என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    காரைக்கால் அருகே மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை

    காரைக்கால் அருகே மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்கால்:

    காரைக்கால் அருகே உள்ள திரு.பட்டினம் பங்களா தோட்டத்தைச் சேர்ந்தவர் சபரிராஜன். இவர் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். சபரிராஜனின் உறவினர் அருள்மொழிதாசன் (வயது31).

    இவர் வேதாரண்யத்தில் வசித்து வந்தார். அருள் மொழிதாசன் வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். மேலும் இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அருள்மொழிதாசனை அவரது தாயார் காரைக்காலில் உள்ள சபரிராஜன் வீட்டுக்கு அனுப்பிவைத் துள்ளார். தொடர்ந்து அருள் மொழிதாசன் சபரிராஜனின் ஓட்டலில் வேலை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று அருள்மொழிதாசன் மதுபானத்தில் வி‌ஷத்தை கலந்து குடித்துள்ளார். இதில் மயங்கி விழுந்த அவரை சபரிராஜன் மீட்டு சிகிச்சைகாக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அருள்மொழிதாசன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திரு.பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×