என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    அமைச்சர் சந்திரபிரியங்கா சிறுவனிடம் விளையாடும் வீடியோ

    அமைச்சர் சந்திரபிரியங்கா சிறுவனிடம் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
    புதுச்சேரி:

    புதுவை  போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் சந்திரபிரியங்கா. இவர் புதுவை முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகளாவார். புதுவையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில்  காரைக்கால் நெடுங்காடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

    பெண் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இவர் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் நடனமாடிய வீடியோ சமீபத்தில் வைரலானது. தொடர்ந்து மகளிர் தினத்தில் அம்மன் வேடமிட்ட வீடியோ வைரலாகியது.

    இந்த நிலையில் தற்போது அவர் வணிக நிறுவனம் ஒன்றில் தன்னை அமைச்சர் என நம்ப மறுக்கும் சிறுவனிடம் நான்தான் அமைச்சர் என விளையாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் சிறுவனிடம் அமைச்சர் என்று கூப்பிடு யார் வருகிறார்கள் என்று கூறி ஒளிந்து கொள்வதும் அமைச்சர் என்று கூறியவுடன் வந்து கைதட்டி உற்சாகப்படுவதும், தொடர்ந்து சிறுவனுக்கு சாக்லேட் கொடுப்பதும் பதிவாகி உள்ளது. 

    வீடியோ முடியும் போது அய்ய்யோ என்னடா லைன் கட்டி நிக்கிறீங்க? என சிறுவர்கள் வரிசையாக நிற்பதை சுட்டிகாட்டி சிரிப்பதுடன் முடிகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
    Next Story
    ×