என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மணக்குள விநாயகர் கலை கல்லூரியில் உலக ஆரோக்கிய தினம் நடைபெற்றது.
    புதுச்சேரி:

    புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உயிர் தொழில் நுட்ப வியல் துறை சார்பில் உலக ஆரோக்கிய தினம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரியின் இயக்குனரும், முதல்வருமான வெங்கடாசலபதி தலைமை தாங்கினார். கல்லூரி டீன் முத்து லட்சுமி வாழ்த்துரை வழங்கினார். 

    புதுவையின் பல் அறுவை சிகிச்சை மருத்துவர் கலைவேந்தன் கலந்து கொண்டு உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடமிடீன் அன்புமலர், ஆராய்ச்சி துறையின் டீன் வேல்முருகன், வேலைவாய்ப்புத்துறை அதிகாரி கைலாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    உடல் ஆரோக்கிய தினத்தையொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உயிரியல் தொழில் நுட்ப துறையின் தலைவர் ராஜாராம், துறையின் உதவிப்பேராசிரியர் யுவராணி ஆகியோர் செய்திருந்தனர்.
    புதுவை சட்டசபை செயலகத்துக்கு நிதி அதிகாரம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தெரிவித்தார்
    புதுச்சேரி:

    புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை சட்டப்பேரவையின் செயலருக்கு கடந்த 1981-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் துறை தலைவருக்கான நிதி அதிகாரங்களை  பயன்படுத்துவதற்கான ஆணையை வழங்கியிருந்தது. 

    இதுநாள் வரை புதுவை சட்டப்பேரவை செயலகத்தால் அந்த ஆணை நடைமுறைப் படுத்தப்படவில்லை. இது என் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. 

    இதையடுத்து கடந்த பிப்ரவரி 10-ந் தேதி தலைமை செயலர், நிதிசெயலர், சட்டத்துறை செயலர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். தொடர்ச்சியாக கோப்பு தயாரிக்கப்பட்டு நிதித்துறைக்கு  அனுப்பப்பட்டது. இதன் மேல்நடவடிக்கையாக தலைமை செயலர், நிதித்துறை செயலருடன் கடந்த 7-ந் தேதி கலந்துரையாடினேன். 

    அதன்  தொடர்ச்சியாக மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய ஆணைப்படி புதுவை சட்டப்பேரவை செயலர், துறை தலைவர் நிதி ஆதாரங்களை  பயன்படுத்தலாம் என முடிவெடுக்கப்பட்டு அந்த ஆணையை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. 

    இதற்கான புதிய அரசாணை வெளியிடப்படுகிறது. தமிழ் புத்தாண்டு முதல் நிதி தொடர்பான கோப்புகளை தலைமை செயலகம், நிதி செயலகத்துக்கு  அனுப்பாமல் சட்டப்பேரவை செயலகத்திலேயே செயல்படுத்தப்படும். 

    இதனால் காலவிரயம் தவிர்க்கப்படும். புதிய நடைமுறையில் நிதி  ஆணைகள், விதிகள் அனைத்தும் தவறாமல் பின்பற்றப்படும். 

    இதனால் புதுவை சட்டப்பேரவை செயலகத்துக்கு நிதி அதிகாரம் 41  ஆண்டுக்கு பிறகு கிடைத்துள்ளது. ஏற்கனவே சபாநாயகராக இருந்த ராமச்சந்திரன், கண்ணன் ஆகியோர் இதை பெற பல முயற்சிகள்  எடுத்தனர். என் முயற்சியில் இது கிடைத்துள்ளது. 

    வருகிற 11, 12-ந் தேதியில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாடு நடக்கிறது. இதில் நான், துணை சபாநாயகர், சட்டசபை செயலர் பங்கேற்க உள்ளோம். வரும் 24-ந் தேதி அமித்ஷா வரும்போது புதிய  சட்டசபை கட்ட அடிக்கல் நாட்ட வாய்ப்புள்ளதா? என ஆலோசித்து வருகிறோம். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    வில்லியனூர், திருக்காமீஸ்வரர் கோவிலில் 108 நாள் அங்கப்பிரதட்சணம் சந்துரு சாமிகள் தொடங்கினார்.
    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் சந்துரு சாமிகள்.   உலக நன்மை வேண்டி இவர்  தொடர்  அங்கப்பிரதட்சனம் செய்து வருகிறார். தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள  சிவன் கோயில்களில் இவர் 108 நாட்கள் தொடர் அங்கப்பிரதட்சணம் செய்து வருகிறார். 

