இந்த சந்திர மேட்டில் எந்தெந்த குறியீடுகள் எந்த மாதிரியான பலன்கள் தரும் என்பதை காண்போம் வாருங்கள்.

    சந்திர மேட்டில் ஒரே ஒரு கோடு இருக்குமானால் அவர்களுக்கு கற்பனைத் திறன் அதிகரித்து காணப்படும். பல கோடுகள் இருப்பின் அழகை ஆராதிக்கும் இயல்பு காணப்படும். குறுக்கும், நெடுக்குமாக பல கோடுகள் இருப்பின் தேவை இல்லாத பயத்தை அவர்கள் மனதில் தரும். காதல் விவகாரங்களில் அவசர முடிவை எடுப்பதை கூடுமான வரையில் தவிர்க்கவும். மனைவி அல்லது பெண் வழியில் சொத்துக்கள் கிடைக்கப்பெறலாம். அயர்ச்சியை பார்க்காமல் உழைக்கக் கூடியவர்கள்.

    சந்திர மேட்டில் பெருக்கல் குறி காணப்பட்டால் அது அவமானத்தை மற்றும் ஏமாற்றத்தை தர வல்லது. வாழ்க்கையில் வருமானத்தை விட செலவு அதிகம் இருக்கும். மனைவியினால் சில தொல்லைகள் ஏற்பட இடம் உண்டு.

    சந்திர மேட்டில் நட்சத்திரம் காணப்பட்டால் அவர்களுக்கு பொது வாழ்வில் மதிப்பும், மரியாதையும்கூடும். ந. பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை இருக்கும். மற்றவர்களின் மனதை கவரும் குணங்களுடன் இருப்பீர்கள். பிறர் உங்களின் வாக்கிற்கு கட்டுப்பட்டு இருப்பார்கள்.

    சந்திரன் மேட்டில் பல கோடு காணப்பட்டால் அழகை வழிபடும் இயல்பு காணப்படும். பிறக்கும் பிள்ளைகள் எதிர்காலத்தில் படித்த அறிவாளிகளின் சமூகத்தில் பிரசித்தி பெற்று புகழுடன் இருப்பார்கள். நல்ல புத்தி கூர்மையுடன் விளங்குவீர்கள். எதிர்காலத்தில் ஆன்மீகத்தில் உங்களுக்கு நாட்டம் ஏற்பட்டு ஏதேனும் தெய்வ காரியத்தை கூட நீங்கள் எடுத்துச் செய்யலாம் அல்லது அதற்கு உதவலாம்.

    சந்திரன் மேட்டில் குறுக்கு நெடுக்குக் கோடுகள் காணப்பட்டால் மனதளவில் தேவை அற்ற பயம் மற்றும் சந்தேக குணம் உங்களிடம் காணப்படும். எதிரிகள், விரோதிகள், அவதூறு பேசுபவர்கள் உங்களை சுற்றி அதிகம் இருக்கலாம். குடும்பம் அடிக்கடி இடமாற்றத்தை சந்திக்கும் படியாக இருக்கும். வாழ்வில் அலைச்சல் அதிகம் இருக்கும். திறமைகள் இருந்தும் கூட அவை வெளியில் வராமலே போகலாம். அதனால் உங்கள் திறமைகளை வெளிக்காட்டிக் கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்துங்கள்.

     

    பௌர்ணமி தினத்தில் அம்பாளை வழிபட்டு வாருங்கள் நன்மை உண்டு. சந்திர மேட்டில் சதுரம் காணப்பட்டால் செல்வங்களை சேமிக்கும் குணமும் அத்துடன் அவற்றை பாதுகாக்கும் குணமும் சேர்ந்தே காணப்படும். பூமி சம்மந்தமான பொருள்களால் நீங்கள் லாபத்தை பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு இருக்கும். உங்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் எதிர்காலத்தில் படித்த அறிவாளிகளின் சமூகத்தில் பிரசித்தி பெற்று புகழுடன் இருப்பார்கள்.

    சந்திர மேட்டில் முக்கோணம் காணப்பட்டால் கவிதை எழுதுவதில் ஆர்வம் இருக்கும். கலைத்திறமை மேம்படும். மற்றவர்களின் மனதை கவரும் குணங்களுடன் நீங்கள் இருப்பீர்கள். மனைவி அல்லது பெண் வழியில் சொத்துக்கள் கிடைக்கப்பெறலாம் புண்ணியகாரியங்களில் உங்களுக்கு பற்றுதல் இருக்கும். எதிர்காலத்தில் நீங்கள் தெய்வ காரியங்களில் கூட ஈடுபடுவீர்கள்.

    சந்திர மேட்டில் வட்டம் காணப்பட்டால் அவர்களுக்கு நீர் மற்றும் நீர் சம்மந்தமான வியாதிகளால் ஆபத்து ஏற்பட இடம் உண்டு. நீங்கள் நீர் நிலைகளில் இறங்கும் சமயத்தில் அதிக கவனத்துடன் இறங்குதல் நலம். தாராள மனது உடையவர்களாக இருப்பீர்கள்.

    இதனால் அதிகம் ஏமாற்றப்படலாம். வருமானத்தை விட செலவு அதிகம் இருக்கும். எனினும் பிற்காலத்தில் ஓரளவு செல்வ நிலையை அடைவீர்கள்.

    சந்திர மேட்டில் வலை காணப்பட்டால் வாழ்வில் அதிக ஏமாற்றத்தை நீங்கள் சந்திப்பீர்கள். பிறகு தெளிவு பெற்று ஞானம் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கை ஒரு சக்கரம் போலவே இருக்கும். நன்மை, தீமைகள் மாறி - மாறி வந்து கொண்டே இருக்கும். ஆயுள் தீர்க்கம் உண்டு

    சந்திர மேட்டில் புள்ளி அல்லது கரும் புள்ளி காணப்பட்டால் காதல் விஷயங்களில் அவசர முடிவும் அதனால் தோல்வியும் ஏற்பட இடம் உண்டு.

    சந்திர மேட்டில் சூரியனின் சின்னம் காணப்பட்டால் உழைப்பை நம்பாமல் அதிகம் அதிர்ஷ்டத்தை நம்பி வீணாய் போவார்கள். எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பார்கள். இதனால் தவறான முடிவுகளை எடுத்து துன்பம் அடைவார்கள். நீங்கள் யூகங்களின் அடிப்படையில் செயல்படுவதை முடிந்தவரையில் தவிர்ப்பது நல்லது. உங்கள் நலம் விரும்பும் பெரியோர்களின் ஆலோசனைப் படி செயல் பட்டாலே வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். உத்யோகத்தில் நிறைய வேலை மாற்றங்களை சந்தித்தாலும் கூட வாழ்வில் சோர்வு அடைய மாட்டீர்கள். இதனால் உங்கள் முற்கால வாழ்க்கையை விட பிற்கால வாழ்க்கை சுபமாக இருக்கும்.

    அ.ச.இராமராஜன்

     

    சந்திர மேட்டில் சந்திரனின் சின்னம் காணப்பட்டால் அவர்களிடம் சுயநலம் அதிகம் இருக்கும். எப்போதும் தவறான முடிவுகளை எடுக்கும் தன்மை அவர்களிடம் காணப்படும். ரிஸர்வ்ட் டைப் என்று உங்களை சொல்லலாம். எனினும் நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப் படக்கூடியவர்கள். இதனால் சில காரியங்களில் நீங்கள் தவறான முடிவுகளை கூட எடுக்க நேரிடலாம். அதனால் எப்போதுமே நீங்கள் நிதானமாக செயல்படுவது உங்களுக்கு நல்லது.

    சந்திர மேட்டில் செவ்வாயின் சின்னம் காணப்பட்டால் அதிக சிந்தனை தடுமாற்றத்தை தரும். மனக்குழப்பத்தை இந்த அமைப்பு தந்து விடும் நன்மை தீமைகள் அறியாது, லாப நஷ்டங்களை அறியாது எண்ணின மாத்திரத்தில் எதையும் செய்து விட்டு அலைச்சல் முதலியவற்றை நீங்கள் அடையலாம். எனவே நிதானமாக யோசித்து செயல்படுங்கள்.

    சந்திர மேட்டில் புதனின் சின்னம் காணப்பட்டால் அதிக தெய்வ பக்தி கொண்டவர்கள். உங்கள் வாழ்க்கையில் ஏற்றமும், இறக்கமும் அதிகம் காணப்பட்டாலும் கூட அதைப் பற்றி எல்லாம் நீங்கள் அலட்டிக் கொள்ளாமல் உங்கள் வாழ்க்கைப் படியில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுவீர்கள்.

    சந்திர மேட்டில் குருவின் சின்னம் காணப்பட்டால் அவர்களிடம் தைரியம் அதிகம் காணப்படும். எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருக்கும்.. உங்கள் பிள்ளைகளுடன் எதிர்காலத்தில் கருத்து வேறுபாடுகள் வராமல் பார்த்துக் கொள்ளவும். பணத்தை சிக்கனமாக செலவு செய்து வாழ்க்கை வசதிகளை நீங்கள் பெருக்கிக் கொள்வீர்கள்.

    சந்திர மேட்டில் சுக்கிரனின் சின்னம் காணப்பட்டால் பெண் மோகம், உலகியல் பற்று அதிகம் காணப்படும். சந்திர மேட்டில் சனியின் சின்னம் காணப்பட்டால் தான் செய்ததே சரி என்ற எண்ணம் இருக்கும். தவறுகளைக் கூட சரி என்று வாதிடுவார்கள். இதனால் வாழ்க்கையில் நீங்கள் நிறைய இழப்புகளை சந்திக்க இடம் உண்டு. எனினும் போராடி வெற்றி காணிப்பீர்கள். உங்கள் வாழ்வில் அலைச்சல் அதிகம் இருக்கும். திறமைகள் இருந்தும் கூட அவை வெளியில் வராமலே போகலாம். அதனால் உங்கள் திறமைகளை வெளிக்காட்டிக் கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்துங்கள். விநாயகரை வழிபட்டு வாருங்கள். இனி வரும் காலங்களில் வெற்றி உண்டு.

    சந்திர மேட்டில் ராகுவின் சின்னம் காணப்பட்டால் அபார நம்பிக்கை காணப்படும். இந்த அபார நம்பிக்கையால் சில இடங்களில் நீங்கள் சறுக்கல்களையும் கூட சந்திக்க இடம் உண்டு. எனவே கவனமுடன் இருங்கள். உங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில் கண் சம்மந்தமான பிரச்சனைகள் வந்து போக இடம் உண்டு. அதனால் கண்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். சூரிய நமஸ்க்காரம் செய்வது தங்களுக்கு நன்மை பயக்கும்.

    சந்திர மேட்டில் கேதுவின் சின்னம் காணப்பட்டால் பொறுமை இல்லாமல் அவசர முடிவுகளை எடுத்து சிரமம் அடைவார்கள். உங்களிடம் கோபமும், பிடிவாத குணமும் கலந்து இருக்கும். இதனால் அவசரத்தில் நீங்கள் சில தவறான முடிவுகளையும் கூட எடுக்க நேரிடலாம். அதனால் கோபத்தை விட்டு நீங்கள் நிதானமாக செயல்பட்டால் வாழ்க்கையில் நீங்கள் பல வெற்றிகளை அடைவீர்கள். உங்கள் முற்கால வாழ்க்கையை விட பிற்கால வாழ்க்கை அதிக நன்மைகளை செய்யும் விதமாக உள்ளது.

    செல்பேசி- 9965799409

    • மனித உடலின் வளர்ச்சி, மேம்பாடு மற்றும் செயல்பாடுகளை பராமரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன.
    • நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள்.

    வரலாற்றில் நீண்ட காலத்திற்கு முன்பு, கிழக்கு இந்திய நிறுவனத்தின் மாலுமிகள் ஈறுகளில் ரத்தப்போக்கு, சோர்வு, தசைகளில் பலவீனம் குறித்து புகார் கூறத் தொடங்கினர். அவர்களுக்கு ஆரஞ்சுப்பழச் சாறு கொடுத்தவுடன் அந்த அறிகுறிகள் மறைந்துவிட்டன. விஞ்ஞானிகள், ஆரஞ்சுப்பழச் சாற்றில் உள்ள ஒரு சிறப்பு மூலப்பொருள்தான் மாலுமிகளை குணப்படுத்தியது என்பதைக் கண்டுபிடித்தனர். இவ்வாறு வைட்டமின் சி கண்டுபிடிக்கப்பட்டது!

    மருத்துவ வரலாற்றைப் பார்த்தால், கிட்டத்தட்ட அனைத்து நோய்களும் தொற்று கிருமிகளால் ஏற்படுவதாகக் கருதப்பட்டது. வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் பிற நுண்ணுயிரிகள் அனைத்து நோய்களையும் ஏற்படுத்துவதாகக் கருதப்பட்டது. அதன் பிறகு விஞ்ஞானிகள் பறவைகள், விலங்குகள் மற்றும் இறுதியாக மனிதர்கள் மீது பல்வேறு பரிசோதனைகளைச் செய்யத் தொடங்கினர், அப்போது தான் நோய்களுக்கு மேற்கண்டவை மட்டும் காரணம் அல்ல, ஏதோ ஒரு காரணியின் குறைபாடும் என்பதைக் கண்டுபிடித்தனர், இறுதியாக அது வைட்டமின்கள் என கண்டுபிடிக்கப்பட்டன!

    வைட்டமின்கள் என்றால் என்ன?

    நீங்கள் எப்போதாவது மருத்துவரை சந்திக்கச் செல்லும்போது, அவர் வைட்டமின் டி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்ற வைட்டமின் மாத்திரைகளை ஏன் பரிந்துரைக்கிறார் என்று யோசித்திருக்கிறீர்களா? கால் வலி? வைட்டமின் மாத்திரை. முதுகுவலி? வைட்டமின் மாத்திரை. பலவீனமாக உணர்கிறீர்களா? வைட்டமின் மாத்திரை!

