என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
கணவன்-மனைவியை தாக்கி கொலை மிரட்டல்
முத்திரையார் பாளையத்தில் கணவன்மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக உறவினர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை அருகே ஆரோவில் குயிலாப்பாளையும் புதுத்தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி செல்வி (வயது 28) இவரது சகோதரிகள் முத்திரையர் பாளையம் காந்தி திருநல்லூர் மேற்கு வீதியில் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சம்பவத்தன்று செல்வி தனது கணவர் ஆனந்துடன் தனது மூத்த சகோதரி மகாலட்சுமி மகன் பிறந்த நாள் நிகழ்ச்சிக்காக முத்திரையர் பாளையத்துக்கு வந்திருந்தனர்.
அப்போது செல்வி நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை மற்றொரு சகோதரியின் கணவரான வேல்முருகன் என்பவர் குறுக்கே நிறுத்தி நிகழ்ச்சிக்கு செல்லவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை செல்வி தட்டிக்கேட்ட போது அவரை வேல்முருகன் தகாத வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் தாக்கினார். மேலும் செல்வியை கீழே பிடித்து தள்ளினார். அப்போது செல்வியின் கணவர் இதனை கண்டித்த போது அவரையும் வேல்முருகன் தாக்கி கையில் வைத்திருந்த கத்தியை காட்டி 2 பேரையும் கொலைசெய்துவிடுவதாக மிரட்டினார்.
இந்த தாக்குதலில் காயமடைந்த செல்வி கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