    அவர் வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில்  அங்கப்பிரதட்சணத்தை தொடங்கினார். திருக்காமீஸ்வரர் கோயில் உள்ள 4 மாடவீதிகளை ஒரு கிலோ மீட்டர் தூரத்தை அவர் அங்கப்பிரதட்சணம் செய்தார். 

    108 நாட்களுக்கு அவர் அங்கப்பிரதட்சனம் செய்கிறார். இவர் சிதம்பரம் கோவிலில் பல ஆண்டுகளுக்கு முன் தனது நாக்கை காணிக்கையாக கொடுத்தார்.
    காவல்துறையை கண்டித்து கிராமப்புற மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
    புதுச்சேரி:

    புதுவை கிராமப்புற மக்கள் இயக்கம், தமிழ் அமைப்புகள், மனிதஉரிமை அமைப்புகள், சமூகநல இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் காவல்துறையின் அடக்குமுறை, மனித உரிமை மீறலை கண்டித்து ஜென்மராக்கினி ஆலயம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் இளவரசன், அமைப்பு செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    நிறுவன தலைவர் சந்திரசேகரன் கண்டன உரையாற்றினார். சமம் குடிமக்கள் இயக்க மாநில தலைவர் ராஜன், தேசிய ஜனசேனா தலைவர் ஜனார்த்தனன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
    போலி பத்திரம் தயாரித்து பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் வீடு, நிலம் அபகரிப்பு குறித்து நாராயணசாமி புகார் செய்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி, ஏப்.9-

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் நிலம், வீடு அபகரிப்பு, கஞ்சா, போதை பொருட்கள் கடத்தல், விற்பனை, ஆள் கடத்தல், குண்டு வெடிப்பு, திருட்டு, கொள்ளை, கொலை சர்வ-சாதாரணமாக நாள்தோறும் நடந்து வருகிறது. 
    பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் வீடு, நிலம் திட்டமிட்டு போலி பத்திரம் தயாரித்து அபகரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பத்திரப்பதிவுத்துறை துணையாக உள்ளது. 

    எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்றவருக்கு சொந்தமான இடம் போலி பத்திரம் தயாரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகாரை விசாரிக்க வேண்டாம் என முதல்-அமைச்சரின் அலுவலகத்தில் இருந்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    ஏற்கனவே பத்திரப்பதிவு செய்ய மாட்டேன் எனக்கூறிய சார் பதிவாளர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு நீள்ளார். முதல்-அமைச்சர், அமைச்சர்கள் உத்தரவின் பேரில்தான் நில அபகரிப்புகள் நடக்கிறது. பத்திரப்பதிவு அலுவலகங்கள் கொள்ளை அலுவலகங்களாக மாறி வருகிறது. 

    இதன் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். சி.பி.ஐ.யிடம் இந்த வழக்கு விசாரணையை ஒப்படைக்க வேண்டும். புதுவையில் தமிழ் முதன்மை மொழியாகும். பிராந்தியங்களில் மலையாளம், தெலுங்கு, பிரெஞ்சு ஆகிய மொழிகள் உள்ளது. எனவே புதுவை மக்கள் இந்தி திணிப்பை ஏற்க மாட்டார்கள். எனவே, அமித்ஷா தனது பேச்சை திரும்ப பெற வேண்டும்.

    மருத்துவ கல்வியில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. 

    புதுவையில் நான் முதல்-அமைச்சராக இருந்தபோது மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழங்க தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பினேன். அவர் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். இதை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதன்மூலம் மத்திய பா.ஜனதா அரசு கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு விரோதமாக உள்ளது. மருத்-துவக்கல்வி சேர்க்கைக்கு கால அவகாசம் உள்ளது.  