    ஏன் என்று கண்டுபிடிப்போம்!

    வைட்டமின்கள் வேதியியல் ரீதியாக சிக்கலான சேர்மங்களை கொண்டது. இது மனித உடலின் வளர்ச்சி, மேம்பாடு மற்றும் செயல்பாடுகளை பராமரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. அவற்றை மனித உடலால் போதுமான அளவில் ஒருங்கிணைக்க முடியாது, எனவே நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து அதைப் பெற வேண்டும். பல்வேறு வகையான வைட்டமின்கள் உள்ளன, ஒவ்வொன்றும் வெவ்வேறு பணிகளைச் செய்கின்றன.

    வைட்டமின்களின் வகைகள்:

    நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள்.

    நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள்:

    டாக்டர் நிஷா

    தண்ணீரில் கரைகின்ற வைட்டமின்களை நீண்ட காலத்திற்கு உடலில் சேமிக்க முடியாது. எனவே நாம் அவற்றை தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகப்படியான அளவு சிறுநீரில் வெளியேற்றப்படுகிறது. நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஆகும், அவை வைட்டமின் பி 1, பி 2, பி 12, பி 6, பி 4 ஆகும்.

    கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள்:

    அவை கொழுப்போடு உறிஞ்சப்பட்டு கொழுப்பு திசுக்கள் மற்றும் கல்லீரலில் சேமிக்கப்படுகின்றன.

    கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் வைட்டமின் ஏ, டி, இ, கே. இன்று நாம் மிகவும் பிரபலமான வைட்டமின் டி பற்றி விவாதிக்கப் போகிறோம்.

    வைட்டமின் டி, பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் தொற்றை தடுக்கும். சுவாச நோய்த்தொற்றுகள், இரைப்பை குடல் மற்றும் தோல் தொற்றுகளைத் தடுப்பதிலும் உதவுகிறது. இயற்கை மருத்துவ மனைகளில் நோயாளிகளுக்கு சூரிய குளியல் கொடுக்கப்படும். இதன் மூலம் வைட்டமின் டி அளவு அதிகரித்து, தோல் நோய்கள் குணமடைவதில் முன்னறே்றம் காணப்படும்.

    கோவிட் காலத்தில், உடலில் வைட்டமின் டி சத்து அதிகமாக இருந்தவர்களை விட குறைவாக இருந்தவர்களே அதிகம் இறந்துள்ளனர்.

    மஞ்சளில் காணப்படும் வைட்டமின் டி, குர்குமின் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் தோல் ெதாற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியாகவும் திகழ்கிறது.

    வைட்டமின் டி இன்புளூயன்ஸா, பிற சுவாச நோய்த்தொற்றுகள் மற்றும் சுவாச மண்டலத்தின் ஒவ்வாமை நோய்களைத் தடுப்பதில் சிறந்தது.

    வைட்டமின் டி அளவுகள் குறைவது அறிவாற்றல் குறைவு மற்றும் அல்சைமர்ஸ் நோயின் அதிக நிகழ்வுகளுடன் தொடர்புடையது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

    வைட்டமின் டி ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது, எனவே உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. வைட்டமின் டி இதயத்தின் சிறந்த செயல்பாட்டிற்கு உதவுகிறது. பெண்களுக்கு வைட்டமின் டி எலும்பு ஆரோக்கியத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. கருவுறுதலுக்கு வைட்டமின் டி மிகவும் முக்கியமானது. வைட்டமின் டியை தொடர்ந்து உட்கொள்ளும் பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

    அதேபோல் தாய்மார்களுக்கு வைட்டமின் டி குறைபாடு குறைப்பிரசவ குழந்தைகளுடன் தொடர்புடையது. எனவே கர்ப்பகாலத்தில் வைட்டமின் டி பரிசோதனை மிகவும் முக்கியமானது.

    மாதவிடாய் காலத்தில் வைட்டமின் டி மனநிலை மாற்றங்களைத் தவிர்க்க உதவுகிறது மற்றும் தசை எலும்பு ஆரோக்கியத்திற்கும் அறிவாற்றல் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.நல்ல முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

    எனவே, நாம் அனைவரும் வைட்டமின் டி பரிசோதனை செய்து போதுமான அளவு சூரிய ஒளியைப் பெறுவோம். அலுவலக வேலைகள், முழுநேர ஏசி அல்லது பிற உட்புற வேலைகள் இருப்பதால் சூரிய ஒளி சாத்தியமில்லை என்றால், ஒரு மருத்துவரை அணுகி கூடுதல் மருந்துகளை பரிசீலிக்கலாம்.

    உணவில் இருந்து மட்டுமே வைட்டமின் டி பெறுவது மிகவும் கடினம். எனவே மேலே கூறப்பட்ட நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட வேண்டும்.

    செல்- 8825805858

    • ஹெல்த் இன்சூரன்ஸ் என்னும் பாதுகாப்பு ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிகவும் தேவையான ஒன்று.
    • ஒவ்வொரு குடும்பமும், ரூ.5 லட்சம் வரைக்கான மருத்துவ வசதிகளை ஒவ்வொரு வருடமும் இலவசமாகப் பெறலாம்.

    'ஹெல்த் இஸ் வெல்த்' என்ற ஆங்கிலப் பழமொழி பொய்யல்ல என்று கொரோனா நன்றாகவே நிரூபித்துவிட்டது. 6 லட்சம், 7 லட்சம் என்பது அதிக பட்ச ஆஸ்பத்திரி செலவு என்று நாம் எண்ணியிருக்க, கொரோனாவுக்கு 15 லட்சம், 20 லட்சம் என்று செலவானதைப் பார்த்தோம். இதனால் பல குடும்பங்கள் தங்கள் குடும்பத்தினர் உயிரை மட்டுமின்றி, தங்கள் வாழ்நாள் சேமிப்பையும் மருத்துவமனை பில் கட்டியே இழந்தன. இன்றைய சூழ்நிலையில், மருத்துவப் பணவீக்கம் 14 சதவீதம் என்னும் உச்ச அளவில் இருக்கும்போது, ஹெல்த் இன்சூரன்ஸ் என்னும் பாதுகாப்பு ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிகவும் தேவையான ஒன்று.

    ஹெல்த் இன்சூரன்ஸ்

    நாம் ஒரு நல்ல இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து, நமக்குத் தேவையான அளவு ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். அதற்கு நாம் ஒரு தொகையை பிரீமியமாகக் கட்ட வேண்டியிருக்கும். நாம் என்ன காரணத்துக்காக சிகிச்சை பெற்றாலும், இன்சூரன்ஸ் நிறுவனம், டாக்டர் பீஸ், மெடிக்கல் டெஸ்ட்டுகள், ஆம்புலன்ஸ் செலவு, ஆஸ்பத்திரி செலவுகள் போன்றவற்றை ஈடு கட்டும். ஒரே பாலிசியில் குடும்ப அங்கத்தினர்கள் அனைவரையும் கவர் செய்யும் பேமிலி ப்ளோட்டர் பாலிசிகளும் உள்ளன. நிறைய கம்பெனிகள் பணியாளர்களுக்காக குரூப் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கின்றன.

    ஹெல்த் இன்சூரன்ஸின் நன்மைகள்

    கேஷ்லெஸ் வசதி இது முன்பணம் ஏதும் கட்டாமலேயே மருத்துவம் பெறும் வசதி. முன்பெல்லாம் நம் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட நெட் ஒர்க் மருத்துவமனைகளில் மட்டுமே இந்த வசதி கிடைத்தது. இப்போது நம் நாட்டில் உள்ள 40,000 மருத்துவமனைகளில் ஹெல்த் இன்சூரன்ஸ் பயனாளிகள் கேஷ்லெஸ் சிகிச்சையைப் பெறலாம். அந்த மருத்துவமனை குறைந்த பட்சம் 15 படுக்கைகள் கொண்டதாகவும், க்ளினிக்கல் எஸ்டாப்லிஷ்மென்ட் ஆக்ட்படி அந்தந்த மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டதாகவும் இருக்கவேண்டும். மருத்துவமனையில் சேர்வதற்கு 60 நாட்கள் முன்னும் / பின்னும் ஏற்படும் செலவுகளை ஈடுகட்டும் வசதி உள்ள பாலிசிகள் உள்ளன.

    நோயாளியை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் செலவும் ஈடுகட்டப்படுகிறது. ஒருவர் முந்தைய வருடத்தில் எந்த இழப்பீடும் கேட்காமல் இருந்திருந்தால் போனசாக சில வசதிகள் தரப்படுகின்றன. சில நிறுவனங்கள் இலவச ஹெல்த் செக் அப்புகளை வழங்குகின்றன.

    மருத்துவமனையில் தங்கும் அறைக்கான செலவுகள், ஐ.சி.யு. செலவுகள் போன்றவை பாலிசியைப் பொறுத்து ஈடுசெய்யப்படுகின்றன. 45 வயதுக்கு முன் பாலிசி எடுப்பவர்கள் கட்டாய ஹெல்த் செக் அப்பை எடுக்கத் தேவையில்லை. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் இருக்கும்பட்சத்தில் அவை குறித்து தெரிவித்தால் போதும்.

    ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கத் தேவையான ஆவணங்கள்

    வயதுச் சான்று – பிறப்புச் சான்றிதழ், 10th அல்லது 12th மார்க் ஷீட், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், வோட்டர் ஐ.டி. – இவற்றில் ஒன்று. அடையாளச் சான்று – டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், வோட்டர் ஐ.டி., பான் கார்ட், ஆதார் கார்ட் – இவற்றில் ஒன்று. முகவரிச் சான்று – கரன்ட் பில், போன் பில், ரேஷன் கார்ட், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் –இவற்றில் ஒன்று. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, 45 வயதுக்கு மேற்பட்டவரானால் மெடிக்கல் செக் அப் ரிப்போர்ட் கேட்கப்படலாம்.

    ஹெல்த் இன்சூரன்ஸ் வகைகள்

    தனி மனிதருக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் – இதன் கீழ் பாலிசி எடுத்தவருக்கு ஏற்படும் மருத்துவமனை செலவுகள் காப்பீடு செய்யப்படுகின்றன. பாலிசிதாரரின் வயதைப் பொறுத்து பிரீமியம் நிர்ணயம் செய்யப்படும். குடும்பத்துக்கான ப்ளோட்டர் இன்சூரன்ஸ் – இதில் ஒரே பாலிசியில் ஒரு குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் காப்பீடு கிடைக்கிறது.

    சீனியர் சிட்டிசன் ஹெல்த் இன்சூரன்ஸ் இதில் 60 வயதைக் கடந்தோருக்கு ஏற்படக்கூடிய அனைத்து நோய்களுக்கும் காப்பீடு வழங்கப்படுகிறது.

    சுந்தரி ஜகதீசன்


     

    அறுவை சிகிச்சை மற்றும் தீவிர நோய்களுக்கான இன்சூரன்ஸ் –சிறுநீரக செயலிழப்பு, பக்கவாதம், புற்று நோய், மாரடைப்பு போன்ற தீவிர நோய்கள் இதன் கீழ் காப்பீடு பெறுகின்றன. இந்த சிகிச்சைகளுக்கான செலவு அதிகம்; ஆகவே பிரீமியமும் அதிகம்.

    மகப்பேறுக்கான இன்சூரன்ஸ் இதன் கீழ் மகப்பேறுக்கு முன்பும், பின்பும் ஏற்படக்கூடிய செலவுகள், பிறந்த குழந்தைக்கான மருத்துவ செலவுகள், ஆம்புலன்ஸ் செலவுகள் போன்றவை காப்பீடு பெறுகின்றன. விபத்து இன்சூரன்ஸ் –இந்தப் பாலிசி விபத்து ஏற்படும்போது, அதற்கான செலவுகளை ஈடுகட்ட உதவுகிறது.

    யூனிட் லிங்க்ட் ஹெல்த் இன்சூரன்ஸ் –இது இன்சூரன்சும், சேமிப்பும் கலந்த கலவையாகும். காப்பீட்டுக்குப் பெறப்படுவதை விட சற்று அதிகத் தொகை பிரீமியமாக வசூலிக்கப்படுகிறது. அந்தத் தொகை சேமிக்கப்பட்டு, சிகிச்சை சார்ந்த மற்ற செலவுகளுக்கு உதவுகிறது.

    அபோல்லோ, மேக்ஸ் பூபா போன்ற தனியார் நிறுவனங்கள், எஸ்.பி.ஐ., எல்.அண்ட்.டி, பஜாஜ், ஹெச்.டி.எப்.சி. போன்ற குழுமங்களின் நிறுவனங்களுடன், அரசு நிறுவனங்களான நேஷனல் ஹெல்த் இன்சூரன்சும், எல்.ஐ.சி.யும் கூட ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களை வழங்குகின்றன.

    வறுமைக் கோட்டின் கீழ் உள்ளோருக்கான அரசுத் திட்டங்கள்

    இன்று இந்தியா பொருளாதாரத்தில் நன்கு முன்னேறி, மக்கள் பலரும் நல்ல மருத்துவ வசதி, அதற்கான பொருளாதார வசதி போன்றவற்றைப் பெற்று விட்டாலும், பெரும்பாலானோர் இன்னும் கூட ஏழ்மையில் உழல்வதைப் பார்க்க முடிகிறது. மருத்துவச் செலவுகள் என்னும் பெரும் தடையைத் தாண்டுவதற்கு இவர்களுக்கு உதவ, மத்திய மாநில அரசுகள் பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளன.

