என் மலர்
புதுச்சேரி
பிரதமரின் வீடுகட்டும் திட்ட பயனாளிகளுக்கு எல்.இ.டி. பல்புகள் வி.பி. ராமலிங்கம் எம்.எல்.ஏ. வழங்கினார்.
புதுச்சேரி:
ராஜ்பவன் தொகுதிக்-குட்பட்ட பகுதிகளில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பயனடைந்த பயனாளி-களுக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. வி.பி. ராமலிங்கம் எல்.இ.டி. பல்பு, இனிப்பு வழங்கி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் புதுவை ராஜ்பவன் தொகுதிக்கு உட்பட்ட வைத்திக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் கட்டப்-பட்டுள்ளன. இந்த வீடுகளின் பயனாளிகளை பா.ஜனதா எம்.எல்.ஏ வி.பி.ராமலிங்கம் நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது அவர்களுக்கு எல்.இ.டி. பல்பு, மற்றும் இனிப்பு வழங்கியும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தார். பிரதமரின் இந்த பயனுள்ள திட்டத்தை மக்களிடம் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என பயனாளிகளிடம் வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தெரிவித்தார். ராஜ்பவன் தொகுதி பா.ஜனதா தலைவர் நாகராஜன் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் ஓ.பி.சி. மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டியன், தொகுதி பொது செயலாளர் கதிரவன், மாநில செயலாளரும், திட்டத்தின் பொறுப்பாளருமான லதா, நகர மாவட்ட பொது செயலாளர் விமலா, ஓ.பி.சி. பிரிவு தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ரஞ்சித், தொகுதி துணை தலைவர் அமுதா, செயலாளர்கள் ராம்குமார், ரகுகுமார், கீதா, பட்டாபி, கபிலன் உள்ளிட்ட பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
உருளையன்பேட்டை ராஜாநகர் சமுதாயநல கூடம், நூலகத்தை திறக்க வேண்டும் என தி.மு.க.வினர் அமைச்சர் சந்திரபிரியங்காவிடம் மனு அளித்தனர்.
புதுச்சேரி:
உருளையன்பேட்டை ராஜா நகரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் குளிரூட்டும் வசதியுடன் கூடிய சமுதாய நலக்கூடம் மற்றும நூலகமும் கட்டப்பட்டு திறக்கப்பட்டது
ஆனால், திறக்கப்பட்டு ஓராண்டாகியும் இதுநாள் வரை மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை.
இந்த கட்டிடங்களை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தை உருளையன்பேட்டை தி.மு.க. தொகுதி பொறுப்பாளர் கோபால் சட்டசபையில் அமைச்சர் சந்திர பிரியங்காவை சந்தித்து கொடுத்தார்.
அப்போது தி.மு.க. மாநில துணை அமைப்பாளர் குணா திலீபன், பொதுக்குழு உறுப்பினர் மாறன், தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன், சொல்தாரவி, தொகுதி இளைஞரணி அமைப்பாளர் தாமரைக்கண்ணன், கிளை செயலாளர்கள் அகிலன், தட்சிணாமூர்த்தி, விஜயகுமார், வெங்கட், சசிகுமார், புருஷோத்தமன், கந்தசாமி, இருதயராஜ், சரவணன், முத்து, ஐசக் மற்றும் அஜி பாஷா, பாக்கியராஜ், அந்தோணி, கிரி, நெல்சன், பிரகாஷ், கந்தன், மூர்த்தி, சாலமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆட்டோ புதுப்பித்தல் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என ஏ.ஐ.டி.யூ.சி. ஆட்டோ சங்கத்தினர் ரங்கசாமியிடம் மனு அளித்தனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில ஏ.ஐ.டி.யூ.சி. ஆட்டோ சங்க பொதுச் செயலாளர் சேதுசெல்வம், ஆட்டோ சங்க மாநில தலைவர் சேகர் ஆகியோர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஆட்டோ புதுப்பித்தல் கட்டணமாக ரூ.700 செலுத்தப் பட்டது. இதனை, திடீரென ரூ. 4 ஆயிரத்து 600 ஆக உயர்த்திக்கட்ட அறிவிப்பு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.
