என் மலர்
புதுச்சேரி
அ.தி.மு.க அமைப்பு தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
புதுச்சேரி:
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஆணைக்கிணங்க, புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தலைமையில் அ.தி.மு.க அமைப்புத் தேர்தல் சம்மந்தமான ஆலோசனைக் கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் பாஸ்கர், மாநில இணைச் செயலாளர்கள் கணேசன், அன்பானந்தம், மாநில துணை தலைவர்கள் ராஜாராமன், சின்னதுரை, மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர்கள் எம்.ஏ.கே கருணாநிதி, அன்பழக உடையார், உமா, மூர்த்தி, ஜெயசேரன், கிருஷ்ணமூர்த்தி, காந்தி, மணவாளன், குமுதன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் மருதமலையப்பன், மாநில மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலர் பாப்புசாமி, மாநில மகளிர் அணி செயலாளர் விஜயலட்சுமி, மாநில மாணவர் அணி செயலாளர் பிரதீப், மாநில வக்கீல் பிரிவு செயலாளர் ராமலிங்கம், மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைத் தலைவர் குணாளன், உட்பட அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கடலூர்-புதுவை சாலையில் தடுப்பு கட்டையில் மோதி பஸ் கவிழ்ந்தது
புதுச்சேரி:
புதுவையிலிருந்து கடலூருக்கு தமிழக அரசு பஸ் சென்று கொண்டிருதது.
கன்னியகோவில் அருகே சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிர் பாராதவிதமாக சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக் குள்ளானது.
இதில் டிரைவர், கண்டக்டர் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த கிருமாம்பாக்கம் போக்கு-வரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்கு-வரத்தை சரி செய்யதனர்.
மேலும் தடுப்புக் கட்டைகளை கிரேன் மூலம் அகற்றினர். மேலும் ராட்சத கிரேன்கள் மூலம் கவிழ்ந்த பஸ்சை அப்புறப்படுத்தினர்.
கன்னியகோவில் பகுதியில் சாலைக்கு நடுவில் தடுப்புகட்டை அமைக்கப் பட்டுள்ளது. இந்த தடுப்பு கட்டையில் பிரதிபலிப்பான்? எச்சரிக்கை பலகை மற்றும் அப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினார்.
இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திராவிடர் மாணவர்கள் கழகம் ஆர்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
திராவிடர் மாணவர் கழகம் சார்பில் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமை வகித்தார்.
திராவிடர் கழக பொதுச்செயலாளர் சந்திரசேகரன் தொடக்க உரையாற்றினார். மாணவர்கள் கழக நிர்வாகிகள் பண்பாளன், பிரபாகரன், இலக்கியா, இனியன், ரேவந்த்அண்டனி, சுபாஷ், கிருஷ்ணபாண்டி, மணிகண்டன், மாரிமுத்து, பிரகாஷ், ராமராஜ், சிவராஜ், திராவிடபுகழ், உன்னிகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன், தி.மு.க. மாணவரணி மணிமாறன், திராவிடர் கழக தலைவர் சிவவீரமணி, பிரவீன்குமார், எழிலன், தமிழ்வாணன் கண்டன உரையாற்றினர். மணிபாரதி நன்றி கூறினார்.
மத்திய பல்கலைக்-கழகங்களில் கட்டாய நுழைவுத்தேர்வு, முனைவர் பட்ட மாணவர்-களை தேர்ந்-தெடுக்கும் உரிமை பறிப்புக்காக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கிறிஸ்தவர்கள்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி:
தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கம் சார்பில் பேராயர் இல்லம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலதலைவர் மேரிஜான் தலைமை வகித்தார்.
ஆரோக்கியதாஸ், ராபர்ட்-பெஞ்சமின், அற்புதராஜ், தானியேல், விண்ணொளி-இர்வின்பால், சந்தனதுரை, எமிலி, சலேத்தையன், தலித்ராஜ், பெர்ணாண்டஸ், அழகு-சுந்தரம், அமலோற்பவதாஸ், ஆலீஸ், ஆனந்தராஜ், சூசை, அற்புதராஜ், ரெஜினாமேரி கண்டன உரையாற்றினர்.