    தமிழ்நாடு அரசின் திட்டங்கள் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம்

    தமிழ் நாட்டில் அரசு ஊழியர்களுக்கு, பென்ஷன் பெறுவோருக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு என்று பலவித இன்சூரன்ஸ் திட்டங்கள் இருந்தாலும், ஏழை, எளியோருக்கான முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் பெரும் உதவி ஆற்றி வருகிறது. ரூ.1,20,000/ க்குக் குறைவான வருட வருமானம் பெறுவோருக்குக்கான இந்தத் திட்டம், ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்குமாக ஒவ்வொரு வருடமும் ரூ.5 லட்சம் அளவுக்கான ஹெல்த் இன்சூரன்சை இலவசமாக வழங்குகிறது.

    இந்திய அரசாங்கத்தின் திட்டங்கள்

    ஆயுஷ்மான் பாரத் திட்டம்

    மத்திய அரசாங்கத்திலும் குறைந்த அளவு பிரீமியத்தில் ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்கும் திட்டங்கள் பல இருந்தாலும், வறுமைக் கோட்டின் கீழ் வரும் ஏழை, எளியோருக்கான ஆயுஷ்மான் பாரத் இலவச ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் பிரபலமாக உள்ளது. இதன் கீழ் ஒவ்வொரு குடும்பமும், ரூ.5 லட்சம் வரைக்கான மருத்துவ வசதிகளை ஒவ்வொரு வருடமும் இலவசமாகப் பெறலாம்.

    முதியோருக்கான ஆயுஷ்மான் பாரத் திட்டம்

    பென்ஷன், வாடகை, வட்டி வருமானம், பிள்ளைகளின் உதவி போன்றவற்றின் துணையுடன் காலத்தைக் கடத்தி வரும் முதியவர்களுக்கு முக்கிய பிரச்சினையாக இருப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகள்தான். முதியோருக்கு காப்பீடு வழங்குவதில் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு மிகுந்த தயக்கம் உள்ளது. ஆகவே முதியோருக்கான காப்பீடு என்பது பலருக்கும் எட்டாத கனியாக இருக்கிறது. இதனை உணர்ந்து இவர்களுக்கு உதவுவதற்காக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது மத்திய அரசு. இதற்கு முன்பான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே வருடத்துக்கு ரூ. 5 லட்சத்திற்குக் காப்பீடு அளிக்கப்பட்டிருந்தது. இப்போது அமலுக்கு வரும் திட்டத்தின்படி வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, 70 வயது நிறைந்த அனைவருக்கும் காப்பீடு கிடைக்கும். வசதியானவர்கள், வசதி குறைந்தவர்கள் என்ற பாகுபாடு இருக்காது.

    ஏற்கெனவே ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் குடும்பம் முழுமைக்குமாக கார்ட் பெற்றிருந்தாலும், அந்தக் குடும்பத்தின் முதியோர்களுக்கென்று தனியாக இன்னொரு ரூ.5 லட்ச ரூபாய்க்கான கார்ட் வழங்கப்படும்.

    ஜன் ஔஷதி திட்டம்

    இது இன்சூரன்ஸ் திட்டமல்ல. ஏழைகளுக்கும், சாமானியர்களுக்கும் குறைந்த விலையில் மருந்துகள் கிடைத்திட உதவும் மருந்துக் கடைகள். மருத்துவ விலை உயர்வு விண்ணை முட்டுகிறது; இதனால் நம் சேமிப்பு பாதிப்படைகிறது என்று அங்கலாய்க்கும் நம்மில் எத்தனை பேருக்கு தமிழ்நாட்டில் 940 ஜன் ஔஷதி கடைகள் இருக்கும் விஷயம் தெரியும்? சென்னையில் மட்டும் 140 கடைகள் உள்ளன. சிரமம் பாராமல் நம் வீட்டுக்கு அருகாமையில் உள்ள ஜன் ஔஷதி கடைகளுக்குச் சென்று மருந்துகள் வாங்குவதன் மூலம், மருத்துவச் செலவைக் கணிசமாகக் குறைக்கலாம்.

    முக்கியமாக, நீண்ட காலமாக மருந்துகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு போன்ற நோய்களால் அவதியுறுபவர்களுக்கு 50 சதவீதம் டிஸ்கவுன்ட்டில் மருந்துகள் தரும் இந்தக் கடைகள் ஒரு வரப்பிரசாதம்

    இன்சூரன்ஸ் பிரீமியத்துக்கான வரிவிலக்குகள்

    வருமானவரி பழைய முறையின் கீழ் ஒருவர் தனக்கும், தன் குடும்பத்துக்குமான பிரீமியம் தொகையில் ரூ.25000/ வரைக்கும், 60 வயதுக்குக் குறைந்த பெற்றோர்களுக்கான பிரீமியத்தில் ரூ.25000/ வரைக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட பெற்றோருக்கான பிரீமியத்தில் ரூ. 50000/ வரைக்கும் வரி விலக்கு பெறலாம். சீனியர் சிட்டிசன்கள் தங்களுக்கான பிரீமியத்தில் ரூ.50000/, தங்கள் பெற்றோருக்கான பிரீமியத்தில் ரூ. 50000/ வரை வரிவிலக்கு பெறமுடியும்.

    இன்சூரன்ஸ் கிளெய்ம் பெறும் முறை

    இப்போதெல்லாம் அனேகமாக எல்லா மருத்துவமனைகளிலும் இன்சூரன்ஸ் கிளெய்ம்களை நிர்வாகம் செய்ய தனியாக ஒரு அலுவலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களிடம் நமது இன்சூரன்ஸ் சார்ந்த விவரங்களைத் தெரியப்படுத்தி விட்டால் கிளெய்ம் பெறும் பொறுப்பை அவர்களே ஏற்றுக் கொள்கிறார்கள். இன்சூரன்ஸ் நிறுவனமும், மருத்துவமனையும் கை கோர்த்து செயல்படுவதால், மருத்துவமனைகள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை நேரடியாகத் தொடர்பு கொண்டு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து நமக்கான இன்சூரன்ஸ் தொகையை பெற்றுக் கொள்கின்றன.

    சிகிச்சைக்கான செலவுகளை விட கிளெய்மில் கிடைத்த தொகை குறைவாக இருந்தால் மீதி உள்ள தொகையை மட்டும் நாம் கட்டினால் போதும்.

    உங்களிடம் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி உள்ளதா? ஜன் ஔஷதி கடைகள் உங்கள் வீட்டில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளன?

    • வெற்றிலை மங்களப் பொருள் மட்டுமல்ல, மருத்துவப் பின்னனியும் நிறைய இருக்கிறது.
    • வெள்ளை நரம்பு கொண்ட வெற்றிலையே பெரும்பாலும் உண்பதற்கு பயன்படுகிறது.

    பேச்சு வழக்கில் வெத்திலை ஆகிவிட்ட வெற்றிலைதான் இன்று நம்முடைய கருப்பொருள்.

    வெற்றிலை ஒரு மங்களப் பொருள். வெற்றிலை என்றாலே சுபம், சந்தோஷம் அனைவருக்கும் விருப்பமான ஒரு பொருள்.

    நல்ல காரியங்களுக்கு, முக்கியமாக திருமண நிச்சயத்தார்த்த விழாவில் கதாநாயகனே வெற்றிலைதான், வெற்றிலை மாற்றிக்குங்க என்று சொல்வதும் அதனால்தான்.

    ஜெயஸ்ரீ சர்மா

     

    சில நேரங்களில் நையாண்டியாக "ஆமா வெத்தல பாக்கு வச்சு அழைக்கணும்" என்பர். அந்த வார்த்தையின் ஆழத்தில் இருப்பது வெற்றிலைக்குரிய முக்கியத்துவம்தான்.

    "கொட்ட பாக்கு கொழுந்து வெத்தல'',''வெத்திலை வெத்திலை வெத்திலையோ'' என்று வெற்றிலையை மையமாக வைத்து எத்தனையோ சினிமா பாடல்கள், வசனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. வெற்றிலைக்கு ஏன் இவ்வளவு புனிதம், பெருமை! மரியாதை!

    கடவுளுக்கு படைப்பதிலும், சீர் செய்வதிலும்,அர்ச்சனை தட்டிலும், திருமண தாம்பூலத் திலும், வரவேற்பு வாசலிலும் என்று எங்கும் வெற்றிலையின் ஆதிக்கம்தான்.

    இது வெற்றிலையாக இருந்திருக்க முடியாது, வெற்றி இலையாகத் தான் இருந்திருக்க வேண்டும். அதற்கேற்ப இதன் உண்மையான பெயரே வெற்றிலைதானே. வெற்றிலை மங்களப் பொருள் மட்டுமல்ல, மருத்துவப் பின்னனியும் நிறைய இருக்கிறது, அங்கேதான் நான் வருகிறேன்.

     

    இந்த கட்டுரையை படித்த பிறகு நீங்களும் வெற்றிலைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போவது நிச்சயம்.

    சீரில் மங்களப் பொருளாக வைக்கப்படும் வெற்றிலையை பெரும்பாலான வீடுகளில் காய்ந்த இலையாக மாற்றி தூக்கி தான் போடுவார். அதன் மருத்துவ பலன்களை தெரிந்தால் ஒருநாளும் அவ்வாறு செய்ய மாட்டோம். தாம்பூலம் தரிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மட்டுமே வெற்றிலையை பாக்கு சுண்ணாம்போடு எடுத்துக் கொள்வர். எளிதாக சாப்பிட பான், பீடா வகையறா...

    வெற்றிலை ஒரு கொடி. முக்கியமாக அகத்திக்கீரை மரங்களில் ஊடுபயிராக இந்த வெற்றிலை கொடியை நீர் வளம் நிறைந்த பகுதிகளில் வளர்ப்பதை பார்க்கலாம். வெற்றிலையில் பல ரகங்கள் உண்டு. வெள்ளை நரம்பு கொண்ட வெற்றிலையே பெரும்பாலும் உண்பதற்கு பயன்படுகிறது. தமிழ்நாட்டில் கும்பகோணம், சோழவந்தான் வெற்றிலைகள் மிகவும் புகழ் பெற்றதாகும்.

    பொதுவாக கர்ப்பிணிகளையும் பிரசவித்த பெண்களையும் வெற்றிலையை சேர்த்துக் கொள்ளச் செல்வர். பிரசவ லேகியத்தை வெற்றிலையில் வைத்து மடித்து கொடுப்பர். சில நாட்டு மருந்துகளையும் கூட வெற்றிலையில் வைத்து மடித்து உண்ணச் சொல்வர். கர்ப்பிணிகள் உணவுக்கு பிறகு வெற்றிலையை லேசாக வாயில் மென்று, உமிழ் நீரை விழுங்கும் பொழுது ஜீரணம் சமன்படுவதோடு வாயு தொல்லை குறையும் வாந்தி வருவது நிற்கும்.

    சிறு குழந்தைகளுக்கு இருமல் சளிக்கு தயாரிக்கப்படும் கஷாயத்தில் வெற்றிலையும் முக்கியமாக இடம் பெறும், வெற்றிலையை நெருப்பில் காட்டி வயிற்றில் பற்று போட்டு விடுவதும் உண்டு, வயிற்றுப் பொருமலுக்காக... காயங்களுக்கு கூட வெற்றிலைச் சாறை அல்லது வெற்றிலையை நேரடியாக வைப்பவர்களும் உண்டு.

    வெற்றிலையில் ஆன்டிஆக்சிடென்ட் ஆன்டி இன்ப்ளமேட்டரி, ஆண்டி மைக்ரோபியல் போன்ற பல மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது. அதனால் தான் பாட்டி வைத்தியத்தில் மட்டுமல்ல சித்த வைத்தியத்திலும் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது.

     

    வெற்றிலையின் தனிப்பட்ட மணத்திற்கும் மற்றும் மருத்துவ குணங்களுக்கும் காரணமாய் விளங்குவது பைட்டோ கெமிக்கல்ஸ் என்று சொல்லப்படும் தாவர வேதிப்பொருட்கள் ஆகும். கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், குரோமியம் மற்றும் சிறிதளவு புரோட்டின், கார்போஹைட்ரேடுகளும் நிறைந்ததுதான் வெற்றிலை. தாவர வேதிப்பொருட்களில் முக்கியமாக ஹைட்ராக்சி சாவியோல் கேன்சரை தடுக்கக்கூடிய வல்லமையோடு விளங்குகிறது.

    நீங்கள் இப்படி சொல்கிறீர்கள், ஆனால் சில டாக்டர்கள் வெற்றிலை-பாக்கு போடுபவர்களுக்கு வாயில் புற்றுநோய் வரும் என்று கூறுகிறார்களே என்று நீங்கள் மனதில் நினைப்பது எனக்கு புரிகிறது. வெறும் வெற்றிலை மட்டும் மெல்பவர்களுக்கு எல்லா மருத்துவ பலன்களும் கிடைக்கும். அதற்கு சுண்ணாம்பு தடவி, விதம் விதமான பாக்கு, கூடுதலாக புகையிலையையும் சேர்த்து சதா குதப்பும் போதுதான் கேன்சர் என்ற சிக்கல் எழுதுகிறது.

    பல்வேறு சத்துப் பொருட்களும், நோய் தடுக்கும் வேதிப் பொருட்களும் நிறைந்திட்ட வெற்றிலையை ஒரு நாளைக்கு ஓன்று என்ற கணக்கில் கூட மென்று முழுங்குவோம். காரணம் அது நான் முதலிலேயே சொன்னது போல வெற்றி இலை நம்மை காக்கும் கவச இலை.

    வாட்ஸ்அப்: 8925764148

    • பண்ணை மாடுகளுக்கு முதன்மை உணவாக இருப்பது மக்காச் சோளமே ஆகும்.
    • மக்காச் சோளத்தில் நார்ச்சத்து அதிகம்.

