என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக் தடை அமல்படுத்த ஆலோசனை  கூட்டம் நடந்த காட்சி.
    X
    பிளாஸ்டிக் தடை அமல்படுத்த ஆலோசனை கூட்டம் நடந்த காட்சி.

    பிளாஸ்டிக் தடை அமல்படுத்த ஆலோசனை

    பிளாஸ்டிக் தடை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
    புதுச்சேரி:

    மத்திய அரசு வருகிற ஜூலை 1-ந் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் 15 பிளாஸ்டிக் பொருட்களுக்கு நாடு முழுவதும் தடை விதித்துள்ளது.

    இந்த தடை ஆணையை மாநிலத்தில் அமல்படுத்துவது தொடர்பாக சுற்றுச்சூழல் துறை செயலர் ஸ்மித்தா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 

    கூட்டத்தில் சீனியர் பொறியாளர் ரமேஷ், ஒருமுறை பயன்படுத்தும் 15 பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து படக்காட்சிகளுடன் எடுத் துரைத்தார். உள்ளாட்சித்துறை செயலர் ரவிதீப்சிங் சாகர், நகராட்சி ஆணையர்கள் சிவக்குமார், சுரேஷ்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் பங்கேற்றனர். 

    பிளாஸ்டிக் பொருட்க ளுக்கு மாற்று பொருட்கள், பொதுமக்கள் விழிப்புணர்வு, உற்பத்தி, பயன்பாடை தடுத்தல் உட்பட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது.
    Next Story
    ×