என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்து வருகிறது. ஆனால், பொதுமக்கள் கட்டுப்பாடுகளையும் மீறி சுதந்திரமாக சுற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் புதிதாக 7 கட்டுப்பாட்டு மண்டலங்களை சுகாதாரத்துறை செயலரும், கலெக்டருமான அருண் அறிவித்துள்ளார்.
புதுவை ரெட்டியார் பாளையத்தில் காராமணிக்குப்பம் பாவேந்தர் வீதி, பவழநகர் முத்தாலம்மன் கோவில் வீதி, உழவர்கரை நண்பர்கள் நகர், காட்டேரிக்குப்பம் மேட்டுத்தெரு, பாகூர் இருளன்சந்தை வ.உ.சி. நகர், திலாசுப்பேட்டை தேரடி வீதி, அபிஷேகபாக்கம் அம்பேத்கார் வீதி, மடுகரை மெயின் ரோடு, மாரியம்மன் கோவில் வீதி, புது சாரம் ராஜீவ்காந்தி நகர் 2-வது குறுக்கு தெரு, லாஸ்பேட்டை அசோக்நகர் பாரதிதாசன் வீதி ஆகியவை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை இப்பகுதியில் அனைத்து போக்குவரத்தும் தடை செய்யப்படுகிறது. இங்கிருந்து வெளியில் செல்லவோ, வெளியிலிருந்து வரவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டப்படி கடுமையான தண்டனை விதிக்கப்படும் என கலெக்டர் அருண் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாடு மண்டலம் குறித்து காவல்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணிதுறை உள்ளிட்ட துறைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஆளுநர் மாளிகை செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வரும் திங்கள் முதல் புதன்கிழமை வரை மாலை 5 மணியில் இருந்து 6 மணி வரை வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு மூலம் மட்டுமே துணை நிலை ஆளுநர் கிரண் பேடி மக்களின் குறைகளை கேட்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பொது மக்கள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்காக வாட்ஸ்அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கு முன்பாக இதற்காக ஆளுநர் மாளிகையின் தொலைபேசி எண்ணில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது. தினசரி நோய்த்தொற்று 90 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 லட்சத்தை கடந்துள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு 45,62,415 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 96,551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,209 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 76,271 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,71,784-ல் இருந்து 35,42,664 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 70880 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,43,480 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.67 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 77.65 சதவீதமாகவும் உள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் இன்று மேலும் 504 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,026 ஆக அதிகரித்துள்ளது.