இதனால் இந்த தொழிலை நம்பியுள்ள ஆட்டோ தொழிலாளர்கள் மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதோடு, இன்சூரன்ஸ் கட்டணமாக ஆட்டோ ஒன்றுக்கு ரூ 8 ஆயிரம், சாலை வரியாக ரூ ஆயிரத்து 500 கட்ட வேண்டிய நிலை உள்ளது. இதுமட்டுமின்றி, ஆண்டுதோறும் ஆட்டோ எப்.சி. எடுப்பதற்கு முன்பு டிங்கரிங், பெயிண்டிங், லைனர் வேலை, மெக்கானிக் கூலி என ரூ. 30 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டியது உள்ளது.
இதனிடையே பெட்ரோல் விலையும் உயர்த்தப்பட்டு ரூ.104 விற்கப்பட்டு வருகிறது. இவ்வளவு நெருக்கடியான சூழ்நிலையிலும் வாழ்வாதாரத்திற்காக இந்த தொழிலை, தொழிலாளர்கள் செய்து வருகிறார்கள்.
எனவே, உயர்த்திய எப்.சி. கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். மேலும், ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு ஆந்திராவை போல் புதுவை அரசும் ஆண்டுதோறும் ஆட்டோக்களுக்கு எப்.சி. எடுப்பதற்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஆட்டோ சங்க நிர்வாகிகள் பிரகாஷ், தேவநாதன், சசி, நடனமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோட்டக்குப்பம் அபினேஷ் கொலையில் பிரபல ரவுடி-கூட்டாளி கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி:
கோட்டக்குப்பம் அபினேஷ் கொலையில் பிரபல ரவுடி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். கோட்டக்குப்பம் மரக்காயர் வீதியில் கடந்த 8-ந்தேதி இரவு மரக்காணம் அடுத்த நொச்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ரவுடி அபினேஷ் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சோலை நகரை சேர்ந்த கலையரசன் மர்ம சாவுக்கு பழிக்குப்பழியாக நடந்தது விசா-ரணையில் தெரியவந்தது. அபினேஷ் கொலை சம்பவத்தில் சோலை நகரை சேர்ந்த சதீஷ் என்கற ஆமைவாயன், அஜித்ராஜ் மற்றும் முகம்மது அசேன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து கொலைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர்.
சதீஷ் கொடுத்த வாக்குமூலத்தின்படி இந்த கொலையில் தொடர்புடைய சின்னகோட்டக்குப்பம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த ராயர் மகன் அப்பு என்கிற ஜவகர் வயது (21) மற்றும் கோட்டகுப்பம் சோதனைகுப்பம் அய்யனார் கோவில் வீதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அரவிந்த் (வயது 22) ஆகிய 2 பேரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்ஸ்-பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் அப்பு என்ற ஜவகர் மற்றும் அவரது கூட்டாளி அரவிந்தை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான அப்பு என்ற ஜவகர் பிரபல ரவுடி ஆவார். அவர் மீது ஏற்கனவே 2 கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடற்கரை திருவிழாவையொட்டி வாகனங்களை நிறுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
கடற்கரை திருவிழாவையொட்டி வாகனங்கள் நிறுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புதுவையில் 16-ந்தேதி மாலை வரை கடற்கரை திருவிழா கடற்கரை சாலையில் கொண்டாடப்-பட உள்ளது.
விழாவில் புதுவை மக்கள் மட்டுமல்லாது, சுற்றுலா பயணிகளும் ஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி கடற்கரை திருவிழாவில் கலந்துகொள்ள வரும் பொதுமக்களின் நலனுக்காக போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்-பட்டுள்ளது. இதுகுறித்து வடக்கு- கிழக்கு போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுவை கடற்கரை விழாவிற்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை பழைய துறைமுகம் பகுதியில் மட்டும் நிறுத்த வேண்டும். அங்கிருந்து அவர்கள் நடந்து விழாவிற்கு செல்ல வேண்டும். கடற்கரை திருவிழாவில் கலந்து கொள்ள வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை செயின்ட் லூயிஸ் வீதி, துமாஸ் வீதி ஆகிய வீதிகளில் மற்றும் பிரமோனட் ஓட்டல் அருகே வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரும் புதிய தற்காலிக ஏற்பாட்டை பின்பற்றி விழாவில் பாதுகாப்புடன் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் உடனிருந்தார்.
