என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்.
  X
  கோப்பு படம்.

  மொபட்டில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுவையில் பெண்ணிடம் 3½ பவுன் தங்க செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
  புதுச்சேரி:

  புதுச்சேரி காந்திதிருநல்லூர் மருதம் நகர் பகுதியை சேர்ந்தவர் கவிதா (வயது 41). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவரது சகோதரர் அமைதி நகர் விரிவாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 8-ந் தேதி சகோதரர் வீட்டுக்கு சென்ற கவிதா, அன்று இரவு 8.30 மணியளவில் தனது மொபட்டில் வீட்டுக்கு புறப்பட்டார்.

  தனபால்நகர் 3-வது குறுக்கு தெருவில் வந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென கவிதாவின் கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சங்கிலி பறித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
  Next Story
  ×