என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சட்ட விதிகளை மீறும் பா.ஜனதாவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தல்

    பொது இடங்களில் பேனர், கட்-அவுட் சட்ட விதிகளை மீறும் பா.ஜனதாவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    புதுவையில் பொது சொத்துக்களில், அரசு இடங்களில், சாலையோரங்களில்  சுவரொட்டிகள் ஒட்டுவதும், கட்-அவுட்டுகள் வைப்பதும், கொடிகள் கட்டுவதும், பேனர் வைப்பதும் பா.ஜனதா வினாலும், அந்த கட்சி சார்பிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

    பா. ஜனதாவின் இத்தகைய செயல்கள் புதுவை திறந்தவெளி அழகியல் சீர்கேடு தடுப்பு சட்டம் 2000-ன் படி குற்றங்களாகும்.

    இந்த குற்றச்செயல்களை பா.ஜ.க.வினர் மீண்டும் மீண்டும் செய்து வருவதும், அவை குறித்து அவ்வப்போது புகார் சொல்லியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதிருப்பது சட்ட விரோதமாகும்.

    எனவே, விளம்பரங்களை நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துகள், பொதுப்பணித்துறை, அரசு துறைகள், நிறுவனங்கள் உடனே தாமே முன் வந்து உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் பா.ஜ.க.வினர் மீது  சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு ஏ.வி.சுப்ரமணியன் அறிக்கையில் கூறியுள்ளார்.
    Next Story
    ×