    உலகம் முழுதும் விளைவிக்கப்படும் பெருந்தானியங்கள் மூன்று. நெல், கோதுமை, கார்ன் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மக்காச்சோளம் ஆகிய இம்மூன்றும் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. அரிசி முதன்மை இடம் பிடிக்கக் கூடியது. உலகத்தில் பெரும்பாலான நாடுகளில் குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் அரிசிப் பயன்பாடு அதிகம். இன்றைய மொத்த மக்கட்தொகையான 810 கோடிகளில் பெரும்பாலான மக்கள் வசிக்கும் பகுதி இவ்விரு கண்டங்களே. இவர்களின் முதன்மை உணவு அரிசிதான்.

    கோதுமை அனைத்து மக்களாலும் பயன்படுத்தப்படுகிறது. அதைப்போலவே மக்காச் சோளமும். நம்முடைய நாட்டுச் சோள வகைகளைக் கதிராக வைத்திருந்தால் தானியம் சில வருடங்களுக்குத் தாக்குப் பிடிக்கும். ஆனால் கதிரில் இருந்து தானியத்தைப் பிரித்து விட்டால் சோளம் எளிதில் மக்கி விடும். ஆனால் மஞ்சள் நிறத்தில் உள்ள சோளமான மக்காச் சோளம் அவ்வளவு எளிதில் கெட்டு விடுவதில்லை. அதனால் தான் நம்மக்கள் இதற்கு மக்காச் சோளம் என்று பெயர் வைத்தனர். அதாவது மக்கிப் போகாமல் தாக்குப் பிடிப்பது மக்காச் சோளம். நம்முடைய நாட்டு வகைச் சோளத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. நாட்டுச் சோளமும் மக்காச் சோளமும் வெவ்வேறு ரகத்தைச் சேர்ந்தவை. இருப்பதிலேயே பெரிய தானியம் மக்காச் சோளம் தான்.

    மக்காச் சோளத்தைப் பொருத்தவரை மேற்கத்திய நாடுகளிலும், வட, தென்னமெரிக்க நாடுகளிலும் தான் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இதன் முதன்மைப் பயன்பாடு மாடுகளுக்கான தீவனம் தான். பலவகையான தானியங்கள், தானியப் பொட்டுகள், உமிகள் போன்றவற்றைச் சேர்த்து அரைத்து மாட்டுக்குத் தீவனமாக அளிக்கிறார்கள். நமக்கு மாடு வீட்டு விலங்கு. பசுமாட்டினை வீட்டில் வளர்ப்போம். அது பாலும் தரும் உழவுக்கும் உதவும். காளை மாடுகள் உழவுக்கு, வண்டி இழுக்க எனப் பல்வேறு வகைகளிலும் வேளாண் உழைப்பிற்கு ஒத்துழைக்கக் கூடிய சாதுப் பிராணி.

    ஆனால் மேற்கத்தியர்களும் மற்ற பல நாட்டினருக்கும் மாடு பண்ணைகளில் வளர்க்கப்படும் விலங்காகும். மேய்ச்சலுக்கெல்லாம் அவற்றை ஓட்டிப் போக முடியாது.

    வரலாற்றுக் காலம் தொட்டே ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் தான் விவசாயம் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. நெல், கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களை எப்படி விதைத்து அறுவடை செய்து கதிரை அறுத்து தானியமாகச் சேமித்து பல ஆண்டுகளுக்கும் பாதுகாத்து வைப்பது என்ற உற்பத்தி முறையை நாம் 20000 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டடைந்து விட்டோம். ஆனால் பரந்த நிலவெளி இல்லாத மேற்கு நாடுகளில், சீரான மழைப்பொழிவு இல்லாத நாடுகளில் மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கு ஆடு, மாடுகளையே நம்பி இருந்தனர்.

    அதுதான் அவர்களுக்கு உணவு ஆதாரமும். மாட்டுப் பால், பாலின் பதப்படுத்திய வடிவங்களான பாலாடைக்கட்டி (chease), வெண்ணை, உப்பிட்டுப் பதப்படுத்திய வெண்ணை, மாட்டுக் கொழுப்பில் இருந்து தயாரிக்கும் வெண்ணை (margarine) போன்றவற்றைச் சேமித்து வைத்துக் கொண்டு நீண்ட காலத்திற்குப் பயன்படுத்துவார்கள். நாம் தான் பாலை நேரடியாக நிறையப் பயன்படுத்துகிறோம். அதனை நொதிக்கச் செய்து, தயிர், மோர், நெய் என்று நம்முடைய வெப்பச் சூழலுக்கு ஏற்ப நீர்த்த வடிவத்தில் பயன்படுத்துகிறோம்.

    மேற்கத்தியர்கள் அவர்களது குளிர்வுச் சூழலுக்கு ஏற்ப பாலின் உறைந்து இறுகிய வடிவத்திலான பண்டங்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். விவசாயம் இல்லாத அவர்களுக்கு மாடுமேய்த்தலே ஆதாரத் தொழில். மாட்டின் பால் ஒருபுறம் என்றால் மாட்டு இறைச்சி அவர்களுக்கு முதன்மையான உணவு. மாடுகளை நாம் வேளாண்மை உழைப்பிற்குப் பயன்படுத்துவதால் அதன் இறைச்சிப் பயன்பாடு நம்மிடத்தில் குறைவு. போக வீட்டு உறுப்பினர்கள் போல மிகவும் நெருக்கமாக இருப்பதாலும் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதாலும் அவற்றின் இறைச்சியை நாம் அவ்வளவாக எடுத்துக் கொள்வது பழக்கமாக இல்லை. வயதில் முதிர்ந்து இறந்து விடும் மாடுகளை அதன் இறைச்சிக்காக நிலமற்ற விவசாயக் கூலி உழைப்பாளர்களிடம் கொடுத்து விடுவர். கடினமான உடல் உழைப்பில் ஈடுபடும் மக்களுக்கு மாட்டிறைச்சி தான் முதன்மையான புரதம் ஆகும்.

    போப்பு

     

    உழைப்பிற்குரிய ஆதாரமான சத்துக்களை வழங்குவது புரதச்சத்தே ஆகும். வயது முதிர்ந்து விவசாய உழைப்பிற்கு உதவாத மாடுகளையும் இறைச்சிக்காக சந்தையில் விற்பது உண்டு. மாட்டுக்கு நிகராக நிலத்தில் உழைக்கும் மக்கள் மாட்டிறைச்சியைத் தின்றே தமது உழைப்பிற்குரிய ஆற்றலைப் பெற முடியும். விவசாயத்தை முதன்மைத் தொழிலாக கொண்டிராத மேற்கத்தியர்களுக்கோ (வரலாற்றுக் காலத்தில்) நேரடியாக மேய்ச்சல் தான் ஒரே தொழில் நூற்றுக்கணக்கான மாடுகள், ஆடுகளை பசுமையான நிலத்திற்கு ஓட்டிச் சென்று மேயவிட்டு வளர்த்து அவற்றின் பாலையும், இறைச்சியையும், தோலையும் தமது வாழ்க்கைக்கு ஆதாரமாகக் கொண்டிருந்தார்கள். இன்றும் நம்மைக் காட்டிலும் அதிகமான இறைச்சி உண்போர் நம்மைக் காட்டிலும் மேற்கத்திய, அமெரிக்க நாட்டினரே அதிகம். நம்மில் பெரும்பாலான மக்கள் இறைச்சி எடுத்துக்கொள்பவர்கள் தான். ஆனாலும் அன்றாட உணவில் இறைச்சிப் பயன்பாடு இல்லை.

    அதிலும் நம்மவர்களுக்கு ஆடு, மாடு, கோழி, மீன், காடை, முயல் எனப் பலவகையான இறைச்சியை நுகர்கிறோம். மேற்கத்தியருக்கு முதன்மையான இறைச்சி மாட்டிறைச்சியே ஆகும். இறைச்சிக்குத் தொட்டுக் கொள்ளவே சிறிதளவு ரொட்டி. சுமார் ஐநூறு ஆண்டுகளாக அவர்கள் தொழில்துறையில் இறங்கி விட்டதால் மாடு மேய்ச்சல் அறுகி விட்டது. எனினும் இறைச்சிக்காகப் பண்ணைகள் வைத்து மாடுவளர்ப்பில் ஈடுபடுகின்றனர். அதுவும் பல்லாயிரக்கணக்கான மாடுகளை ஒரே இடத்தில் கட்டிப்போட்டு ஆலைத் தொழில் போல நடத்துகின்றனர். பண்ணைக்குள்ளேயே மாடுகளை அறுத்து இறைச்சியைப் பதப்படுத்தி அன்றாடம் டன் கணக்கில் மாட்டிறைச்சி ட்ரக்குகளில் ஏற்றப்படும்.

    அவையெல்லாம் நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது. குறைந்த நிலப்பரப்பினைக் கொண்டு அதிக (இறைச்சி) நுகர்வுக்காக விரைவில் சதைபோடும் வகையிலான மாடு வளர்ப்பிற்கு மக்காச்சோளம் போன்ற தானியங்கள் அவர்களுக்குப் பெரும் பயனாக இருக்கிறது. மேற்கத்திய, அரபு நாடுகளின் தேவைக்காக இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளிலும் பண்ணை வைத்து மாடுகளை வளர்ப்பது இன்று முக்கியத் தொழிலாக இருக்கிறது. ஆலைகளில் இறைச்சியைப் பதப்படுத்தி குளிர்வுக் கண்டெய்னர்களில் அவை மும்பை, கொல்கத்தா போன்ற துறைமுகங்களில் ஏற்றுமதியாகின்றன. வெப்ப மண்டல நாடுகளான இந்தியா, ஆப்பிரிக்க நாட்டு மாட்டு இறைச்சிகள் சதைப்பற்றுக் குறைவானவை என்றாலும் சத்துக்கள் குறிப்பாக நுண்சத்துக்கள் மிகுந்தவை ஆகும்.

    இந்தப் பண்ணை மாடுகளுக்கு முதன்மை உணவாக இருப்பது மக்காச் சோளமே ஆகும். ம.சோளத் தானியம் எப்படி பருத்து இருக்கிறதோ அதுபோல அதனை உணவாகக் கொண்டு வளரும் மாடுகளும் நல்ல சதைப்பற்றோடு விளங்கும்.

    மக்காச்சோளம் நமது நாட்டுத் தானியமல்ல. கோதுமையைப் போலவே 1960 களின் மத்தியில் இந்தியாவின் உணவுத் தேவைக்காக அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டது. அந்நாட்களில் நேரடியாக மக்காச் சோள ரவையாகவே ஐம்பது மூட்டைக் காகிதப் பைகளில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டது. இந்த மக்காச் சோள ரவையை பெயருக்கு ஒரு தாளிப்புப் போட்டு உப்புமாவாகக் கிண்டி பள்ளி மதிய உணவில் போடுவார்கள். உணவு உற்பத்தி குறைவான அக்காலத்தில் வயிற்றுக்கு ஏதாவது கிடைத்தால் போதுமென்று தான் கருதுவார்களே தவிர அது எவ்வளவு சுவையாக இருக்கிறது, எவ்வளவு சத்துக் கூறுகள் நிறைந்தது, தொட்டுக்கொள்ள துணைவுணவு என்ன என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள். இன்றும் பெரும்பகுதி மக்கள் அப்படிப் பார்க்கும் நிலையை எட்டி விடவில்லை. என்றாலும் உணவே கிடைக்காத நிலை உலகில் பரவலாக இல்லை.

    மக்காச் சோள ரவையில் செய்யும் உப்புமா இன்றளவும் பரவலடையவில்லை. மேலே விரிவாகச் சொன்னது போல அது பண்ணை மாடுகள் வளர்ப்பிற்குத் தான் முதன்மைப் பொருளாக உள்ளது. மேற்கத்தியரின் முதன்மை உணவாக இறைச்சியே இருப்பதால் அவர்களுக்குச் சர்க்கரை சார்ந்த நோய்கள் இல்லை. ஆனால் உடல் பருமன், கொழுப்பு சார்ந்த நோய்கள் அதிகம் என்பதையும் மறுப்பதற்கில்லை. மக்காச் சோளத்தில் நார்ச்சத்து அதிகம். மற்ற தானியங்களை விட நார்ச்சத்து அதிகம் என்பதால் இதனை நேரடியாகப் பயன்படுத்தினால் குடல் சார்ந்த பிரச்சனைகளில் இருந்தும், கொழுப்புச் சத்துப் பிரச்சனைகளில் இருந்தும் மக்கள் விடுபடலாம்.

    ம.சோளக் கதிரை அப்படியே வேகவைத்து உண்ணும் பழக்கம் நம்மிடத்தில் பரவிவருவது நல்ல பழக்கம் ஆகும். அதுபோலவே பச்சைக் கதிரை அதன் மேல்த் தோகை நீக்கி நெருப்பில் நேரடியாகச் சுட்டு உண்பது மிகவும் நல்ல பழக்கம் ஆகும். சிறுவயது முதற்கொண்டு இப்படிச் சாப்பிட்டுப் பழகி வந்தால் தற்பொழுது பரவலாகி வரும் பல் பிரச்சனைகள் பலவற்றைத் தவிர்க்க முடியும்.

    செல்-96293 45938

    • எல்லோருக்கும் நோய் வரும் என்றும் நோயே வராதவர் யாருமில்லை என்றும் அவன் சொன்னான்.
    • புத்தரை அழைத்துவரச் சென்ற தூதர்களெல்லாம் புத்தரின் சீடர்களாக மாறியதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

    கவுதமன் பிறந்துவிட்டான். அவனுக்கு ஜாதகம் கணிக்க வேண்டும். தன் மகனின் ஜாதகத்தைக் கணிக்க ஜோதிடர்களை அழைத்தார் தந்தையான மாமன்னர் சுத்தோதனர். ஒருவர் மீதமில்லாமல் எல்லா ஜோதிடர்களும் உறுதியாகச் சொன்னார்கள், `மன்னா, உங்கள் மகன் ஜாதகத்தில் சன்யாக யோகம் இருக்கிறது!` என்று.