பல்வேறு இயக்கத்தை சேர்ந்த ஜான்பிரிட்டோ, இருதயம் வல்லரசு, ஆரோஸ்டீபன்ராஜ், செல்வராஜ் உட்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.
கத்தோலிக்க திருச்சபையில் சாதி ஆதிக்கம் உள்ளது. தலித் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளதால் தலித் பேராயரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுவை சேதராப்பட்டில் பிரபல தனியார் பொறியியல் மற்றும் கலைக் கல்லூரி இயங்கி வருகிறது.
புதுச்சேரி:
சேதராப்பட்டு பகுதியில் கல்லூரி இயங்கி வந்தாலும் இந்தப் பகுதி வானூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது. இந்தக் கல்லூரியில் கடந்த ஜனவரி மாதம் பூட்டை உடைத்து உள்ளே இருந்த பல லட்சம் மதிப்பிலான 20க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது.
இதுகுறித்து வானூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த வாரம் இதே கல்லூரியில் உள்ள மற்றொரு கட்டிடத்தில் கதவை உடைத்து உள்ளே இருந்த கம்ப்யூட்டர்கள் மற்றும் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் கொள்ளை அடிக்கப்பட்டது.
இந்நிலையில் வில்லியனூர் அடுத்த தமிழக பகுதியான பெரம்பை பகுதியில் உள்ள தனியார் கலைக் கல்லூரி நிர்வாக பிரிவு கட்டிடத்திற்குள் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ரூபாய் 2 லட்சத்து 26 ஆயிரம் ரொக்கப் பணத்தையும், 5 கம்ப்யூட்டர்களையும், மற்றும் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட விலைமதிப்புள்ள கம்ப்யூட்டர் உதிரி பாகங்களை கொள்ளை யடித்து சென்றனர்.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு சப்&இன்ஸ்பெக்டர் வசந்த் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று சம்பவம் நடந்த கல்லூரிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விழுப்புரத்திலிருந்து ராக்கி என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து பெரம்பை மெயின் ரோடு வழியாக ஓடியது.
மேலும் விழுப்புரம் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். சம்பவம் நடந்த 2 கல்லூரிகளிலும் உள்ளே புகுந்த கொள்ளையர்கள் முதலில் சி.சி.டி.வி. கேமராக்களை அடித்து சேதப்படுத்தி விட்டு உள்ளே சென்று பொருட்களை கொள்ளையடித்து விட்டு அங்கு உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் பதிவாகும் சர்வரில் உள்ள ஹார்ட் டிஸ்கை எடுத்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
சேதராப்பட்டில் இயங்கிவரும் தனியார் கல்லூரியில் நடந்த 2 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் பெரம்பை தனியா ர் கல்லூரியில் நடந்த கொள்ளை சம்பவத்திலும் ஈடுபட்டிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
இந்த சம்பவத்தால் வானூர் மற்றும் ஆரோவில் போலீசார் அதிர்ச்சியில் உள்ளனர்.
மேலும் கொள்ளையர் களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர். தனியார் கல்லூரிகளை குறிவைத்து ரொக்க பணம் மற்றும் கம்ப்யூட்டர் பொருட் களை திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுவையில் மீன் வியாபாரிகள் திடீர் போராட்டத்தால் விற்பனை முடங்கியது
புதுச்சேரி:
புதுவை நகர பகுதியில் உள்ள பெரியமார்க் கெட்டில் மீன் மொத்த விற்பனை அங்காடி இயங்கி வந்தது.