    தற்போதைய இணக்கமான கவர்னர் மூலம் இதற்கான ஒப்புதலை மத்திய அரசிடம் இருந்து ரங்கசாமி பெற வேண்டும். இதை பெறாவிட்டால் அடிமை ஆட்சியைத்தான் ரங்கசாமி நடத்துகிறார் என மக்கள் நினைக்கும் நிலை உருவாகும். 

    தனியார் மயம், மின் கட்டண உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் பலகட்ட போராட்டம் நடத்தி உள்ளோம். ஏழைகளால் தாங்க முடியாத அளவு கட்டணம் உயர்ந்துள்ளது. இதனால் தொழிற்சாலைகளை மூடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரசு இந்த முடிவை கைவிட வேண்டும். கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்
    புதுவை ரெயில் நிலைய வளாகத்தில் வாலிபர் தூக்கு போட்டு பிணமாக தொங்கினார்.
    புதுச்சேரி:

    புதுவை ரெயில் நிலையம் கிழக்கு வாயில் பகுதியில் உள்ள வேப்பமரத்தில் 25 வயது மதிக்கத்தக்க  ஒரு வாலிபர் சேலையால் தூக்கு போட்டு பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார். 
    அப்போது அங்கு ரோந்து வந்த ரெயில் நிலைய போலீசார் இதனை கண்டு ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
     
    போலீசர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். 
    மேலும் வழக்கு பதிவு செய்து தற்கொலை செய்த வாலிபர் யார்?எந்த ஊர்? என்பது குறித்தும் தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மனைவி பிரிந்து சென்றதால் சூப் கடைக்காரர் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    காலாப்பட்டு அருகே பிள்ளைச்சாவடி திருக்குளம் வீதியை சேர்ந்த டேவிட் ராஜன் (வயது 34).  இவரது மனைவி மஞ்சு. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். டேவிட் ராஜன் சூப் கடை நடத்தி வந்தார். 

    இதற்கிடையே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக டேவிட் ராஜனைவிட்டு பிரிந்து அவரது மனைவி மஞ்சு 2 மகள்களுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதனால் டேவிட் ராஜன் தனது தாய் செல்வியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் டேவிட் ராஜனின் மூத்த மகள் பூப்பெய்தார். இந்த தகவலை மஞ்சு டேவிட் ராஜனுக்கு தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே மனைவி மகள்களுடன் பிரிந்து சென்ற வேதனையில் மகள் பூப்பெய்த நிகழ்ச்சியை மஞ்சு தெரிவிக்காததால் டேவிட் ராஜன் மனமுடைந்தார். 

    இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த டேவிட் ராஜன் சம்பவத்தன்று புதுவை ரெயின்போ நகரில் தமிழ்சங்கம் எதிரே அமைந்துள்ள பூங்காவில் எலிமருந்தை தின்று மயங்கி கிடந்தார். 

    பின்னர் இது பற்றி தனது தாய்க்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதனால் பதறிப்போன செல்வி சம்ப இடத்துக்கு விரைந்து வந்து டேவிட் ராஜனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.

     அங்கு சிகிச்சை பெற்று வந்த டேவிட் ராஜன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அவரது தாய் செல்வி கொடுத்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சிறுதானியங்களில் எல்லாவிதமான ஊட்டச்சத்துகளும் உள்ளது. மத்திய அரசு சிறுதானிய ஆண்டு கொண்டாட உள்ளது. உடல் பயிற்சி போல உணவுப்பயிற்சியும் முக்கியம்.

    புதுச்சேரி:

    உலக உடல்நல தினத்தையொட்டி இந்திய தொழில் கூட்டமைப்பின் புதுவை கிளை சார்பில் இன்று நடை பயிற்சி (வாக்கத்தான்) நடந்தது.