    அந்தத் தந்தையின் அன்பு மனம் பதறியது. தன்னை விட்டுப் போய்விடுவானா தன் மகன்? தன்னால் அதை எப்படித் தாங்க முடியும்? தனக்குப் பிறகு நாட்டை ஆளவேண்டிய வாரிசு அல்லவா தன் மகன்? அவன் சன்யாசியானால் நாடு என்ன ஆகும்?

    கவுதமனை சன்யாசி ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதுதான் ஒரே வழி. மகனைப் பொத்திப் பொத்தி வளர்த்தார் மன்னர் சுத்தோதனர். உலகின் அவலங்கள் எதுவும் அவனுக்குத் தெரியாமல் இருக்கும்படிக் கவனித்துக் கொண்டார். ஆனந்தமே வடிவாக அவர் மகன் கவுதமன் வளரலானான்.

    ஒரு நோயாளியை அவன் பார்த்ததில்லை. ஒரு முதியவனைக் கண்டதில்லை. ஒரு சடலத்தை அவன் காண நேர்ந்ததில்லை. திட்டமிட்டே இவையெல்லாம் அவன் கண்ணில் படாமல் தடுத்தார் தந்தை சுத்தோதனர்.

    வாலிப வயதை அடைந்தான் கவுதமன். அவனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டால் இல்லறத்தில் ஆழ்ந்து விடுவான். இல்லற இன்பத்தை அனுபவித்தபின் அவன் மனம் துறவை நாடாது. நம்பினார் சுத்தோதனர்.

    தேடித் தேடிப் பேரழகியான ராஜகுமாரி யசோதரையை அவனுக்கு மணம் செய்து வைத்தார். அவர்களது இல்லற வாழ்வின் சாட்சியாக ராகுலன் என்ற அழகான ஒரு மகனும் பிறந்தான். ஆனால் விதி வலியது. ஒருநாள் தேரில் வீதிவலம் போனான் கவுதமன். ஒரு நோயாளியைச் சந்தித்தான். ஏன் வாட்டம் என விசாரித்தான். எல்லோருக்கும் நோய் வரும் என்றும் நோயே வராதவர் யாருமில்லை என்றும் அவன் சொன்னான்.

    அதே நாளில் அதே தேரில் மேலும் சென்றபோது மூத்துத் தளர்ந்த ஒரு முதியவனைக் கண்டான். ஏன் இந்தத் தளர்ச்சி எனக் கேட்டான். எல்லோருக்கும் முதுமை வரும் என்றும் முதுமையை யாரும் தவிர்க்க முடியாது என்றும் அறிந்துகொண்டான்.

    மேலும் ஓடியது தேர். எதிரே ஒரு சடலத்தைத் தூக்கிச் சென்று கொண்டிருந்தார்கள் நான்கு பேர். தேரை நிறுத்தி அவர்களிடம் எதை எடுத்துச் செல்கிறார்கள் எனக் கேட்டான். இறந்தவன் உடலை எரிக்க எடுத்துச் செல்வதாகவும் எல்லோரும் என்றேனும் ஒருநாள் இறக்கத்தான் வேண்டும் என்றும் சொன்னார்கள் அவர்கள்.

    சிந்தனையில் ஆழ்ந்த கவுதமன் அரண்மனை திரும்பினான். பிணி, மூப்பு, சாக்காடு...இவைதான் வாழ்வு என்றால் இந்த வாழ்வில் துன்பமில்லாமல் இருப்பது எப்படி? துன்பத்திற்குக் காரணம் என்ன? அறிய விழைந்தது அவன் மனம்.

    அன்று நள்ளிரவு தன் அழகிய மனைவி யசோதரையையும் தன் அழகு மகன் ராகுலனையும் துறந்து யாருக்கும் எதுவும் சொல்லாமல் கானகம் சென்றான். கானகத்திற்கு கவுதமனை அழைத்துச் சென்றவன் தேரோட்டி சன்னா. தேரிலிருந்து இறங்கி தன் தலைமுடியைத் தன் கைவாளாலேயே வெட்டி சன்னா கையில் முடிக் கற்றையைக் கொடுத்தான். இனித் தவ வாழ்வில் வாள் தேவையில்லை எனத் தன் வாளையும் கொடுத்தான்.

    தான் ஞானம் பெறுவதன் பொருட்டுத் தவம் செய்ய வேண்டிக் கானகம் செல்வதாகத் தன் தந்தையிடமும் மனைவியிடமும் அறிவிக்கச் சொன்னான்.

    அதன் நிரூபணமாகத் தன் வாளையும் முடிக் கற்றையையும் கொடுக்கச் சொன்னான். எல்லாம் அப்படியே நடந்தன...

    கானகம் சென்ற கவுதமன் கடும் தவத்தில் ஈடுபட்டான். பல்லாண்டுகள் தவம் செய்து ஒரு பேருண்மையைக் கண்டுபிடித்தான். ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்பதே அந்தப் பேருண்மை. அந்தப் பேருண்மையைக் கண்டறிந்த கெளதமன் தவத்தால் விளைந்த ஞானப் பிரகாசத்தோடு புத்தரானார்.

    திருப்பூர் கிருஷ்ணன்


     

    புத்தர் இராஜகிருக மாநகருக்கு அருகில் உள்ள மங்களகிரி என்ற மலைப் பிரதேசத்தில் தங்கியிருந்த தருணம். விவரமறிந்தார் புத்தரின் தந்தை சுத்தோதனர். புத்தரைத் திரும்ப அழைத்து மன்னனாக்க விரும்பினார். தலைநகரான கபிலவஸ்துவுக்கு அவர் திரும்ப வரவேண்டும் எனச் சொல்லி ஒரு தூதரை அனுப்பினார். சென்ற தூதர் புத்தரின் திருமுகத்தைப் பார்த்தார். என்ன பிரகாசம் இது? கடவுள் தானா இவர்? புத்தரைச் சுற்றி அவரின் ஏராளமான சீடர்கள் அமர்ந்து அவரின் போதனைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். தானும் கேட்கலானார் அந்தத் தூதர். அவர் புத்தரின் அடியவராகி அவரின் சீடரானார்.

    என்ன ஆச்சரியம்! புத்தரை அழைத்துவரச் சென்ற தூதர் திரும்பி வரவில்லையே? இரண்டாம் தூதரை அனுப்பினார் சுத்தோதனர். முன்னவர் எடுத்த முடிவையே பின்னவரும் எடுத்தார். அவரும் புத்தரின் சீடரானார். இப்படிப் பலரை அனுப்பிப் பார்த்தார் சுத்தோதனர். வந்த தூதர்களால் புத்தரின் சீடர்கள் எண்ணிக்கை தான் அதிகரித்தது! கடைசியாக சுத்தோதனர் தன்மேல் மிகுந்த விஸ்வாசமுடைய தன் மந்திரி காலோதயனை அழைத்தார். `நீ போய் புத்தரை அழைத்துவா!` என அனுப்பினார்.

    காலோதயன் கட்டாயம் ராஜ கட்டளையை மீற மாட்டான். அவன் புத்தரை அழைத்துவருவது நிச்சயம் என்றே சுத்தோதனர் நம்பினார்.

    காலோதயன் தேரோட்டி சன்னாவுடன் மங்களகிரிக்குத் தேரில் சென்றான். அவனுக்கும் அதே மனநிலைமைதான் தோன்றியது. புத்தரின் உபதேசங்களைக் கேட்கக் கேட்க வாழ்வின் நிலையாமையை அவன் மனமும் புரிந்துகொண்டது. புத்த சங்கத்தில் சேர அவனும் விருப்பம் கொண்டான்.

    ஆனால் ராஜகட்டளைக்குக் கட்டுப்பட்டது அவன் மனம். புத்தர் ஒரே ஒருமுறையேனும் கபிலவஸ்து நகருக்கு வரவேண்டும் என வேண்டினான் அவன்.

    அந்த அன்பு வேண்டுகோளைத் தட்ட புத்தருக்கு மனம் வரவில்லை. புத்தர் தம் சீடர்களான துறவியர் கூட்டத்தோடு மங்களகிரியிலிருந்து கபிலவஸ்து நகரை நோக்கி நடக்கலானார். அறுபது நாட்களில் அவர்கள் அனைவரும் தலைநகரான கபிலவஸ்துவுக்கு வந்துசேர்ந்தார்கள்.

    தன் மனைவி யசோதரையையும் தன் மகன் ராகுலனையும் புத்தர் பார்த்தால் துறவு நெறியிலிருந்து நீங்கி மறுபடியும் மன்னராவார் எனக் கணக்குப் போட்டது புத்தரின் தந்தையான சுத்தோதனரின் மனம்.

    புத்தர் அடைந்துள்ள மாபெரும் ஞானநிலை பற்றி சுத்தோதனர் உணரவில்லை. ஆனால் தலைநகரில் வசித்த குடிமக்கள் புத்தரைப் பற்றி ஏற்கெனவே நிறையக் கேள்விப் பட்டிருந்தார்கள். அவரது நகர விஜயம் குறித்து அவர்கள் அளவற்ற ஆனந்தமடைந்தார்கள்.

    புத்தரை வரவேற்கும் நோக்கில் எண்ணற்ற விளக்குகளைத் தெருவெங்கும் வரிசை வரிசையாக ஏற்றி வைத்தார்கள். புத்த பெருமானின் புனித வருகையைக் கொண்டாடும் வகையில் தீபங்களை வாங்க முடியாத ஏழைகளுக்கு மற்றவர்கள் தீபம் வாங்கி தானமளித்தார்கள்.

    புத்தரின் வருகைக்கு முன்பாகவே அவர் வரும் செய்தியாலேயே மக்களின் மனங்களில் அறவுணர்வு பெருகியிருந்தது.

    நிலவுபோல் ஒளிவீசும் புத்தரைப் பிரதானமாய்க் கொண்ட துறவிகள் கூட்டம் எதிரே வந்து கொண்டிருந்தது. 'புத்தம் சரணம் கச்சாமி! சங்கம் சரணம் கச்சாமி! தர்மம் சரணம் கச்சாமி!' என்ற குரல்கள் எழுந்து அடங்கின.

    தூய்மையே வடிவாக, சலனங்களை வென்ற நிறைவோடு, சாந்தி தவழும் முகத்தோடு கபிலவஸ்து நகரின் ராஜவீதியில் வெண்ணிலவு மண்ணில் இறங்கியதுபோல் நடந்து வரலானார் புத்தர். புத்தர் கெளதமனாக இருந்தபோது கரம்பிடித்து அவர் மனைவியான ராணி யசோதரா, மகன் ராகுலனோடு புத்தரை வந்து தரிசித்தாள். தன் தந்தையான புத்தரின் பாதங்களில் விழுந்து வணங்கி நிமிர்ந்து அவர் திருமுகத்தைப் பார்த்தான் ராகுலன். அதில் தென்பட்ட அளவற்ற ஞான ஒளியாலும் மகத்தான சாந்தியாலும் கவரப்பட்டான். அடுத்த கணமே உடன்வந்த துறவியர் கூட்டத்தில் தானும் ஒரு துறவியாக அவன் இணைந்து கொண்டான்.

    புத்தரின் முன்னாள் மனைவியான யசோதரையும் புத்தரைப் பரவசத்தோடு பார்த்தாள். இப்போதிருப்பவருக்கும் தன் கணவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் புரிந்துகொண்டாள். அதே உடல்தான். ஆனால் உள்ளிருக்கும் ஆன்மா பெரிய அளவில் பக்குவப்பட்டு விட்டது. இனி அது சுகபோகங்களை விரும்பாது. அனைவரும் ஏதேனும் ஒரு பிறவியில் அடைய வேண்டிய இறுதி லட்சியத்தை இதோ இந்தப் பிறவியிலேயே தன் கணவர் அடைந்துவிட்டார். இதை அவரைப் பார்த்த மாத்திரத்தில் புரிந்துகொண்டது அவள் மனம்.

    புத்தரை அழைத்துவரச் சென்ற தூதர்களெல்லாம் புத்தரின் சீடர்களாக மாறியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அப்படி மாறாதிருந்தால் தான் ஆச்சரியம். புத்தரின் சான்னித்தியத்தில் தன் மனமும் மெல்ல மெல்லப் பக்குவப் படுவதை உணர்ந்தாள் யசோதரை. தன் மாமனார் சுத்தோதனரின் பாதங்களைப் பணிந்தாள். `நானும் என் மகனைப் போலவே புத்தரின் நெறியில் வாழ விரும்புகிறேன்` என அறிவித்தாள். ஒரு கணத்தில் அவளும் புத்தரின் பெண்துறவியர் வரிசையில் தானும் சேர்ந்து துறவியானாள்.

    தன் மருமகளும் பேரனும் எடுத்த முடிவைப் பார்த்து திகைத்தவாறு நின்றிருந்தார் புத்தரின் தந்தை சுத்தோதனர். அவர் மனமும் கூட புத்தரது புனிதப் பேரொளியால் கவரப் பட்டிருந்தது. ஆனால் நாட்டைக் காக்கும் கடமை அவருக்கு இருக்கிறதே? தன்னையறியாமல் தன் மகன் புத்தரை நோக்கி அவர் கரங்கள் குவிந்தன. சலனமே இல்லாமல் புத்தர் தொடர்ந்து நடந்தார். அவரைப் பின்பற்றித் தாங்களும் நடந்தார்கள் அவரின் சீடர்கள்.

    அந்தச் சீடர்களோடு சீடர்களாய் இணைந்து நடந்தார்கள் யசோதரையும் ராகுலனும். கபிலவஸ்துவின் மக்கள் அனைவரும் புத்தர் சென்ற திக்கை நோக்கிக் கீழே விழுந்து வணங்கினார்கள்...