சுமார் 60 ஆண்டுகளாக மீன் ஏலம் விடப்பட்டு மீனவர்கள் விற்பனை செய்து வந்தனர். இங்கு சில்லரை வியாபாரிகள் மீன்களை ஏலம் எடுத்து விற்பனை செய்வது வழக்கம். நகர பகுதி நெரிசலை கருத்தில்கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.13 கோடியில் நவீன மீன் அங்காடி கட்டப்பட்டது.
ஆனால் மீனவர்கள் அங்கு சென்று வியாபாரம் செய்வதில்லை. பெரிய மார்க்கெட் பகுதியில் மீன்களை இறக்கி விற்பனை செய்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பெரிய மார்க்கெட் பகுதியில் மீன்கள் இறக்கி விற்பனை செய்ய போலீசார் தடை விதித்தனர்.
இதை கண்டித்து அதிகாலையில் மீனவர்கள் மறியல் செய்தனர். 2 நாட்களில் இப்பிரச்சினை தீர்க்கப்படும் என பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. 2 நாட்களாக மீன்களை இறக்க போலீசார் அனுமதி மறுத்து வந்தனர். இதை கண்டித்து 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் பெரிய மார்க்கெட் முன்பு திரண்டு மீன்களை விற்பனை செய்யாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பெரியமார்க்கெட்டில் மீன் விற்பனை முடங்கியது. மீன் வியாபாரிகள் மீன்களை விற்காமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மீனவர்கள் போராட்டத்தையொட்டி பெரிய மார்க்கெட் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதுவை லாஸ்பேட்டையில் செண்டை மேளம் முழங்க நடனமாடி பக்தர்களுக்கு அருள்வாக்கு கேரள மக்களின் விநோத வழிபாடு நடைபெற்றது.
புதுச்சேரி:
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் பரசின்னி கடவு முத்தப்பன் கோவில் உள்ளது.
சிவபெருமானே இங்கு முத்தப்பனாக உள்ளார்.சிவனும் சக்தியும் திருவப்பன், வெள்ளாட்டம் என்னும் 2 வேடங்களை அணிந்து, மாந்திரீக நடனமாடி பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்கின்றனர். கண்ணூர் புதுவை மாநிலம் மாகி பிராந்தியம் அருகில் உள்ளது. இதனால், மாகி மக்களும் முத்தப்பனின் பக்தர்கள்.
உள்ளூர் பாரம்பரியத்-தின்படி புதுவை வாழ் கேரள மக்கள் கடந்த 5 ஆண்டுகளாக முத்தப்பனுக்கு விழா எடுத்து கொண்டாடுகின்றனர்.
லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பூங்காவில் விழா நடந்தது. தமிழ் மக்களின் குல தெய்வ வழிபாடு போல கேரள மக்கள் முத்தப்பன் திருவிழாவை பங்குனி மாதத்தில் நடத்துகின்றனர்.
இறுதி நாளில் திருவப்பன், வெள்ளாட்டம் என்னும் 2 வேடங்களை அணிந்து சிவன், சக்தி பள்ளிவேட்டை ஆடி குதித்து குதித்து பக்தர்-களுக்கு அருள்வாக்கு சொல்-லும் நிகழ்ச்சி செண்டை மேளம் முழங்க நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற கேரள மக்கள் சாமியிடம் தங்களது கோரிக்கைகளை காதில் கூறி அருள்வாக்கு பெற்றனர்.
தங்கள் வேண்டுதல் நிறைவேற விழாவில் பக்தர்கள் முத்தப்பனுக்கு தேங்காய், வெற்றிலை, பாக்கு, பச்சைப்பயறு, மீன், கருவாடு போன்றவற்றோடு நீண்ட கத்தி மற்றும் தென்னங்-கள்ளையும் கொடுத்து வழிபட்டனர்.
