என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் கல்லூரியில் திருட்டு புதுவை சேதராப்பட்டில் பிரபல தனியார் பொறியியல் மற்றும் கலைக் கல்லூரி இயங்கி வருகிற
    X
    தனியார் கல்லூரியில் திருட்டு புதுவை சேதராப்பட்டில் பிரபல தனியார் பொறியியல் மற்றும் கலைக் கல்லூரி இயங்கி வருகிற

    தனியார் கல்லூரியில் திருட்டு

    புதுவை சேதராப்பட்டில் பிரபல தனியார் பொறியியல் மற்றும் கலைக் கல்லூரி இயங்கி வருகிறது.
    புதுச்சேரி:

    சேதராப்பட்டு பகுதியில் கல்லூரி இயங்கி வந்தாலும் இந்தப் பகுதி வானூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது. இந்தக் கல்லூரியில் கடந்த ஜனவரி மாதம் பூட்டை உடைத்து உள்ளே இருந்த பல லட்சம் மதிப்பிலான 20க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. 

    இதுகுறித்து வானூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த வாரம் இதே கல்லூரியில் உள்ள மற்றொரு கட்டிடத்தில் கதவை உடைத்து உள்ளே இருந்த கம்ப்யூட்டர்கள் மற்றும் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. 

    இந்நிலையில்  வில்லியனூர் அடுத்த தமிழக பகுதியான பெரம்பை பகுதியில் உள்ள தனியார் கலைக் கல்லூரி நிர்வாக பிரிவு கட்டிடத்திற்குள் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ரூபாய் 2 லட்சத்து 26 ஆயிரம் ரொக்கப் பணத்தையும், 5 கம்ப்யூட்டர்களையும், மற்றும் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட விலைமதிப்புள்ள கம்ப்யூட்டர் உதிரி பாகங்களை கொள்ளை யடித்து சென்றனர். 

    இதுகுறித்து கல்லூரி நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு சப்&இன்ஸ்பெக்டர் வசந்த் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று சம்பவம் நடந்த கல்லூரிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விழுப்புரத்திலிருந்து ராக்கி என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து பெரம்பை மெயின் ரோடு வழியாக ஓடியது.
     
    மேலும் விழுப்புரம் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். சம்பவம் நடந்த 2 கல்லூரிகளிலும் உள்ளே புகுந்த கொள்ளையர்கள் முதலில் சி.சி.டி.வி. கேமராக்களை அடித்து சேதப்படுத்தி விட்டு உள்ளே சென்று பொருட்களை கொள்ளையடித்து விட்டு அங்கு உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் பதிவாகும் சர்வரில் உள்ள ஹார்ட் டிஸ்கை எடுத்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.  

    சேதராப்பட்டில் இயங்கிவரும் தனியார் கல்லூரியில் நடந்த 2 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் பெரம்பை தனியா ர் கல்லூரியில் நடந்த கொள்ளை சம்பவத்திலும் ஈடுபட்டிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. 

    இந்த சம்பவத்தால் வானூர் மற்றும் ஆரோவில் போலீசார் அதிர்ச்சியில் உள்ளனர். 

    மேலும் கொள்ளையர் களை  பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர். தனியார் கல்லூரிகளை குறிவைத்து ரொக்க பணம் மற்றும் கம்ப்யூட்டர் பொருட் களை திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×