    தொடர்புக்கு: thiruppurkrishnan@gmail.com

    • ஆல்பா பீட்டா புரோட்டின் அதிகமாக இருந்தாலும் டவுன் சின்ட்ரோம் வரலாம்.
    • பொதுவாக தசை சிதைவு உள்ளிட்ட சில பாதிப்புகள் குடும்ப வழிமுறைகள் மூலம் வரும்.

    மகப்பேறு சிகிச்சையில் வயிற்றில் உள்ள கருவின் ஆரோக்கியம் என்பது மிக மிக முக்கியமானது. எனவே குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்கள் கருத்தரிக்கும் முன்பு என்னென்ன பரிசோதனைகள் செய்ய வேண்டும்? கர்ப்ப காலத்தின்போது குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை கண்டறிய என்னென்ன பரிசோதனைகளை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே பார்த்தோம். கருத்தரிக்கும் பெண்கள் ஆரோக்கியமான குழந்தை பெற்றுக்கொள்வதற்கு என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றி இந்த வாரம் பார்க்கலாம்.

    ஸ்கிரினீங்-டயக்னோஸ்டிக் பரிசோதனை முறை இடையேயான வித்தியாசம்:

    மகப்பேறுக்கு முன்பு கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்யும்போது, அந்த பரிசோதனையானது கர்ப்பத்தில் உள்ள கருவை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். ஆரம்பத்திலேயே பனிக்குடத்தில் இருந்து நீர் எடுத்து பரிசோதனை செய்வது, கருவில் இருந்து திசுவை எடுத்து பரிசோதிப்பது எல்லாமே ஆபத்தை விளைவிக்கும்.

    ஏனென்றால் இதை மிகவும் எளிமையான முறையில் ரத்த பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியும். ஆனால் அதே நேரத்தில் சில பிரச்சினைகளை சில வகையான இன்வேசிவ் (ஊடுருவும்) முறையில் தான் உறுதி செய்ய முடியும்.

    பொதுவான ஸ்கிரீனிங் பரிசோதனை முறைகளில் பரிசோதிக்கும் போதே நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா இல்லையா என்பது தெரிந்துவிடும். ஆனால் அதை உறுதிப்படுத்துவதற்காக செய்யப்படும் டயக்னோஸ்டிக் பரிசோதனையில் கண்டிப்பாக குழந்தைக்கு பாதிப்பு இருக்கிறது அல்லது இல்லை என்பது உறுதி செய்யப்படும். இதுதான் இதில் உள்ள ஸ்கிரினீங் பரிசோதனை முறைக்கும், டயக்னோஸ்டிக் பரிசோதனை முறைக்கும் உள்ள வித்தியாசம்.

    அந்த வகையில் தான் 12 முதல் 14 வாரத்துக்குள் ஒரு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, ஆல்பா பீட்டா புரோட்டீன் ரத்த பரிசோதனை, பீட்டா எச்.சி.ஜி பரிசோதனை செய்ய வேண்டும். கருவுக்கு ஏற்படும் குறைபாடுகளை அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மூலமாக மருத்துவர்கள் பரிசோதிப்பதற்காக ஒரு கணக்கீடு அட்டவணை போடுகிறார்கள்.

    அதில் எச்.சி.ஜி, ஆல்பா பீட்டா புரோட்டீன் மற்றும் இந்த கருவின் நியூக்கல் டிரான்ஸ்லுசென்சி மற்றும் நாசி எலும்பு ஆகிய அளவுகோல்களை வைத்து டிரிபிள் மார்க்கர்ஸ் ஸ்கிரீனிங் என்கிற ஒரு ரத்த பரிசோதனையை செய்கிறார்கள். மேலும் ஸ்கேன் மூலமாக இந்த குழந்தைக்கு பாதிப்பு காரணிகள் ஏதும் இருக்கிறதா என்பதை கண்டறிகிறார்கள்.

    குழந்தையை பாதிக்கும் குரோமோசோம் குறைபாடுகள்:

    இந்த பரிசோதனைகளை எதற்காக எடுக்கிறார்கள் என்றால், டவுன்ஸ் பாதிப்புகள், அதாவது மரபணு ரீதியாக அறிவுசார் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும் டிரைசாமிக் 13, குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் டிரைசாமிக் 18 ஆகிய குரோமோசோம் குறைபாடுகள் மூலம் இந்த குழந்தைக்கு பாதிப்புகள் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள முடியும். மேலும் எந்த அளவுக்கு பாதிப்பு உள்ளது என்பதை மிகவும் துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும்.

    இதன் மூலமாக இந்த குழந்தைக்கு ஏதாவது ஒரு பாதிப்பு இருந்தால் அதை உறுதிப்படுத்த வேண்டும். அப்படி உறுதிப்படுத்துவதற்கான சோதனை செய்து அது உறுதியாகும் போது கண்டிப்பாக தாயின் நலம் மட்டுமல்ல, கருவின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.

    அதனால் கருத்தரிக்கும் கருவானது குழந்தையாக வெளிவரும்போது, ஒரு பாதிக்கப்பட்ட கருவாக இருந்தால் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு கேடாக அமையும். இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்தால் என்ன வழிமுறைகளை கையாளலாம் என்பது பற்றி நாம் யோசிக்க முடியும். அதனை தீர்க்கமாக யோசித்து முடிவு செய்து, அந்த குழந்தையை சரி செய்ய முடியுமா? அல்லது ஏதாவது மையத்தில் வைத்து சிகிச்சை அளிக்க முடியுமா என்பதை நீங்கள் உறுதி செய்ய முடியும்.

    இந்த வகையில் முதல் 3 மாதத்தில் ரத்த பரிசோதனை மூலமாக கிருமி தொற்றுகளினால் கருவிற்கு குறைபாடு வருமா என்பதை பரிசோதனை செய்து அறிந்து கொள்ளலாம். இரண்டாவதாக அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலமாக நாசி எலும்பு, நியூக்கல் டிரான்ஸ்லுசென்சி மற்றும் பெரிய வகையிலான குறைபாடுகள், முதுகு தண்டுவடம் ஆகியவற்றில் ஏதாவது பாதிப்புகள் இருக்கிறதா என்று பரிசோதனை செய்யலாம்.

    100 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு பாதிப்பு உறுதியாகும்:

    இவை தவிர ரத்த பரிசோதனையில் நான் ஏற்கனவே சொன்னது போல் டவுன் சின்ட்ரோமை கண்டறிய சில பரிசோதனைகள் உள்ளன. அதாவது, பீட்டா எச்.சி.ஜி. குறைவாக இருந்தால் டவுன் சின்ட்ரோம் வர வாய்ப்புள்ளது. பீட்டா எச்.சி.ஜி. அதிகமாக இருந்தால் பல நேரங்களில் அந்த குழந்தைக்கு கருவில் மரபணு ரீதியிலான குறைபாடுகள் வரலாம். ஆல்பா பீட்டா புரோட்டின் அதிகமாக இருந்தாலும் டவுன் சின்ட்ரோம் வரலாம்.

    இதெல்லாம் சில பரிசோதனை முறைகள் தான். ரத்தத்தில் பயோகெமிக்கல் முறையில் சோதனை செய்து கருவில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலமாக பாதிப்புகள் இருந்தால் அதை ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்க முடியும்.

    சரி இதற்கு அடுத்தபடியாக என்ன செய்யலாம் என்பதை பார்க்க வேண்டும். இது ஆரம்ப பரிசோதனை முறைதான். இந்த பரிசோதனையின்போது பாசிட்டிவ் என்று வந்தால் அந்த குழந்தைக்கு பாதிப்பு என்று அர்த்தமல்ல. அதாவது இதுபோன்ற பரிசோதனையில் பாசிட்டிவ் வரும் நிலையில் 100 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம்.

    அப்படியென்றால் அதை உறுதிப்படுத்துவதற்காக இரண்டாவது முறையாக சில பரிசோதனை முறைகளை செய்ய வேண்டும். இதில் முக்கியமாக சில விஷயங்கள் உள்ளன.

    ஒன்று கோரியானிக் வில்லஸ் சாம்பிளிங். இந்த பரிசோதனை என்பது நஞ்சுக்கொடியில் இருந்து செல்களை எடுத்து குழந்தைக்கு குரோமோசோம் குறைபாடுகள் மற்றும் மரபணு குறைபாடுகள் உள்ளதா என்பதை கண்டறியும் முறையாகும். இதற்காக 12 முதல் 14 வாரத்தில் நஞ்சுவில் இருந்து செல்களை எடுத்து அதில் இருந்து டி.என்.ஏ. மரபணு பரிசோதனை செய்து பாதிப்புகள் உள்ளதா என்பதை உறுதி செய்யலாம்.

    பொதுவாக தசை சிதைவு உள்ளிட்ட சில பாதிப்புகள் குடும்ப வழிமுறைகள் மூலம் வரும். வியாதிகளை இந்த முறையில் கண்டுபிடிக்க முடியும். இதன் மூலமாக ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கும் போது இதற்கான தீர்வும், வழிமுறையும் கண்டிப்பாக கிடைக்கும்.

     

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    உடல் உறுப்புகளின் முழுமையான வளர்ச்சியை அறியும் பரிசோதனை:

    அடுத்ததாக புளோரசன்ஸ் இன் சிட்டு ஹைப்ரிடைசேஷன் (பிஷ்) தொழில்நுட்பம் மூலமாக பனிக்குட நீரில் இருந்து செல்களை எடுத்து கல்ச்சர் செய்து, அதன் மூலம் இந்த கருவில் ஏதாவது பாதிப்புகள் இருக்கிறதா, ஏதாவது குறைபாடுகள் இருப்பதற்கான அறிகுறி தென்படுகிறதா என்று பார்க்க முடியும். மேலும் அதில் ஏற்படுகின்ற சில பயோகெமிக்கல் பாராமீட்டர் மாற்றங்களை வைத்து அந்த குழந்தைக்கு மரபணு ரீதியான நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளதா என்பதை உறுதி செய்ய முடியும்.

    இந்த வகையில் மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனை என்பதை பனிக்குட நீரை எடுத்து பரிசோதிக்கலாம். அந்த கருவின் கோரியானிக் வில்லஸ் சாம்பிள் எடுத்தும் பார்க்கலாம்.

    இதற்கு அடுத்து 22-வது வாரத்தில் முறையாக ஒரு ஸ்கேன் எடுத்து பார்க்கும்போது இருதயம் உள்ளிட்ட எல்லா முக்கியமான பகுதிகள், முக்கியமான உடல் உறுப்புகள் ஆகியவற்றின் முழுமையான வளர்ச்சியும், குறைபாடு இல்லாத நிலையும் கண்டுபிடிக்கப்படும்.

    இதன் மூலமாக இந்த பெண்ணுக்கு ஆரோக்கியமான குழந்தைபேறு பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். இந்த வகையில் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஒவ்வொரு காலகட்டத்திலும் கர்ப்பிணிகள் பரிசோதனைகள் செய்ய வேண்டும். அதாவது 22 வாரத்துக்குள் ஒரு குழந்தை ஆரோக்கியமாக உள்ளதா, உருவத்தில் இயல்பாக உள்ளதா என்கிற எல்லா விஷயத்தையும் கண்டுபிடித்து விடலாம்.

    இது இல்லாமல் சில வகையான பிரச்சினைகளான மேப்ரல் சிரப் நோய் என்ற வகையில் கருவை சுற்றி இருக்கும் அம்னியோடிக் திரவத்தை பாதிக்கிற நோய்க்கு அந்த திரவத்தை எடுத்து அதனையும் பரிசோதித்து நோய் தாக்கத்தை கண்டுபிடிக்கலாம். அதன் மூலமாக இந்த கரு வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்பை தடுத்து ஆரோக்கியமான குழந்தைபேறு பெறுவதற்கான வழிமுறையை பெறலாம்.

    இவை தவிர சில குழந்தைகளுக்கு சிறுநீர்க்குழாய் வாழ்வுகள் போன்ற சில சில மாற்றங்கள் இருக்கும். இவற்றினை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால் தேவையில்லாமல் பிற்காலத்தில் வருகிற பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களை தடுக்க முடியும். அதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வுக்கும் அடிப்படையாக அமையும். எனவே மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனை என்பதை கண்டிப்பாக எல்லா பெண்களும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கு வயது வரம்பு என்கிற வித்தியாசம் கிடையாது. வயது குறைவான பெண்களுக்கு கூடசில நேரங்களில் இந்த மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனை முடிவுகள் பாசிட்டிவாக வரலாம். எனவே கரு ஆரோக்கியமாக இருக்க பெண்கள் இந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அதன் மூலம் கண்டிப்பாக ஆரோக்கியமான குழந்தைபேறு பெற முடியும்.

    • கொடி மரத்துக்காக திருச்செந்தூர் ஆலயத்தில் திருவிழா தடைபடக் கூடாது என்று முருகனிடம் முறையிட்டனர்.
    • கடலுக்குள் சற்று தொலைவில் சந்தன மரம் ஒன்று மிதந்தபடி வந்து கொண்டு இருந்தது.

    திருச்செந்தூர் கோவிலில் இரண்டு கொடி மரங்கள் இருப்பதை இன்றும் காணலாம். ஒன்று தங்கக் கொடிமரம், மற்றொன்று செம்புக் கொடிமரம். திருச்செந்தூர் ஆலயத்தில் நடக்கும் முக்கிய விழாக்கள் அனைத்துக்கும் மற்றும் பிரமோற்சவத்துக்கும் இந்த செம்புக்கொடி மரத்தில்தான் கொடியேற்றி விழாவை தொடங்குவார்கள்.