கிருமாம்பாக்கத்தில் பெய்த திடீர் மழையால் மாணவர்கள் அவதியடைந்தனர்.
புதுச்சேரி:
பாகூர், கிருமாம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் கடந்த 3 நாட்களாக திடீர் மழை அவ்வப்போது பெய்துவருகிறது.
இதனால் பொதுமக்கள் இரவு வெப்ப காற்றில் இருந்து மீண்டு குளிர்ந்த காற்றை உணர்ந்து சற்று நிம்மதியாக தூங்குகின்றனர்.
இந்த நிலையில் 6 மணிக்கு கிருமாம்பாக்கம் பகுதியில் திடீர் மழை பெய்தது. 9.30 மணி வரை மழை பெய்தது.
இதனால் பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் பொது-மக்கள் அவதிக்குள்ளாகினர். திடீர் மழையால் குடை, மழை கோட்டு எடுத்து வராததால் நனைந்தபடியும், பலர் சாலை ஓரத்தில் நீண்ட நேரமாக காத்து கிடந்தனர்.
இந்த மழைக்கு கடலூர்-புதுவை மெயின் ரோடு மற்றும் உள்வீதிகளில் தண்ணீர் தேங்கியது.
குறிப்பாக கிருமாம்பாக்கம் இந்திரா நகர் பகுதியில் உள்ள சாலையில் மழைநீர் வெளியேறாமல் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது.
இங்கு உள்ள கழிவுநீர் வாய்க்கால் தூர்வார படாமல் இருந்து வருவதாக அப்பகுதி புகார் தெரிவித்துள்ளனர்.
அரசு பள்ளியில் புகுந்து மாணவனை தாக்கி ஆசிரியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் அன்பழகன். ஆட்டோ டிரைவர். இவர் தற்போது குடும்பத்துடன் முதலியார் பேட்டை மார்கெட் வீதியில் வாடகை வீட்டில் குடும்பத்-துடன் வசித்து வருகிறார். இவரது மூத்தமகன் புதுவை சுப்பையாநகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அன்பழகன் முன்பு தமிழகப்பகுதியான் ஸ்ரீராம் நகரில் வசித்த போது அவரது மகனுக்கும் ரோடியர் பேட் அங்கு நாயக்கர் தோப்பு பகுதியை சேர்ந்த அப்துல் காதர் (20) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி அன்பழகனின் மகனை அப்துல் காதர் வெளியே அழைத்து சென்று தவறான செயலில் ஈடுபடுத்தி வந்தார்.
இதனை அறிந்த அன்பழகன் ஸ்ரீராம் நகரில் இருந்து வீட்டை மாற்றி முதலியார் பேட்டையில் குடியேறினார். மேலும் தனது மகனை தினமும் ஆட்டோவிலேயே பள்ளிக்கு அழைத்து சென்று பின்னர் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு அழைத்து வருவார்.
ஆனாலும் ஒரு சில நாட்களில் அன்பழகன் சென்ற பின்னர் பள்ளியில் இருந்து அவரது மகனை அப்துல் காதர் அழைத்து செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
இதனை அன்பழகன் கண்டித்ததால் அவரது மகன் அப்துல் காதருடன் பழகுவதை நிறுத்திக்-கொண்டார்.
இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி அப்துல் காதர் பள்ளிக்கூட அலுவலக அறைக்குள் அத்துமீறி நுழைந்து அன்பழகனின் மகனை அழைத்துள்ளார். ஆனால் அந்த மாணவன் வர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்துல் காதர் அந்த மாணவனை தாக்கி தன்னுடன் வராவிட்டால் உனது தந்தையை கொலை செய்து விடுவேன் என மிரட்டினார். இதனை தட்டிக்கேட்ட பள்ளி ஆசிரியர்களிடம் என் மீது ஏற்கனவே 2 வழக்கு உள்ளது. உங்களைகொலை செய்து விடுவேன் என்று மிரட்டி விட்டு அப்துல் காதர் சென்றுவிட்டார்.
இது பற்றி ஆசிரியர்கள் மாணவனின் தந்தையான அன்பழகனுக்கு தகவல் தெரிவித்தனர்.
அன்பழகன் பள்ளிக்கு விரைந்து வந்து அவரது மகனை அழைத்துச் சென்று குயவர்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தார். பின்னர் இது குறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து அப்துல் காதரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்
லாஸ்பேட்டையில் கல்லூரி மானவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் உள்ள பூங்கா அருகே கல்லூரி-பள்ளி மாணவர்களுக்கும் மற்றும் இளைஞர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்யபடுவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திர சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தன.
அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 5 வாலிபர்களை பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்ற 4 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் சோதனை நடத்திய போது அவர்களது சட்டைப் பையில் சிறு சிறு பொட்டலங்களாக 600கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது.
இதை தொடர்ந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து பிடிபட்ட 4பேரிடமும் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் லாஸ்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்த ஜான் (24) லாஸ்பேட்டை குமரன் நகரை சேர்ந்த பிரகாஷ் (24) மற்றும் ருத்ரகுமார், பிரவின் என்பதும் தப்பி ஓடியவர் பாரத் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய பாரத்தை தேடிவருகின்றனர்.
சசிகலாவை நீக்கியது செல்லும் கோர்ட்டு தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் பேசினார்.
புதுச்சேரி:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
கோர்ட்டு தீர்ப்பை வரவேற்று புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க. சார்பில் லெனின் வீதி தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமையில் அ.தி.-மு.க.வினர் பட்டாசு வெடித்து தொண்டர்-களுக்கும், பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கினர். தொடர்ந்து ஓம்சக்திசேகர் பேசியதாவது:&
அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுசெயலாளர் ஜெய-லலிதா மட்டுமே. வேறு யாருக்கும் அந்த பதவி கிடையாது என்று முதலில் வலியுறுத்தியது நான்தான். இதனால் சசிகலாவால் கட்சியை விட்டு முதலில் நீக்கபட்டவன் நான்தான்.
ஆனால், இப்போது நீதிமன்றமே சசிகலா நியமனம் செல்லாது என்று தெரிவித்து இருப்பது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பாகும். அ.தி.மு.க. என்னும் இரும்பு கோட்டை ஜெயலலிதா வழியில் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக செயல்படும். இதுவே தொண்டர்களின் எண்ணமும் ஆகும்.
இவ்வாறு ஒம்சக்தி சேகர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாநில இணை செயலாளர் காசிநாதன், மாநில துணை செயலாளர் கணேசன், தொகுதி செயலாளர்கள் வெங்கடேசன், கமல்தாஸ், கோபால், வேலவன் மற்றும் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் முருகன் தம்பா, அறிவு, சுரேஷ்பாபு, நாக லோகநாதன், அய்யனார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பிளாஸ்டிக் தடை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
புதுச்சேரி:
மத்திய அரசு வருகிற ஜூலை 1-ந் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் 15 பிளாஸ்டிக் பொருட்களுக்கு நாடு முழுவதும் தடை விதித்துள்ளது.
இந்த தடை ஆணையை மாநிலத்தில் அமல்படுத்துவது தொடர்பாக சுற்றுச்சூழல் துறை செயலர் ஸ்மித்தா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் சீனியர் பொறியாளர் ரமேஷ், ஒருமுறை பயன்படுத்தும் 15 பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து படக்காட்சிகளுடன் எடுத் துரைத்தார். உள்ளாட்சித்துறை செயலர் ரவிதீப்சிங் சாகர், நகராட்சி ஆணையர்கள் சிவக்குமார், சுரேஷ்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் பங்கேற்றனர்.