சார்பதிவாளர் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி:
புதுவை குயவர் பாளையத்தை சேர்ந்தவர் உலகநாதன். இவர் புதுவை பத்திரபதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக பணியாற்றி வந்தார். கடந்த 3-ந் தேதி உலகநாதன் மயங்கி விழுந்தார். உடனே அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து உலகநாதன் மகன் யுவராஜ் கொடுத்த புகாரின் பேரில் உருளையன் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பிரேத பரிசோதனையில் உலகநாதனின் கழுத்து எலும்பு உடைந்துள்ளது தெரிய வந்தது.
இதனால் உலகநாதன் மரணத்தில் சந்தேகம் எழுந்தது. அவரது வீட்டின் அருகில் உள்ள கேமிரா பதிவு காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, நில அபகரிப்பு கும்பலால் சார் பதிவாளர் கொலை செய்யப்பட்டதாகவும், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் எனவும் கூறினார்.
இதற்கிடையே உப்பளம் தொகுதி தி.மு.க.எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி கூறும் போது, மரணம் அடைந்த சார் பதிவாளர் உலகநாதனின் செல்போனை ஆய்வு செய்து குற்றவாளிகளின் மிரட்டல் கால்களை ஆய்வு செய்து குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களையும், உடந்தையாக இருந்தவர்களையும் சட்டத்துக்கு முன் கொண்டு வந்து தண்டிக்க வேண்டும் என கூறி உள்ளார்.
கோரிமேடு அருகே மொராட்டாண்டியில் ஓம் வழிகாட்டும் சாய்பாபாவுக்கு 108 கிலோ சர்க்கரை அபிஷேகம் நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை கோரிமேடு அருகே மொராட்டாண்டியில் ஓம் வழிகாட்டும் சாய்பாபா ஆலயம் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் வாரந்தோறும் வியாழக்-கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் அன்ன-தான நிகழ்ச்சி நடைபெறும். மேலும் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.
இந்த நிலையில் ராமநவமியையொட்டி வழி காட்டும் சாய்பாபா சிலைக்கு 108 கிலோ சர்க்கரை அபிஷேகம் செய்து அதனை எறும்புக்கு தானமாக அளிக்கப்பட்டது.
மேலும் அபிஷேகம் செய்யப்பட்ட சர்க்கரை பக்கதர்களுக்கும் வழங்கப்-பட்டது. இதனைதொடர்ந்து ராமபஜனையும், மாணவி அருவியின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பாபா பிரசாதம் மற்றும் மோர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி சாய்சசி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
லாஸ்பேட்டையில் முதியவர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
புதுச்சேரி:
லாஸ்பேட்டையை அடுத்த புதுபேட்டை கனகன் தோட்டம் வீதியை சேர்ந்தவர் அருட்பெருஞ்ஜோதி (வயது80) இவரது மனைவி சரோஜாதேவி. இவர்களுக்கு 2 மகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனித் தனியாக வசித்து வருகிறார்கள்.
வயது முதிர்ச்சி காரணமாக அருட்பெருஞ்ஜோதிக்கு உடல்வலி போன்ற சிறுசிறு பிரச்சினைகள் இருந்து வந்தது.
இந்தநிலையில் அருட்பெருஞ்ஜோதி உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி சரிந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி சரோஜாதேவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு சிகிச்சைக்காக ஆட்டோவில் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அருட் பெருஞ்ஜோதி இறந்து விட்டதாக தெரிவித்தனர். திடீர் நெஞ்சுவலியால் அருட்பெருஞ்ஜோதி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது மனைவி சரோஜாதேவி கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொதுமக்களுக்கு இடையூறாக வைத்திருக்கும் பேனர்களை அகற்ற கலெக்டர் உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில் உருளையன் பேட்டை விஜய் மன்றம் சார்பில் கடற்கரை காந்தி சிலைக்கு பின்புறம் நடுக்கடலில் பேனர் வைத்து ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனார்.
