என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலி மதுபானங்களை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் மற்றும் போலீசார் சோதனை செய்த காட்சி.
போலி மது தொழிற்சாலை கண்டுபிடிப்பு
அரியாங்குப்பத்தில் போலி மது தொழிற்சாலையை போலீசார் கண்டுபிடித்தனர்
அரியாங்குப்பம் அடுத்து சொர்ணா நகர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் பல குடியிருப்புகள் உள்ளன.
இங்கு ரைஸ் மில் ஒன்று இயங்கி வந்தது. இந்த ரைஸ் மில் இயக்காமல் மூடியே கிடந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தனிநபர் வாடகை எடுத்து ரைஸ்மில் இயக்குவதாக கூறியுள்ளார்.
வாடகை எடுத்த நபர் அங்கு உள்ள குடோனில் ரகசியமாக போலி மது தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார். முன்னணி நிறுவனத்தின் பெயரில் போலி மது விற்பனை செய்ய ஏற்பாடு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அப்பகுதி மக்கள் சந்தேகப்-படும் படியாக தொழிற்சாலைச் மில்லில் இருப்பதாக புகார் தெரிவித்திருந்தனர்.
அதன்பேரில் அரியாங்குப்பம் போலீசார் மற்றும் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், சப்-& இன்ஸ்பெக்டர் ரமேஷ், குமார் ஆகியோர் சம்பவ இடத்தில் நேரில் பார்த்து போலி மது பாட்டில் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்குவதை கண்டறிந்தனர்.
அப்போது அங்கு மது பாட்டில்கள் தயாரித்து வந்த ரெட்டியார் பாளையம் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த இளங்கோவன் (64) பாகூர் அழகர், விழுப்புரம் மாவட்டம் கொத்த-மங்கலத்தை சேர்ந்த மினி லாரி டிரைவர்கள் அண்ணன் தம்பிகளான பிரகாஷ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
முக்கிய குற்றவாளி மனோஜ் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகின்றனர். இதில் ரெட்டியார் பாளையத்தை சேர்ந்த இளங்கோவன் தான் இந்த மில்லை வாடகைக்கு எடுத்துள்ளார் அதனை பாகூரை சேர்ந்த அழகர் நடத்தி வந்தார். இங்கிருந்த 6000 ஆயிரம் குவாட்டர் பாட்டில்கள் 69 கேன் எரிசாராயம், 2279 லிட்டர் சாராயம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story






