என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

    வில்லியனூர் அருகே தொழிலாளி மயங்கி விழுந்து இருந்து போனார்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே ராமநாதபும் முருகன்கோவில் தெருவை சேர்ந்தவர் பாவாடை (வயது47). கூலி தொழிலாளி. இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும்,  ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளாக பாவாடைக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததால் அவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். 

    இதனால் குடும்பத்தை காப்பாற்ற ராஜலட்சுமி புதுவையில் உள்ள  ஜவுளிக் கடையில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில்  பாவாடை வீட்டில் இருந்து வெளியே சென்றார். அங்குள்ள தண்ணீர் தொட்டி அருகே சென்ற போது திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி சாய்ந்தார். உடனே அங்கிருந்தவர்கள் பாவாடையை மீட்டு வீட்டுக்கு கொண்டு வந்தனர்.

    அப்போது மீண்டும் அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. உடனே அங்குள்ள ஜிப்மர் கிளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோரிமேடு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி   பாவாடை பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மனைவி ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×