    இந்த செம்புக் கொடிமரம் பாண்டிய மன்னன் ஒருவனால் திருச்செந்தூர் ஆலயத்துக்கு சிறப்பாக வழங்கப்பட்ட ஒன்றாகும். அந்த பாண்டிய மன்னனின் மகள் முகம் மாறுபட்ட வகையில் இருந்தது. அதாவது மன்னனின் மகள் முகம் குதிரை முகத்தை போன்று இருந்தது. இதனால் அவளை திருமணம் செய்து கொடுக்க முடியாமல் பாண்டிய மன்னன் தவித்து வந்தார்.

    மகளின் குதிரை முகத்தை மாற்றி நல்ல முகமாக தரவேண்டும் என்று அந்த பாண்டிய மன்னன் திருச்செந்தூர் செந்திலாண்டவன் முன்பு தினமும் கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்வது உண்டு. முருகன் அருளால் பாண்டிய மன்னன் மகள் திருச்செந்தூர் கடலில் நீராடி வழிபட்டதும் அவளது குதிரை முகம் மறைந்து நல்ல முகம் தோன்றியது. இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த பாண்டிய மன்னன் திருச்செந்தூர் ஆலயத்துக்கு செம்பு கொடிமரம் நிலைநாட்டித் திருவிழாக் கொண்டாடினான்.

    காலப்போக்கில் அந்த கொடிமரம் இற்று பழுதடைந்து போய்விட்டது. இதனால் அந்த கொடி மரம் கொடியேற்றும் திருநாள் வரும் முன்பு விழுந்துவிட்டது. இதன் காரணமாக திருவிழா கொண்டாட இயலாது என்ற நிலை ஏற்பட்டது. இதை அறிந்த முருக பக்தர்கள் கண்ணீர் விட்டு புலம்பி வேதனைப்பட்டனர்.

    கொடி மரத்துக்காக திருச்செந்தூர் ஆலயத்தில் திருவிழா தடைபடக் கூடாது என்று முருகனிடம் முறையிட்டனர். பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று திருச்செந்தூர் முருகன் ஒரு அற்புதமான திருவிளையாடலை நடத்தினார்.

    அந்த கால கட்டத்தில் எருமை மாடு ஒன்று திருச்செந்தூர் கோவிலை வலம்வருவதை வழக்கத்தில் கொண்டு இருந்தது. முதலில் இதை சாதாரணமாக பார்த்த பக்தர்கள் நாளடைவில் அந்த எருமை மாட்டுக்கு முருகன் அருள் இருப்பதாக பேசத் தொடங்கினார்கள். அந்த எருமை மாடு பற்றி தென்தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

    அந்த எருமை மாடு திருச்செந்தூர் ஆலயத்தை வலம் வந்ததும் சண்முக விலாசம் பகுதிக்கு வந்து சிறிது நேரம் நிற்கும். அந்த சமயத்தில் அந்த எருமை மாட்டின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகி வழிந்தோடும். அந்த எருமை மாடு எதற்காக ஆனந்த கண்ணீர் விடுகிறது என்பது பக்தர்களுக்கு புரியாத புதிராக இருந்தது.

    ஆனால் ஒன்று மட்டும் அவர்களுக்கு உறுதியாக தெரிந்தது. அதாவது திருச்செந்தூர் ஆலயத்தை குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் வலம் வருவதன் மூலம் அந்த எருமை மாடு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்பதை உறுதியாக நம்பினார்கள். இதனால் திருச்செந்தூர் ஆலயத்துக்கு வந்த முருக பக்தர்கள் அனைவரும் எருமை மாட்டின் அதிசயத்தை கண்டு அதையும் வழிபட்டனர்.

    இந்த நிலையில்தான் பாண்டிய மன்னன் அமைத்து கொடுத்திருந்த செம்புக் கொடி மரம் பழுதடைந்து விழுந்து இருந்தது. அந்த கொடிமரம் ஒடிந்து விழுந்த தினத்தன்று அந்த எருமை மாட்டிடம் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டதை பக்தர்கள் கண்டனர்.

    அந்த எருமை மாடு திருச்செந்தூர் கோவிலைச் சுற்றி சுற்றி வந்தது. கொடி மரம் இருந்த திசையை நோக்கி கத்திக் கொண்டே வலம் வந்தது. இதை கண்டு பக்தர்கள் மிரண்டு போனார்கள். அந்த எருமை மாடு கோவிலை வலம் வந்தபோது பக்தர்களும் அதனைப்பின் தொடர்ந்தனர்.

    அப்போது திடீரென வெறி கொண்டது போல அந்த எருமை மாடு திருச்செந்தூர் கடலுக்குள் பாய்ந்தது. இதை கண்டதும் பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். எதற்காக அந்த மாடு கடலுக்குள் பாய்ந்து செல்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியாமல் தவித்தனர். கொடி மரமும் விழுந்து விட்டது. எருமை மாடும் கடலுக்குள் போகிறது. இது அபசகுணமாக இருக்குமோ? பக்தர்களில் சிலர் கதறினார்கள்.

     

    இதை கேட்டதும் மற்ற பக்தர்களுக்கும் அந்த சந்தேகம் வந்து விட்டது. முருகா... முருகா.... என்று கோஷமிட்டனர். அப்போதும் அந்த எருமை மாடு தொடர்ந்து கடலுக்குள் சென்று கொண்டே இருந்தது. அந்த மாட்டை பக்தர்கள் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டே நின்றனர்.

    அப்போதுதான் ஒரு அதிசயம் நடந்தது. கடலுக்குள் சற்று தொலைவில் சந்தன மரம் ஒன்று மிதந்தபடி வந்து கொண்டு இருந்தது. கடலுக்குள் சென்றிருந்த எருமை மாடு தனது கொம்புகளால் அந்த சந்தன மரத்தை கடலோரத்தை நோக்கி தள்ளிக்கொண்டு வந்தது. இதைக் கண்டதும் பக்தர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

    சந்தன மரத்தை கடலுக்கு வெளியே கொண்டு வந்தபிறகு தான் அதை தள்ளுவதை எருமை மாடு நிறுத்தியது. அந்த சந்தன மரத்தை பக்தர்கள் ஆச்சரியத்தோடு பார்த்தனர். அப்போது அவர்களுக்கு ஒன்று புரிந்தது. கொடி மரம் வைப்பதற்கு ஏற்ப சரியான அளவுபடி கனகச்சிதமாக அந்த சந்தன மரம் இருந்தது. தகவல் அறிந்ததும் ஆலய நிர்வாகிகளும் கடற்கரைக்கு வந்தனர்.

    அந்த சந்தன மரத்தை ஆய்வுசெய்தனர். அது கொடி மரத்துக்கு உரிய ஐதீகத்துடன் இருப்பதை கண்டதும் மெய்சிலிர்த்து போனார்கள். முருகன் அருளால் அவன் எருமை மாட்டை அனுப்பி கடலுக்குள் இருந்து சந்தன மரத்தை எடுத்து வந்ததை மிகப்பெரிய அற்புதமாக கருதினார்கள். அந்த சந்தன மரத்தை கொண்டு புதிய கொடி மரம் தயாரிக்கப்பட்டது.

    உரியமுறையில் குறிப்பிட்ட தினத்தன்று புதிய கொடிமரத்தை ஆலயத்தில் நிறுவினார் கள். இதை கண்டு மற்ற மதத்தினரும் ஆச்சரியப்பட்டனர். குறிப்பாக கொடி மரம் விழுந்ததை கிண்டல் செய்த புத்த மதத்தை சேர்ந்த ஒருவர் கந்தவேலே கண்கண்ட தெய்வம் என்று பணிந்தார். திருச்செந்தூர் முருகனின் சிறப்புகளையும், பெருமைகளையும் அனுபவப்பூர்வமாக உணர்ந்த அவர் இலை விபூதி பெற்று நெற்றியில் பூசிக் கொண்டார்.

    கடலில் இருந்து திருச்செந்தூர் ஆலயத்துக்கு சந்தன கொடி மரம் கிடைத்தது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த சந்தனக் கொடி மரம் கடலுக்குள் எப்படி வந்தது? அதை அங்கு யார் கொண்டு வந்து போட்டு இருப்பார்கள்? என்றெல்லாம் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. விரைவில் அதற்கு விடையும் கிடைத்தது.

    கொடி மரம் ஒடிந்து விழுந்த தினத்தன்று திருச்செந்தூர் முருகன்இலங்கை கண்டியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்த மன்னனின் கனவில் தோன்றினான். மன்னனிடம், "என் கோவிலுக்கு உள்ளே இருந்த கொடிமரம் பழுதாகி விட்டது. புதிய கொடி மரம் நிறுவ வேண்டும். நீ உடனே சந்தன மரம் வெட்டி அனுப்பு" என்றார். இதை கேட்டதும் மன்னருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. "முருகா எப்படி உடனே சந்தன மரத்தை நான் திருச்செந்தூருக்கு அனுப்பி வைப்பேன்" என்று கேட்டார்.

    அதற்கு முருகப்பெருமான் ஒரு வழிகாட்டினார். அதாவது மன்னனிடம், "ஒரு சந்தன மரத்தை வெட்டி அதை கடலில் உருட்டி விட்டு விடு. அதுஅலையில் மிதந்து கொண்டே இலங்கையில் இருந்து திருச்செந்தூருக்கு என்னிடம் வந்து சேர்ந்து விடும்" என்றார்.

    இதை கேட்டதும் கண்டி அரசன் திருச்செந்தூர் முருகன் சொன்னபடி சந்தன மரத்தை கடலுக்குள் கொண்டு வந்து போட்டான். அந்த மரம்தான் திருச்செந்தூருக்கு மிதந்து வந்தது. அதைத்தான் அந்த எருமை மாடு கடலுக்குள் பாய்ந்து சென்று தனது தலையால் முட்டி... முட்டி... கரைக்கு கொண்டு வந்து சேர்த்தது.

    இந்த தகவல் இலங்கையிலும், தமிழகத்திலும் வரலாற்று குறிப்புகளாக உள்ளன. திருச்செந்தூர் முருகனின் அற்புதமான திருவிளையாடல்களில் இதுவும் ஒன்றாக இன்றும் பேசப்படுகிறது. அதோடு திருச்செந்தூர் முருகன் நின்று விடவில்லை. தனக்குரிய கொடி மரத்தை கடலுக்குள் சென்று கொண்டு வந்த எருமை மாட்டை கவுரவிக்க முடிவு செய்தான்.

    ஒருநாள் திருச்செந்தூர் ஆலயத்தில் தலைமை அர்ச்சகர் மீது முருகன் அருள்பாலித்து பேச வைத்தார். அந்த அர்ச்சகர் ஆவேசத்துடன் எருமை மாட்டை நோக்கி, 'திருச்செந்தூர் ஆலயத்துக்கு புதிய கொடி மரம் கொண்டு வந்து திருப்பணி செய்ய நீ செய்த உதவியை யாராலும் மறக்க முடியாது. உன்னை இந்த தலத்துக்கு வரும் ஒவ்வொரு பக்தர்களும் வழிபட வேண்டும். எனவே இங்கே நீ கல் எருமையாக நிலைத்திருப்பாய்!" என்று அருள் புரிந்தார்.

    அதன்படி திருச்செந்தூர் ஆலயத்தை வலம் வந்த சிறப்புக்குரிய அந்த எருமை மாடு தனது முதிய பருவத்தில் குறிப்பிட்ட நாளில் கல் எருமையாக மாறியது. அதை ஆலய நிர்வாகிகள் சிறப்பித்து அபிஷேகம் செய்து ஆலயத்துக்குள் நிறுவினார்கள்.

    அந்த எருமை மாடு சிலை நீண்ட நாட்கள் திருச்செந்தூர் ஆலயத்தில் இருந்தது. கடந்த நூற்றாண்டில் திருச்செந்தூர் ஆலயத்தில் அடுத்தடுத்து நடந்த திருப்பணிகளின் போது அந்த சிலை கவனிப்பார் இல்லாமல் மறைந்து போனதாக கூறப்படுகிறது. இன்று திருச்செந் தூர் ஆலயத்தின் எந்த பகுதியிலும் அந்த எருமை சிலையை நாம் காண இயலவில்லை.

    திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இன்னொரு எருமை மாடும் முருகனின் அருள் பெற்று இருந்தது. அந்த எருமை மாடு பற்றிய அதிசய தகவலை அடுத்த வாரம் பார்க்கலாம்.

    • யாரையும் தோற்றம், உடையை வைத்து எப்போதும் எடை போட வேண்டாம்.
    • சித்தர்கள் அனைவருமே அஷ்டமா சித்திகளை அறிந்தவர்கள்தான்.

    அமைதி என்ற இந்த வார்த்தையினை இன்று இப்போது சொல்லும் போது யுத்தமற்ற நிலை- மக்களின் கூக்குரலற்ற நிலை என்பது தான் நம் மனதில் தோன்றும்.

    * அமைதி அழகானது. தெய்வீகமானது.

    * இருளை ஒளிதான் நீக்க முடியும். யுத்தம் நாட்டிலோ, வீட்டிலோ, மனதிலோ வந்தால் அமைதிதான் அதனை நீக்க முடியும்.

    * ஆனால் அமைதி என்பது யுத்தம், போராட்டம் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல. அதற்கும் மேலான ஒரு ஆனந்த உணர்வு.

    * அன்பின் உயர்ந்த வெளிப்பாடு.

    * நம்மால் இந்த அமைதியினை நம் முன் பெற்றுக் கொள்ள முடியும்.

    * பரபரப்பான வாழ்க்கையினைத் தவிர்த்தாலே பாதி அமைதி வந்து விடும்.

    ஒரு கண்ணுக்கு மறு கண் என்று எதிர்ப்பது உலகில் அனைவரையும் பார்வை அற்றவராக ஆக்கி விடும்- மகாத்மா காந்தி.

    * ஏற்பட்ட மன வலியினை மறப்பது கடினம்தான். ஆனால் அதனை சுமந்து வாழ்வது என்பது அதனை விட கடினம்.