    கவர்னர் மாளிகை எதிரே நடைபயிற்சியை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் நிர்வாகிகள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர். அவர்களிடையே கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    உலக உடல், மனநலம் பேண வேண்டும் என உலக உடல்நல நாள் கொண்டாடப்படுகிறது. மக்களுக்கு உடல்நலம் பற்றிய விழிப்புணர்வு தேவை. உடல்நலம் என்ற அஸ்திவாரத்தின் மீதுதான் சாதனை என்ற கட்டிடத்தை எழுப்ப முடியும்.

    அனைவருமே காலையில் எழுந்தவுடன் உடல்நலத்தை பேண யோகா செய்ய வேண்டும். பிரதமர் உலக உடல்நல நாளில் இருந்து 75 நாட்கள் யோகா செய்து ஜூன் 23 யோகா தின விழாவை கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

    யோகா உடல்நலம், மன நலத்த பேணும். மனம் ஒரு குரங்கு. அதை கட்டுப்படுத்துவது கடினமான காரியம். மனக்கட்டுப்பாடு எந்த துறையை சார்ந்தவர்களாக இருந்தாலும் முக்கியம். நாம் இன்று சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

    சிறுதானியங்களில் எல்லாவிதமான ஊட்டச்சத்துகளும் உள்ளது. மத்திய அரசு சிறுதானிய ஆண்டு கொண்டாட உள்ளது. உடல் பயிற்சி போல உணவுப்பயிற்சியும் முக்கியம். கரன்சியை எண்ணுவதைப்போல கலோரியை எண்ணி சாப்பிட வேண்டும்.

    விஞ்ஞானப்பூர்வமாக நம் உடலை பாதுகாக்க வேண்டும் என இன்று சபதமேற்க வேண்டும். சக்தியை அதிகரித்தால் 24 மணி நேரத்தை 48 மணி நேரமாக்கி உழைக்கலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பிரதமர், உள்துறை மந்திரியை சந்தித்ததில் மகிழ்ச்சி. இருவரும் புதுவை மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர். பிரதமர் புதுவை வளர்ச்சிக்காக பக்கபலமாக இருப்பதாக உறுதியளித்துள்ளார். பல திட்டங்களை கொண்டுவரவும் ஊக்கமளித்துள்ளார்.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 24-ந்தேதி புதுவை வருகிறார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வர உள்ளார். நிதி மந்திரி, ரெயில்வே மந்திரியையும் சந்தித்தேன். முதல்-அமைச்சருடன் இதுகுறித்து ஆலோசித்தேன்.

    புதுவை மக்களுக்கு பல திட்டங்களை கொண்டுவரவும், நிதியை பெறவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் இந்த சந்திப்பு பயனுள்ளதாக அமையும். புதுவை மிகப்பெரும் வளர்ச்சி பெறும். இதற்கு தேவையான பல திட்டங்களை கொண்டுவருகிறோம். கொரோனா இல்லாத மாநிலமாக புதுவை மாறியுள்ளது. புதுவை மக்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு பாராட்டுக்கள். இன்னும் சில காலம் கைகளை கழுவுவது, முக கவசம் அணிவதை பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதையும் படியுங்கள்... விழாக்களில் பங்கேற்க வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டு தடை - ஆஸ்கர் அமைப்பு அறிவிப்பு

    பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் 20 ஆண்டுகள் மருத்துவ கல்வி போதித்த பேராசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
    புதுச்சேரி:

    கனகசெட்டிகுளம், பிம்ஸ் மருத்துவமனையில் கடந்த 2002-22கல்வி ஆண்டில் சிறப்பாக மருத்துவம் போதித்த பேராசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் நடப்பாண்டு மருத்துவ மாணவர்களுக்கு வரவேற்பு விழா கல்லூரி அரங்கில் நடந்தது. பதிவாளர் அனில் பூர்த்தி வரவேற்றார். 

    கல்லூரி முதல்வர் ரேணு தலைமை தாங்கி பேசுகையில் ‘பிம்ஸ் மருத்துவமனை கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவ சேவை மற்றும் ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

    எதிர்கால மருத்துவர்களாகிய நீங்கள் சமுதாயத்துக்கு முழுமையான சுகாதார சேவை புரிய வேண்டும்’ என்றார். 