புதுச்சேரி:
நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி கடந்த ஜூன் மாதம் அரியாங்குப்பத்தை சேர்ந்த விஜய் ரசிகர் மன்றத்தினர் கடலுக்கு நடுவில் பேனர் வைத்து பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் 13-ந்தேதி வெளியாகிறது. திரைப்படத்தை வரவேற்று புதுவை நகரப்பகுதிகள் மட்டுமின்றி கிராமப்பகுதிகளிலும் விஜய் ரசிகர்கள் விதவிதமான பேனர்களை வைத்துள்ளனர். அந்த பேனர்களில் தங்களது விருப்பமான அரசியல் கட்சி தலைவர்களின் உருவப்படங்களை அதில் இடம் பெறச்செய்துள்ளனர்.
இதற்கிடையே பொதுமக்களுக்கு இடையூறாக வைத்திருக்கும் பேனர்களை அகற்ற கலெக்டர் உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில் உருளையன் பேட்டை விஜய் மன்றம் சார்பில் கடற்கரை காந்தி சிலைக்கு பின்புறம் நடுக்கடலில் பேனர் வைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனார்.
இதனை புதுவை கடற்கரையில் கூடும் சுற்றுலா பயணிகளும், நடைபயிற்சி செல்வோரும் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.
நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி கடந்த ஜூன் மாதம் அரியாங்குப்பத்தை சேர்ந்த விஜய் ரசிகர் மன்றத்தினர் கடலுக்கு நடுவில் பேனர் வைத்து பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் 13-ந்தேதி வெளியாகிறது. திரைப்படத்தை வரவேற்று புதுவை நகரப்பகுதிகள் மட்டுமின்றி கிராமப்பகுதிகளிலும் விஜய் ரசிகர்கள் விதவிதமான பேனர்களை வைத்துள்ளனர். அந்த பேனர்களில் தங்களது விருப்பமான அரசியல் கட்சி தலைவர்களின் உருவப்படங்களை அதில் இடம் பெறச்செய்துள்ளனர்.
இதற்கிடையே பொதுமக்களுக்கு இடையூறாக வைத்திருக்கும் பேனர்களை அகற்ற கலெக்டர் உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில் உருளையன் பேட்டை விஜய் மன்றம் சார்பில் கடற்கரை காந்தி சிலைக்கு பின்புறம் நடுக்கடலில் பேனர் வைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனார்.
இதனை புதுவை கடற்கரையில் கூடும் சுற்றுலா பயணிகளும், நடைபயிற்சி செல்வோரும் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.
புதுவையில் கடற்கரை சாலை காந்தி சிலைக்கு பின்னால் கடலுக்கு நடுவில் உள்ள பழைய ரெயில்வே மரக்கட்டையில் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் பேனர் வைப்பது ரசிகர்களுக்கு வழக்கமாகிவிட்டது.
இதையும் படியுங்கள்... உலகளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 62 லட்சத்தைத் தாண்டியது
கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்புவரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
காரைக்கால்:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டம், காரைக்கால் மற்றும் கடலோர பகுதிகளில் பரவலாக பலத்தமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதன்படி நேற்று அதிகாலை முதல் கடலூர் மற்றும் காரைக்கால் மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக திருநள்ளாறு, நெடுங்காடு, கோட்டுச்சேரி, டி.ஆர்.பட்டினம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியது.
இன்று காலையும் மழை பெய்தபடி இருந்தது. இதனால் காரைக்கால் மாவட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்புவரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட கலெக்டர் வல்லபன் தெரிவித்துள்ளார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டம், காரைக்கால் மற்றும் கடலோர பகுதிகளில் பரவலாக பலத்தமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதன்படி நேற்று அதிகாலை முதல் கடலூர் மற்றும் காரைக்கால் மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக திருநள்ளாறு, நெடுங்காடு, கோட்டுச்சேரி, டி.ஆர்.பட்டினம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியது.
இன்று காலையும் மழை பெய்தபடி இருந்தது. இதனால் காரைக்கால் மாவட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்புவரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட கலெக்டர் வல்லபன் தெரிவித்துள்ளார்.