    * உங்கள் உள் அனுமதி இல்லாமல் யாரும் உங்களை காயப்படுத்த முடியாது.

    * பரபரவென்று எந்த வேலையினையும் செய்ய வேண்டாமே.

    * மன சோர்வு, கவலை இருக்கின்றதா? நீங்கள் கடந்த காலத்தில் வாழ்கின்றீர்கள். ரொம்ப படபடப்பு இருக்கின்றதா? நீங்கள் வருங் காலத்திற்கு சென்று விட்டீர்கள். அமைதியாக இருக்கின்றீர்களா? நீங்கள் இப்போது இந்த நொடியில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றீர்கள்.

    * ஓரளவு மற்றவர்கள் இடம் இருந்து சற்று தள்ளி இருந்து பாருங்களேன். நிறைய அமைதி இருக்கும்.

    * ஏதாவது தவறு செய்து விட்டால் மனதார 'Sorry' சொல்லி விடுங்கள். மனம் லேசாக இருக்கும்.

    * யாரையும் தோற்றம், உடையை வைத்து எப்போதும் எடை போட வேண்டாம்.

    * யாரைப் பற்றியும் தவறாக பேச வேண்டாமே. இது எத்தனை அமைதி தரும் தெரியுமா?

    * அவ்வப்போது ஒரு நிமிட தியானம் செய்யலாம்.

    இப்படி எதற்காக அமைதியினைப் பற்றி திடீரென பேசுகின்றோம். இன்றைய சூழலில் 'அமைதி' என்பது மனிதனுக்கு மிக அவசியம் ஆகி விட்டது.

    நாட்டில் அமைதியின்மை, வீட்டில் அமைதியின்மை, நண்பர்கள், உறவுகள் என எவ்விடத்திலும் அமைதியின்மை நிலவுகின்றது. பரபரப்பான செய்திகள், பதற வைக்கும் செய்திகள், பாதுகாப்பின்மை, நிதி பற்றாக்குறை, ஆரோக்கியமின்மை என ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கின்றது.

    இதனால் தான் மனிதர் எப்போதும் மனநலம் கெட்டு இருக்கின்றான். இது உடல் நலத்தினையும் கெடுக்கின்றது.

     

    இந்த நிம்மதியினை, அமைதியினை தேடி அலையும் போது தியானம், யோகா, ஆன்மீகம், பக்தி, வழிபாடுகள் இவை மனதினை நிலை படுத்துகின்றன.

    யோகா, தியானம் இதனை முறையாக கற்று பிறகு பயிற்சி செய்ய வேண்டும். இது தரும் பலன்கள் அதிகம். ஆன்மீகம், வழிபாடு இவை அவரவர் குடும்ப வழக்கப்படி பின்பற்றப்படும். இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும்.

    அநேகர் குரு வழிபாடு, சித்தர் வழிபாடு என்றும் ஈடுபடுவர். பலரும் அன்றாட பிரச்சினைகளில் இருந்து விடுபடவே பல வழிபாட்டு தலங்களுக்கு செல்லவேண்டி உள்ளது. காரணம் தாங்க முடியாத பிரச்சினைகள்தான். ஒவ்வொருவருக்கும் ஒரு இடத்தில் அதிக பிடித்தம் ஏற்படுகின்றது. கடவுளிடம் சொல்லி விட்டால் பாரம் நிறைந்து மனம் அமைதி பெறுகின்றது.

    கடைசியில் மனிதன் உடல் ஆரோக்கியம், மன நிம்மதி இதனை மட்டுமே அடைய படாத பாடு படுகின்றான். இதனைப் பெற ஆன்மீகம் சார்ந்த வாழ்க்கை அநேகருக்கு உதவுகின்றது.

    பிரபல கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் இவற்றிற்கு என்றும் மரியாதை இருக்கத்தான் செய்கின்றது. பல சித்தர் கோவில்கள் ஆக்கிய மா முனிவர், மச்ச முனிவர் என ஆரம்பித்து ஷீரடி பாபா, ராகவேந்திர சுவாமிகள், ராமானுஜர், ரமணர், காஞ்சி மகா பெரியவர் என புத்தகம் எழுதும் அளவு பட்டியல் நீளும். இப்படி அனைத்து மதங்களிலும் கூற முடியும்.

    அவ்வகையில் நான் மிகவும் லயித்து பார்த்த ஒரு சித்தர் கோவிலைப் பற்றி இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

    சர்க்கரை அம்மா சித்தர்

    சென்னையில் திருவான்மியூர், கலாஷேத்ரா சாலையில் அமைந்துள்ளது சக்கரை அம்மா திருக்கோவில். இவரது பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ஆனந்தம்மா. இவரை பறவை சித்தர் என்றும் அழைப்பர். பறவையைப் போல் வானில் நொடியில் பறந்து செல்லும் ஆற்றல் படைத்தவர். அஷ்டமா சித்திகளைப் பெற்றவர். இடுப்பை சுற்றி நாகப் பாம்பினை அணிந்து நடமாடுவதனை அநேகர் பார்த்துள்ளனர்.

    1854-ம் ஆண்டு திருவண்ணாமலை அருகில் உள்ள தேவிகாபுரம் என்ற கிராமத்தில் சேஷ குருக்கள், சுந்தராம்பாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். தந்தை பெரிய நாயகி அம்மன் கோவிலில் குருக்களாக சேவை புரிந்து வந்தார். சிறு வயதில் ஆனந்தம்மா மற்ற குழந்தைகளைப் போல் விளையாட்டில் ஆர்வம் காட்டாது சிவ சுலோகங்களைப் படிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டினார்.

    அந்த கால முறைப்படி இவருக்கு 9 வயதில் திருமணம் நடந்தது. இவரது 20 வயதில் கணவன் இறந்தார். அதன் பின்னர் இவர் செங்கல்பட்டில் (அவர் கணவரது ஊர்) கோமளீஸ்வரர் கோவிலில் தியானத்தில் இருந்தார். பின்னர் தன் சகோதரர் இருந்த போலூர் என்ற ஊருக்கு வந்தார். அங்கு இருந்த நட்சத்திர குன்றில் உள்ள கோவிலில் தியானம் செய்ய சென்ற காலத்தில் அங்கிருந்த பெண் துறவி இவரை தன் சீடராக ஏற்றார். பெண் சித்தரின் பெயர் குளும்மா. இவர் பல ஆன்மீக ரகசியங்களை ஆனந்தம்மா அன்னைக்கு தீட்சையாக வழங்கினார். மேலும் ஸ்ரீ சக்கர உபாசன முறையினையும் அருளினார். இதில் லகிமா சக்தி முறையினையும் கற்று தன் உடலை எளிதாக்கி பறவை போல் வானில் பறந்து செல்லும் முறையினையும் அறிந்தார். கவுதம புத்தர் அவரது சீடர்களும் இப்படி வானில் பறக்கும் முறையினை அறிந்து இருந்தனர். சித்தர்கள் அனைவருமே அஷ்டமா சித்திகளை அறிந்தவர்கள்தான்.

    ஆனந்தம்மா தன் வீட்டு மாடியிலேயே கடும் தவத்தினை தொடர்ந்த நிலையில் பிரபஞ்சத்தில் இருந்து பேரருள் அவருள் இறங்கியது. அது பேரானந்த நிைல அல்லவா. குடும்ப நபர்களால் இந்த நிலையினை புரிந்து கொள்ள முடியவில்லை. அப்போது அன்னையின் சகோதரருக்கு உடல் நலம் இல்லாது போகவே டாக்டர் நஞ்சுண்ட ராவ் அவர்கள் இந்த வீட்டிற்கு வந்து செல்ல ஆரம்பித்தார். அவரால் அம்மாவின் ஆன்மீக உயர்வினை புரிந்து கொள்ள முடிந்தது.

    அவர் செல்லும் கோவில்களுக்கு டாக்டர் நஞ்சுண்ட ராவும் பின் தொடர்ந்தார். சீடரானார். இந்த நிலையில் இவர் ஸ்ரீ சக்கரத்தினையும், சிவபெருமானையும் பூஜித்ததால் சக்கர அம்மா என்று அழைக்கப்பட்டார். நாளடைவில் அது சக்கரை அம்மா என்று மாறியது. சக்கரை அம்மாவை தரிசனம் செய்தவர்கள் வாழ்வில் பல நன்மைகள் நடந்தன. அம்மாவின் மகிமை தானே பரவியது. இவர் விண்ணில் பறந்து திருவண்ணாமலை சென்று ரமண மகரிஷியினை தரிசித்ததாகவும் கூறப்படுகிறது.

     

    1900 வருடம் சக்கரை அம்மா மருந்தீஸ்வரர் கோவிலுக்குச் சென்றார். திரும்பும்போது ஒரு இடத்தினை டாக்டரிடம் வாங்கி அன்னையின் மறைவுக்குப் பிறகு அவர் அந்த இடத்தில் இருந்து தன் ஆசியினை வருபவர்களுக்கும், வேண்டுபவர்களுக்கும் அளிக்கப் போவதாக கூறினார். டாக்டரும் அந்த இடத்தினை வாங்கினார். 1901 பிப்ரவரி 28-ல் அம்மாவின் பூவுலக மறைவுக்குப் பின் அந்த இடத்தில் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இங்கு டொனேஷன் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்வதில்லை. பூ வாங்கி பலர் வருகின்றனர். பலர் தீபம் ஏற்றுகின்றனர். இது அவரவர் விருப்பம்.

    ஆனால் இங்கு வந்தவுடன் இனம் புரியாத அமைதி ஒருவரை ஆட்கொள்கின்றது. மனதிற்கு இதமாய் இருக்கின்றது. வருகின்ற அனைவரும் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறுவதை மகிழ்ச்சியாய் கூறுகின்றனர். மிக சுத்தமான சூழ்நிலை. சத்தம் இல்லா சூழ்நிலை. அம்மாவின் கருணை, அருள் இதனை ஒவ்வொருவரும் உணர முடிகின்றது. கருவறை, தியான மண்டபம் இதனை விட்டு வெளிவர மனதில்லை. அமைதியின் அர்த்தம் புரிகின்றது. இந்த அமைதிக்காகத் தானே மனிதன் அலையாய் அலைகின்றான்.

    சக்கரை அம்மா என்று தேடினால் இணையத்தில் அனைத்து விவரங்களும் கிடைக்கும். மேற்கூறப்பட்ட செய்திகள் இணையத்தில் சேகரித்து எழுதப்பட்டுள்ளது. நேரில் சென்ற அனுபவமும் சேர்ந்துள்ளது.

    வெளியூரில் இருக்கின்றீர்களா? வர முடியவில்லையா? 'சக்கரை அம்மாவை மனதில் நினைத்து தியானம் செய்யலாமே. ஒன்றை மட்டும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். வழிபாடுகளில் ஜாதி, மதம் என்று எதுவும் இல்லை. இப்படி நம்பதான் வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. விருப்பம் இருப்பவர்கள் அறிந்து கொள்ளவே இக்கட்டுரை எழுதப்பட்டு உள்ளது. காஞ்சி மகா பெரியவர் 5 நாட்கள், தொடர்ந்து இங்கு தியானம் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இங்கு வருபவர்கள் தங்கள் வாழ்வில் நடந்த அதிசயங்களைப் பற்றி கூறுகின்றனர். ரோஜா பூ மாலை விரும்பி அணிவிக்கின்றனர். அடிமுடி சித்தர் அம்மா அளித்த கூழை குடித்து மறவாதிருந்தால் பிறவாது இருக்கலாம். பிறவாது இருந்தால் இறவாது இருக்கலாம். என்று ஆசி அருளினார். ரமண மகரிஷி அவர்களோ பிறக்கும் போதே முழு தெய்வ அருளோடு பிறந்தவர் என்று அருளி உள்ளார்.

    பாம்பன் சுவாமிகள், விவேகானந்தர் போன்றவர்கள் தரிசித்தவர். நம் நாட்டின் மிகப்பெரிய பெருமை சித்தர்கள் தான். ஒளியை விட வேகமாக பயணித்து அண்டத்தை கண்டு வந்து அதனை பதிவும் செய்தவர் திருமூல சித்தர். வெவ்வேறு சித்தர்களை அங்கு பார்க்க முடியும் என்றவர் அவரே.

    உலக வாழ்வில் சில கோட்பாடுகள் நமக்கு அவசியம்

    * இறப்பை பற்றிய பயம் இருக்கக் கூடாது. இருந்தால் நாம் வாழும் காலமும் இறந்தது போல்தான்.

    * நமது ஒவ்வொரு நாள் வாழ்வும் நமக்கு போனஸ்தான்

    * தடைகள் பாதையில் இயல்புதான்

    * வாழும் போதே நம் வாழ்நாள் குறுகியது என்பதனை உணர்ந்து நேரம் வீணடிக்காமல் வாழ வேண்டும்

    * எண்ணங்கள் உங்கள் வாழ்க்கையில் அமைகின்றது

    * இல்லாத ஒன்றுக்காக ஏங்கி தவிக்க கூடாது

    * நம்பிக்கை வாழ்வில் ஒளியேற்றம் ஒன்று. எதனையும் ஆராய்ந்து பிறகு நம்புங்கள்

    * ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். 40 வயதில் படித்தவரும் சரி படிக்காதவரும் சரி உழைப்பு, சம்பாத்தியம், குடும்ப பொறுப்பு என்று இருக்கின்றனர்.

    * 50 வயதில் அனைவருக்கும் முக சுருக்கம் வரத்தான் வரும்.

    * 60 வயதில் ஓய்வு பெற்ற பின் அவர் உயர் அதிகாரியினை நிமிர்ந்து பார்ப்பதில்லை.

    -இதெல்லாம் வாழ்வின் யதார்த்தம் தானே!

    ×