என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தியேட்டர்கள் மீது நடவடிக்கை- அ.தி.மு.க.வலியுறுத்தல்

    டிக்கெட் கட்டணத்தை உயர்த்திய தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

    புதுவையில் திறந்த-வெளியில் விளம்பரங்கள் வைக்க அரசு முழுவதுமாக தடை விதித்துள்ள நிலையில் தற்போது கட்-அவுட் பேனர்கள் மாநிலம் முழுவதும் வைக்கப்பட்டுள்ளது. 

    இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. புதுவையில் பேனர் தடைச்சட்டம்  நடைமுறையில் உள்ள போது அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு பேனர் கட்அவுட் வைக்க அனுமதி வழங்குகின்றனர்.

    புதுவையில் விஜய் நடித்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் தியேட்டர்கள் 6 காட்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
    5 நாட்களுக்கு ரூ 100  கட்டணம் உயர்த்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்ததாக போலியான தகவல் வெளியிட்டு கட்டண பலகையும் வைக்கப்பட்டுள்ளது-.

    ஆனால் அரசு இது போன்று எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை என்று கூறியுள்ளது. போலியான அறிவிப்பை வெளியிட்ட தியேட்டர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட திரைப்-படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அன்பழகன் அறிக்கையில் கூறியுள்ளார்.
    Next Story
    ×