    பின்னர் பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவம் போதித்த பேராசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். 

    புதிய மருத்துவ மாணவ-மாணவிகளை சீனியர் மாணவர்கள் வரவேற்றனர். பேராசிரியர் சுபாஷிஸ் தாஸ் நன்றி கூறினார்.
    சாரம் அவ்வை திடலில் அ.தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தலை கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் திறந்து வைத்தார்.
    புதுச்சேரி:

    காமராஜ் நகர் தொகுதி அ.தி.மு.க. சார்பில் சாரம் அவ்வை திடலில் நீர்,மோர் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.

    நிகழ்ச்சிக்கு கிழக்கு மாநில இணை செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டு நீர்,மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்,மோர், வெள்ளரிக்காய், இளநீர், தர்பூசணி, கிர்னிபழம் ஆகியவற்றை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் அன்பழகன் உடையார், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாப்புசாமி, பொதுக்குழு உறுப்பினர் கமலா, இலக்கிய அணி பொருளாளர் குணா, இணை செயலாளர் ரவி, துணை செயலாளர் சத்யா, பொருளாளர் ராதாகிருஷ்ணன், தொகுதி ஜெயலலிதா பே ரவை செயலாளர் சுகுமார், வார்டு  செயலாளர்கள் கோவிந்தராஜ், சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காரைக்கால் தனியார் கப்பல் துறை முகத்தில் இந்திய கடலோர காவல் படை மைய ரோந்து கப்பல்களை நிறுத்துவதற்கான இட வசதிகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்டத்திலுள்ள இந்திய கடலோர காவல் படை மையத்தில் நிரந்தர கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி கிழக்குப் பிராந்திய கமாண்டர் ஆனந்த் பிரகாஷ் படோலா இந்த மையத்திற்கு வந்தார்.

    தொடர்ந்து அவர் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இது குறித்து காரைக்கால் இந்திய கடலோர காவல்படை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காரைக்கால் மைய கடலோர காவல்படையின் செயல்பாடுகள், ரோந்து கப்பல்களின் செயல் பாடுகள், மீனவர்களை பாதுகாக்கும் வகையிலான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், காரைக்கால் கடலோர போலீஸ் நிலைய போலீசாருடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபடுதல் உள்ளிட்ட ஆலோசனைகளை கிழக்குப் பிராந்திய கமாண்டிங் அதிகாரி வழங்கினார். மேலும், காரைக்கால் தனியார் கப்பல் துறை முகத்தில் இந்திய கடலோர காவல் படை மைய ரோந்து கப்பல்களை நிறுத்துவதற்கான இட வசதிகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஓம்சக்தி சேகர் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
    புதுச்சேரி:

    அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் புதுவையில் வருகிற 23 மற்றும் 24-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. அமைப்பு தேர்தல் சம்பந்தமாக மேற்கு மாநில அ.தி.மு.க. நிர்வாகிகள், தொகுதி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமையில் லெனின் வீதி மேற்கு மாநில அ.தி.மு.க. அலுவலகத்தில் நடை-பெற்றது.

    மாநில அவைத் தலைவர் பேராசிரியர் ராமதாஸ் மாநில இணை செயலாளர்கள் காசிநாதன், மகாதேவி, மாநில துணை தலைவர் ஆனந்தன், மாநில துணை செயலாளர்கள் நாகமணி, சதாசிவம், கணேசன், மாநில பொருளாளர் சங்கர் மற்றும் தொகுதி செயலாளர்கள் வெங்கடேசன், பொன்னு சாமி, சேகர், கோபால், இருசப்பன், கமல்தாஸ், தீனதயாளன், ஆனந்தன், வேலவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த வரலாற்று சிறப்பு மிக்க 7.5 இட ஒதுக்கீடு செல்லும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்து இருப்பது அ.தி.மு.க.விற்கு கிடைத்த மிக பெரிய வெற்றி. 

    இந்த சட்டத்தை கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமியை குழு பாராட்டி போற்று கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    ×