பிளாஸ்டிக் பொருட்க ளுக்கு மாற்று பொருட்கள், பொதுமக்கள் விழிப்புணர்வு, உற்பத்தி, பயன்பாடை தடுத்தல் உட்பட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது.
வில்லியனூர் அருகே தொழிலாளி மயங்கி விழுந்து இருந்து போனார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே ராமநாதபும் முருகன்கோவில் தெருவை சேர்ந்தவர் பாவாடை (வயது47). கூலி தொழிலாளி. இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக பாவாடைக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததால் அவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இதனால் குடும்பத்தை காப்பாற்ற ராஜலட்சுமி புதுவையில் உள்ள ஜவுளிக் கடையில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் பாவாடை வீட்டில் இருந்து வெளியே சென்றார். அங்குள்ள தண்ணீர் தொட்டி அருகே சென்ற போது திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி சாய்ந்தார். உடனே அங்கிருந்தவர்கள் பாவாடையை மீட்டு வீட்டுக்கு கொண்டு வந்தனர்.
அப்போது மீண்டும் அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. உடனே அங்குள்ள ஜிப்மர் கிளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோரிமேடு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாவாடை பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மனைவி ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருவடிக்குப்பத்தில் பெண்ணை மானபங்கம் செய்து கொலை மிரட்டல் விடுத்த ரவுடிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை கருவடிக்குப்பம் மேஜர் சரவணன்நகரை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி பூரணி. இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கம் பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் விக்னேசுக்கும் அதே பகுதிகளான ரவுடிகளான கார்த்திக் என்ற பாபாகார்த்திக், அருண் என்ற எள்ளாடை அருண் ஆகியோருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் பாபா கார்த்திக்கை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜெயிலில் இருந்து பாபா கார்த்திக் வெளியே வந்தார். பூரணி மற்றும் அவரது மகன் விக்னேஷ் வீட்டில் இருந்த போது பாபா கார்த்திக், எள்ளாடை அருண் மற்றும் ஒருவர் ஆகிய 3 பேர் அத்துமீறி பூரணியின் வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த விக்னேசை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி வெட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினர்.
மேலும் விக்னேசை தாக்க முயன்றனர். இதனை பூரணி தடுக்க முயன்ற போது அவரது சேலையை பிடித்து உருவி மானபங்கம் செய்தனர். மேலும் கத்தியை காட்டி 2 பேரையும் இங்கேயே வெட்டி கொலை செய்து புதைத்து விடுவோம் என்று மிரட்டினர். இதனால் பயந்து போன பூரணி அலறல் சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் திரண்டு வரவே ரவுடிகள் 3 பேரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இதுகுறித்து பூரணி லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பாபா கார்த்திக், எள்ளாடை அருண் உள்பட 3 பேரையும் தேடி வருகிறார்கள்.
புதுவை முத்திரையர்பாளையம் காந்திதிருநல்லூர் திருநாவுக்கரசு தெருவை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தீபா(31). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேலு என்பவருக்கும் நட்பு ரீதியாக பழக்கம் இருந்து வந்தது.
இருவரும் பணம் கொடுக்கல்-வாங்கல் மற்றும் ஒருவருக்கொருவர் உதவி செய்தல் என பழகி வந்தனர்.
இந்த நிலையில் வேலுவின் உறவினர்களான ரபி, சங்கீதா மற்றும் சசி ஆகியோர் தீபாவின் வீட்டுக்கு சென்று அவரிடம் வேலுவிடம் எப்படி பழகலாம் என கேட்டு தகராறு செய்தனர்.
மேலும் விபசார தொழில் செய்வதாக தீபாவை திட்டினர். இதனை தடுக்க முயன்ற தீபாவின் தங்கையான காமாட்சியையும் அவர் கள் தாக்கினர். இனிமேல் வேலுவிடம் தொடர்பு வைத்துக்கொண்டால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டி விட்டு அவர்கள் சென்றனர். இந்த தாக்குதலில் காயமடைந்த தீபா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






