search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில் நிலையம் எதிரே உள்ள தூய இருதய ஆண்டவர் தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறையொட்டி நடந்த திருப்பலியில் பங்கேற்ற
    X
    ரெயில் நிலையம் எதிரே உள்ள தூய இருதய ஆண்டவர் தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறையொட்டி நடந்த திருப்பலியில் பங்கேற்ற

    தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

    குருத்தோலை ஞாயிறு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    புதுச்சேரி:

    ஏசு கிறிஸ்துவின் பாடுகள் மற்றும் தியாகத்தை தியானிக்கும்வகையில் ஆண்டுதோறும் 40 நாட்கள்  தவகாலத்தினை கடைபிடிப்பது வழக்கம்.

    தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது, புனித வாரத்தின் தொடக்க நாள் குருத்தோலை ஞாயிறாக அனுசரிக்கப்பட்டு, சிறப்பு பிராத்தனைகள் நடத்தப்படும். ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்-படுவதற்கு முன்பாக ஜெருசலம் நகரின் வீதிகளில் அவரை  ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

    அப்போது வழிநெடுகிலும் மக்கள் குருத்தோலையை கையில் ஏந்தி ஓசன்னா  பாடல்களை பாடினர். இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் கிறிஸ்துவர்கள் குருத்தோலை புதுவையில் புனித இருதயஆண்டவர் பசிலிக்கா, ஜென்மராகினி மாதா ஆலயம், கப்ஸ் கோவில், நெல்லித்தோப்பு விண்ணேற்பு மாதா கோவில், ஆந்திரேயர் ஆலயம், வில்லியனூர் லூர்து அன்னை ஆலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் இன்று காலை குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

    பின்னர் கிறஸ்துவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தி ஓசன்னா பாடல்-களுடன் ஊர்வலமாக சென்றனர். இதனை தொடர்ந்து வருகிற வியாழக்கிழமை புனித வியாழன் அனுசரிக்கப்பட உள்ளது, இதில் வியாழன் வழிபாடுகளும், இயேசு மரணத்தை தழுவும் முன்பு தனது சீடர்களுடன் கடைசி இரவு உணவை உண்ணும் சடங்கும், சீடர்களின் பாதங்களை கழுவும் சடங்கும் நடைபெற உள்ளது. 

    இதனைடுத்து புனித வெள்ளியன்று ஏசு சிலுவையில் அறையப்படும் நிகழ்ச்சியும்ஞாயிற்றுக்கிழமை ஏசுவின் உயிர்ப்பை கொண்டாடும், புனித ஞாயிறு என்னும் ஈஸ்டர் பெருவிழாவும் கொண்டாடப்பட உள்ளன.
    Next Story
    ×