என் மலர்
புதுச்சேரி
காரைக்கால்:
காரைக்கால் அருகே உள்ள திரு.பட்டினம் பங்களா தோட்டத்தைச் சேர்ந்தவர் சபரிராஜன். இவர் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். சபரிராஜனின் உறவினர் அருள்மொழிதாசன் (வயது31).
இவர் வேதாரண்யத்தில் வசித்து வந்தார். அருள் மொழிதாசன் வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். மேலும் இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அருள்மொழிதாசனை அவரது தாயார் காரைக்காலில் உள்ள சபரிராஜன் வீட்டுக்கு அனுப்பிவைத் துள்ளார். தொடர்ந்து அருள் மொழிதாசன் சபரிராஜனின் ஓட்டலில் வேலை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று அருள்மொழிதாசன் மதுபானத்தில் விஷத்தை கலந்து குடித்துள்ளார். இதில் மயங்கி விழுந்த அவரை சபரிராஜன் மீட்டு சிகிச்சைகாக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அருள்மொழிதாசன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திரு.பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி தேர்தல் இன்று நடந்தது.
தேர்தலில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றவர்கள். ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிக்க புதுவை மாநிலத்தில் 4 பிராந்தியங்களில் வசிக்கும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களுக்கு பிரெஞ்சு தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.
புதுவை கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு துணை தூதகரம், பிரெஞ்சு பள்ளி என 2 ஓட்டுப்பதிவு மையங்களும், காரைக்காலில் ஒரு ஓட்டுப்பதிவு மையமும் அமைக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை 8 மணிக்கு ஓட்டு பதிவு தொடங்கியது. இரவு 7 மணி வரை ஓட்டளிக்கலாம். பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் அடையாள அட்டையுடன் வந்து வாக்களித்தனர்.
வாக்குபதிவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.






